Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்து மூலமான கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்படும் – தமிழரசுக் கட்சி!

Featured Replies

எழுத்து மூலமான கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்படும் - தமிழரசுக் கட்சி!

எழுத்து மூலமான கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கப்படும் – தமிழரசுக் கட்சி!

 

சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக எழுத்துமூலமான கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

“சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்” என்ற குறித்த நிகழ்வுஎதிர்வரும் 11ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பி.ப.3.30க்கு நீர்வேலியில்இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இதில்பங்கேற்கவள்ளனர்.

குறித்த நிகழ்வில் பங்கேற்பவர்களால் எழுத்து மூலமாக முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு மாத்திரமே இதன்போது பதில் வழங்கப்படும் என நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள தமிழரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

http://thuliyam.com/?p=72593

 

கேள்வி கேட்கக் கூடாது; நிபந்தனையுடன் மக்களைச் சந்திக்கும் சுமந்திரன்குழு!

அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை எச்சரிக்கையுடன் அணுகுவதற்கும் தலைப்பட்டுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன.

நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது.

இளைஞர் அணிக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மக்கள் சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் நாளை ஏற்பாடாகியிருக்கின்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சுமந்திரன், சிறிதரன் மற்றும் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இருப்பினும் முக்கிய நிபந்தனையாக கேள்விகள் எழுத்துமூலமே வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டே அழைப்பிதழ் கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது.

புலம்பெயர் தேசங்களில் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றமையால் பயணங்களை தவிர்த்து வருகின்ற தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் தற்போது தாயகத்திலும் இவ்வாறான நிலையை எதிர்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.org/?p=2698

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கூட்டங்களில் மக்கள் ஒரு சேர சாணி பூசின செருப்புக்களை எறியணும் அப்பத்தான் கொஞ்சமாவது தாங்கள் செய்வது சரியா என்கிற சொரனையாவது வரும் இந்த தமிழரசு கூட்டத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின்... மக்கள் சந்திப்புக்களை,  புறக்கணிப்பதன்  மூலமே  அவர்களுக்கு... புத்தி வர வைக்க முடியும்.

சென்ற கிழமை... தமிழக முதலமைச்சர்  பழனிச்சாமி  கலந்து கொண்ட ஒரு கூட்டத்தை....
பலரும் புறக்கணித்து... முகத்தில் கரியை பூசி அனுப்பினார்கள். 

Bild könnte enthalten: 1 Person, Text

Edited by தமிழ் சிறி

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மக்களுக்குப் பதிலளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை

மக்களின் கேள்விகளுக்குப் பதில் வழங்கும் இன்றைய கலந்துரையாடலுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் வருகை தரவில்லை.

தமிழரசுக் கட்சியின் கோப்பாய்த் தொகுதிக் கிளையின் ஏற்பட்டில் சமகால அரசியல் கருத்தரங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியும், நீர்வேலி கந்தசுவாமி ஆலய வடக்கு வீதி மண்டபத்தில் இன்று(11) நடைபெற்றது.

வட மாகாண சபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் குறித்த கூட்டத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களுக்குப்-பதிலளிக்க-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-இல்லை/71-200421

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.