Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, சமஅந்தஸ்த்தை ‘அரசமைப்பில் உள்வாங்கவும்’

Featured Replies

சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, சமஅந்தஸ்த்தை ‘அரசமைப்பில் உள்வாங்கவும்’
 

உடல் ரீதியான தீங்குகளை ஏற்படுத்தும் வன்முறைகளின் காரணமாக, கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருக்கும் நிலையில், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, பாரபட்சமின்மை, சமஅந்தஸ்த்து உள்ளிட்ட விடயங்கள், அரசியலமைப்பு ரீதியாக உள்வாங்கப்படும் போதே, அது சாத்தியமாகும்” என்று, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று(04) நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழ் மக்களே வடக்கு, கிழக்கில் இருந்து அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துள்ளனர்.   

“தமிழ் ஆயுத போராட்டங்கள் 1970 களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. எனினும், தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 83 இல் இடம்பெற்றது பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.   

“அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களின் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர். தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது, பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்களே இதற்கு காரணம்.   
“இருப்பினும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலரும் எந்த நாட்டிலும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் விருப்பத்துடன் இருக்கின்றனர்.

அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.    

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/சட்ட-ஆட்சி-சமத்துவம்-நீதி-சமஅந்தஸ்த்தை-அரசமைப்பில்-உள்வாங்கவும்/150-199931

  • தொடங்கியவர்

வெளிநாடு செல்ல நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தமி­ழர்கள் நாடு திரும்­பு­வ­தற்­கான சூழலை உரு­வாக்­குங்கள்

article-0-190EECCA000005DC-912634x421-94bac7e8a7bca72a25a7c1530d1517ae63085343.jpg

 

சபையில் அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தினார் சம்­பந்தன்

(ஆர்.ராம்)

அசா­தா­ரண சூழலில் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்ட தமிழ் மக்­களில் பெரும்­பா­லானோர் மீண்டும் நாடு திரும்­பு­வ­தற்கு விருப்­பத்­துடன் தயா­ரா­க­வுள்ள நிலையில் நாட்டில் அமை­தி­யான சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று எதிர்க்­கட்­சித்­தலைவர் இரா. சம்­பந்தன் சபையில் வலி­யு­றுத்­தினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற தேரு­நர்­க­ரளை பதிவு செய்­வ­தற்­கான விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த மக்­களின் வாக்­கு­ரி­மையை மீள ஸ்தாபிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் இந்­த­சட்­ட­மூ­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசே­ட­மாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்­களே இருந்து அதிக எண்­ணிக்­கையில் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 

அவ்­வா­றான நிலையில் இந்தச் சட்­ட­மூ­லத்தில் “உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த நபர்” என்­ப­தற்கு வழங்­கப்­பட்­டுள்ள வரை­வி­லக்­கணம் குறித்து எனக்கு சில விட­யங்­களில் உடன்­பாடு இல்லை என்­பதை முதலில் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்த நபர் என்று பார்க்­கின்­ற­போது வடக்கு அல்­லது கிழக்­கு­மா­கா­ணத்தில் நிரந்­த­ர­மாக வசித்­த­வரும் பயங்­க­ர­வா­திகள், போரா­ளிகள் அல்­லது வேறு­கு­ழுக்­களின் நட­வ­டிக்­கை­யினால் 2009ஆம் ஆண்­டுமே மாதம் 18 ஆம் திக­திக்கு முன்­ன­தான எக்­காலப் பகு­தி­யி­லா­வது தமது வதி­வி­டத்தை விட்டு செல்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­வர்கள் அல்­லது கடப்­பாட்­டுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள் மற்றும் வடக்கு அல்­லது கிழக்கு மாகா­ணத்தில் தமது பூர்­வீக வதி­வி­டத்­திற்கு வெளியே நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களில் வசிப்­ப­வர்கள் அல்­லது 2012 ஆம் ஆண்­டுக்­கான தேரு­நர்கள் இடாப்பின் மீளாய்வுத் திக­திக்கு பின்னர் தமது ஆரம்ப நிரந்­தர வதி­வி­டத்தில் மீளக் குடி­யே­றி­யுள்ள இலங்கை பிர­ஜைகள் என்ற வரை­ய­டையே சட்­ட­மூ­லத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த சட்­ட­மூ­லத்தில் இரா­ணுவ ரீதி­யான நட­வ­டிக்­கை­களின் விளை­வான இடம்­பெ­யர்­வு­களை அண்­மைய நிகழ்­வு­க­ளாக அர்த்­தப்­ப­டுத்­து­வதை நான் ஏற்­க­வில்லை. தமிழ் ஆயு­த­போ­ராட்­டங்கள் 1970 களின் இறுதி பகு­தி­யி­லேயே ஆரம்­பித்­தி­ருந்­தன. தமிழ் மக்­களின் இடம்­பெ­யர்­வுகள் அதற்கு இரு தசாப்­தங்­க­ளுக்கு முன்­னரே ஆரம்­பித்து விட்­டன. 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்­டு­களில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் இடம்­பெற்­றுள்­ளன. அதில் 1983 இல் இடம்­பெற்ற வன்­முறை பெரும் அழிவை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. 

அவ்­வாறு ஆரம்­ப­மான தமிழ் மக்­களின் இடப்­பெ­யர்வு 2009ஆம் ஆண்டு தொடர்ச்­சி­யாக நீடித்­தி­ருந்­தது. தமிழ் மக்கள் உள்­நாட்­டிற்குள் இடம்­பெ­யர்ந்­தது மட்­டு­மல்­லாது பெரும் எண்­ணிக்­கை­யானோர் வெளி­நா­டு­க­ளுக்கும் சென்­றி­ருந்­தனர். தமிழ் மக்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட உடல் ரீதி­யான தாக்­கு­தல்­களே இதற்கு கார­ண­மாகும்.  

வெளி­நா­டு­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்த பலரும் எந்த நாட்­டிலும் பிர­ஜா­வு­ரிமை மற்றும் வாக்­கு­ரிமை இல்­லாத நிலையில் தற்­போது இருக்­கின்­றனர். அவர்கள் மீண்டும் நாட்­டுக்கு திரும்பும் விருப்­பத்­துடன் தயா­ரா­கவே இருக்­கின்­றனர்.

உடல் ரீதி­யான வன்­மு­றைகள் கார­ண­மாக தமிழ் மக்கள் பலரும் வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். அர­ச­சேவை தற்­போது சீர­ழிந்த நிலையில் காணப்­ப­டு­கி­றது. உடல் ரீதி­யான வன்­மு­றைகள் கார­ண­மாக தமிழ் அரச ஊழி­யர்கள் இடம்­பெ­யர்ந்து செல்ல நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டமை இதற்­கான பிர­தான கார­ண­மொன்­றாகும். 

விருப்­ப­முள்­ள­வர்கள் நாடு திரும்­பு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். தற்­போது நாடு வேறு நிலை­மையில் காணப்­ப­டு­கி­றது. எதிர்­கா­லத்தில் கடந்த காலங்­களை போன்ற சூழல் ஏற்­பட்­டு­வி­டாமல் இருப்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். விசே­ட­மாக ஜன­நா­யகம், மனித உரி­மைகள், சட்­ட­ஆட்சி, சமத்­துவம், நீதி, பார­பட்­ச­மின்மை, சம அந்­தஸ்த்து உள்­ளிட்ட விட­யங்கள் அர­சியல் சாசன ரீதி­யாக உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அந்தக் கரு­மங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் போது அவர்கள் நாட்­டிற்கு மீண்டும் திரும்­பி­வ­ரு­வ­தற்­கான சாத்­தியம் ஏற்­படும். 

அவ்­வா­றான சூழலை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சியல் சாச­னத்­தினை நிறை­வேற்­று­வ­தற்­கான வாய்ப்பு தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் சரி­யாக சிந்­தித்து செயற்­படக் கூடி­ய­வர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு உள்­ளேயும் அதேபோல் வெளியிலும் இருக்கின்றனர். ஆகவே,அரசியல் சாசன ரீதியாக இவற்றை செய்வது பற்றி அனைவரும் சிந்தியுங்கள். 

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தேருநர்கள் சட்டமூலத்தை வரவேற்கின்ற போதிலும்,வெளிநாட்டிற்கு இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் இதில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என்பதனை கூறவேண்டும். அவர்கள் எந்தவொரு நாட்டினதும் பிரஜையாக இல்லாமல் இருக்கின்றனர். ஆகவே அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.