Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாக்கியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா?

Featured Replies

தாக்கியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா?’
 

image_1926e69e64.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தாகக் கூறப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் தாக்கப்பட்டமையின் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா?” என, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். 

நாடாளுமன்றத்தில், இடம்பெற்ற தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஐந்தாவது சந்தேகநபர், அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சிறைச்சாலை காவலர்களால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.  

இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் கடந்த 29ஆம் திகதி நீதிமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்ததுடன், நீதி அமைச்சருக்கும் மகஜர் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர். 

இத்தகைய சம்பவங்கள் வவுனியா சிறைச்சாலையிலும் தொடர்கிறது.மேலும், அநுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேகநபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மேற்படி தாக்குதல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகின்ற நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணங்கள் உண்டா?” என்றும் வினவினார். 

“குறித்த நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்வதற்கு முயயன்றனர் என்று கூறப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

அதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீதான கொலை முயற்சி என்ற கதையில் எவ்விதமான உண்மைகளுமில்லை என, அதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கட்சியின் இன்னுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தச் சபையில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். 

புனர்வாழ்வு அளிக்கப்பட்டதோடு வேறு எவ்விதமான வாழ்வாதார உதவிகளும் இன்றிய நிலையில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையிலேயே இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், அவர்கள் மீதான பல்வேறு அதிகாரத் தரப்பினரது கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் கண்டறியப்பட்டு, வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்தார். 

ஏனைய துறைகளிலிருந்து எமது நீதித்துறை விடுபட்டிருக்கின்றதா என்ற கேள்விக்கு இடமிருக்கக்கூடாது. விடுபட்டிருக்க வேண்டும். ஏனைய துறைகளிலிருந்து நீதித்துறை விடுபட்டிருந்தால் மாத்திரம் அதுவே நீதித்துறைச் சுதந்திரத்திற்கான உரிய, பூரண வழிமுறை எனக் கூறிவிட முடியாது. நீதித்துறையைச் சார்ந்தோரும் சட்டத்தின் முன்னிலையில் சமமானவர்கள் என்ற நிலைப்பாடு நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தாக்கியதன்-பின்னணியில்-அரசியல்-காரணங்கள்-உண்டா/175-200039

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.