Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கைகள் அவசியம்

Featured Replies

காயங்களை ஆற்றுவதற்கு நடவடிக்கைகள் அவசியம்

p18-b8a50225f6be269878e8e436df0b715f7c6cd695.jpg

 

(ஆர்.யசி)

இணக்கப்பாடுகளை நிறைவேற்றவேண்டும் என்கிறார் தென்னாபிரிக்க முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி  
தீர்­வுக்­கான நகர்­வு­களில் பல்­வேறு தரப்­பிலும் முரண்­பா­டுகள் எழு­கின்ற போதிலும் பழைய காயங்­களை சுகப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பில் முரண்­ப­டக்­கூ­டிய விட­யங்­களை விடுத்து இணக்­கப்­பாடு எட்­டக்­கூ­டி­ய­வற்றை நிறை­வேற்­றிக்­கொள்ள வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதி­பதி மொசெ­னேகோ தெரி­வித்தார்.  

நல்­லி­ணக்க நகர்வில் தென்­னா­பி­ரிக்­காவின் அனு­ப­வங்­களை கொண்டு இலங்­கைக்கு உதவ முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­புகள் தொடர்­பி­லான மாநாடு நேற்று பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான தெளி­வு­ப­டுத்­தலை முன்­னெ­டுக்கும் வகையில் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்­பினர், அர­சியல் அமைப்பு குழு உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்­து­கொண்ட இந்­நி­கழ்வில் பங்­கேற்று சிறப்­பு­ரை­யாற்­றிய தென்­னா­பி­ரிக்­காவின் முன்னாள் பிரதித் தலைமை நீதி­பதி மொசெ­னேகோ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் மேலும் கூறு­கையில்,

முரண்­பா­டு­க­ளுக்கு நாம் முகங்­கொ­டுத்த சந்­தர்ப்­பத்தில் நாம் எவ்­வா­றான தீர்வு விட­யங்­களை கையாண்டோம் என்­பது இலங்­கைக்கும் மிகவும் முக்­கி­ய­மான ஆலோ­ச­னை­யாக அமையும். எமது நாட்டில் நிற வர்க்க போராட்டம் ஒன்று இடம்­பெற்ற காலத்தில் கறுப்­பின மக்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் அவர்­களின் விடு­த­லைக்­கா­கவும் அப்­போ­தைய இலங்கை பிர­தமர் சிறிமா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க எமக்­காக குரல்­கொ­டுத்து ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யி­ருந்தார்.

ஆகவே அதற்­காக இன்றும் நாம் நன்­றி­களை தெரி­விக்க கட­மைப்­பட்­டுள்ளோம். அப்­போ­தைய முரண்­பா­டு­களில் இருந்து விடு­பட எம்மால் புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்க வேண்­டிய நிலைமை காணப்­பட்­டது. அதன் மூலம் இணக்­கப்­பாடு ஒன்றை எட்­டக்­கூ­டிய வாய்ப்­பு­களும் அமைந்­தன.

மிக நீண்­ட­கால முரண்­பா­டு­க­ளுக்க முகங்­கொ­டுத்து வந்த எமது மக்­க­ளுக்­கான உரி­மைகள், சலு­கைகள் பறிக்­கப்­பட்டு காணப்­பட்­டன. எமது ஆக்­கத்­திறன் எதையும் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. எமக்­கென்ற தலை­மைத்­துவம் அமை­ய­வில்லை. அர­சியல் அமைப்பு ஒன்று காணப்­ப­ட­வில்லை. ஆகவே இந்த நிலை­மை­களில் இருந்து விடு­ப­டக்­கூ­டிய வகையில் ஒரு மாற்றம் தேவைப்­பட்­டது.

ஆகவே புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட்­டதன் மூல­மாக இந்த இலக்கை எம்மால் அடைய முடிந்­தது. பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திய தரப்­பினர் ஆகிய இரண்டு தரப்பு மக்­க­ளையும் ஒரு நிலை­பாட்டில் கொண்­டு­வர எம்மால் முடிந்­தது. அதற்­கான நீண்­ட­கால நகர்­வு­களை நாம் மேற்­கொள்ள நேர்ந்­தது. முரண்­பா­டுகள் பல்­வேறு தரப்­பிலும் எழுந்த போதிலும் பழைய காயங்­களை சுகப்­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு இருந்­தது.

தென்­னா­பி­ரிக்­காவை பொறுத்­த­வரை 11 மொழிகள், 11 இன வர்க்கம் உள்­ளன. அதேபோல் ஐரோப்­பிய மற்றும் இந்ந்­திய வம்­சா­வளி மக்­களும் வாழ்­கின்­றனர். ஆகவே அனைத்து தரப்­பையும் திருப்­திப்­ப­டுத்தும் வகை­யிலும் உரி­மை­களை பாது­காக்கும் வகை­யிலும் நாம் செயற்­பட நேர்ந்­தது. இன­வாத, மத­வாத, வர்க்­க­வாத முரண்­பா­டு­களை நிரா­க­ரிக்கும் வகையில் நாம் செயற்­பட்டோம்.

நல்­லி­ணக்கம் ஒன்றை நோக்­கிய பய­ணத்தில் நாம் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்­கினோம். பாதிக்­கப்­பட்ட மற்றும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­திய இரு தரப்­பையும் பொது இணக்­கப்­பாடு ஒன்­றுக்கு கொண்­டு­வர பிர­தான சில கார­ணிகள் முக்­கி­யத்­துவம் பெற்­றன.

குறிப்­பாக இரண்டு தரப்­பி­னரும் ஆயு­தங்­களை களை­ய­வேண்டும். பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வை நோக்கி பய­ணிக்க வேண்டும். இவ்­வா­றான பேச்­சு­வார்த்தை மூல­மான அர­சியல் அமைப்பு ஒன்றை மேற்­கொள்ள நான்கு ஆண்­டு­காலம் தேவைப்­பட்­டது. 1999ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் 2003 ஆம் ஆண்டு தீர்­வுக்கு வந்­ததன் மூல­மாக புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட்­டது.

மேலும் அர­சியல் அமைப்பில் உள்ள கடும்­போக்கு தன்­மைகள் நீக்­கப்­படல், மோச­மான சட்­டங்கள் அகற்­றப்­படல் , அதி­கா­ரங்கள் மத்­திய மற்றும் மாகாண ரீதியில் பகி­ரப்­படல் என்­பன சுட்­டிக்­காட்­டப்­பட்­டன. எனினும் இந்த கருத்­துக்­க­ளுடன் ஆளும் தரப்­பினர் முரண்­பட்­டனர். எனினும் இணக்­கப்­பாடு மூலம் இவற்றை கையாள முடிந்­தது.

அதேபோல் அப்­போ­தைய போராட்­டத்தில் காணாமல் ஆகப்­பட்டோர் தொடர்பில் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும் என்­பதும், குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்டம் நிலை­நாட்­டப்­படல் என்ற விட­யங்­களும் தெரி­விக்க்­கப்­பட்­டி­ருந்­தன. முரண்­பா­டுகள் எப்­போதும் எழக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ளன. ஆனால் பொது இணக்­கப்­பாடு ஒன்றை நோக்கி நாம் பய­ணிக்கும் போது முரண்­பா­டான விட­யங்­களை ஓரங்­கட்­டி­விட்டு இணக்­கப்­பாடு ஏற்­ப­டக்­கூ­டிய விட­யங்­க­ளுக்கு நாம் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும். இடம், சொத்து, குழப்­ப­கர தீர்­மா­னங்கள் தொடர்பில் இறு­தியில் தீர்­மானம் ஒன்றை எடுக்க முடியும். ஆனால் தீர்­வு­காண முடிந்த விட­யங்­களை நாம் உட­ன­டி­யாக கையாள வேண்டும்.

அதி­கார பகிர்வு மிக முக்­கி­ய­மான ஒன்­றாகும். மாகா­ண­சபை மற்றும் மத்­திய அர­சாங்கம் ஆகி­ய­வற்­றுக்கு இடையில் அதி­கார பகிர்­வு­களை மேற்­கொள்ள வேண்டும். இவை கடினமான காரியமாகும். ஆனால் ஆரோக்கியமான வகையில் முன்னெடுக்க வேண்டும். சமஷடியா அல்லது ஒற்றை ஆட்சியா என்பதை தீர்மானிக்க வேண்டும். எந்தளவு தூரம் அதிகாரங்கள் பரிமாற்றப்படும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். இந்த விடயங்களில் அனைத்து மக்களின் ஆணையும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இலங்கை எமது அனுபவங்களை நல்ல உதாரணமாக கொண்டு செயற்பட முடியும். சமூக பாதுகாப்பு மற்றும் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையிலான அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நகர முடியும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.