Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம்

Featured Replies

அவலங்களுடன் வாழும் மக்களின் கண்ணீரைத் துடைப்பதில் தாமதம் வேண்டாம்

 

ஏமாற்­றங்­க­ளு­டனும் அவ­லங்­க­ளு­டனும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்கை நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. காணா­மல்­போ­னோரைப் பொறுத்தவரையில் அவர்கள் உயிருடன் இருக்­கின்­றார் களா? இல்லையா?  அவர்­க­ளுக்கு என்ன நடந் தது என்­பது கூட தெரி­யாமல் அவர்­க­ளது உற­வி­னர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர்.  காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள்  பொரு­ளா­தாரப்  பிரச்­சினை, பாது­காப்பு பிரச்சினை, சமூகப்  பிரச்­சினை என்­ப­வற் றினால் பாதிக்­கப்­பட்­டுள் ளனர்.  தமது காணா­மல்­போன  உற­வு­க­ளுக்கு என்ன நடந்தது என்­பது  தெரி­யா­ம­லேயே இந்த மக்கள்  அழுத்­தங்­க­ளுக்கு  மத்­தியில் இருந்து வரு­கின்­றனர்

 

அர­சாங்­கத்தின் தொடர்ச்­சி­யான போக்­கு­களைப் பார்க்­கும்­போதும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் முக்­கிய அமைச்­சர்­களும் தலை­வர்­களும் தெரி­விக்­கின்ற கூற்­றுக்­களை அவ­தா­னிக்­கும்­போதும் நீதிக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற மக்­க­ளுக்கு எங்கே நீதி கிடைக்­கா­மல்­போ­குமோ என்ற சந்­தே­கமும் அச்­சமும் ஏற்­ப­டு­கின்­றது. மக்கள் தொடர்ச்­சி­யாக நீதிக்­காக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அர­சாங்­கத்­த­ரப்­பி­னரும் நம்­பிக்­கையை சித­ற­டிக்கும் வகை­யி­லான கூற்­றுக்­க­ளையே தொடர்ந்தும் தெரி­வித்து வரு­கின்­றனர்.

குறிப்­பாக சர்­வ­தேச நீதி­ப­திகள் விவ­காரம், பொறுப்­புக்­கூறல் பொறி­முறை, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், போன்ற விட­யங்­களில் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் வெளி­யிடும் கருத்­துக்கள் தொடர்ச்­சி­யாக நீதியை நிலை­நாட்­டுதல் தொடர்­பான சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­கின்­றன. எப்­ப­டி­யி­ருப்­பினும் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் எந்­த­வொரு முன்­னேற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­த­வில்லை என்று எவரும் கூற­மு­டி­யாது.

தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் நம்­பிக்கை கொள்­ளும்­வ­கை­யிலும் சில வேலைத்­திட்ட நகர்­வு­களும் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதனை யாரும் மறுக்க முடி­யாது. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தான பிரச்­சி­னைகள் எைவயும் இது­வரை தீர்க்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான பிர­வே­சங்கள் கூட நம்­பிக்கை தரும் வகையில் அமை­ய­வில்லை.

இந்­நி­லை­யி­லேயே மக்கள் கண்­ணீ­ரு­டனும் துய­ரத்­து­டனும் நீதிக்­காக போராடி வரு­கின்­றனர். போராட்டம் நடத்­து­கின்ற மக்­களின் நிலை­மையை பார்க்­கும்­போது அந்த மக்­க­ளுக்கு எங்கே நீதி கிடைத்­து­வி­டாமல் போய்­வி­டுமோ என்ற நிலைமை தோன்­று­கி­றது. காரணம் மக்கள் எந்­த­ளவு தூரம் போராட்­டங்­களை நடத்­தி­னாலும் அர­சாங்கத் தரப்­பினர் அவை தொடர்பில் ஆழ­மான முறை­யிலும் அக்­க­றை­யு­டனும் கவனம் செலுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து மனித உரிமை மீற­லினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டியது அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இனங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யின்­மை­யையும் விரி­சல்­க­ளையும் போக்­கு­வ­தற்கு தேசிய நல்­லி­ணக்­க­ வே­லைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யுள்­ளது.

காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்­பாக ஆராய்ந்து அவர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. யுத்த காலத்தில் அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்­ப­துடன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடும் வழங்­கப்­ப­ட­வேண்டும். நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்கப்பட்டி­ருக்கும் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும். வடக்கு, கிழக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்டு பொரு­ளா­தார ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள மக்­களின் வாழ்­வா­தா­ரமும் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பும் வலுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாக உள்­ளது.

 

இவை­யெல்­லா­வற்­றிற்கும் மேலாக தமிழ் பேசும்­மக்கள் நீண்­ட­கா­ல­மாக போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற அர­சியல் தீர்வு விரைந்து முன்­வைக்­கப்­ப­ட­வேண்டும். சக­லரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷைகள் பூர்த்தி செய்­யக்­கூ­டிய ரீதி­யி­லான தீர்­வுத்­திட்டம் அவ­சி­ய­மாகும். இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­ம­லேயே காணப்­ப­டு­கின்­றன. அந்த மக்கள் எதிர்­கொள்ளும் இன்னும் பல்­வேறு பிரச்­சி­னை­களை பட்­டி­ய­லிட்­டுக்­கொண்டு போகலாம். எனினும் நீண்­ட­கால ரீதியில் தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்ற பிர­தான பிரச்­சி­னைகள் இங்கு முன்­வைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இருக்­கின்ற நிலையில் அர­சாங்­கமோ, அந்த மக்­க­ளுக்கு மேலும் நம்­பிக்­கை­யின்மை ஏற்­படும் வகை­யி­லான கூற்­றுக்­க­ளையே வெளி­யிட்டு வரு­கின்­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்கை உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அந்த விட­யத்தில் இத­ய­சுத்­தி­யு­ட­னான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­ய­வில்லை. மாறாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள புதிய சட்­ட­வ­ரைபு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் காணப்­படும் ஏற்­பா­டு­க­ளுக்கு சம­மா­ன­தா­கவே காணப்­ப­டு­வ­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இந்த விட­யத்தில் அர­சாங்கம் இது­வரை விரை­வான போக்கை வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது.

இந்­நி­லையில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் தொடர்ந்து ஏக்­கத்­து­டனும் கண்­ணீ­ரு­டனும் நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­ற­போது அந்த நீதி­வ­ழங்கும் செயற்­பா­டா­னது இது­வரை இத­ய­சுத்­தி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் இருக்­கின்­றது. எமது துயரை துடைப்­ப­தற்கு யாரும் முன்­வ­ர­மாட்­டீர்­களா என பாதிக்­கப்­பட்ட மக்கள் அவ­லத்­துடன் கேள்வி எழுப்­பு­கின்ற நிலையில் அர­சாங்கம் அந்தப் பிரச்­சி­னை­களை இழுத்­த­டிக்கும் செயற்­பாட்­டையே கொண்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச சமூகம் கூட அர­சாங்கம் இந்த மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்கும் என்ற நம்­பிக்­கை­யினால் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­காமல் இருக்­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் சர்­வ­தே­சத்தின் இந்த அணு­கு­மு­றையும் வேத­னையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

இவ்­வாறு ஏமாற்­றங்­க­ளு­டனும் அவ­லங்­க­ளு­டனும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்க்கை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. காணா­மல்­போ­னோரைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா? இல்­லையா? அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது கூட தெரி­யாமல் அவர்­க­ளது உற­வி­னர்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் பொரு­ளா­தாரப் பிரச்­சினை, பாது­காப்பு பிரச்­சினை, சமூகப் பிரச்­சினை என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். தமது காணா­மல்­போன உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­ம­லேயே இந்த மக்கள் அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் இருந்து வரு­கின்­றனர்.

சமூக ரீதியில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் ஏரா­ள­மா­னவை. தமது பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அனுப்­பு­வ­தற்­குக்­கூட வச­தி­யும் சமூக பாது­காப்பும் இல்­லாத நிலையில் காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் இந்த துய­ரங்­க­ளுக்கு விடிவே கிட்­டாதா என்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. என­வேதான் அவ­ச­ர­மாக இந்த விட­யத்தில் ஒரு பொறி­மு­றையை உரு­வாக்கி காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்ற உண்மை கண்­டு­பி­டிக்­க­ப்படவேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்ட முடியும் என்­ப­துடன் அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை கொண்­டு ந­டத்­து­வ­தற்கு நஷ்­ட­ஈட்­டையும் பெற்­றுக்­கொ­டுக்க முடியும். அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு ஒரு குறிப்­பி­டத்­தக்க தீர்வு கிடைக்­கலாம். ஆனால் அர­சாங்கம் இது­வரை அதற்­கான வேலைத்­திட்­டங்­களை இத­ய­சுத்­தி­யுடன் முன்­­னெ­டுக்­கா­ம­லேயே இருப்­ப­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்­கையில் நீண்­ட­கால யுத்தம் முடி­வுக்கு வந்­தது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததும் நிலு­வையில் காணப்­ப­டு­கின்ற மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் என்ற நம்­பிக்கை மேலோங்­கி­யது. இலங்­கை­யிலும் தென்­னா­பி­ரிக்­காவைப் போன்று ஒரு சிறந்த நல்­லி­ணக்க செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் கிட்­டி­ய­தாக 2009 ஆம் ஆண்டு கூறப்­பட்­டது. ஆனால் நடந்­தது என்­னவோ வேறு. மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் படிப்­ப­டி­யாக 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து சித­ற­டிக்­கப்­பட்­டன. இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக விரி­சல்­களே உரு­வாக்­கப்­பட்­டன.

காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு இத­ய­சுத்­தி­யுடன் முயற்சி எடுக்­கப்­ப­ட­வில்லை. ஒரு­ சில காணிகள் விடு­விக்­கப்­பட்­டாலும் ஒட்­டு­மொத்­த­மாக மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தி­யா­னது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் கண்­ணீரும் கவ­லை­களும் நிறைந்­த­தா­கவே காணப்­பட்­டது.

இந்த நிலை­யி­லேயே பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய வண்ணம் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது. ஜன­நா­ய­கத்தின் கதா­நா­ய­க­னாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரு­வெ­டுத்தார். 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் நாட்டில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்றும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­ப­டு­மென்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. இக்­கா­லப்­ப­கு­தியில் மக்­களின் நம்­பிக்­கையை மேலோங்க செய்யும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெற்­றன. குறிப்­பாக 2015 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் மக்­களின் கருத்து சுதந்­தி­ரமும் நட­மாடும் சுதந்­தி­ரமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டன.

ஜன­நா­யகம் குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் நிலை­நாட்­டப்­பட்­ட­துடன் அச்­ச­மின்மையும் ஏற்­பட்­டது. அந்­த­வ­கையில் 2009 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் காணப்­பட்ட நிலைமை 2015 ஆம் ஆண்­டுடன் ஒரு­வ­கையில் மாற்­ற­ம­டைந்­தது என்று கூறலாம்.

அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச சமூ­கமும் புதிய அர­சாங்­கத்தின் மீது பாரிய நம்­பிக்­கையை வைத்­த­துடன் ஆத­ர­வையும் ஒத்­து­ழைப்­பையும் வழங்க முன்­வந்­தது. கடந்த காலங்­களில் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கித்து வந்த சர்­வ­தேச சமூகம் தற்­போது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு வழங்கும் போக்கை கடைப்­பி­டிக்­கின்­றது. இவ்­வாறு 2015 ஆம் ஆண்டின் பின்னர் சில மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும்.

ஆனால் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைகள் எவையும் இது­வரை தீர்க்­கப்­ப­ட­வு­மில்லை. அவற்­றுக்­காக இத­ய­சுத்­தி­யுடன் கூடிய அணு­கு­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வு­மில்லை. காணா­மல்­போனோர் விவ­காரம், காணிப்­பி­ரச்­சினை, அர­சி­யல்­தீர்வுப் பிரச்­சினை, பொறுப்­புக்­கூறல் விவ­காரம், நல்­லி­ணக்க செயற்­பாடு என்­பன தொடர்ந்தும் தீர்க்­கப்­ப­டாமல் நீடித்து வரு­கின்­றன.

ஜெனிவா மனித உரிமை பேர­வையில் கடந்த 2012, 2013, 2014 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்பில் கடும் அழுத்­தங்­க­ளுடன் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டன. இதில் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான பிரச்­சி­னைகள், நிலை­மைகள் யுத்­தத்தின் போது ஏற்­பட்ட மீறல்கள் என்­ப­வற்­றுக்கு தீர்­வு­கா­ணு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டன. ஆனால் அக்­கா­லப்­ப­கு­தியில் இருந்த அர­சாங்கம் அந்தப் பிரே­ர­ணை­களை நிரா­க­ரித்து விட்­டது. எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்­கு­ வந்­த­துடன் மற்­று­மொரு பிரே­ரணை ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் அனு­ச­ர­ணையும் வழங்­கி­யது.

2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்­தி­லி­ருந்து 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் பிரே­ரணை அமு­லாக்­கப்­ப­ட­வேண்டும் என கூறப்­பட்­டது. ஆனால் இக்­கா­லப்­ப­கு­தியில் அர­சாங்கம் பிரே­ரணை அமு­லாக்­கத்தில் பாரிய முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­ட­வில்லை. இக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்ற குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கை­யாக காணா­மல்­போனோர் குறித்த நிரந்­தர அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதை சுட்­டிக்­காட்­டலாம்.

ஆனால் அந்த சட்டம் இது­வரை நடை­மு­றைக்கு வர­வில்லை. இவ்­வாறு இந்த சட்டம் இது­வரை நடை­மு­றைக்கு வரா­மையும் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யின்­மையை அதி­க­ரிப்­ப­தாக காணப்­ப­டு­கின்­றது. இதன்­கா­ர­ண­மாக 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மற்­று­மொரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வ­தற்கு மேலும் இரண்டு வரு­ட­கால அவ­கா­சத்தை இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்கும் வகையில் நிறை­வேற்­றப்­பட்­டது.

அந்­த­வ­கையில் தற்­போது இலங்கை அர­சாங்கம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள் இந்தப் பிரே­ர­ணையை அமு­லாக்­க­வேண்­டிய கட்­டா­யத்தில் இருக்­கின்­றது. ஆனால் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளையும், நகர்­வு­க­ளையும் பார்க்­கும்­போது எங்கே வெறு­மனே காலத்தை இழுத்­த­டிப்­ப­தற்­காக இந்த கால அவ­கா­சத்தை பயன்­ப­டுத்தப் போகின்­றதா என்ற அச்­சமே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஏற்­ப­ட்டுள்ளது.

குறிப்­பாக 2020 ஆம் ஆண்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் (ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமா என்பது உறுதியாக தெரியாது) அதுவரை காலத்தை இழுத்தடிப்பதற்காகவும், அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் இந்த கால அவகாசத்தை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளுமா என்ற அச்சமே நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடன் செயற்படுமா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலான அணுகுமுறைகளை முன்னெடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் பொதுவேட்பாளருக்கு ஆதரவு அளித்தனர்.

எனவே அந்த நம்பிக்கை அற்றுப்போகும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது. யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். தென்னிலங்கையில் கடும்போக்குவாத சக்திகள் எதிர்ப்பை முன்னெடுக்கின்றன என்பதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காமல் இருக்க முடியாது.

தென்­னி­லங்­கையின் கடும்­போக்­கு­வா­திகள் குழப்­பி­வி­டுவர் என்று அஞ்சி காணா­மல்­போனோர் பிரச்­சி­னைக்கு தீர்வு காணாமல் இருக்­க­மு­டி­யாது. அந்த மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்­க­வேண்­டிய கட்­டாயம் அர­சாங்­கத்­துக்கு இருக்­கின்­றது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அர­சாங்கம் பாதிக்­கப்­பட்ட மக்­களின் கண்­ணீ­ரையும் துய­ரையும் துடைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதி­லேயே அரசாங்கத்தின் வெற்றி தங்கியிருக்கிறது. 

ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-01#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.