Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பு சரிவராது போல

Featured Replies

என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பு சரிவராது போல
 
15050.jpg
அது ஓர் அமைதியான ஊர். ஆலயத்தின் முன்றலில் அகன்று விரிந்து நிழல் பரப்பும் ஆலமரம்.
மரத்தின் பருமனும் விரிசலும் பழமையின் அடையாளமாகக் காட்சி கொடுத்தது.
 
ஆலமரத்தின் கீழ் மூன்று பேர் குத்தியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஆலமரம் மட்டு மல்ல அந்த மூவரும் முதியவர்கள்தான்.
 
அமைதியான சூழலில் இவர்கள் என்னதான்  கதைக்கிறார்கள் என்று அறிய மனம் அவாக்  கொண்டது. மரத்தில் மறைந்து நின்றேன்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுதுவது என்று அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூற, மற்றவர் எப்படி என்று சொல்லுங் களன் என்றார்.
 
அந்தப் பெரியவர் எப்படிக் கடிதம் எழுதுவது என்பதைச் சொல்லுகிறார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் வணக்கம்.
 
கெடுகாலம் உங்களையும் நல்லா கஷ்டப் படுத்துகிறது என்பதை எங்களால் உணர முடி கிறது.
 
இறைவனை நினையுங்கள். தொடர்ந்தும் தீயன பற்றிச் சிந்தியாதீர்கள். கேடு வருகின்ற போது கெட்ட சிந்தனைகள்தான் முன்னெழும். எதற்கும் பொறுமை, நிதானம் என்பவற்றைக் கடைப்பிடியுங்கள்.
 
அது சரி, எங்கட சம்பந்தர் ஐயா சொன்னவர் மிக விரைவில் நல்லதொரு செய்தி வரு மென்று.
இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றவருக்கு நாட்டில் நடக்கின்ற சம்ப வங்கள் அக்குவேறு ஆணி வேறாகத் தெரிய வரும் தானே! என்று நாங்களும் நம்பினம்.
 
அரசியலமைப்புச் சீர்திருத்தப் பணிகள் இன்னும் நடந்து முடியவில்லை போலும். அது வந்துவிட்டால் எல்லாப் பிரச்சினையும் தீரும் என்று சம்பந்தர் ஐயா சொன்னவர்தானே. அதால அந்த அரசியலமைப்புச் சீர்திருத் தத்தை நம்பியிருந்தம்.
 
ஊடகங்களில் ஒரு செய்தி. அரசியலமைப் புச் சீர்திருத்தத்தின் மூலம் மிகக் குறைந்தளவு அதிகாரங்கள்தான் தமிழ் மக்களுக்கு வழங் கப்படுமென்று ஜயம்பதி விக்கிரமரட்ண கூறி யுள்ளார் என அறிந்தம்.
 
அதன் பிறகு; சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு  இணைப்பும் கிடையாது. பொலிஸ், காணி அதிகாரத்துக்கு எல்லாம் கவுன்சில் நியமனம் என்ற மாதிரித் தகவல் வந்தது.
 
என்ன நாசமறுப்பு எண்டாலும் வந்து சேரட் டும். சர்வதேச விசாரணையை வலியுறுத்தாத எங்கட தமிழ் அரசியல் தலைமையோட நாங் கள் எதுவும் செய்ய முடியாது என்று நினைத் தம்.
 
அடக் கடவுளே! இப்ப புதிய அரசியலமைப்புத்  தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் அறிவித்திருக்கினம்.
 
இனி எதுவும் நடக்காது என்பது சர்வநிச்ச யமாகிற்று. இந்த விடயம் எங்களைப் போன்ற சாதாரண மக்களுக்கும் தெரிந்திருந்தது.
 
ஆனால், அரசியலில் பழுத்த அனுபவ முள்ள கூட்டமைப்பினருக்குத் தெரியாமல் போனதுதான் அதிசயமான உண்மை.
 
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்றிருந்த கூட்டமைப்பின் தலையில எதையோ  போட்ட மாதிரி நிலைமை ஆயிற்று.
 
இப்படி நாங்கள் சொல்லுகிறது சரியோ பிழையோ தெரியாது. இருந்தும் என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பும் சரிவராது போல அப்படித்தானே

http://valampurii.lk/valampurii/content.php?id=15050&ctype=news

19 minutes ago, Athavan CH said:

வரும் ஆனா வராது. சரிவராட்டித்தானே அத வச்சி அரசியல் நடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, காட்டுவாசி said:

வரும் ஆனா வராது. சரிவராட்டித்தானே அத வச்சி அரசியல் நடத்தலாம்.

ஏன் பாஸ் நாங்கள் என்ன பாவம் செஞ்சம் ஒருக்கா ஆட்களை மாத்தி பார்க்கபோறம்  வாரவன் முழுக்க   தமிழனை அழிச்சு புடுங்கிரவனாத்தானே இருக்கான்:10_wink:

  • தொடங்கியவர்

எது எதிர்பார்க்கப்பட்டதோ அதுவே நடக்கிறது

இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான அவசியம் எதுவும் கிடையாது. எனவே அரசியலமைப்பில் எந்தத் திருத்தமும் செய்யக்கூடாது. அதேவேளை யுத்தத்தின்போதான சில சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றைக் கொண்டுவரும்  முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது என நான்கு பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்க  தேரர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். அஸ்கிரிய பீடம் முதலில் இந்த அறிவிப்பை வெளியிட, அதனைத் தொடர்ந்து சியாம், அமரபுர மற்றும் ராமன்ன நிக்காயாக்களின் மகாநாயக்க மற்றும் உப மகாநாயக்க தேரர்களும் நேற்று  முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்.

 பௌத்த உயர் பீடங்களின் இந்த அறிவிப்பு அரசைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதுடன் தமிழ் ,முஸ்லிம் சிறுபான்மையினக் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமிழர்களுக்கு தீர்வொன்று முன்வைக்கப்படுமென அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடந்த இரு வருடங்களாகக் கூறிக் காலம் கடத்திவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான இடைக்கால அறிக்கை வெளியிடப்படுமென அறிவித்திருந்தன.

இந்நிலையிலேயே  பௌத்த உயர் பீடங்களின் இந்த அதிரடி எதிர்ப்பு அறிவிப்பு அரசினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும்  "தீர்வு' கதைக்கு முடிவு கட்டியுள்ளது . இதுதான் நடக்கும் என்பது மைத்திரி   ரணில் அரசு,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரைத் தவிர முழு நாட்டுக்கும் தெரிந்திருந்தது. சில வேளைகளில் இவர்களுக்கும் தெரிந்தும், "நாம் தீர்வு கொடுக்க முயற்சித்தோம்.

ஆனால் பௌத்த உயர் பீடங்கள் அனுமதிக்கவில்லை' என்று அவற்றின்  மீது பழிபோட்டுத் தாம் தப்பிக்க நினைத்தார்களோ  தெரியாது. ஆனால் எது நடக்குமென அனைவரும் எதிர்பார்த்தார்களோ  அதுவே  தற்போது நடத்துகிறது.  எனினும் இதுவும் ஒரு வகையில் நல்லதுதான்.  புதியஅரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தீர்வு வருகின்றது என இனி இந்த அரசோ  தமிழ் தரப்போ தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது.ஏனெனில் பௌத்த உயர் பீடங்களின் ஆசியின்றி இந்த நாட்டை ஆளும் அரசுகள் சிறு துரும்பைக்கூட அசைக்காது என்பது வரலாறு.

நான்கு பௌத்த உயர் பீடங்களினதும் இந்த அறிவிப்புகூட அரசியல் பின்னணி கொண்டதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் புதிய அரசியலமைப்புத் திருத்தம் என்ற விடயம் இன்றோ நேற்றோ முன்னெடுக்கப்பட்டதல்ல. கடந்த இரு வருடங்களாக  பல குழுக்கள் அமைக்கப்பட்டு ,அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள் பொது அமைப்புகள், மக்கள் எனடுஞூ பல தரப்பினர்களிடமும் கருத்துகள் , ஆலோசனைகள் பெறப்பட்டே திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இக்காலப்பகுதியில் அமைதியாக  இருந்த இந்த பௌத்த உயர் பீடங்கள் தற்போது  புதிய அரசியலமைப்பு திருத்தம்  தொடர்பான இடைக்கால அறிக்கை வெளியிடத் தயாரான  போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையே இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதத் தலைவர்கள் ,மத அமைப்புகள்தான் நாட்டின் ஒற்றுமைக்கும் இனங்களிடையிலான நல்லிணக்கத்துக்கும்  விட்டுக்கொடுப்புகள் புரிந்துணர்வுகளுக்கும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். ஆனால் இலங்கையை பொறுத்தவரை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நாட்டின் தேசிய மதமான பௌத்தமே காரணமாக இருப்பது அமைதி ,அகிம்சையை நேசித்த, போதித்த புத்தபெருமானுக்கு இழுக்கையே ஏற்படுத்தும். "புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு "தீர்வு' என்ற கடைசி வழியும் பௌத்த உயர்  பீடங்களினால் இழுத்து மூடப்பட்டுவிட்டது.  இனி அடுத்தது என்ன...?

http://www.thinakkural.lk/article.php?editorial/ipuykdnmen4001ffc58105bf8507vgucx6f8a91aba0fa2d99e6f106yggb5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.