Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக தமிழ் உறுப்பினர்கள் ஓரணியில் செயற்படத் தீர்மானம்

Featured Replies

மலையக தமிழ் உறுப்பினர்கள் ஓரணியில் செயற்படத் தீர்மானம்
 

image_5ff0e93738.jpgமொஹொமட் ஆஸிக்

 

மத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஆறு தமிழ் உறுப்பினர்கள், சபையினுள் தனித்து ஓர் அணியாகச் செயற்பட தீர்மானித்துள்ளதாக, அறிவித்துள்ளனர். 

 

மத்திய மாகாண சபைக் கட்டடத்தில், நேற்று (04) அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.   

மத்திய மாகாண சபையின் அங்கத்தவரான ஆர். ராஜா ராம் இது பற்றித் தெரிவிக்கையில்,  

“ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், எம்.ராம், எஸ்.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, உதயகுமார் மற்றும் திருமதி சரஸ்வதி சிவகுரு ஆகியோரே, தமிழ் முற்போக்கு முன்னணி என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளோம். இதன் பின்னர், அனைத்து விடயங்களிலும் தாம் ஒரே குரலில் சபை நடவடிக்கைகளில் ஒலிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.   

தாம், சபையின் ஆட்சி மாற்றத்துக்கு அல்லது வேறு தேவைகளுக்காக இவ்வாறு இணையவில்லை என்றும் இதுகாலவரை சபையில் நாம் பேசும் விடயங்கள் வெறுமனே பேச்சாக மட்டுமே இருந்துள்ளதாகவும் அவை தொடர்பாக தாம் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளதால், இதன் பின்னர் கூட்டாக இயங்க முடிவு செய்துள்ளாகவும் கூறினார்.  

இப் புதிய அமைப்பின் தலைவராக எம்.ராமும் செயலாளராக சரஸ்வதி சிவகுருவும், அமைப்பாளராக ராஜாராமும் ஏனையவர்கள் இணை உப தரைவர்களாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உறுப்பினர்கள் சபையில் இருப்பதாகவும் அதில் ஆறு பேர் இ.தொ.கா.வில் அங்கம் வகிப்பதாகவும் மிகுதி ஆறு பேறும் தமது அமைப்பில் உள்ளதாகவும் தமது அமைப்பே அதிக சேவை செய்துள்ளதாகவும் உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.

ஆனால், இ.தொ.கா. அணிக்கு ஒரு மாகாண அமைச்சும் அவைத் தலைவர் பதவியும் மாகாண சபையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  இந்த நிலையில் பொதுமக்களுக்கு சரியான சேவை புரிவதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும் தமது அமைப்பு தமிழ், சிங்கள, முஸ்லிம் பேதமற்ற ஓர் அணியாகத் தொழிற்படுவதாகவும் கூறினார். 

http://www.tamilmirror.lk/மலையகம்/மலையக-தமிழ்-உறுப்பினர்கள்-ஓரணியில்-செயற்படத்-தீர்மானம்/76-199939

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.