Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை விஞ்சுவதற்கு முயற்சிக்கும் விக்கினேஸ்வரன்

Featured Replies

பிர­பா­க­ரனை விஞ்­சு­வ­தற்கு முயற்­சிக்கும் விக்­கி­னேஸ்­வரன்

01-10491742eae5195b95e6d2eb66ab211c45087a3b.jpg

 

அவரின் எண்ணம் பலிக்­காது; ஒற்­றை­யாட்­சியே தீர்வு என்­கி­றது சு.க.  
(க.கம­ல­நாதன்)

தமிழ் மக்­க­ளி­டத்தில் பிர­ப­ல­மாகும் நோக்­கி­லேயே வடக்கு முதல்வர் நாட்டை பிளவுபடுத்­து­வது குறித்து பேசு­கின்றார். சிறிது காலங்­க­ளுக்கு முன்பு அவரும் கொழும்­பி­லி­ருந்­துதான் அர­சி­யல் செயற்பாடுகளை பார்த்தார். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என்று அவர் நினைப்­பா­ராயின் அது கன­வாக மாத்­தி­ரமே இருக்கும். ஒற்­றை­யாட்­சியே அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என சமூக வலுட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திசா­நா­யக்க கேச­ரிக்கு தெரி­வித்தார்.

வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி. விக்­கி­னேஸ்­வரன் கொழும்பின் பார்வை தீர்­வுக்கு உத­வாது என்று தெரி­வித்­துள்ளார். அது குறித்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது நாட்டில் வாழும் தமிழ் ,சிங்கள், முஸ்லிம் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. ஒற்­றை­யாட்­சியின் கீழ் இந்த மக்கள் குழுக்கள் அவர்­க­ளுக்­கான உரி­மை­க­ளுடன் சுதந்­தி­ர­மாக வாழவே வழி­செய்து வரு­கின்­றது.

அதற்­கான முதற்­கட்ட முன்­னெ­டுப்­பா­கவே அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க செயற்­பா­டு­களும் கூட முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கின்ற போதுதான் இவ்­வா­றான கருத்­துக்கள் வெளிப்­ப­டு­கின்­றன. அதனால் வடக்கு முதல்­வரின் கதை­களை தமிழ் மக்­களின் நிலைப்­பா­டாக கருத முடி­யாது அவரின் இவ்­வா­றான கருத்­துக்­களை தமிழ் மக்கள் ஏற்­கவும் மாட்­டர்கள்.

வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் தனி தமிழ் ஈழம் ஒன்­றினை உரு­வாக்­கி­விட வேண்டும் என்ற கனவில் இருக்­கின்றார். அவர் தமிழ் மக்கள் மத்­தியில் தான் பிர­ப­ல­மாகி பிர­பா­க­ரனின் பெரி­யப்­பா­வா­கவே முயற்­சித்து வரு­கின்றார்.

சில காலங்­க­ளுக்கு முன்பு அர­சி­ய­லுக்கு வந்த அவரும் கொழும்பில் இருந்­துக்­கொண்­டுதான் அர­சியல் செயற்­பா­டு­களை பார்த்தார். இன்று யாழ். சென்று அர­சியல் செய்­வதால் கொழும்பின் பார்வை தவறு என்று கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

எனவே சமஷ்டி ஆட்சி முறை­யினை கருத்திற் கொண்டு செயற்­ப­டாமல் எமது நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மகக்ளினதும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கின்றது. அதற்கு மாறாக நாட்டை பிரிக்க வேண்டும் என வடக்கு முதல்வர் நினைத்தால் அது கனவாக மட்டுமே இருக்கும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.