Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கபீட கோரிக்கையை ஏற்று சம்பந்தன் இறங்கி வரவேண்டும் பந்தை எப்படி போடப்போகின்றாரென பார்ப்போம் என்கிறார் டிலான்

Featured Replies

சங்­க­பீட கோரிக்­கையை ஏற்று சம்­பந்தன் இறங்கி வர­வேண்டும்

dillian-perara-1-5485d3292528840170cbf1b62ff954f013168792.jpg

 

 பந்தை எப்­படி போடப்­போ­கின்­றா­ரென பார்ப்போம் என்­கிறார் டிலான் 

(ரொபட் அன்­டனி)

சங்­க­பீ­டங்­க­ளுக்கு எதி­ராக தமிழ் கூட்­ட­மைப்பு செல்­வதில் அர்த்­த­மில்லை. மாறாக சங்க பீடங்­களின் கோரிக்­கையை ஏற்றுக் கொள்­வ­தாக கூட்­ட­மைப்பு அறி­விக்க வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுக்­கலாம் என சங்­க­பீ­டங்கள் கூறி­யுள்­ளதால் அதனை பயன்­ப­டுத்தி  அந்த திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் உள்­ள­டக்கி விட வேண்டும். எனவே தற்­போது பந்து சம்­பந்தன் கையில் உள்­ளது. அவர் எப்­படி விளை­யாடப் போகின்றார் என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.  

இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சியல் தீர்வை சம்­பந்தன் பெற்றுக் கொள்­வாரா அல்­லது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பை­கோரி எத­னையும் பெற முடி­யாத நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வாரா? சம்­பந்தன் பந்தை எப்­படிப் போடப் போகின்றார் என்­ப­தி­லேயே அனைத்து விட­யங்­களும் தங்­கி­யுள்­ளன என்றும் டிலான் பெரெரா சுட்­டிக்­காட்­டினார்.

சம்­பந்தன் காலத்­தி­லேயே இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். எனவே தமி­ழர்­களின் தலை­வி­தியை தீர்க்கும் பொறுப்பு தற்­போது சம்­பந்தன் கையில் உள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை கைவி­டு­வ­துடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் வேண்டாம் என்ற இடத்­துக்கு தமிழ் கூட்­ட­மைப்பு இறங்கி வர­வேண்டும் என்றும் சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

சங்­க­பீ­டங்­க­ளுக்கு எதி­ராக தமிழ் கூட்­ட­மைப்பு செல்­வதில் அர்த்­த­மில்லை. மாறாக சங்க பீடங்­களின் கோரிக்­கையை ஏற்றுக் கொள்­வ­தாக கூட்­ட­மைப்பு அறி­விக்க வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுக்­கலாம் என சங்­க­பீ­டங்கள் கூறி­யுள்­ளதால் அதனை பயன்­ப­டுத்தி அந்த திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் உள்­ள­டக்கி விட வேண்டும். எனவே தற்­போது பந்து சம்­பந்தன் கையில் உள்­ளது. அவர் எப்­படி விளை­யாடப் போகின்றார் என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும் என்று சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சியல் தீர்வை சம்­பந்தன் பெற்றுக் கொள்­வாரா அல்­லது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பைக்­கோரி எத­னையும் பெற முடி­யாத நிலை­மையை ஏற்­ப­டுத்­து­வாரா? சம்­பந்தன் பந்தை எப்­படிப் போடப் போகின்றார் என்­ப­தி­லேயே அனைத்து விட­யங்­களும் தங்­கி­யுள்­ளன என்றும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

சம்­பந்தன் காலத்­தி­லேயே இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வைக் காண வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். எனவே தமி­ழர்­களின் தலை­வி­தியை தீர்மானிக்கும் பொறுப்பு தற்­போது சம்­பந்தன் கையில் உள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை கைவி­டு­வ­துடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் வேண்டாம் என்ற இடத்­துக்கு தமிழ் கூட்­ட­மைப்பு இறங்கி வர­வேண்டும் என்றும் சுதந்­திரக் கட்­சியின் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டினார்.

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா மேற்­கண்ட விட­யங்­களை சுட்­டிக்­காட்­டினார்.

செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு

 

Q இந்த நாட்டின் வர­லாறு முழு­வதும் அர­சியல் தீர்வு என்ற விட­யத்தில் தமிழ் பேசும் மக்கள் ஏமாற்­றப்­பட்டு வந்­துள்­ளனர் என்று நான் கூறினால் அதற்கு உங்­களின் பதில் என்ன?

 

பதில் உங்­களின் கேள்­விக்கு ஆம், இல்லை. என்று இரண்டு பதில்­க­ளையும் நான் கூற வேண்­டிய தேவை காணப்­ப­டு­கி­றது. அது­மட்­டு­மின்றி இவ்­வாறு வர­லாறு தீர்வு என்ற விட­யத்தில் தமிழ் மக்கள் ஏமாற்­றப்­பட்­ட­மைக்கு பெரும்­பான்மை தலை­வர்கள் 70 வீதம் கார­ண­மாவர். எஞ்­சிய 30 வீதம் தமிழ் பேசும் தலை­வர்கள் இதற்கு காரணம். எனவே 70 வீத­மான பொறுப்பை பெரும்­பான்மை தலை­வர்­களும் 30 வீத­மான பொறுப்பை சிறு­பான்மை தலை­வர்­களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

Q : சிறு­பான்மை மக்­களின் இந்த 30 வீதம் தொடர்பில் சற்று விளக்­க­லாமே?

 

பதில் :அதற்கு உங்­க­ளுக்கு ஒரு உதா­ர­ணத்தை மட்டும் நான் பதி­லாக கூறு­கின்றேன். அதா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­லாமல் தேர்தல் முறை மாற்றம், அதி­காரப் பகிர்வு ஆகிய விட­யங்­களை மேற்­கொண்டு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை நிறை­வேற்றிக் கொள்­ளலாம் என்று நாங்கள் கூறி வந்தோம். அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் கை வைக்­காமல் தேர்தல் முறை மாற்றம் மற்றும் அதி­காரப் பகிர்வை மட்டும் முன்­வைத்து அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை நிறை­வேற்ற முடியும்.  

 

 

இதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதனை நான் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வலி­யு­றுத்தி வந்தேன். உங்கள் நாளேட்­டுக்­குக்­கூட இதனை நான் பல தடவை எனது நிலைப்­பா­டாக கூறி­யி­ருக்­கின்றேன். ஆனால் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பி­லேயே குறி­யாக இருக்­கின்­றனர்.

இவர்கள் இரு­வரும் ஏன் நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்டும் என வலி­யு­றுத்­து­கின்­றனர் என்­பது எனக்கு குழப்­ப­மாக இருக்­கின்­றது. இன்று என்ன நடந்­தது என்று பார்த்­தீர்­களா? சங்­க­பீட தேரர்கள் அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் செய்தால் மட்டும் போதும் என்று கூறி­விட்­டனர்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம் அவ­சி­ய­மில்லை என்றும் சங்­க­பீட தேரர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். இதற்கு யார் காரணம்? சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் ஏன் நிறை­வேற்­ற­தி­கார ஒழிப்­பையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பையும் கோரு­கின்­றனர்? இத­னால்தான் நான் ஆரம்­பத்­தி­லி­ருந்தே சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு வேண்டாம் என்று கோரி வந்தேன்.

 

Q : சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு இப்­ப­டி­யொரு எதிர்ப்பு வரும் என நீங்கள் எப்­படி முன்­கூட்­டியே கரு­தி­னீர்கள் ?

 

பதில் : 1988 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் வந்­தது. அதுதான் முத­லா­வது மாகாண சபை தேர்தல். அதில்தான் நான் முதன் முத­லாக தேர்­தலில் போட்­டி­யிட்டேன். அப்­போது நாட்டில் பாரிய வன்­மு­றைகள் காணப்­பட்­டன. எனது சுதந்­திரக் கட்சி அந்தத் தேர்­தலை எதிர்த்­தது. ஜே.வி.பி. போட்­டி­யி­டு­ப­வர்­களை கொலை செய்­தது. மாகாண சபை முறை வந்தால் வட மாகா­ணத்­துக்கு விசா எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என பிர­சாரம் செய்­யப்­பட்­டது.

இவ்­வா­றான நிலையில் அன்­றி­லி­ருந்தே இந்த அதி­காரப் பகிர்வு தீர்வு என்­பன வரும்­போது நாட்டில் எவ்­வா­றான நிலை­மைகள் உரு­வாகும் என்­பதை நான் புரிந்து கொண்டேன். அத­னால்தான் நான் இதனை வலி­யு­றுத்தி வந்தேன். எனக்கு அது நன்­றா­கவே தெரிந்­தது. அதனை நான் கண்டேன். அதனை விட நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பதில் தமிழ் மக்­க­ளுக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகின்­றது என்­பது எனக்குத் தெரி­ய­வில்லை.

காரணம் அந்த முறை­மை­யி­ருப்பின் ஜனா­தி­பதி தேர்­தலின் போது தமி­ழர்கள் செல்­வாக்கு செலுத்த முடியும். 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து தீர்­வு­காண நாட்டில் சிறந்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. அதா­வது தேர்தல் முறை மாற்றம் மற்றும் அதி­காரப் பகிர்வு விட­யத்­துடன் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம்.

 மாறாக நிறை­வேற்று அதி­கார மாற்­றத்­துடன் தேர்தல் முறை மாற்றம், அதி­காரப் பகிர்வு ஆகிய மூன்று விட­யங்­க­ளையும் எடுத்­துக்­கொண்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு சென்றால் ஒன்றும் கிடைக்­காமல் போய்­விடும். இதனை ஏன் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் உணர்ந்­து­கொள்­ள­வில்லை என்­பதே ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. எனவே இன்று சங்­க­பீடம் எழுப்­பி­யுள்ள இந்த பிரச்­சி­னைக்கு கூட்­ட­மைப்பே பொறுப்­புக்­கூ­ற­வேண்டும்.

எனவே ஒரு விட­யத்தை இங்கு மன்­றா­டிக்­கேட்­கின்றேன். அதா­வது தற்­போ­தா­வது தேர்தல் முறை மாற்றம் மற்றும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு என்ற விட­யத்­துடன் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பின்றி அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை மேற்­கொள்வோம் என்று கூட்­ட­மைப்பு அறி­விக்­க ­வேண்டும். அத­னூ­டாக இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைப் பெறலாம்.

 

Q : தீர்வுத் திட்­ட­மா­னது அனைத்து மக்­க­ளி­னதும் ஆத­ர­வுடன் அடை­யப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே கூட்­ட­மைப்பு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­கின்­றது என்­பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்­கின்­றீர் கள்?

 

பதில் : நீங்கள் கூறும் காரணம் சரி­யா­னது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு நிறை­வேற்று அதி­கா­ரத்தை மாற்ற வேண்டும் என கூட்­ட­மைப்பு ஏன் கோர வேண்டும். தேர்தல் முறை மாற்­றத்­தையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் முன்­னெ­டுத்து அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை நிறை­வேற்றும் போது உயர் நீதி­மன்றம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்த வேண்டும் என கூறினால் அப்­போது அதற்­காக நாம் அனை­வரும் இறங்கி வேலை செய்­யலாம்.

ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் அவ்­வாறு அவ­சி­ய­மில்லை. அது­மட்­டு­மின்றி தற்­போது பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­க­ளுடன் 13 ஆவது திருத்தச் சட்டம் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதில் செனட் சபைக்­கான திருத்­தத்தை முன்­னெ­டுத்து நிறை­வேற்­றி­வி­டலாம். அதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மில்லை. இதனை ஏன் சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் புரிந்து கொள்ள மறுக்­கின்­றார்கள் என்­ப­தற்கு எனக்குப் பதில் தேவை.

 

Q : சங்­க­பீ­டங்­களின் தேரர்­களின் அறி­விப்­புக்கு சம்­பந்தன் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்று கூறு­வது எந்த விதத்தில் நியாயம்?

 

பதில் : சங்­க­பீட தேரர்கள் நிறை­வேற்று அதி­கா­ரத்தில் கைவைக்­கக்­கூ­டாது என்று தெரி­வித்­துள்­ளனர். அத்­துடன் தேர்தல் முறை மாற்றம் அவ­சியம் என்று குறிப்­பிட்­டுள்­ளனர். கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக புதிய அர­சி­ய­ல­மைப்­பையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பையும் கோரி­வந்­தது. ஒரு புறம் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை நீக்­கப்­ப­ட­வேண்டும் என்று மஹிந்த கூறு­கிறார். மறு­புறம் ஐக்­கிய தேசிய கட்­சியும் அதனை கூறு­கின்­றது. அதே கருத்தை ஏன் சம்­பந்­தனும் கூற­வேண்டும்? அத­னால்தான் இன்று இந்த சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. நிறை­வேற்று அதி­காரம் நீக்­கப்­பட வேண்டும் என மஹிந்த கூறு­வதில் ஒரு காரணம் இருக்­கின்­றது. ஐ.தே.க. கூறு­வ­திலும் ஒரு காரணம் உள்­ளது. ஆனால் சம்­பந்தன் ஏன் அதனை கூறு­கின்றார் என்­பது புரி­யாத புதி­ராக உள்­ளது.

 

Q : சுமந்­திரன் எம்.பி. கடந்த வியா­ழக்­கி­ழ­மையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை பாரா­ளு­மன்றில் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தாரே? இதில் தீர்வை சகல மக்­களும் ஏற்­க­வேண்டும் என்ற நோக்கம் வெளிப்­பட்டு இருந்­ததே?

 

பதில் :அதுதான் எனக்கும் புரி­யவில்லை. மஹிந்த முன்­வைக்­கின்ற நிலைப்­பாட்­டையே ஏன் கூட்­ட­மைப்பு முன்­வைக்­கின்­றது. மஹிந்­த­வுக்கு ஆத­ர­வாக ஏன் கூட்­ட­மைப்பு செயற்­பட வேண்டும். மஹிந்­தவும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கு­மாறு கூறுகின்றார். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரு­கிறார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அத­னையே கூறு­கி­றது. எனவே தற்­போது சங்­க­பீ­டங்கள் இவ்­வா­றான ஒரு முடிவை அறி­வித்­துள்­ளதால் கூட்­ட­மைப்பு நிறை­வேற்­ற­தி­கார விவ­கா­ரத்­தையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பையும் கை விட்டு இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சி­ய­ல­மைப்புத் திருத்­த­மாக நிறை­வேற்றிக் கொள்ள முன்­வர வேண்டும்.

 

Q : சங்­க­பீ­டங்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கையை தற்­போது எவ்­வாறு எடுத்துக் கொள்­வது ?

 

பதில் :இதனை ஒரு சிறந்த அடை­யா­ள­மாக எடுத்துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை­யில்லை என்றும் நிறை­வேற்று அதி­கா­ரத்தில் கை வைக்க வேண்டாம் என்றும் சங்­க­பீ­டங்கள் தெரி­வித்­துள்­ளன. ஆனால் தேர்தல் முறை மாற்றம் தேவை என சங்­க­பீடம் கூறி­யுள்­ளது. எனினும் அதி­காரப் பகிர்வு விட­யத்தில் சங்­கப்­பீ­டங்கள் மௌனம் காத்­துள்­ளன.

எனவே இந்த சந்­தர்ப்­பத்தை சரி­யாக பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை அடைந்து கொள்­வ­தற்கு கூட்­ட­மைப்பு முன்­வர வேண்டும். நிறை­வேற்­ற­தி­கார மாற்­றத்­தையும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பையும் கூட்­ட­மைப்பு கைவிட வேண்டும். இத­னூ­டாக காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுடன் செனட் சபை­யையும் சேர்த்து அர­சியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். இதனை மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்­ளலாம். இதனை நாங்கள் செய்­வ­தற்கு இறங்கி பணி­யாற்ற தயா­ராக இருக்­கின்றோம்.

 

Q : தற்­போ­தைய நிலை­மையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வந்தால் என்ன நடக்கும் ?

 

பதில் : செய்ய முடியும். ஆனால் தோல்­வி­ய­டையும். இந்த நாட்டில் பெரும்­பான்மை மக்கள் 70 வீதம் உள்­ளனர். அந்த 70 வீத மக்­களும் சங்­க­பீடம் கூறு­வ­தையே கேட்­பார்கள். மீண்டும் தீர்வு திட்­ட­மா­னது 1956 ஆம் ஆண்­டுக்கு சென்று விடும். அதனை நாங்கள் விரும்­பவில்லை. நாங்கள் பெரிய வீரர்­கள்­போன்று சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கோரலாம். ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு முடிவில் என்ன நடக்கும் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

Q : தற்­போது தமிழ் கூட்­ட­மைப்பு என்ன செய்ய வேண்டும்?

 

பதில் : தற்­போது சங்­க­பீ­டங்­க­ளுக்கு எதி­ராக தமிழ் கூட்­ட­மைப்பு செல்­வதில் அர்த்­த­மில்லை. சங்­க­பீ­டங்­களின் இந்த நிலைப்­பாட்டை உரிய வகையில் பயன்­ப­டுத்தி கொள்­வதே கூட்­ட­மைப்பின் பொறுப்­பாகும். அதா­வது சங்க பீடத்தின் கோரிக்­கையை ஏற்றுக் கொள்­வ­தாக கூட்­ட­மைப்பு அறி­விக்க வேண்டும்.

தேர்தல் முறை மாற்­றத்­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை முன்­னெ­டுக்­கலாம் என சங்­க­பீ­டங்கள் கூறி­யுள்­ளதால் அதனை பயன்­ப­டுத்தி அந்த திருத்­தத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் உள்­ள­டக்கி விட வேண்டும். எனவே தற்­போது பந்து சம்­பந்தன் கையில் உள்­ளது. அவர் எப்­படி விளை­யாடப் போகின்றார் என்­பதே இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் அர­சியல் தீர்வை சம்­பந்தன் பெற்றுக் கொள்­வாரா அல்­லது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை கூறி எத­னையும் பெற முடியாத நிலைமையை ஏற்படுத்துவாரா? சம்பந்தன் பந்தை எப்படிப் போடப் போகின்றார் என்பதிலேயே அனைத்து விடயங்களும் தங்கியுள்ளன.

சம்பந்தன் காலத்திலேயே இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். எனவே தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பு தற்போது சம்பந்தன் கையில் உள்ளது. தமிழ் கூட்டமைப்பு அந்த இடத்திற்கு இறங்கி வரவேண்டும். நாங்கள் விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம், உதய கம்மன்பில போன்ற இனவாதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை. மாறாக மித வாத தலைவர்களான சம்பந்தன் போன்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். எனவே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரலாற்று தவறை இழைத்து விடாமல் சங்கபீடங்களின் கோரிக்கையை ஏற்று சர்வஜன வாக்கெடுப்பின்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற முன்வர வேண்டும்.

 

Q : இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

 

பதில் :13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும். செனட் சபைக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதுவே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும். இந்த இடத்திற்கு சுதந்திரக் கட்சியை கொண்டு வருவதற்கு நாங்கள் கடும் கஷ்டப்பட்டோம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-08#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.