Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ருவான் தலைமையிலான குழு இன்று இரணைதீவு விஜயம் : போராட்டம் நடத்தும் மக்களையும் சந்திக்க ஏற்பாடு

Featured Replies

ருவான் தலை­மை­யி­லான குழு இன்று இர­ணை­தீவு விஜயம் : போராட்டம் நடத்தும் மக்­க­ளையும் சந்­திக்க ஏற்­பாடு

 

 

கிளி­நொச்சி இர­ணை­தீவு பகு­தியில் மக்­களை  மீளக் குடி­யேற்­று­வது தொடர்பில்  ஆராய்­வ­தற்­காக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன தலை­மை­யி­லான  குழு­வினர் இன்று அப்­ப­கு­திக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர்.  இர­ணை­தீவு மக்கள் தமது சொந்த இடங்­களில்  மீளக்­கு­டி­யேற அனு­ம­திக்­கு­மாறு கோரி தொடர்ச்­சி­யான கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

இந்­த­நி­லையில் இந்த விவ­காரம் தொடர்பில்  சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோரின் கவ­னத்­திற்கு  கொண்­டு­வந்­தி­ருந்­த­துடன்  பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர்  ருவான் விஜ­ய­வர்த்­த­ன­வு­டனும்  கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தார். 

 இந்த நிலை­யி­லேயே பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன மற்றும் கடற்­படை  தள­பதி உட்­பட அதி­கா­ரிகள் இன்று அப்­ப­கு­திக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் போராட்­டத்தில்  ஈடு­படும் மக்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.  இந்­தக்­கு­ழு­வி­ன­ருடன்  சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், மற்றும் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா ஆகி­யோரும்  இர­ணை­தீ­வுப்­ப­கு­திக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். 

 இர­ணை­தீ­வுப்­ப­கு­தியை  விடு­விப்­ப­தற்கு கடற்­ப­டை­யினர்  மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றனர்.  இந்­தப்­ப­குதி விடு­விக்­கப்­பட்டால் அது தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமையும் என்று  அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.  இந்தநிலையில்தான் இவ்விடயம் குறித்து ஆராய்வதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

http://www.virakesari.lk/article/21283

  • தொடங்கியவர்

இரணைதீவு மக்களுக்கு இருவாரத்துக்குள் தீர்வு

 
இரணைதீவு மக்களுக்கு இருவாரத்துக்குள் தீர்வு
 

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி – இரணைதீவு மக்களுக்கு எதிர்வரும் இரண்டு வார காலத்துக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், இரணைமாதா நகரில் கடந்த 69 நாட்களாக பேரராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் கலந்துரையாடினார்கள்.

இதன்போது, அரச தலைவரே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள நிலையில், தம்மால் உடனடியாக தீர்வினை வழங்க முடியாதென குறிப்பிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இரு வார காலத்துக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்திப்பில் சிறுவர் – மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், மாவை சேனாதிராஜா, மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

http://uthayandaily.com/story/8279.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.