Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுபோதையில் இருந்த 6 சிறைக்காவலர்களே சரமாரியாக தாக்கினர் நீதி மன்றில் கண்ணீர் விட்ட கைதி

Featured Replies

மதுபோதையில் இருந்த 6 சிறைக்காவலர்களே சரமாரியாக தாக்கினர் நீதி மன்றில் கண்ணீர் விட்ட கைதி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

anurathapuram.png

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் முதலாம் சந்தேக நபரை சகோதர இனத்துவ கைதி ஒருவர் அநாகரீகமான முறையில் நடத்தியதனை அவதானித்த ஐந்தாம் சந்தேக நபர் சிறைக் காவலாளியிடம் முறையிட்டுள்ளார் இவ் வேளை பிரச்னையை சமரசம் செய்துவிட்டு சென்றுள்ளார்

பின்னர் இரவு வேளை மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள் இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்தாவது சந்தேக நபரின் காலில் இருந்த காயத்தில் சப்பாத்து காலால் மிதித்துக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர் என சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். இதன் போது குறித்த ஐந்தாம் சந்தேக நபர் நீதிமன்றில் கண்ணீர் விட்டு அழுத்தத்தினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இது தொடர்பில் தெரியவருவதாவது

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வழக்குடன் தொடர்புபட்ட அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் கடந்த 23ம்திகதி கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கையிடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து ச்நதேக
நபர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற உத்தரவிற்கமைவாக நேற்றுவரை வரை (28-06-2017) அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் திகதி இரவு இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேக நபர் ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கடுமையாகத்தாக்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் தாக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் (28-06-2017) மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் அடிப்படையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (28-06-2017) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து சந்தேக நபர்களும் நேற்று (28-062017) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் சார்பாக ஆஜரான சடடத்தரணிகள் மன்றில் தோன்றி கிளிநொச்சி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்படுகின்ற கைதிகள் சிறைச்சாலையில் தொடர்ந்தும் தாக்கப்படுவது தொடர்பில் அறிக்கையொன்றினை சமர்ப்பித்தனர்.

இவ்வறிக்கையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் முதலாவது சந்தேகநபர் சகோதர இனத்தைச் சேர்ந்த கைதியொருவரால் கேவலமாக நடத்தமுற்பட்டபோது ஐந்தாவது சந்தேகநபர் அதனைத்தட்டிக்கேட்க முயன்றதுடன் இது தொடர்பில் சிறைச்சாலைஉத்தியோகத்தரின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 23ம்திகதி இரவு கடமையில் இருந்து ஆறு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ஐந்தாவது சந்தேகநபரை பாரதூரமாக தாக்கத்தியுள்ளனர்.
யுத்தத்தின் போது கடுமையாகப்பாதிக்கப்பட்டு காலில் காயமடைந்த நிலையில் உள்ளஒருவர். இவரை குறித்த ஆறு சிறைச்சாலைஉத்தியோகத்தர்களும் சப்பாத்துக்கால்களால் ஏறி மிதித்து பாரதூரமாக துன்புறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்லிருந்து கொண்டு செல்லப்படுகின்ற கைதிகள் மிகப்பாரதூரமான முறையில் நான்கு ஐந்து தடவைகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களாலும் தங்களாலும் மன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது என தெரிவித்த சட்டத்தரணிகள் குறித்த செயற்பாடு நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக அமைவதுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டியதுடன் இந்நிலையில் அனுராதபுரம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளகைதிகளின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுகின்றது என்றும் ஏற்கனவே ஒரு மாதகாலப்பகுதிக்குள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்படும் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளாலும் ஏனைய கைதிகளாலும் இவ்வாறு தாக்கப்பட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்ட சட்டத்தரணிகள் மேற்படி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐந்தாவது சந்தேக நபர் கடந்த 23ம்திகதி முதல் 26ம்திகதி வரையும் அனுராதபுரம் சிறைக்கூட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன் நேற்றைய தினம் (28-06-2017) மன்றில் ஒரு சுகதேகியாக ஆஜர்படுத்தப்படவில்லை.இது தொடர்பில் குறித்த ஆறு சிறைச்சாலை அதிகாரிகள் மீதும் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் சாட்சிகளுக்கு இடையூறு செய்யாதிருக்கவும் மேலும் இவர்களை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கு பாதுகாப்பில்லை என்றும் குறித்த ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க கட்டளையிடுமாறும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

இதனையடுத்து சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தினை ஏறறுக்கொண்ட நீதிமன்ற நீதிவான் இதற்கு முன்னரும் கைதிகள் தாக்கப்படுவது பாரபட்சமான முறையில் நடத்தப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இதுதொடர்பில் வாய்மொழி மூலமாகவும் கடிதம் மூலமும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சுயதீன விசாரணை ஒன்றினை நடாத்தி மன்றுக்கு அறிக்கையிடுமாறும் கடந்த 23ம்திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பெயர் விபரங்களை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பதிவாளர் மூலம் எழுத்து மூல அறிவிப்பை விடுக்குமாறும் குறித்த கைதிகளை யாழப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கும் இதில் பாதிக்கப்பட்ட முதலாம் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்களை விசேட சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/31280

  • தொடங்கியவர்

சுமந்­தி­ர­ன் கொலை முயற்சி ; சந்­தே­க­ந­பர் ஊன்­று­கோ­லு­டன் மன்­றில் முற்­பட்­டார்

சட்­டத்­த­ர­ணி­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து நீதி அமைச்­சுக்­கு உடனடியாகவே கடி­தம்

 
 
 

சுமந்­தி­ர­ன் கொலை முயற்சி வழக்­கி­ லுள்ள சந்­தே­க­ந­பர் ஒரு­வர் சிறை் சா­லை­யில் மோச­மா­கத் தாக்­கப்­பட்­ட­மைக்­குக் கிளி­நொச்சி நீதி­மன் றில் அனைத்­துச் சட்­டத்­த­ர­ணி­க­ளும் நேற்­றுக் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர்.

தாக்­கப்­பட்­ட­மைக்கு நீதி­கோ­ரிய சட்­டத்­த­ர­ணி­கள் இது தொடர்­பில் தமது கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி நீதி அமைச்­சுக்­கும் சிறைச்­சா­லை­ கள் ஆணை­யா­ள­ருக்­கும் கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தா­கத் தெரி­வித்­த­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ம.ஆ.சுமந்­தி­ர­னைக் கொலை செய்ய முயற்­சித்­த­தா­கக் குற்­ற­ம் சாட்­டப்­பட்ட சந்­தேக நபர்­க­ளின் வழக்கு கிளி­நொச்சி நீதி­மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்ட சந்­தே­க­ந­பர் நீதி­மன்­றில் முற்­ப­டுத் தப்­பட்­ட­போது, சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் அவர் தாக்­கப்­பட்ட விட­யம் நீதி­மன்­றின் கவ­னத்­துக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்­தக் கைதி நடக்க முடி­யாத நிலை­யில் ஊன்­று­கோ­லு­டன் நீதி­மன்­றுக்கு வந்­தி­ருந்­தார். அவ­ரது தாயார் நீதி­மன்­றில் அழு­த­போது அந்­தக் கைதி­யும் நீதி­வான் முன்­னி­லை­யில் கண்­ணீர் விட்­ட­ழு­தார்.

சிறைச்­சா­லை­யில் தாக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ரா­கக் கிளி­நொச்சி நீதி­மன்­றில் நேற்று அனைத்­துச் சட்­டத்­த­ர­ணி­க­ளும் குரல் கொடுத்­துக் கண்­டித்­த­னர். கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர். கைதி­களை அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் வைத்­தி­ருக்­காது யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­கு­மாற்­று­மாற்ற வேண்­டும் என்று சட்­டத்­த­ர­ணி­கள் கோரி­னர்.

அதனைப் பரிசீலித்த நீதிமன்று 5 சந்தேகநபர்களையும்    யாழ்ப்பாணச்   சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. தன்னை தாக்­கி­ய­வர்­க­ளைத் தன்­னால் அடை­யா­ளம் காட்ட முடி­யும் என்று அந்­தக் கைதி மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார்.

அது பற்றி ஆராய்ந்த நீதி­மன்று, தாக்­கு­த­லுக்­குக் கார­ண­மா­கக் கூறப்­ப­டும் சிறைச்­சாலை அதி­கா­ரி­கள் தொடர்­பி­லான அறிக்­கையை அடுத்த தவ­ணை­யில் மன்­றில் சமர்ப்­பிக்­கும் படி­யும், தாக்­கு­த­லுக்­குள்­ளான சந்­தேக நபர்­க­ளைச் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யி­டம் காண்­பித்து மருத்­துவ அறிக்­கை­யைச் சமர்ப்­பிக்­கு­மா­றும் உத்­த­ர­விட்­டது.

“அண்­மை­ய­நாள்­க­ளா­கச் சிறைச்­சா­லை­க­ளில் இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. சுமார் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­ன­ரும் தர்­ம­பு­ரத்­தைச் சேர்ந்த ஒரு­வர் மறி­யல் கைதி­யாக வவு­னியா சிறைச்­சா­லை­யில் இருந்­த­போது தாக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுப் பின்­னர் உயி­ரி­ழந்­தார் என்­ப­த­னை­யும் சட்­டத்­த­ர­ணி­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

இது தொடர்­பி­லேயே நீதித்­துறை மற்­றும் சிறைச்­சாலை ஆணை­யா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­திக் கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தா­க­வும் சட்­டத்­த­ர­ணி­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

இந்த வழக்கு எதிர்­வ­ரும் 12 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

http://uthayandaily.com/story/8412.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.