Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சதத்தில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

Featured Replies

சதத்தில் சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

 

ஒருநாள் போட்டியில் சேஸ் செய்யும் போது அடிக்கப்பட்ட சதங்களில் சச்சினை முந்தி கோலி புதிய சாதனை படைத்தார்.

koli_09375.jpg

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
94654_thumb.jpg


இந்திய அணியின் கேப்டன் கோலியின் கேப்டன்ஷிப் மீது பல விமர்சனங்கள் மற்றும் மாற்று கருத்து இருந்தாலும் அவரது  பேட்டிங் திறமை மீது இதுவரை விமர்சனங்கள் வந்தது இல்லை. அதனால்தான், சச்சின் சாதனைகளை முறியடிக்கும் திறன் கோலியிடம் இருப்பதாகக் கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

நேற்று சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடிய கோலி, தனது 28 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யாவோடு சமன் செய்துள்ளார் கோலி. ஜெயசூர்யா 433 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். ஆனால், கோலிக்குத் தனது 28வது சதத்தை எட்டுவதற்கு 181  இன்னிங்ஸ் மட்டுமே தேவைப்பட்டது. 

கோலி, சேசிங்கில் கில்லாடி. முதலில் பேட் செய்வதை விட இரண்டாவது பேட் செய்வதை அதிகம் விரும்புவார். அவரது பேட்டிங் சராசரியும் சேசிங்கில்தான் மிக அதிகம். தனது மொத்த 28 சதங்களில் 18 சதங்கள் சேசிங்கில் அடிக்கப்பட்டவைதான். சேசிங்கில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சச்சினைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தார் கோலி. சச்சின் சேசிங்கில்  232 இன்னிங்ஸில் விளையாடி 17 சதங்கள் அடித்துள்ளார். கோலி சேசிங்கில் 102 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடி சச்சினின் சாதனையை முறியடித்தார்.

இந்தத் தொடரில் 336  ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்ற ரஹானே, இந்திய வீரர் ஒருவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டு நடந்த தொடரில், 312 ரன்கள் எடுத்த லக்ஷ்மன் முதல் இடத்தில் இருந்து வந்தார். 

http://www.vikatan.com/news/sports/94659-virat-kohli-beats-sachins-odi-century-record-yesterday.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.