Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்மலானையில் விமானத்தை கடத்தி அமெரிக்க தூதரகத்தை தாக்க ஐ.எஸ். திட்டமா? விசேட எச்சரிக்கை வரவில்லை; பாதுகாப்பு பலம் என்கிறது விமானப்படை

Featured Replies

‘இதுவரை தகவல் இல்லை’
-

image_a25e345133.jpgகொழும்பு -03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியான அறிக்கை தொடர்பில், எவ்விதமான தகவலும் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லையென இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.   

அது, அமெரிக்க அரசாங்கத்தால், இந்த நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

எனினும், அந்த அறிக்கை தொடர்பில் காரணங்களைத் தேடியறிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   
ஊடங்களில் வெளியான அந்தச் செய்தி தொடர்பில், கூடுதலான அவதானம் செலுத்தி, அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கு, உடனடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  

http://www.tamilmirror.lk/செய்திகள்/இதுவரை-தகவல்-இல்லை/175-199773

இரத்­ம­லா­னையில் விமா­னத்தை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ். திட்­டமா? விசேட எச்­ச­ரிக்கை வர­வில்லை; பாது­காப்பு பலம் என்­கி­றது விமா­னப்­படை  

 

 

இரத்­ம­லா­னை விமான நிலை­யத்தில் இருந்து விமா­னப் ­ப­டை­யி­னரின் ஹெலிகள்,  விமா­னங்­களை பயன்­ப­டுத்­தியோ அல்­லது சிவில் விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­தியோ  சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.அமைப்பு தாக்­குதல் நடத்­த­வுள்­ள­தாக எந்த சிறப்பு எச்­ச­ரிக்­கை­களும் எமக்கு கிடைக்­க­வில்லை.

sri-lanka-air-force.jpg

எனினும் ஐ.எஸ். உள்­ளிட்ட எந்த அமைப்பின் சதி­க­ளையும் உடைத்­தெறியும் வித­மாக இரத்­ம­லானை விமான நிலை­யத்தின் பாது­காப்­பா­னது பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே உள்­ள­தாக விமா­னப்­படை ஊடகப் பேச்­சாளர் குறூப் கெப்டன் கிஹான் சென­வி­ரத்ன கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 

இரத்­ம­லா­னையில் விமா­னப்­ப­டை­யி­னரின் பூரண பாது­கா­பபு கட்­டுப்­பாட்டின் கீழ் உள்ள விமான நிலை­யத்தில் இருந்து விமானம் ஒன்­றினை கடத்தி அமெ­ரிக்க தூத­ர­கத்தை தகர்க்க ஐ.எஸ்.சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க உளவுத் துறை கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்கள் தொடர்பில் விமா­னப்­படை பேச்­சா­ளரை தொடர்­பு­கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் விமானம் ஒன்றை கடத்திச் சென்று கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தை தாக்க ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக தகவல் கிடைத்­துள்­ளது என அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு அறி­வித்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இவ்­வா­றான நிலை­மைக்கு இட­ம­ளிக்­காது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அமெ­ரிக்க பாது­காப்பு தரப்பு இலங்கை அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வித்­துள்­ள­தாக அந்த செய்­தி­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தன.

இந்த நிலைமை கார­ண­மாக அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு மற்றும் சிவில் அதி­கா­ரிகள் இலங்கை வந்­துள்­ள­தாக அந்த செய்­திகள் தெரி­வித்­தன.

 இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­க­ரவை தொடர்­பு­கொண்டு கெட்ட போது, அவ்­வா­றான எந்த தக­வலும் தனக்கு இது­வரைக் கிடைக்­க­வில்லை எனவும் தேசிய பாது­க­பபு விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட விட­யங்கள் குறித்து உடன் கருத்து தெரி­விக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார்.

 அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

' இந்த தக­வல்­களை நானும் ஊட­கங்கள் ஊடாக அறிந்தேன். எனினும் அது தொடர்பில் என்னால் கருத்­து­ரைக்க முடி­யாது.

  இது வரை எமக்கு எந்­த­வொரு விஷேட தாக்­குதல் திட்டம் குறித்தும்   எச்­ச­ரிக்­கைகள் கிடைக்கப் பெற­வில்லை. சாத­ர­ண­மாக விமான நிலை­யத்­துக்கு, ஐ.எஸ். என்­றில்­லாது எந்­த­வொரு சதி­யையும் முறி­ய­டிக்கும் வித­மான 24 மணி நேர சிறப்பு பாது­காப்பே வழங்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்கும் விதமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே தனியான ஒரு குழுவையோ பிரிவையோ இலக்கு வைத்து பாதுகாபபு நடவடிக்கை இல்லை. அனைத்து சதிகார நடவடிக்கைகளையும் முரியடிக்கும் விதமாக பாதுகபபு ஸ்திரமாக உள்ளது என்றார்.  

http://www.virakesari.lk/article/21439

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.