Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநாயக்க தேரர்களை மீறி அரசியலமைப்பை கொண்டுவர ஒருபோதும் இடமளியோம்

Featured Replies

மாநாயக்க தேரர்களை மீறி அரசியலமைப்பை கொண்டுவர ஒருபோதும் இடமளியோம்

P19-7b89326c38bdaa434061453d41c79ecd7dad34d0.jpg

 

வீதிக்கு இறங்குவோம்; அத்துரலியே ரத்ன தேரர் கூறுகிறார்

(ஆர்.யசி)

பெளத்த கொள்கை – கோட்­பா­டு­களை மீறி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முடி­யாது. மா­நா­யக்க தேரர்­களின் கருத்­து­க்களை மீறி புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டு­மா யின் வீதியில் இறங்கி போரா­டவும் தயா­ராக உள்ளோம் என்று இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அத்­து­ர­லியே ரத்­ன தேரர் அர­சாங்­கத்­திற்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.  

அர­சி­ய­ல­மைப்பு குறித்த ஆலோ­சனை குழு­விலும்,வழி­ந­டத்தல் குழு­விலும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்­களே அதி­க­மாக உள்­ளனர். அவர்களுக்கு மாத்­தி­ரமே அர­சி­ய­ல­மைப்பை  கொண்­டு­வரும் திட்­டத்தில் அதிக முக்­கி­யத்­துவம்  கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றது எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்.   

உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்­பி­லேயே இலங்கை தேசிய மகா சங்க சபையின் தலைவர் அது­ர­லியே ரதன தேரர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,  இந்த நாட்டு மக்கள் அர­சாங்­கத்­திடம் எதைக் கேட்­கின்­றார்­களோ அதை மாத்­தி­ரமே மக்­க­ளுக்கு வழங்க வேண்டும். அதை தவிர்த்து மக்கள் கேட்­காத எதையும் இந்த நாட்டில் திணிக்க வேண்டாம். நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று அவ­சி­ய­மில்லை என நான்கு மகா­நா­யக்க தேரர்­களும் தெரி­வித்­துள்­ளனர். நிறை­வேற்று அதி­காரம் இருக்க வேண்டும் எனவும், பெளத்த மத நட­வ­டிக்­கைகள் பல­ம­டைய வேண்டும் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். அதையும் தாண்டி அர­சாங்கம் தமக்கு தேவை­யான வகையில் அர­சியல் அமைப்பை உரு­வாக்க முயற்­சித்து வரு­கின்­றது என்றால் அதை தடுக்க வீதியில் இறங்கி போரா­டவும் நாம் தயா­ராக உள்ளோம்.  

இந்த நாட்டில் ஆட்­சிக்கு வந்­த­வர்கள் தமது தேர்தல் கொள்­கையில் மக்கள் கருத்­துக்கு அப்பால் சென்று எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­கப்­போ­வ­தில்லை என வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளனர். ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தொடர்ச்­சி­யாக இதனை தெறி­வித்­துள்­ளனர். ஆனால் இன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விடவும் சிவில் அமைப்­புகள் மற்றும் புலம்­பெயர் அமைப்­பு­களின் செயற்­பா­டு­களே அதி­க­மாக உள்­ளன.

சிவில் அமைப்­புகள் என தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்ளும் நபர்­க­ளுக்கு யார் அதி­காரம் கொடுத்­துள்­ளனர்? அவர்­க­ளுக்கு எங்­கி­ருந்து மக்கள் வரம் கிடைத்­தது. அவர்கள் நினைப்­ப­வற்றை அர­சி­யலில் செய்­து­கொள்ள யார் அதி­காரம் வழங்­கி­யுள்­ளனர். இவர்­களால் முடிந்தால் புதிய அர­சியல் அமைப்பு ஒன்றை உரு­வாக்­கிக்­காட்­டட்டும்.

யார் இதை முன்­னெ­டுத்து வந்­தாலும் அதை தோற்­க­டிக்க நாம் முன்­வ­ருவோம். இந்த நாட்டில் மகா­நா­யக தேரர்­களின் கருத்­து­க­ளுக்கு அர­சாங்கம் முன்­னு­ரிமை வழங்க வேண்டும். அதை எதிர்த்து எவரும் எதையும் மேற்­கொள்ள முடி­யாது.

அர­சியல் அமைப்பு குறித்த ஆலோ­ச­னைகள் குழு­விலும்,வழி­ந­டத்தல் குழு­விலும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் உறுப்­பி­னர்­களே அதி­க­மாக உள்­ளனர். அவர்கள் மாத்­தி­ரமே அர­சியல் அமைப்பை கொண்­டு­வரும் திட்­டத்தில் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்டு வரு­கின்­றனர். நல்­லாட்சி என்ற பெயரில் அவர்­களின் தேவைக்­காக அர­சியல் அமைப்பு ஒன்றை கொண்­டு­வர முடி­யாது.

இந்­த­நாட்டில் நிறை­வேற்று அதி­காரம் நீக்­கப்­பட்ட பின்னர் குழப்பம் ஒன்று ஏற்­பட்டால் பிர­தமர் எவ்­வாறு செயற்படப்போகின்றார்? அவரால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற முடியாது. முதலில் கட்சிகள் இரண்டும் இணங்கும் வேலைத்திட்டங்களை மாத்திரம் இந்த அரசாங்கத்தில் முன்னெடுப்போம். அதை விடுத்து நாட்டில் குழப்பங்களை கொண்டுவரும் நாட்டின் ஐக்கியத்தை அழிக்கும் நடவடிக்கைகளை கைவிடுவோம் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-08

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.