Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா?

Featured Replies

நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா?
 
15031.jpg
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைமை கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களின் கடும் எதிர்ப்பினால் பிசுபிசுத்துப் போயிற்று.
 
பரவாயில்லை முதலமைச்சர் விக்னேஸ் வரன் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அறிய முடியாதவர்கள் செய்த வேலை என்று விட்டுவிடலாம் என்றால் அதற்கும் உடன்பாடு இல்லாது உள்ளது.
 
தமக்கு ஏற்பட்ட தோல்வியை சகிக்க முடியாதவர்கள் தேவையில்லாமல் கதைத்து தங்களின் செல்வாக்கை இழந்து வருகின்றனர். இவ்வாறு கதைப்பவர்களால் தமிழரசுக் கட்சிக்கு மக்களின் ஆதரவு மிக வேகமாக குறைந்து வருகின்றது என்பதை கட்சியின் தலைமையால் இன்னமும் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
 
அவ்வாறான புரிதல் இருந்தால் முதலமைச் சர் விக்னேஸ்வரன் தொடர்பிலோ அல்லது தமிழ் மக்கள் நடத்திய பேரணிகள் தொடர்பிலோ தமிழரசுக் கட்சியினர் வாய் திறக்கக் கூடாது என கடும் உத்தரவு பிறப்பித்திருப்பர்.
 
ஆனால் அதை அவர்கள் செய்யாதவரை தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு அதலபாதாளத்தை நோக்கி விழுந்து செல்கின்றது.
 
இந்த வீழ்ச்சி உண்மையில் கவலையளிக்கின்றது.  எனினும் இதுபற்றி சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திக்காதபோது நமது கவலைகள் அர்த்தமற்றவை.
 
இலங்கைத் தமிழரசுக் கட்சி ஒரு பழமையான  கட்சி. தந்தை செல்வநாயகம் போன்ற தலைவர் களால் கட்டிக் காக்கப்பட்டது. தன் சொத்துக்களை விற்று கட்சியை வளர்த்தவர் தந்தை செல்வா. என்ன செய்வது! இன்று அந்த நிலைமை இல்லையயன்றாலும் பரவாயில்லை. கட்சியையாவது காப்பாற்றினால் போது  மென்றளவில் அது கூட சாத்தியமற்றது என்று கூறுமளவில் கட்சி யின் சமகால நிலைமையிருக்கின்றது.
 
சரி இது ஒருபுறமிருக்க, வடக்கு முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மக்கள் நடத்திய பூரண கடையடைப்பு போராட்டம், பேரணி என்பன குறித்து தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்  ஒருவர் விடுத்துவரும் கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகிறது.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பேரணி நடத்தியவர்கள் வெறும் நூறு பேர் என்று தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறியுள்ளார். அவர் கூறியது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
 
அவர் அவ்வாறு கூறியது முதலமைச்சருக்கோ அல்லது உணர்வுபூர்வமாக பேரணி மற்றும் கடையடைப்பு நடத்திய ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கோ எந்த பாதிப்பையும் தரப்போவதில்லை. மாறாக இந்த கருத்தை  கூறியவர் மீதும் தமிழரசுக் கட்சி மீதுமே மக்கள் விரக்தி அடைவர்.
 
இதை நாம் கூறும்போது, அப்படியானால் இந்த விடயத்தை ஏன் இவ்விடத்தில் பிரஸ்தாபிக் கின்றீர்கள் என்று நீங்கள் கேட்கவும் கூடும்.
 
அவ்வாறான கேள்விக்கு எங்கள் பதில் இது தான். அதாவது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக வட மாகாணம் முழுவதும் கடையடைப்பு, பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
 
இதற்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூரில் திரண்டு முதலமைச்சருக்கான தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.  கோவில் வீதி வழியாக பேரணி நடத்தி முதலமைச்சரிடம் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர் எனும் போது அதற்கு தமிழரசுக் கட்சி உரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும் அல்லவா?
 
ஒரு பெரும் ஆதரவு போராட்டம் கண்முன் நடக்கும் போது அதனை கொச்சைப்படுத்தும் நீங்கள், இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கடையடைப்புக்களை நடத்தும் போது அதற்கு அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகின்றீர்களே! உங்கள் நம்பிக்கை எந்தளவு தூரம் ஏற்புடையது என்பதை ஒருக்கால் சிந்தியுங்கள்.
 
உங்களால் முடியாததை மற்றவர்களில் எதிர்பார்ப்பது மகா மடமைத்தனம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

http://valampurii.lk/valampurii/content.php?id=15031&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.