Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: கடற்படை கப்பக் குழு பயன்படுத்திய வெள்ளை வேன் சி.ஐ.டி.யினரால் மீட்பு

Featured Replies

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்:

p14-42cf4c719c9c4e870873923542d2bc847f6c7f7c.jpg

 

கடற்படை கப்பக் குழு பயன்படுத்திய  வெள்ளை வேன் சி.ஐ.டி.யினரால் மீட்பு 
(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் போகச் செய்­யப்­பட்ட சம்பவத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை வேன் ஒன்று  

குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கண்­டு­பி­டிக்­கப்ப்ட்டு மீட்­கப்­பட்­டுள்­ளது. 2008/2009 ஆம் ஆண்­டு­களில் இத்­த­கைய கடத்­தல்கள் தொடர்பில் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் , மாணவர் கடத்­தலை பிர­தான சந்­தேக நபர்­க­ளான தற்­போது கைதா­கி­யுள்ள லெப்­டினன் கொமாண்டர் சுமித் ரண­சிங்க, கைது செய்­யப்­பட தேடப்­பட்டு வரும் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி ஆகி­யோரின் கீழ் பயன்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளை வேனே இவ்­வாறு மீட்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயர்­த­ன­வுக்கு அறி­வித்­தது. குற்றப் புல­ன­யவுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்­வாவின் ஆலோ­ச­னைக்கு அமைய நேற்று மன்றில் ஆஜ­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சர­ண­பால இதனை நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்த போதே இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது சி.ஐ.டி.யினரால் கைப்­பற்­ரப்­பட்­டுள்ள வெள்ளை வேன் ஆனது வாடகை அடிப்­ப­டையில் அப்­போது ஹெட்டி ஆரச்­சியின் குழு­வி­னரால் பெறப்­பட்­டுள்­ள­தா­கவும், கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள 11 பேரில் உள்­ள­டங்கும் வத்­த­ளையில் வைத்து வேனுடன் கடத்­தப்­பட்ட கொட்­டாஞ்­சேனைப் பகு­தியைச் சேர்ந்த ஜோன் ரீட் என்­ப­வரின் வேனின் எஞ்ஜின் பின்னர் குறித்த வெள்ளை வேனுக்கு பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு நீதி­வா­னுக்கு அறி­வித்­தது.

வெல்­லம்­பிட்­டியில் உள்ள கராஜ் ஒன்றில், லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்­சி­யினால் இவ்­வாறு எஞ்ஜின் மாற்­றப்­பட்­டுள்­ள­தாக தகவல் உள்­ள­தா­கவும் அது தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் மன்றில் ஆஜ­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சர­ண­பால சுட்­டிக்­காட்­டினார்.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேர­டிக்­கட்­டுப்­பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியா­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­னாய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர். இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், சிறப்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­பா­ள­ராக கட­மை­யாற்­றி­யி­ருந்த லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க, கன்சைட் நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமண்டர் ராக பதவி உயர்த்­தப்­பட்­டுள்ள சுமித் ரண­சிங்க, கடற்­படை சிப்பாய் லக்ஷ்மன் உத­ய­கு­மார, நலின் பிர­சன்ன விக்­ர­ம­சூ­ரிய, தம்­மிக தர்­ம­தாஸ , கித்­சிரி ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் சம்பத் முன­சிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இஒ­ருந்து வரு­கின்­றனர்.

நேற்­றைய விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது சந்­தேக நபர்கள் மனறில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் சிறப்பு மேல­திக அறிக்­கை­யுடன் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சர­ண­பால ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

' கனம் நீதிவான் அவர்­களே, இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்­கப்ப்ட்­டமை தொடர்பில் மெண்டிஸ், காமினி எனும் இரு கடற்­படை அதி­கா­ரிகள் தற்­போது விசா­ரணை வல­யத்தில் உள்­ளனர். மெண்­டி­சிடம் நாம் கடந்த வாரம் வாக்கு மூலம் பெற்­றுள்ளோம். அந்த விசா­ர­ணைகள் தொடர்­கின்­றது.

 இத­னை­விட விஷே­ட­மாக 2008/2009 காலப்­ப­கு­தியில் இந்த கடற்­படை குழு­வி­னரால் வாடகை அடிப்­ப­டையில் வேன் ஒன்ரு பயன்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளது. அத­னையும் நாம் மீட்­டுள்ளோம். இந்த வேனா­னது ரண­சிங்க, ஹெட்டி ஆரச்சி ஆகி­யோ­ரினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் எஞ்­ஜினை வெல்­லம்­பிட்­டி­யவில் உள்ள கராஜ் ஒன்றில் வைத்து ஹெட்டி ஆரச்சி மாற்­றி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. கடத்­தப்­பட்ட ஜோன் ரீட்டின் வேனின் எஞ்ஜின் இந்த வேனுக்கு பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக நாம் சந்­தே­கிக்­கின்றோம். அதனை உறுதி செய்ய வேனை இர­சா­யன பகுப்­ப­ய­வுக்கு உட்­ப­டுத்த அனு­மதி கோரு­கின்றோம். என்றார்.

இதன் போது அந்த வேன் எங்கே என நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் வினவ, சாரதி இல்­லாமை கார­ண­மாக அதனை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­லேயே வைத்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பதி­ல­ளித்­தனர்.

 இத­னை­ய­டுத்து அந்த வேனை மன்றில் கொண்­டு­வந்து காட்­டிய பின்னர் அந்த உத்­த­ரவைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு ஆலோ­சனை வழங்­கினார்.

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜ­ரான அச்­சலா சென­வி­ரத்ன, பிர­தான சந்­தேக நப­ரான ஹெட்டி ஆரச்­சியை இன்னும் கைது செய்­யாமை தொடர்பில் கேள்வி எழுப்­பினார். இதற்கு பதி­ல­ளித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவு ஹெட்டி ஆரச்சி எங்கு உள்ளார் என்­பது தெரி­யா­ததால் அவ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் சட்­டத்தில் 139 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக எழுத்து மூலம் பகி­ரங்க பிடி­யாணை கோரி­யது.

 எனினும் குற்றப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­டாத சந்­தேக நபர் ஒரு­வ­ருக்கு குற்­ற­வியல் சட்­டத்தின் 139 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்க முடி­யாது என சுட்­டிக்­காட்­டிய நீதிவான், அவ்­வா­றா­ன­வர்­களை கைதுச் செய்ய பகி­ரங்க பிடி­யாணை பிறப்­பிக்­கத்­தக்க சட்ட ஏற்­பா­டுகள் உள்ள நிலையில் அதன் கீழ் சாட்­சி­யங்­களைப் பதிவு செய்து அவ்­வா­றான ஒரு உத்­த­ரவைப் பெற்­றுக்­கொள்­ளு­மா­று­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு அறி­வித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்­வ­ழக்கின் இரண்டாம் சந்­தேக நப­ரான லெப்­டினன் கொமாண்டர் சுமித் ரண­சிங்­க­விடம், உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறுகுற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் இரண்டாம் சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் சுமித் ரணசிங்கவிடம், கொட்டாஞ்சேனையில் இரு தமிழர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டு அவர்களது உடமைகள் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என புலனாய்வுப் பிரிவினர் கோரினர். இதற்கு நீதிவான் அனுமதியளித்தார்.

 இந் நிலையில் சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை, முன்னெடுக்க வேண்டிய விசாரணை தொடர்பில் தனித்தனியான விரிவான அறிக்கையை தயார் செய்து மன்றுக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்தி வைத்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.