Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளர்வடையும் வடபகுதி மீதான நம்பிக்கை

Featured Replies

தளர்வடையும் வடபகுதி மீதான நம்பிக்கை

809_content_jehan_perera.jpg

 

கடந்த  அரசாங்கத்தின் ஆட்சியின்போது மே 18 ஆம் திகதி வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் நாளாயிருந்தது. அத்தினத்தில் முன்னைய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வென்றெடுத்த நாளாக கொண்டாடுகையில் வடபகுதி போரில் உயிரிழந்தவர்களுக்காக அவர்களது உறவினர்களும் நண்பர்களும் அப்பகுதியில் பொது துக்க அனுஷ்டானங்களை மேற்கொள்வதனை தடையும்  செய்திருந்தது.

யுத்தம் முடிவுற்றதாகக் கருதப்படும் மே 18 ஆம் திகதி யன்று முள்ளி வாய்க்காலில் இடம்பெறவிருந்த நினைவு தின அஞ்சலியை நிறுத்துமாறு  நீதிமன்றத்திடம் பொலிஸார் பெற்றிருந்த தடையுத்தரவினால் அது வடபகுதியில்  பொதுமக்களது கவனத்தை பெருமளவு ஈர்த்து சஞ்சலப்படுத்தியிருந்தது. ஆனால் அதில் நினைவஞ்சலி தடையென்பது நீதிமன்றத்தால் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு மாத்திரமே தடையாக வழங்கப்பட்டிருந்தாலும் வடபகுதியில் இடம்பெறக்கூடிய துக்க அனுஷ்டான நிகழ்ச்சிகள் அனைத்துக்குமேயான தடையானது என்றும் கடந்தகாலமே மீண்டும் வடபகுதிக்கு ஏற்பட்டு மக்களுக்கு துயரத்தை தருகிறது என்ற பீதியும் ஏற்பட்டு விட்டது.

எனவே  நீதிமன்ற தடையுத்தரவு முள்ளிவாய்க்கால் தொடர்பிலான ஒரு நிகழ்ச்சிக்கே  என்பதும் அது ஏனைய நினைவஞ்சலி  நிகழ்ச்சிகளுக்கானதல்ல என்பதுமே உண்மையாகும். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில்  சமூக அமைப்புகளினால் பல நினைவஞ்சலி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களும் தேவாலய குழுக்களும் நினைவஞ்சலி தடையினை மீறியதாக சில ஊடகங்கள் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டிருந்தன. இருந்தபோதிலும்  தடை செய்யப்பட்டதாக கருதப்பட்ட சில தேவாலய  நிகழ்ச்சிகள் பின்னர் நடத்த அனுமதிக்கப்பட்டன. ஆயினும் ஆரம்பத்தில் திட்டமிட்ட வகையில் இறுதிப்போர் ஏற்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியில் இடம்பெறவிருந்த குறித்த நினைவஞ்சலி நிகழ்ச்சி இடம்பெறவில்லை.

முள்ளிவாய்க்காலில்  மிகப் பெரியதோர் நிகழ்ச்சி சிவில் சமூகத்தினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டு அதில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் வடபகுதி முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் போன்றோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில்  கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உரையாற்றுகையில் சில வினாக்களை எழுப்பி நிகழ்ச்சிக்கு ஊறு விளைவித்து பொது மக்களது கவனத்தை ஈர்த்துள்ளனர். அச்சம்பவம் பொது மக்களது கவனத்தை ஈர்த்து பெரும் விவாதத்திற்கும் உள்ளாகியது. முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலிக் கூட்டம் நீதிமன்றக் கட்டளை காரணமாக தவிர்க்கப்பட்டமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரை  வினாக்களால் இடையூறு செய்தமையும் அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்குமிடையிலான நம்பிக்கையில் குறைபாடு ஏற்பட்டுள்ளமையினை பிரதிபலிப்பதாயுள்ளது.  

ஆயினும் ஒரு புறத்தில்  பார்க்கும்போது நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கும் வாழ்வின் வேறுபட்ட தொழில் புரிபவர்களுக்கும் தமது அதிருப்தியினை பொது இடங்களில் வெளிப்படுத்தக்கூடிய அரசியல் சுதந்திரம் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாட்டின் வடபகுதியாயினும் சரி அல்லது தென்பகுதியாயினும் சரி அதிகாரத்திலிருப்பவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டக்கூடிய மனோ தைரியமும் கிளர்ந்தெழுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன.  இத்தகைய நிலைவரங்களால் தான் பல்கலைக்கழக  மாணவர்களும் அரசாங்க வைத்தியர்களும் கூட தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மறுப்பு காட்டி எதிர்த்து குரல் எழுப்பி போராட முடிகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத  பட்சத்தில் அவற்றால்  அதிருப்தியடைந்தவர்கள் எரிச்சலடைகின்றனர். மே 18 ஆம் திகதி பொலிஸார் இரவு ரோந்து சென்றவேளையில் தாக்கப்பட்டு அது இப்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது.

நினைவஞ்சலிக் கூட்டத்தின் தேவை

சிவில் சமூகத் தலைவர் அருட்தந்தை எழில்  இராஜேந்திரம் ஏற்பாடு செய்த நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு எதிராக தடை விதிக்கும்படி பொலிஸார் நீதிமன்றத்தை கோரியிருந்தனர். குறித்த நினைவஞ்சலிக் கூட்டத்தின் போது போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களது நினைவாக அவர்களது  பெயரை குறித்த நினைவுக் கல்தூண்கள் நிறுவும் நிகழ்ச்சி இடம்பெறவிருந்தது. தற்போது முள்ளிவாய்க்கால்  பகுதியில் அங்கே உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையிலான நினைவுச் சின்னங்கள் எதுவுமில்லை. அங்கு ஏற்பாடு செய்ததுபோன்ற ஒரு நிகழ்ச்சி இடம்பெறுமானால் அது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் ஒரு  அரசியற்பாணியிலான  நினைவஞ்சலியாகலாம் என பொலிஸாரும்  அரசியல்  தரப்பினரும்  எண்ணியிருந்தனர்.

உள்பொதிந்த நிகழ்ச்சி நிரல்களுடன் அந்நினைவஞ்சலி நிகழ்ச்சி இடம்பெற்றிருந்தால் அது நல்லிணக்கத்தினை சிதைக்கக்கூடியதாக  இருக்கலாம். இறந்தவர்களை கௌரவிப்பதும் வன்முறையிலான  போராட்டங்களை  நினைவுபடுத்துவதும் மிக மோசமான நினைவுகளை அடக்கி ஒடுக்குவதனை  நினைவுபடுத்துவதாகி விடலாம். அத்துடன் அரசியல் ரீதியாக  செயற்படும் விஷமச் சக்திகள் கடந்த கால இன வெறுப்புணர்வுகளை பயன்படுத்தி அவற்றை தூண்டிவிடுவதற்கும் அதற்கு பாதிப்புக்குள்ளான பிரிவினரை ஒன்று திரட்டவும் முயற்சிக்கலாம். இவற்றை எடுத்துக் கூறியதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கெதிராக வினாவெழுப்பி  ஒரு பிரிவினர் தகராறு  செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆயினும் மறுபுறத்தில்  பார்க்கும்போது தமிழீழ விடுதலைப் புலி அங்கத்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் ஆகியோர் தாம் இழந்த  உறவுகளை  நினைவுபடுத்தி பிரார்த்திக்க விரும்புவர் என்பது நியாயமானதாகும்.

யுத்தத்தின் இறுதிக் கால கட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு  எதுவித நினைவுபடுத்தலுக்கான நினைவுச் சின்னங்கள் இல்லாதிருக்கும் பிரச்சினை தொடர்பில் ஆவன செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். அவ்வாறான நினைவுச் சின்னங்களை எழுப்ப வேண்டிய தேவையிருப்பதால் அவ்வாறாக மக்கள்  தமது  அன்பிற்குரியவர்களுக்கு அவற்றை நிர்மாணிக்க அரசு தடை செய்யக்கூடாது. தமிழீழ விடுதலைப் புலியினரை நினைவுப்படுத்த அரசாங்கம் விரும்பாதிருக்குமானால், அதற்காக அப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் சிவில் சமூக குழுக்கள் என்போருடனான கலந்தாலோசனையுடன் பொருத்தமான நினைவுச்  சின்னங்களை நிர்மாணிப்பதற்கான ஒரு ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும். எனவே, எவ்வாறு தென்பகுதியில் இடம்பெற்ற புரட்சிப் போராளிகளான மக்கள் விடுதலை முன்னணியினருக்கு போன்று எதிர்காலத்தில் இடம்பெறக் கூடியதும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்துவதுமான அரசியல் ரீதியான ஏற்பாடுகளை இனங்களுக்கிடையேயான கருத்து ஒருமைப்பாட்டுடன் அரசாங்கம் மேற்கொள்ளல் வேண்டும்.  

இவற்றினை கவனத்திற் கொண்ட வகையிலேயே  முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்ச்சியினை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அருட்தந்தை எழிலுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளலும் வேண்டும். வவுனியா மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களிலிருந்து அருட் தந்தை எழிலுக்கு அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் அவருக்கு தொல்லைகளைக் கொடுத்து அச்சுறுத்துவதற்கும் இவ்வாறான நினைவஞ்சலி தொடர்பான ஆர்வலர்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் மேற்படி துன்புறுத்தல் ஏற்படும் என அச்சுறுத்தல் எச்சரிக்கை விடுப்பதும் இதன் நோக்கமாக இருக்கும்.

முன்னாள் அரசாங்கத்தின் இதுபோன்ற வன்முறை நடவடிக்கைகளின் வாயிலாக இப் பிரச்சினையை அணுகுவதனை விடுத்து (வெள்ளை வான்களைக் கொண்டு ஆட்களை காணாமல்போகச் செய்வது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறாத போதிலும்) கடந்த தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் செய்த வாக்குகள் தொடர்பான தீர்மானங்களை இனிமேலும் ஏற்படாது தவிர்க்கும் வகையில் அரசாங்கம் மக்களுக்கு என்ன தேவையாயுள்ளது என்பது  தொடர்பில் அவர்களுடன் உரையாடல்களை மேற்கொண்டு சமரசத்துடன் அவர்களுக்கு தேவைப்படும் நியாயமானவற்றை முழுமனதுடன் அளிப்பதாக செயற்படல் வேண்டும். வட பகுதி மக்களைப் போன்றே தென்பகுதி மக்களும் கடந்த இரு தேர்தல்களிலும் செயற்பட்டமையை அரசாங்கம் மறந்திருக்காது.

 சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சாதுர்யம்

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் ஆர்வங்கொண்ட  எனது சில சகாக்களுடன் மே மாதம்  19 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வீதி வழியாகச் சென்றடைந்தோம். அப்போது அங்கே பெருமளவில் பொலிஸாராது பிரசன்னத்தை கண்ணுற்றோம். கடந்த இரவு ஏதேனும் சுடப்பட்ட சம்பவம் தொடர்பானதாக அது இருக்கலாம் என்றே நாங்கள் எண்ணினோம். எவ்வாறாயினும் பின்னர் அது எங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வட பகுதி பொருளாதாரத்தை முன்னேற்றமடையச் செய்வது தொடர்பான பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலுக்காக வந்திருப்பதற்காக என அறிய முடிந்தது. வட பகுதி முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட வடபகுதி மக்கள் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருக்கிறார்.

வட பகுதி ஆட்சி சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் அரசாங்கத் தலைவர்கள் மக்களுடன் கலந்துரையாடுவது முக்கியமானதாகும். புதிய கட்டிடங்கள், புதிய உட்கட்டமைப்பு அமைப்பு வசதிகளை திறந்து வைப்பது மாத்திரம் போதாது. கடந்த அரசாங்கமும்  அதனைத் தான் செய்திருந்தது. மக்கள் இவ்வாறானவற்றிற்கு மாத்திரம் முன்னுரிமை கொடுப்பதில்லை என்ற உண்மையை கடந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்க முடியும்.  யாழ்ப்பாணத்தில் இயங்கும் சிவில் சமூகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயங்களுக்கிடையிலான கூட்டமொன்றில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்கு இரண்டு நாட்களின் பின்னர் மே மாதம் 20 ஆம் திகதி நாங்கள் கலந்து கொண்டோம்.

முள்ளிவாய்க்கால் பிரச்சினை மற்றும் நினைவஞ்சலி தொடர்பிலான சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் பெரிதளவில் மையப் பிரச்சினையாகத் தென்படவில்லை. குறித்த நிகழ்ச்சியின் போது அவை பற்றிய கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. ஆனாலும், கலந்துகொண்டவர்கள் சிலர் செய்த விமர்சனங்களில் அரசாங்க முறைமையிலும் பாதுகாப்புப் படைகளது அமைப்பிலும் அவர்கள் கொண்டிருந்த அதிருப்தி வெளிப்படத் தவறவில்லை.

அவர்கள் அப் பகுதிகளில் போதைப் பொருட்கள் தொடர்பான பிரச்சினைகள் மோசமாகிச் செல்வது பற்றி அக்கறை காட்டியவர்களாகவும் திட்டமிட்ட வகையில் யாழ்ப்பாண இளைஞர் சமூகத்தை அழிக்கும் ஒரு நோக்கத்திலேயே போதை வஸ்து பயன்பாட்டுக்குள்ளாக்க இந்நிலைவரம் உருவாக்கப்படுவதாகவும் அச்சம் தெரிவித்தனர். இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பளித்தல் போன்றவற்றிலும் காணாமல் போனோர் தொடர்பாக ஆவன செய்வதில் காணப்படும் தாமதம் அல்லது அசமந்தப் போக்கு என்பன பற்றியும் அவர்கள் விசனம் தெரிவித்தனர். ஒருபக்கச் சார்பான தகவல்களின் அடிப்படையிலான கருத்துகளால் தற்போதைய நிலைமையில் அவ நம்பிக்கையும் பெருகிச் செல்கின்றது.

உதாரணமாக நாட்டின் தென்பகுதியிலும் போதைவஸ்துகளின் பயன்பாடு அதிகரித்து இளைஞர்களை அழித்து  வருகின்ற பிரச்சினையை இதற்கு எடுத்துக்கூறலாம்.  மக்களுடன் ஆட்சி தொடர்பான பிரச்சினைகள் பற்றி இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  மற்றும் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே உட்பட பல உலகத் தலைவர்களிடம் இலங்கைப் பிரதமர் விக்கிரம சிங்க அரசியலமைப்பு தயாரிப்பு செய்முறைகள் தாமதிக்கப்படப் போவதில்லை என அறிவித்துள்ளார். அவர் மன்னாரில் மாவட்ட செயலாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் மக்கள் பிரதிநிதிகள் சபையில் வழிப்படுத்தும் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த இரண்டு மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்பு பற்றிய விவாதங்களின் பின் சமர்ப்பிக்கப்பட்டு வெளியாகிவிடும் என இந்தியடுஞூ பிரதமரிடம் தான் கூறியுள்ளதாக குறிப்பிட்டார். இனிமேலும் நாம் அரசியலமைப்பு தயாரிப்பு செய்முறையினை நீடிக்கப்போவதில்லை.  2015 ஆம் ஆண்டு இதற்காகவே எமது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

மகாத்மா காந்தியின் அணுகு முறையானது மக்கள் எம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதாகும். அதனை ஒத்ததாக வியப்பைத் தரும் அளவுக்கு ஒத்துணர்வுமிக்கதான பண்புடன் யாவும் இடம்பெறுகின்றன என்றும் பிரதமர் கூறத் தவறவில்லை. அரசாங்கம் மக்களுடன் முழுமையான முயற்சியுடன் உரையாடலை மேற்கொண்டு அது என்ன செய்யப் போகிறது என்பதனை விளக்க வேண்டிய அத்தியாவசிய தேவை அதற்குண்டு. அதன் வாயிலாக மக்களது நன்னம்பிக்கையினை வென்று சர்வசன வாக்கெடுப்பில் வெற்றியீட்டி நிலைத்து நிற்கக்கூடியதோர் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

http://www.thinakkural.lk/article.php?article/kytel0zqfp302309d37c08f76855aygrfb129e96277388757530c72vekdq

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.