Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு விளக்கமளிப்பு

Featured Replies

தமிழரசுக் கட்சி இளைஞரணிக்கு விளக்கமளிப்பு
 

- எஸ்.நிதர்ஷன்

 

வட மாகாண சபை தொடர்பாக, அண்மையில் எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையிலான, விசேட கலந்துரையாடல் ஒன்று, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று(02) காலை இடம்பெற்ற மேற்படிக் கலந்துரையாடல், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இளைஞர் அணி உறுப்பினர்கள் தவிர, இந்தக் கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழரசுக்-கட்சி-இளைஞரணிக்கு-விளக்கமளிப்பு/71-199720

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மாவை சேனாதிராஜா உறுதி!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவை சேனாதிராஜா உறுதி!

 

வடமாகாண மகளிர் அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியின் கொள்ளை மற்றும் நிலைப்பாடுகளுக்கெதிராகச் செயற்பட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போதே அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அனந்தி சசிதரன், சிவகரன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் மீது நடவடிக்கையெடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை 10.00 மணியளவில் அண்மையில் வடமாகாணத்தில் இடம்பெற்ற குழப்பம் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவரும் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் அனந்தி சசிதரன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியதாகவும் அதற்கு கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://thuliyam.com/?p=72500

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.