Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புக்களினாலேயே தயாரிக்கப்படுகின்றது இறுதி வரைவு

Featured Replies

புலம்­பெயர் அமைப்­புக்­க­ளி­னா­லேயே தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது இறுதி வரைவு

dibesh-1-4d615fc30d70157e592c4701f9529e14012a35ab.jpg

 

வழி நடத்தல் குழு­வி­லி­ருந்து விரைவில் வில­குவோம் என்­கி­றது கூட்டு எதி­ரணி 

(ரொபட் அன்­டனி)

எங்­க­ளு­டைய எதிர்ப்­புக்­க­ளுக்கு மத்­தி­ யிலும் அர­சாங்­க­மா­னது கூட்­ட­மைப்­புடன் இணைந்து நாட்டின் ஒற்­றை­யாட்­சிக்கும் ஒரு­மைப்­பாட்­டுக்கும் பங்கம் ஏற்­படும் வகை யில் புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்­து­  வ­ரு­கின்­ற­மையின் கார­ண­மாக மா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்­டனர். அதனை நாங்கள் வர­வேற்­ப­து  டன் தேரர்­க­ளுக்கு எமது ஆத­ர­வையும் தெரி­விக்­கின்றோம் என்று கூட்டு எதி­ர­ணியின் தலை­ வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.  அந்­த­வ­கையில் அர­சி­ய­ல­மைப்பு வரைவை தயா­ரிக்கும் குழு­வி­லி­ருந்து வில­கு­வது குறித்து  ஆராய்ந்­து­வ­ரு­கின்றோம். இது தொடர்­பான முடிவை கூட்டு எதி­ரணி விரைவில் எடுக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.   

அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் மகா­நா­யக்க தேரர்­களின் அறி­விப்பு மற்றும் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லி­ருந்து கூட்டு எதி­ரணி வெளி­யே­றப்­போ­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை ஆகிய விட­யங்கள் குறித்து வின­வி­ய­போதே தினேஷ் குண­வர்­தன எம்.பி. மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்: அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழுவில் இடம்­பெ­று­கின்ற பல்­வேறு நாட்­டுக்கு விரோ­த­மான செயற்­பா­டுகள் தொடர்பில் நாங்கள் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்றோம். தமிழ் கூட்­ட­மைப்பு பல்­வேறு தரப்­புடன் இணைந்து ஒற்­றை­யாட்­சிக்கு பங்கம் ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது. எனவே இதில் தொடர்ந்து அங்கம் வகிப்­பது முடி­யாத காரியம்.  

அதனால் இந்த பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லி­ருந்து வில­கு­வது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வரு­கின்றோம். விரைவில் இது தொடர்­பான முடிவை எடுப்போம். அர­சி­ய­ல­மைப்பு வரைபு புலம் பெயர் நாடு­க­ளி­னா­லேயே தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அது இலங்­கையின் ஒரு­மைப்­பாட்­டுக்கு பாத­க­மா­கவே அமையும். அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது.

எம்­மைப்­பொ­றுத்­த­வ­ரையில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­தப்­பங்­கமும் ஏற்­ப­டக்­கூ­டாது. பௌத்த மதம் தொடர்­பான தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது பிரிவில் மாற்றம் வரக்­கூ­டாது. ஆனால் இவற்­றுக்கு பங்கம் ஏற்­படும் வகை­யி­லேயே பிர­தான வழி­ந­டத்தல் குழுவின் செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. எனவே அதில் தொடர்ந்து அங்கம் வகிப்­பது சாத்­தி­ய­மற்­றது.

அது­மட்­டு­மன்றி அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தாமல் தாம­தித்து வரு­கின்­றது. மாகா­ண­சலை தேர்­த­லையும் உரிய நேரத்தில் நடத்­தாமல் பிற்­போ­டு­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும் கருத்தில் கொண்டு பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லி­ருந்து வில­கலாம் என்ற முடிவை எடுக்க முயற்­சிக்­கின்றோம். அது தொடர்பில் விரைவில் எமது தீர்­மா­னத்தை அறி­விப்போம்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டுகள் தொடர்பில் மகா­நா­யக்க தேரர்கள் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். அதன்­பி­ர­காரம் நாங்கள் மகா­நா­யக்க தேரர்­களின் கூற்­றுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்றோம். ஒற்­றை­யாட்சி என்ற விட­யத்தை குறிப்­பிட்டு அதனுள் சமஷ்டி முறை­மையை கொண்­டு­வ­ரவே முயற்­சிக்­கின்­றனர். ஒற்­றை­யாட்­சிக்கு மாற்று யோசனை என்று கூறிக்­கொண்டு அதற்கு பங்கம் ஏற்­படும் விட­யங்­களே முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

தொடர்ந்து நாட்டின் ஒரு­மைப்­பாட்­டுக்கு அபாயம் ஏற்­படும் வகை­யி­லேயே செயற்­பா­டுகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த நிலையில் பொறுமை இழந்த மகா­நா­யக்­கர்கள் தமது எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். இதனை மீறி அர­சாங்கம் செயற்­ப­டு­மாயின் அது பாரிய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். மகா­நா­யக்க தேரர்கள் எதிர்ப்பை வெளி­யிட்­ட­வுடன் ஜனா­தி­பதி தேரர்­களை சந்­தித்து இறு­தி­வ­ரைபை அவர்­க­ளிடம் காட்­டு­வ­தாக கூறி­யி­ருந்தார்.

இதன்­படி பார்க்கும் போது ஜனா­தி­ப­திக்கும் தெரி­யாமல் சில விட­யங்­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றதா என்ற கேள்வி எழு­கி­றது. அண்­மையில் ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை வைத்­துக்­கொண்டு சமஷ்டி அதி­கா­ரங்­களை பெற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் யாழ்ப்­பா­ணத்தில் உரை­யாற்­றி­யி­ருந்தார். இவ்­வா­றான கூற்­றுக்கள் எமக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

பிர­தான வழி­ந­டத்தல் குழு­விலும் சம்­பந்தன் ஜயம்­பதி போன்ற சமஷ்­டிக்கு ஆத­ர­வா­ன­வர்­களே இருக்­கின்­றனர். அது­மட்­டு­மன்றி அர­சி­ய­ல­மைப்பு வரைபும் இலங்­கையில் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தாக தெரியவில்லை. மாறாக புலம்பெயர் அமைப்புக்களினால் வெளிநாடுகளிலேயே தயாரிக்கப்படுகின்றன. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க முடியாது.

தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்படுவதாக தெரிகிறது. அதாவது அவர்களும் ஒற்றையாட்சி விடயத்தில் மிகவும் உறுதியுடன் இருப்பது தெரிகின்றது. சுதந்திரக்கட்சியும் தொடர்ந்து எதிர்ப்புக்களை வெளியிட்டதன் காரணமாகவே மகாநாயக்க தேரர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.