Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையின்றேல் எதிர்காலம் சின்னாபின்னமாகும் அபாயம்

Featured Replies

ஒற்றுமையின்றேல் எதிர்காலம் சின்னாபின்னமாகும் அபாயம்

 

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் நேசிக்­கிறார்.  நாம் ஒரு­போதும்  சிதைக்க மாட்டோம்  என்றார் கிட்டு

ஐ.தி. சம்­பந்தன் கேச­ரிக்கு செவ்வி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, வட­மா­காண சபை முத­ல­மைச்சர் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் ஒற்­று­மை­யுடன் செயற்­பட வேண்டும். அவ்­வாறு ஒற்­று­மை­யின்றி செயற்­ப­டுப­வர்­க­ளாக இருப்­பார்­க­ளாயின் தமி­ழர்­களின் எதிர்­காலம் சின்­னா­பின்­ன­மா­கி­விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளையின் ஒருங்­கி­ணைப்­பாளர் ஐ.தி.சம்­பந்தன் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்­துள்ளார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு, 

கேள்வி:- நீங்கள் தற்­போது இலங்­கைக்கு வருகை தந்­தி­ருப்­ப­தற்­கான காரணம் என்ன?

பதில்:- அண்­மையில் எமது பெருந்­த­லைவர் தந்தை செல்­வ­நா­ய­கத்தின் நினை­வஞ்­சலி நிகழ்­வினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளையின் ஏற்­பாட்டில் லண்­டனில் செய்­தி­ருந்தோம். இந்­நி­கழ்­விற்கு நினை­வுப்­பே­ருரை ஆற்­று­வ­தற்­காக அமைச்சர் மனோ ­க­ணே­சனும் வருகை தந்­தி­ருந்தார்.

அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் வெவ்­வேறு கொள்­கைக­ளினை மையப்­ப­டுத்தி புலம்­பெயர் மண்ணில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் ஐந்து அமைப்­புக்­க­ளுடன் தாய­கத்தில் உள்ள எமது உற­வு­க­ளுக்­காக பொது­வே­லைத்­திட்­ட­மொன்றில் இணைந்து கொள்­வது என்று இணக்­கப்­பா­டொன்­றிற்கு நாம் வந்­தி­ருந்தோம்.

அதன்­பின்னர் நாம் அந்த அமைப்­புக்­க­ளுடன் தனித்­த­னி­யாக சந்­திப்­புக்­களை நடத்­தி­ய­போதும் அந்த இணைவு சம்­பந்­த­மாக அவர்கள் சாத­க­மா­கவும் உட­ன­டிச் சாத்­தி­ய­மா­கவும் வர­வேண்டும் என்ற சிந்­த­னையைக் கொண்­டி­ருந்­தார்கள்.

அந்­த­வ­கையில் அச்­செய்­தியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டத்தில் தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் அடுத்த கட்­ட­மாக எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தென்­பது குறித்து கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்வ­தற்­கா­கவே வருகை தந்­தி­ருக்­கின்றேன்.

கேள்வி:- பொது வேலைத்­திட்­டத்­திற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிரித்­தா­னியக் கிளை இணைந்­துள்ள ஐந்து அமைப்­புக்­களும் எவை?

பதில்:- பிரித்­தா­னிய தமிழர் பேரவை, தமிழர் தகவல் நிலையம், உலகத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பண்­பாட்டுக் கழகம், வெளிநாட்டு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் ஆகிய அமைப்­புக்­க­ளுடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிரித்­தா­னிய கிளையின் தலைவர் இரத்­தி­ன­சிங்கம் தலை­மை­யி­லான குழு­வினர் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­தி­ருந்­தனர். அந்­தக் கலந்­து­ரை­யா­டல்­களின் பிர­காரம் தற்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது­வொரு முதற்­ப­டி­யென்­றுதான் கூற­வேண்டும்.

கேள்வி:- எத்­த­கை­ய­தொரு பொது­வே­லைத்­திட்­டத்­திற்­காக இவ்­வா­றான இணக்கம் எட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது?

பதில்:- யுத்­தத்தின் கார­ணத்­தினால் எமது தாய­கப்­ப­கு­தியின் பொரு­ளா­தாரம் முற்­றாக சிதைந்­து­போ­யுள்­ளது. இந்த அமைப்­புக்கள் தனித்­த­னி­யாக தாய­கத்தில் பல்­வேறு உதவிச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றன.

அந்த அடிப்­ப­டையில் அர­சியல் விட­யங்­க­ளுக்கு அப்பால் கொள்­கை­ய­ளவில் தாய­கத்தின் பொரு­ளா­தார மீட்­சிக்­காக ஒன்­று­பட்டு செயற்­ப­டு­வது என்ற பொது வேலைத்­திட்­டத்­திற்கே நாம் வந்­தி­ருந்தோம்.

இந்த இணக்­கப்­பாடு தொடர்பில் தலைமை உட்­பட ஏனைய பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுக்க நான் வந்­த­போதும் வட­மா­காண சபையில் ஏற்­பட்­டி­ருந்த குழப்­பங்­க­ளினால் அது முடி­யாது போயுள்­ளது.

கேள்வி:- உங்­க­ளது முயற்சி நிறை­வே­றாத நிலையில் நீங்கள் மீண்டும் லண்டன் திரும்­பு­கின்­றீர்கள். இந்த விட­யத்­தினை எதிர்­கா­லத்தில் முன்­ன­கர்த்­து­வது குறித்து மீண்டும் நட­வ­டிக்­கை­களை எடுப்­பீர்­களா?

பதில்:- நிச்­ச­ய­மாக நாம் எடுப்போம். தற்­போ­துள்ள சூழலில் வட­மா­காண சபை குழப்­பங்­களால் அமை­தி­யற்­ற­தொரு சூழலே நில­வு­கின்­றது. இத்­த­கைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யு­டனும், வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­டனும் என்னால் சந்­திப்­புக்­களை நடத்த முடி­யாது போயுள்­ளது.

நாம் பொரு­ளா­தார ரீதி­யான வளர்ச்சி செயற்­பா­டு­களை தயா­கத்தில் கட்­சி­பே­தங்­க­ளின்றி மேற்­கொள்­வது என்றே திட்­ட­மிட்­டி­ருக்­கின்றோம். ஆகவே இதற்­கான சிறந்த திட்­ட­மிடல் அவ­சி­ய­மா­கின்­றது.

தற்­போ­துள்ள சூழலில் இந்த விட­யங்­களை பேசு­வ­தென்­பது பொருத்­த­மற்­ற­தொன்­றா­கின்­றது. ஆகவே நிச்­சய­மாக எதிர்­கா­லத்தில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­டனும், கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னு­டனும் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்போம்.

கேள்வி:- அண்­மையில் வட­மா­கா­ண­ ச­பையில் எழுந்த நெருக்­கடி நிலை­மை­களை நீங்கள் நன்கு அறி­வீர்கள். தற்­போதும் கூட அமைச்­ச­ரவை நிய­மனம், விசா­ரணை என இன்­னமும் பணிப்போர் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. இந்த நிலை­மை­களை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

பதில்:- இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யினை தந்தை செல்வா எவ்­வாறு வளர்த்­தெ­டுத்தார் என்­பது குறித்து சரி­யான புரி­த­லின்றி சில இடையில் வந்த தரப்­புக்கள் தாக்­கி­ய­வா­றுள்­ளன. அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது முதலில் வட­மா­காண முத­ல­மைச்­ச­ருடன் இணக்­கப்­பா­டொன்றை கொண்டு வர­வேண்­டிய பாரிய கட­மை­யொன்று உள்­ளது.

முத­ல­மைச்­சரைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் தேர்­தலில் போட்­டி­யிட்டார். வேட்­பு­ம­னுவில் கையொப்­ப­மி­டு­வ­தற்­காக யாழில் உள்ள தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்­திற்கு சென்­ற­தற்கு பின்னர் அவர் அங்கு சென்­றி­ருக்­க­வில்லை.

உண்­மை­யி­லேயே கட்சி கட்­ட­மைப்பு என்று பார்க்­கின்­ற­போது கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­ட­வில்லை. குறிப்­பாக முத­ல­மைச்சர் இவ்­வாறு தனித்த பய­ண­மாக செல்­வ­தற்கு அவ­ருடன் உடன் இருந்த ஆலோ­ச­கர்­களும் காரணம் என்­றொரு குற்­றச்­சாட்டு இருக்­கின்­றது. அவர்­களின் வலைக்குள் முத­ல­மைச்சர் சிக்­குண்­ட­மையால்தான் அவரால் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது போனது என்ற மனத்­தாங்கல் உள்­ளது.

ஆகவே கடந்து சென்ற விட­யங்­களை மீட்­டிப்­பார்ப்­பதை விடுத்து தற்­போ­தைய சூழலில் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி அர­சியல் இரா­ஜ­தந்­தி­ரத்தின் பிர­காரம் செயற்­ப­டு­வதே காலத்­திற்கு பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.

முத­ல­மைச்­சரும் இந்த விட­யங்­களை கருத்­திற்­கொண்டு வட­மா­காண சபை­யினை முன்­கொண்டு செல்­ல­வேண்டும். அத­னை­வி­டுத்து தனிப்­பட்ட கோப­தா­பங்கள், அர­சியல் கார­ணங்­க­ளுக்­காக முட்­டி­மோ­திக்­கொண்­டி­ருந்தால் காலம் வீணாக கடந்து செல்லும்.

 

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­ப­தற்கு அப்பால் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தனித்த பய­ணத்­தினை மேற்­கொள்­வ­தாக குற்­ற­ச்சாட்­டொன்று பங்­கா­ளிக் ­கட்­சி­களால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தாய்க்­கட்சி இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யாகும். மக்கள் தேர்­தலில் சில முக்­கிய பணி­க­ளுக்­காக ஆணை வழங்­கி­யுள்­ளார்கள். குறிப்­பாக நியா­ய­மான அர­சியல் தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்­வதே பிர­தான விட­ய­மா­கின்­றது.

இந்த இடத்தில் தான் பிரச்­சி­னைகள் அதிகம் எழு­கின்­றன என்­பதை நான் அறிந்­துள்ளேன். அர­சியல் தீர்வு விட­யத்தில் புதிய அர­சியல் சாசன உரு­வாக்கச் செயற்­பாடு தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அதில் கூட்­ட­மைப்பின் தலை­வரும், எம்.ஏ.சுமந்­தி­ரனும் அதி­க­ளவில் ஈடு­பட்­டுள்­ளார்கள்.

இவ்­வா­றான நிலையில்தான் அவர்கள் இரு­வரும் தனி­யாக செல்­கின்­றார்கள், அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றார்கள், விட்­டுக்­கொ­டு­க்கின்­றார்கள் என்­றெல்லாம் கூறு­கின்­றார்கள். இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தனித்த ஒரு அர­சியல் கட்சி என்றால் இத்­த­கைய பிரச்­சி­னைகள் எழுந்­தி­ருக்­காது.

ஆனால் ஏனைய மூன்று கட்­சி­க­ளுடன் கூட்­டிந்­துள்ள நிலையில் இவ்­வா­றான கருத்­துக்கள் வெளிவ­ரு­கின்­றன. குறிப்­பாக அந்த இரண்டு நபர்­களும் ஏன் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் கலந்து பேசு­வ­தில்லை என்­றொரு கேள்­வி­யி­ருக்­கின்­றது.

அனைத்து விட­யங்­க­ளையும் கலந்து பேசு­கின்­ற­போது அக்­க­ருத்­துக்கள் அந்­தந்தக் கட்­சி­யிலும் மீண்டும் இரண்­டா­வது தட­வை­யாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் எழு­கின்­றன. குறிப்­பாக பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுக்­குள்ளே மாறு­பட்ட கருத்­துக்கள், சிந்­த­னைகள் இருக்­கின்­ற­மையால் மிகவும் முக்­கி­ய­மான விட­யங்­களில் குழப்­பங்கள் ஏற்­ப­டலாம். அத­னா­லேயே அவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்கள் அதி­க­ளவில் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன.

அதற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மையும் சுமந்­தி­ரனும் தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­கின்­றார்கள் என்று கூறு­வது மிக­மிக கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். தமிழ் மக்கள் ஐக்­கிய இலங்­கைக்குள் சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான சமஷ்டி ஆட்­சிக்­கா­கவே வாக்­க­ளித்­துள்­ளார்கள். இந்த கோரிக்­கையை நேர­டி­யாக பிர­தி­ப­லிக்­கின்­ற­போது தென்­னி­லங்­கையில் பாரிய எதிர்ப்­புக்கள் எழுகின்­றன.

ஆகவே தான் கூட்­ட­மைப்பின் தலைமை தற்­போது கடைப்­பி­டிக்கும் அணு­கு­மு­றையின் கார­ண­மாக அத்­த­கைய எதிர்ப்­ப­லை­களை கட்­டுக்குள் வைத்­தி­ருக்­கின்­றன.

பெரும்­பான்மை இனத்தின் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்­தி­ருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்­தினை கை நழுவ விடு­வ­த­ானது தமி­ழர்­களின் எதிர்­கா­லத்­தி­னையே இருள் சூழ்ந்­த­தாக மாற்­றி­விடும். ஆகவே இச்­சந்­தர்ப்­பத்­தினை குழப்­பாது தலை­மைக்கு வலுச்­சேர்க்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும்.

அதே­நேரம் தமி­ழ­ரசுக் கட்சி மற்றும் கூட்­ட­மைப்பின் தலை­மையும் பங்­கா­ளிக்­கட்­சித்­த­லை­வர்­க­ளையும் பிர­தி­நி­தி­க­ளையும் அர­வ­ணைத்து கூட்­டுப்­பொ­றுப்­பினை உணர்த்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

தந்தை செல்­வ­நா­யகம் பண்­டா­ர­நா­யக்­க­வுடன் ஒப்­பந்தம் செய்­த பின்னர் ஜி.ஜி.பொன்­னம்­பலம், செல்வா தமி­ழர்­களை காட்­டிக்­கொ­டுத்து விட்டார் என பிர­சாரம் செய்தார். அதற்கு பதி­ல­ளிக்க வேண்­டிய செல்வா எனது ஒப்­பந்தம் தமி­ழர்­க­ளுக்­கான சமஷ்டித் தீர்­வுக்கு முதற்­படி என்றார். ஈற்றில் நடந்­தது என்ன? ஒப்­பந்தம் கிழித்­தெ­றி­யப்­பட்­டது. இத்­த­கைய அனு­பவங்­களை நாம் சற்றே அவ­தானம் செலுத்த வேண்டும்.

கேள்வி:- உரி­மைக்­காக ஆயுதம் ஏந்­தி மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டங்கள் குறித்து இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி செல்வா காலத்தில் எந்த நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருந்­தது?

பதில்:- இலங்கை தமி­ழ­ர­சுக் ­கட்சி, செல்வா காலத்­திலும் சரி தற்­போதும் சரி ஒரே நிலைப்­பாட்­டினைத்தான் கொண்­டி­ருக்­கின்­றது. அத­ாவது செல்­வ­நா­யகம் ஜன­நா­யக ரீதியில் மேற்­கொண்ட அற­வ­ழிப்­போ­ராட்­டங்­க­ளுக்­காக பாதைகள் அனைத்தும் அடைக்­கப்­பட்ட நிலையில் அவரின் நியா­ய­மான கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்ற அடிப்­படை நோக்­கத்தின்பால் தான் இளை­ஞர்கள் ஆயு­தங்­களை எடுத்­தார்கள். அவர்கள் தங்­களின் உயிரை துச்­ச­மென நினைத்து ஒன்­றி­ணைந்து போராட கள­மி­றங்­கிய செயற்­பாடே உன்­ன­த­மா­னதுதான்.

அது மட்­டு­மல்ல தற்­போது தமி­ழ­ர­சுக்­கட்சி ஆயு­த­மேந்தி ஜன­நா­ய­கத்­திற்கு வந்த கட்­சி­களை சாடு­வ­தாக அல்­லது ஒதுக்­கு­வ­தாக குற்­றச்­சாட்­டொன்று இருக்­கின்­றது. முப்­பது ஆண்­டு­க­ளாக ஆயுதம் ஏந்­திப்­போ­ரா­டிய தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தமி­ழ­ர­சுக்­கட்­சியை நேசித்­தார்கள். அந்த விடயம் பல­ருக்கு தெரி­யாது.

விடு­த­லைப்­பு­லி­களின் தள­ப­தி­யாக இருந்த கிட்டு எனப்­படும் சதா­சிவம் கிருஷ்­ண­குமார் லண்­ட­னுக்கு வருகை தந்­த­போது என்னைச் சந்­தித்தார். அப்­போது அவர் சில முக்­கிய கருத்­துக்­களை குறிப்­பிட்டார். அதா­வது, நாம் அர­சியல் கட்­சி­களை சிதைக்­க­வில்லை. குறிப்­பாக தமி­ழ­ர­சுக் ­கட்­சியை சிதைக்க மாட்டோம். நாம் அதனை நேசிக்­கின்றோம். தந்தை செல்­வாவை மதிக்­கின்றோம். விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் கூட தமி­ழ­ர­சுக்­கட்­சியை நேசிக்­கின்றார். எமது பெற்­றோர்கள் தமி­ழ­ர­சு­க் கட்­சியின் ஊற்றில் இருந்­த­வர்கள். நாம் அதனை ஒரு­போதும் அழிக்கமாட்டோம். காலம் பதில் கூறும் என்றார்.

அதன்­பி­ர­காரம் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதும் தமிழரசுக்கட்சியை தாய்க் கட்சியாக வைத்தே விடுதலைப்புலிகளின் தலைமை அக்கட்டமைப்பை அமைத்திருந்தது என்பதையும் அனைவரும் அறிவார்கள். ஆகவே தமிழரசுகட்சி ஆயுதக்குழுக்களை ஒதுக்குவதென்றோ அல்லது ஆயுதக்குழுக்கள் தமிழரசுக்கட்சியை முடக்கினார்கள் என்றோ கருதக்கூடாது. இதனை தற்போது குற்றம் கூறும் பங்காளிக்கட்சிகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். புரிதல் தான் இங்கு பிரச்சினை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள், வடமாகாண முதலமைச்சர் கடும்போக்குவாதியாகவும் தமிழரசுக்கட்சியினர் மென்போக்குவாதிகளாகவும் சித்திரிக்கப்படுகின்றார்களே?

பதில்:- தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் தமிழர் அரசியலில் உள்ளவர்களை மட்டம் தட்டுவதற்காக புலிச்சாயமிடுவது சாதாரணமான விடயம். வடமாகாண முதலமைச்சர் பிரிவினையைக் கோரவுமில்லை. அவர் என்றுமே கோரப்போவதுமில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்காது விடுவதற்காக வடமாகாண முதலமைச்சரை பயன்படுத்துவதற்கு தென்னிலங்கை சிந்திக்கின்றது.

இந்த சூட்சுமத்தினை முதலமைச்சர் புரிந்து கொள்ளவேண்டும். தந்தை செல்வா அன்று வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கேட்டார். அதனைத்தான் முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் கேட்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கேட்கின்றது. ஆனால் சமஷ்டி என்ற சொற்பதத்தினை வைத்து தென்னிலங்கை பிரசாரம் செய்கின்றது. ஆகவே எமது தரப்பில் ஒற்றுமை ஏற்படாதவிடத்து தமிழர்களின் எதிர்காலம் சின்னாபின்னமாகிவிடும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.