Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்

Featured Replies

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட காணியிழந்த மக்கள்

 

 

வடக்கைச் சேர்ந்த மக்கள் தென்னிலங்கையிலுள்ள சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து கொழும்பு, கோட்டையில் இருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர்.

kepapulavu3.jpg

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தி  வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை வடக்கில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடக்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு தென்னிலங்கை சிங்கள அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஒரு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

kepapulavu2.jpg

இந்த பேராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒரு பஸ்ஸிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து மற்றுமொறு பஸ்ஸிலுமாக மக்கள் வந்து  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

kepapulavu1.jpg

ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் வடக்கு, கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை உடனே வழங்குமாறும், முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மக்களிடம் அபகரித்த காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

kepapulavu.jpg

இதையடுத்து ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்ந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட மக்களில் 8 பேரை மாத்திரம் தெரிவுசெய்து பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அழைத்துச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21269

  • தொடங்கியவர்

கேப்பாபுலவு மக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

  • தொடங்கியவர்

காணிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் திரண்ட மக்கள்

p12-7ec49a2886bc22382881acd12dcf1434b4bf35de.jpg

 

சிங்கள முற்போக்குவாதிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி
(ஆர்.ராம்)

எமக்கு சொந்­த­மான பூர்­வீக நிலங்­களை எம்­மி­டத்தே கைய­ளித்து விடுங்கள். சொந்த மண்ணில் நிம்­ம­தி­யாக வாழ விடுங்கள் எனக் கோரி 119 நாட்­க­ளாக கேப்­பாப்­பு­லவு இரா­ணுவ முக­ாமிற்கு முன்னால் தொடர்ச்­சி­யான போராட்­டத்தில் ஈடு­பட்டு வரும் மக்கள் தென்­னி­லங்கை முற்­போக்கு சக்­தி­க­ளுடன் இணைந்து தலை­ந­கரில் நேற்று பாரிய கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டப் பேர­ணியை முன்னெடுத்ததோடு ஜனாதிபதி செயலகத்தில் மக­ஜ­ரையும் கைய­ளித்­தனர்.

தென்­னி­லங்கை முற்­போக்கு அமைப்­பான சம­உ­ரிமை இயக்­கத்தின் ஏற்­பாட்டில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

முல்­லைத்­தீவு மற்றும் கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் இருந்து பஸ்கள் மூலம் வருகை தந்த சுமார் நூற்றுக்கும் அதி­க­மான மக்கள் கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலையத்­திற்கு முன்னால் காலை பத்து மணி­ய­ளவில்  

ஒன்று கூடி­னார்கள்.

இவர்­க­ளுடன் சம உரிமை இயக்­கத்தின் பிர­தி­நி­தி­களும், தென்­னி­லங்கை முற்­போக்­கு­வா­தி­களும், இட­து­சாரிப் பிர­தி­நி­தி­களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் ஆகியோர் உட்­பட பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் பங்­கேற்­றனர்.

வடக்கு, கிழக்கில் பறிக்­கப்­பட்ட காணி­களை வழங்கு, எமது நிலங்­களில் இருந்து இரா­ணு­வமே வெளியேறு, ஜனா­தி­பதி, சம்­பந்தன் ஆகி­யோரின் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை, யாரின் வாக்­கு­றுதி­க­ளையும் நம்­ப­போ­வ­தில்லை, எமது உரி­மை­க­ளையே கேட்­கின்றோம், எமது பூர்­வீக மண்ணில் இர­ாணு­வத்துக்கு என்ன வேலை?, எங்­களின் மண்ணில் வாழ­வி­டுங்கள், எங்­களின் வாழும் உரி­மையை உறு­திப்­ப­டுத்­துங்கள் என கோசங்­களை எழுப்­பி­ய­தோடு பதா­கை­க­ளையும் தாங்­கி­யி­ருந்­தனர்.

சுமார் ஒரு மணி­நே­ர­மாக கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு முன்­ன­தாக நின்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­ இவர்கள் பேர­ணி­யாக ஜனா­தி­ப­தியின் செயலகம் நோக்கி நகர ஆரம்­பித்­தனர். இப்­பே­ரணி நகர்ந்து லோட்டஸ் வீதி­யினுள் நுழைய முற்­பட்­ட­போது பொலிஸார் வீதித் தடை­களை அமைத்து கவ­ன­யீர்ப்பு பேராட்ட பேர­ணியில் ஈடு­பட்­ட­வர்­களை தடுத்து நிறுத்­தி­ய­தோடு அங்­கி­ருந்து கலைந்து செல்­லு­மாறும் கோரி­னார்கள். அவ்­வி­டத்தில் ஆாப்­பாட்­டத்­தினை கலைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் நீர்­தா­ரை பிரயோகம் மேற்கொள்ளும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததோடு கல­க­ம­டக்கும் பொலி­ஸாரும் தயார் நிலையில் இருந்தனர்.

எனினும் தமக்கு நியா­ய­மான பதில் கிடைக்கும் வரையில் அந்­த­இ­டத்­தினை விட்டு நக­ரப்­பே­வ­தில்லை. எமது கோரிக்­கைகள் அடங்­கிய மக­ஜரை ஜனாதிபதியிடம் கைய­ளிக்க வேண்­டு­மென திட­மாகக் கூறிய மக்கள் வீதியில் அமர்ந்­தி­ருந்­தனர். சுமார் 45 நிமிடங்கள் காத்­தி­ருந்ததன் பின்னர் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் அதி­கா­ரி­களை சந்­திப்­ப­தற்­காக கேப்­பா­ப்பு­லவு மக்­களில் எண்­மரை மட்­டுமெ செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு தமக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளதால் ஏனை­ய­வர்கள் வீதிப்­போக்­கு­வ­ரத்­திற்கு பங்கம் ஏற்­ப­டா­த­வாறு இருக்­கு­மாறு பொலிஸ் அதி­கா­ரி­களால் அறி­வு­றுத்­தப்­பட்­டனர்.

அவ்­வா­றான நிலையில் சம­உ­ரிமை இய­கத்தின் ஏற்­பாட்­டளர் கபிலன், உட்­பட கேப்­பாப்­பு­லவில் தொடர் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­படும் பொது­மக்கள் ஆகியோர் உள்­ள­டங்­க­லாக எண்மர் ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் அழைத்து செல்­லப்­பட்­டனர்.

அவர்கள் அங்கு ஜனா­தி­ப­தியின் மேல­திக செய­லாளர் சமந்தி ரண­சிங்­கவைச் சந்­தித்­தனர். இதன்­போது எமக்குச் சொந்­த­மான காணிகள் இரா­ணு­வத்­தினரிடம் உள்­ளன. அதனை விடு­விப்­ப­தாக வாக்­குறுதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­சி­றி­சேன, எதிர்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், மற்றும் ஏனைய பல்­வேறு தரப்­பி­னரால் வழங்­கப்­பட்­ட­போதும் இது­வ­ரையில் எவ்­வி­த­மான முன்­னேற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என கேப்­பா­பு­லவு மக்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அச்­ச­ம­யத்தில் குறித்த விடயம் சம்­பந்­த­மாக தமக்கு எவ்­வி­த­மான தகவல்களும் தெரி­யாது. உங்­களின் காணி உறு­திகள் இருந்தால் அவற்றைக் காட்­டுங்கள் போன்ற தொனிப்­பட குறித்த செய­லாளர் கேப்­பா­ப்பு­லவு மக்­க­ளி­டத்தில் கேள்­வி­களை தொடுத்­துள்ளார்.

அதன்­போது நாம் யுத்­தத்தின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­துள்ளோம். எமக்கு சொந்­த­மான எமது பூர்­வீக நிலங்­களில் 482 ஏக்கர் நிலம் இரா­ணு­வத்தின் பிடியில் உள்­ளது. அதனை விடு­விப்­ப­தற்கு பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­ற­போது தாம் முகாம்­களை அக­ற்றி வேறொரு இடத்­திற்கு செல்­வ­தற்கு நிதி தேவைப்­ப­டு­வ­தா­கவும் அவ்­வாறு நிதி வழங்­கப்­பட்டு ஆறு வாரங்­களில் அவ்­வி­டத்­தினை விட்டுச் செல்­வ­தா­கவும் அதில் 70 ஏக்கர் மட்டு அடுத்த ஆறு மாத காலங்­க­ளுக்குள் விடு­விப்­ப­தா­கவும் இராணு­வமே ஒத்­துக்­கொண்­டுள்­ளது.

இதற்­க­மைய சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் இரா­ணு­வத்­திற்­கான 5 மில்­லியன் ரூபா நிதி­யி­னையும் வழங்கி ஆறுவா­ரங்­க­ளா­கின்­றன. எனினும் இரா­ணு­வத்­தினர் அவ்­வி­டத்­தினை விட்டு நகர்­வ­தாக இல்லை என மக்கள் செய­லா­ள­ரி­டத்தில் மீண்டும் அழுத்­த­மாக கூறி­யுள்­ளனர்.

அத­னை­ய­டுத்து செய­லாளர் தொலை­பே­சி­யு­டாக கலந்­து­ரை­யா­ட­லொன்றை மேற்­கொண்­டதன் பின்னர், உங்­களின் கோரிக்கை நியா­ய­மா­னது. அது தொடர்பில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை நிச்­ச­ய­மாக நாம் எடுப்போம். குறிப்­பாக ஜனா­தி­ப­தி­யி­டமும், மீள்­கு­டி­யேற்­ற­ அ­மைச்சு, பாது­காப்பு அமைச்சு, சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் அனை­வ­ரி­டத்­திலும் இவ்­வி­ட­யத்­தினை தெரி­யப்­ப­டுத்தி உங்­க­ளுக்­கான உரிய பதிலை அளிப்போம் என மக்­க­ளி­டத்தில் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து தமது கோரிக்கை அடங்­கிய மக­ஜரை ஜனா­தி­பதி செய­லாளர் சமந்தி ரண­சிங்­க­வி­டத்தில் கைய­ளித்து விட்டு இவர்கள் அங்­கி­ருந்து வௌியே­றி­யுள்­ளனர்.

அதேவேளை ஜனாதிபதி செயலகத்திலிருந்து வௌியியேறிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அம்மக்கள், நாங்கள் முல்லைத்தீவிலிருந்து தலைநகருக்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டு மகஜரையும் கையளித்திருக்கின்றோம். இன்று(நேற்று) 119 ஆவது நாளாகவும் எமது போராட்டம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. எமக்கான நியாயம் கிடைக்கும் வரையில் நாம் இந்தப் போராட்டத்தினை கைவிடப்போவதில்லை. எமது உரிமைகளுக்காகவே போராடுகின்றோம்.

இந்த நாட்டின் பிரஜைகள் நாங்கள். எங்களுக்கு சொந்த பூமியில் வாழ்வதற்கான உரிமையை யாராலும் மறுக்க முடியாது. நல்லாட்சியின் நல்லெண்ணமாக முதலில் எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக எங்களை சொந்த மண்ணில் குடியேறுவதற்கு அனுமதியுங்கள் என்பதையே வேண்டிநிற்கின்றோம். இன்றும் (நேற்றும்) எமக்கு உரிய பதில் வழங்கப்படவில்லை. இதனையிட்டு நாம் ஏமாற்றமடைகின்றோம். இருப்பினும் எமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என்றனர்.

தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து தொடர்ச்சியான நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.