Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவனம் வீடு, வர்த்தக உதவிகளை செய்து தருவதாக கூறி அப்பாவிகளை ஏமாற்றும் மோசடி நடவடிக்கை

Featured Replies

கவனம்

 

வீடு, வர்த்­தக உத­வி­களை செய்து தரு­வ­தாக கூறி அப்­பாவி­களை ஏமாற்றும் மோசடி நட­வ­டிக்கை

மோசடி இடம்­பெ­று­வ­தற்­காக வங்கிக் கணக்­கினை  நீங்­களே ஆரம்­பித்துக் கொடுப்­பது உங்­க­ளுக்கு தெரி­யுமா?

முகப்புத்­தகம் ஊடா­கவோ, நேர­டி­யா­கவோ நீங்­களும் ஏமாற்றப்பட்­டி­ருந்தால்  உட­ன­டி­யாக அருகில்  உள்ள பொலிஸ்  நிலை­யத்தை நாடுங்கள்

 

 

அழ­கான வீடொன்­றினை அமைத்துக் கொள்­ளவும் தனது தொழில், வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்திக் கொள்­ளவும் யாருக்குத் தான் ஆசை­யில்லை. அந்த ஆசை­களை நிறை­வேற்றி வைப்­ப­தாக ஒருவர் கூறும் போது அந் நபர் யாராக இருந்­தாலும் அவரை மிக நல்­லவர் என்றே நம்பும் அப்­பாவித் தனத்தை கொண்­டுள்ள நாம் ஏமாற்றப் படு­கின்றோம் என புரிந்­து­கொள்ளும் போது காலம் கடந்­தி­ருக்கும்.

ஆம், கொழும்பின் புற நகர் பகு­தியில் நடுத்­தர வர்க்­கத்­தினர் பல­ருக்கு ஆசைக் காட்டி அவர்கள் ஊடாக வங்கிக் கணக்­கு­களை ஆரம்­பித்து, அதனைப்பயன்படுத்தி, முகப் புத்­தகம் ஊடாக அறிந்­து­கொள்­ளப்­படும் பணக்­கார வர்க்­கத்­தி­ன­ரிடம் இருந்தும் அதிக பணம், பரிசு தொடர்பில் எதிர்ப்­பார்ப்பு உள்­ளோ­ரி­டமும் பண மோசடி நட­வ­டிக்கை ஒன்று மிக சூட்­சு­ம­மாக இடம்­பெற்று வரு­கின்­ற­மையை பொலிஸார் தற்­போது வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர்.

 குறிப்­பாக கொழும்பின் வெள்­ள­வத்தை, தெஹி­வளை கல்­கிசை, வத்­தளை மற்றும் நீர்­கொ­ழும்பு பகு­தி­களில் இவ்­வா­றான மோச­டி­களில் ஈடு­ப­டு­வோரின் கை ஓங்­கி­வ­ரு­வ­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

நடுத்­தர வர்க்­கத்தை சேர்ந்­தோரை பல்­வேறு முக­மூ­டி­க­ளுடன் சந்­திக்கும் இந்த மோசடிக் காரர்கள், அவர்­க­ளுக்கு வீட­மைத்து தரு­வ­தா­கவும் வர்த்­த­கத்தை முன்­னேற்ற உத­வு­வ­தா­கவும் ஆசை வார்த்­தை­களை கூறு­கின்­றனர். குறிப்­பாக வெளி­நாட்­ட­வர்­க­ளாக இருக்கும் இந்த மோசடிக் காரர்கள் கூறு­வதை அவர்கள் நம்­பி­விடும் பட்­சத்தில், தனக்கு தனது நாட்டில் இருந்து பணம் பெற வங்கிக் கணக் கொன்று அவ­சியம் என்று கூறி உதவி தேவைப் படு­ப­வரின் பெயரில் ஏதேனும் ஒரு வர்த்­தக வங்­கிக்கு சென்று வங்­கிக்­கணக் கொன்றை ஆரம்­பிக்­கவும் மோசடிக் காரர்கள் பின் நிற்­ப­தில்லை. இந் நிலையில் அவ்­வாறு ஆரம்­பிக்­கப்­படும் வங்­கிக்­க­ணக்கு புத்­த­கத்­தையும், பணம் எடுக்கும் டெபிட் அட்­டை­க­ளையும் தமது பொறுப்பில் எடுத்துக் கொள்­கின்­றனர்.

பின்னர் அவர்­க­ளு­ட­னான தொடர்பு இல்­லாமல் போய்­விடும். இந்­நி­லையில் இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட வங்கிக் கணக்­குகள் ஊடாக முகப்­புத்­த­கத்தில் அறி­மு­க­மா­ன­வர்­க­ளிடம் இருந்து பணம் பறிக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­ய­டுத்து பணத்தை இழந்­த­வர்கள் பொலிஸில் முறை­யிட்டால் வங்­கிக்­க­ணக்­குகள் ஊடான விசா­ர­ணை­களில், வீடு, வர்த்­தக அபி­வி­ருத்­திக்­காக எவ­னையோ நம்பி வங்­கிக்­க­ணக்­கு­களை ஆரம்­பித்து கொடுத்த அப்­பா­வி­களே பொலி­ஸா­ரிடம் மாட்டிக் கொள்ளும் நிலைமை ஏற்­படும்.

இத்­த­கைய சம்­ப­வங்கள் பல தொடர்பில் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர். இதில் பல சம்­ப­வங்­க­ளுடன் நைஜீ­ரி­யர்­களைக் கொண்ட மோசடி மாபியா கும்பல் ஒன்று பின்­ன­ணியில் உள்­ளது தெரி­ய­வந்­துள்­ள­துடன் அவர்­களில் பலர் கைது செய்­ய­பப்­பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

எனவே இத்­த­கைய மோச­டி­களால் நீங்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்தால் உட­ன­டி­யாக அருகில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று விட­யத்தை முறைப்­பா­டாக அளிக்க முடியும்.

   இத்­த­கைய ஏமாற்று மோசடி நட­வ­டிக்­கையில் சிக்கிக் கொண்ட கல்­கிஸ்சை பகு­தியைச் சேர்ந்த 59 வய­தான ஒரு பெண்ணின் கதை தான் இது.

 அந்த பெண்ணை நாம் ஜூலியா என அறி­முகம் செய்­கின்றோம். இந்த பெண்­ணுக்கு சுமார் 2 மாதங்­க­ளுக்கு முன்னர் முகப் புத்­தகம் ஊடாக நைஜீ­ரியர் ஒரு­வரின் நட்பு கிடைத்­துள்­ளது. குறித்த நட்பு அழைப்பை ஏற்­றுக்­கொண்ட ஜூலி­யா­வுக்கு, சிறிது நாட்­களில் அந்த நப­ருடன் முகப்­புத்­தகம் ஊடாக உரை­யாட முடிந்­துள்­ளது. இதன் போது அவர்கள் தொலை­பேசி இலக்­கங்­க­ளையும் பரி­மாற்றிக் கொண்­டி­ருக்க வேண்டும்.

ஒரு நாள், அந்த பெண்­ணுக்கு ஒரு வெளி­நாட்டு தொலை­பேசி இலக்­கத்தில் இருந்து அழைப்­பொன்று வந்­துள்­ளது. ஆங்­கி­லத்தில் கதைத்த அந் நபர் தன்னை ஜூலி­யா­வுக்கு உங்­க­ளுடன் நட்புப் பட்­டி­யலில் உள்ள நபர் எனவும், சிறந்த நண்­ப­னாக இருக்க விரும்­பு­வ­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார். அத்­துடன் ' உனக்கு நான் நிறைய பரி­சில்­களை அனுப்ப ஆவ­லாக உள்ளேன். நீ அதனை ஏற்­றுக்­கொண்­டாலும் இல்லை என்­றாலும் நான் பரி­சில்­களை அனுப்­புவேன். அதனை நீ சுங்க கட்­ட­ணங்­களை செலுத்தி பெற்­றுக்­கொள்­ளலாம். பரி­சில்கள் வந்­ததும் அவர்கள் உன்னை தொடர்­பு­கொள்வர் ' என அந்த வெளி நாட்­டவர் கூறி­யுள்ளார்.

இரு நாட்­களின் பின்னர் 'நான் உனக்கு பரி­சில்­களை அனுப்­பி­யுள்ளேன்' என அந்த வெளி நாட்டு இலக்­கத்தில் இருந்து அழைத்த நபர் கூறி­யுள்ளார்.

இந் நிலையில் மேலும் இரு நாட்­களின் பின்னர், பொருட்­களை கூரியர் சேவை ஊடாக பகிரும் நிறு­வனம் ஒன்­றி­லி­ருந்து கதைப்­ப­வரைப் போல் தன்னை அறி­முகம் செய்­து­கொண்ட நபர் ஒரு­வ­ரிடம் இருந்து ஜூலி­யா­வுக்கு அழைப் பொன்று கிடைத்­துள்­ளது.

'மிஸ் ஜூலியா, உங்கள் பெய­ருக்கு ஒரு பொதி வந்­துள்­ளது. அதனை சுங்­கத்­திடம் இருந்து விடு­வித்­துக்­கொள்ள மூன்று இலட்சம் ரூபா தேவைப் படு­கின்­றது. அதனை நீங்கள் செலுத்தும் பட்­சத்தில் அந்த பொதியை விடு­வித்துக் கொடுப்போம் என கூறி ஒரு வங்­கிக்­க­ணக்கு இலக்­கத்­தையும் அழைப்பை ஏற்­ப­டுத்­திய நபர் கொடுத்­துள்ளார்.

இந்­நி­லையில் பரிசைப் பெற்­றுக்­கொள்ள ஜூலி­யாவும் 3 இலட்சம் ரூபாவை வைப்­பி­லிட்ட நிலையில், 24 மணி நேரம் கடந்­தது. மீள அதே நபர் அழைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

' நேற்று நீங்கள் அனுப்­பிய பணம் கிடைத்­தது. உங்­க­ளுக்கு வந்த பொதியை ஸ்கேன் பரி­சோ­த­னைக்கு உட­்ப­டுத்­திய நிலையில் அப்­பொ­தியில் வெளி நாட்டுப் பணம் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. எனவே அதற்கு மேல­திக கட்­டணம் ஒன்று செலுத்த வேண்டும். எனவே 4 இலட்சம் ரூபா மேல­தி­க­மாக தேவைப் படு­கின்­றது.' என கூறி­யுள்ளார். ஜூலி­யாவும் அந்த தொகையை செலுத்­தி­யுள்ளார்.

இவ்­வாறு 6 சந்­தர்ப்­பங்­களில் பல கார­ணங்கள் கூறப்­பட்டு 12 இலட்சம் ரூபா­வுக்கும் அதி­க­மான தொகை ஜூலி­யா­விடம் இருந்து மோச­டி­யாக பெறப்பட்­டுள்­ளது.

7 ஆவது தடவை மீளவும் அழைப்பை ஏற்­டுத்­திய நபர், 'உமக்கு வந்­துள்ள பொதியில், பெரும் தொகை ஸ்ரேலிங் பவண் நோட்­டுக்கள் உள்­ளன. சுமார் 1000 நோட்­டுக்கள் வரை உள்­ளதால் இத்­த­கைய பெரும் தொகை­யான பணம் கிடைக்­கின்­றமை, பயங்­க­ர­வாத செயற்­பாடா என சந்­தேகம் உள்­ள­தாக கூறு­கின்­றனர்.

எனவே அது தொடர்பில் ஒரு அறிக்கை பெற­வேண்டும். எனவே 3 இலட்சம் ரூபா தேவைப் படு­கின்­றது.' என அந்த நபர் கூறி­யுள்ளார்.

இதன் போதே தான் ஏமாற்­றப்­ப­டு­கின்­றோமோ என்ற சந்­தேகம் ஜூலி­யா­வுக்கு ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜூலி, மேல் மாகா­ணத்தின் தெற்கு பகு­திக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்­ர­ம­சிங்­க­விடம் விட­யத்தை தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். இந் நிலையில் வசந்த விக்­ர­ம­சிங்­கவின் உத்­த­ர­வுக்கு அமைய விசா­ர­ணை­களை, மிரி­ஹான விசேட குற்ற விசா­ரணைப் பிரி­வுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்­ர­ம­சிங்க பாரப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அதன்­படி விசா­ர­ணைகள் மிரி­ஹான விசேட குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த பெரே­ராவின் நேரடி கட்­டுப்­பாட்டில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சாந்த லக் ஷ்மன் உள்­ளிட்ட சிறப்புக் குழுவால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

உட­ன­டி­யாக செயற்­பட்ட இந்த குழு, ஜூலி வழங்­கிய தொலை­பேசி இலக்கம், வங்­கிக்­க­ணக்­குகள் ஊடாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர். இந் நிலையில் உடன் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்த அவர்கள் ஜூலி பணம் இட்ட வங்­கிக்­க­ணக்கிள் இருந்து எந்­த­வொரு நபரும் பணத்தைப் பெற்­றுக்­கொள்­வதை தடை செய்து உத்­த­ரவு பெற்­றுக்­கொண்டு இரு வங்­கிக்­க­ணக்­குகள் தொடர்பில் தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்­ளவும் அனு­மதி பெற்­றுக்­கொண்­டனர்.

இத­னை­ய­டுத்து குறித்த விடயம் தொடர்பில் விசா­ரணை செய்த பொலிஸார், ஜூலியா பணம் இட்ட இரு வங்­கிக்­க­ணக்­கு­களில் ஒன்று நீர்­கொ­ழும்பைச் சேர்ந்த அசேல (பெயர் மாற்­றப்பட்­டுள்­ளது)வுக்கு சொந்­த­மா­னது எனவும் மற்­றைய வங்­கிக்­க­ணக்கு ரம்­புக்­கனை பகு­தியைச் சேர்ந்த குண­ரத்­ன­வுக்கு (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) சொந்­த­மா­னது எனவும் தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து அசே­ல­வையும் குண­ரத்­ன­வையும் மிரி­ஹான விசேட குற்­ற­வி­சா­ரணைப் பிரி­வினர் தமது பொறுப்பில் எடுத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

முதலில் அசே­லவை விசா­ரணை செய்த பொலி­ஸா­ருக்கு அவன் கூறிய கார­ணங்கள் வியப்பை ஏற்­ப­டுத்­தின. ' சேர், இந்த வங்­கிக்­க­ணக்கு தொடர்பில் எனக்கு எதுவும் தெரி­யாது. ஆனால் இதனை நான்தான் ஆரம்­பித்தேன். இவ்­வ­ளவு பணம் எப்­படி என்று எனக்கு தெரி­யாது.

 சேர், நான் ஒரு நாள் நண்­பர்­க­ளுடன் நீர்­கொ­ழும்பு கடற்­க­ரையில் கால் பந்து விளை­யா­டிக்­கொண்­டி­ருந்தேன். அப்­போது நைஜீ­ரியர் ஒருவர் அங்கு வந்து எம்­முடன் இணைந்து விளை­யா­டினார். அவ­ருடன் நட்பு ஏற்­பட்­டது.

 

அவர் துணி வர்த்­தகம் செய்­வ­தா­கவும் அண்­ணனிடம் இருந்து பணம் வர வேண்டி உள்­ள­தா­கவும் அதனைப் பெற்­றுக்­கொள்ள வங்­கிக்­க­ணக்­கொன்றை ஆரம்­பித்து அட்­டையை தரு­மாறு கோரினார்.

 நானும் அவ்­வாறே ஆரம்­பித்து டெபிட் அட்­டையை இர­க­சிய இலக்­கத்­துடன் கொடுத்தேன். அவர் எனது வீட்டை கட்­டித்­த­ரு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தார். வியா­பா­ரத்­தையும் உயர்த்­து­வ­தாக கூறினார். அத­னா­லேயே நம்­பிக்­கையில் இவ்­வாறு வழங்­கினேன்.' என பொலி­ஸா­ரிடம் அசேல கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து குண­ரத்­னவை பொலிஸார் விசா­ரணை செய்­தனர். அவரும் இதனை ஒத்த ஒரு கார­ணத்­தையே பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்­ளனர். 'சேர், நான் முச்­சக்­கர வண்டி செலுத்­து­பவர். நைஜீ­ரிய பிரஜை ஒருவர் எனது முச்­சக்­கர வண்­டியில் அடிக்­கடி பயணம் செய்வார். இதனால் அவ­ருடன் நெருக்கம் ஏற்­பட்­டது. நீர்கொழும்­பி­லேயே நான் முச்­சக்­கர வண்டி ஓட்­டினேன்.

 இந் நிலையில் எமது நட்பு வளர அவர் ரம்­புக்­க­னையில் உள்ள எனது வீட்­டுக்கும் வந்து சென்றார். நாம் இரு­வரும் பின்­ன­வ­லைக்­கெல்லாம் சுற்­றுலா சென்றோம். இதன் பின்னர் அவர் என்­னிடம் வங்­கிக்­க­ணக்கு ஒன்றை ஆரம்­பித்து தர கோரினார். எனது வீட்டை கட்­டு­வ­தற்கு உத­வு­வ­தா­கவும் கூறினார். நான் அவர் பழ­கிய விதத்தை வைத்து நம்பி வங்­கிக்­க­ணக்கை ஆரம்­பித்து புத்­தகம், டெபிட் அட்­டையை அவ­ரிடம் கைய­ளித்தேன்.' என அவரும் வாக்கு மூலம் அளித்தார். இந்த வாக்குமூலத்­துக்கமைய பொலிஸ் விசா­ர­ணைகள் நைஜீ­ரிய பிர­ஜையை நோக்கி சென்­றது.

நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவு பொறுப்­ப­தி­காரி, உப பொலிஸ் பரி­சோ­தகர் ஆனத்த ஹேரத்தின் உத­வி­யுடன் மிரி­ஹான விசேட குற்ற விசா­ரணைப் பிரி­வினர் அந்த நைஜீ­ரிய பிர­ஜையை கைது செய்­தனர்.

இதன்போது அந்த நைஜீ­ரி­ய­ரிடம் இருந்து பொலிஸார், 3 லெப்டொப் கணி­னிகள், பல்­வேறு சிம் அட்­டைகள் 6, தொலை­பே­சிகள் 6, டொங்குல் ஒன்று, பவர் பான்க் ஒன்று, ஒரு இலட்­சத்து 30 ஆயிரம் ரூபா பணம் என்­ப­வற்றைக் கைப்­பற்­றினர்.

இத­னை­ய­டுத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில், சந்­தேக நப­ரான நைஜீ­ரியர், நீர்­கொ­ழும்பில் இருந்­த­வாறே, ஜூலிக்கு ரோமிங் ஊடாக வெளிநாட்டில் இருப்பதைப் போன்று அழைப்பை ஏற்படுத்தி பரிசு வழங்குவதாக கூறி உள்ளமையும் மற்றொரு உள்ளூர் இலக்கம் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள பணம் கோரியுள்ளமையும் உறுதியாகியுள்ளது.

பொலிஸார் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளில், இந்த நைஜீரியர் கடந்த இரு மாதங்களில் மட்டும் நான்கு பேருடன் நட்பை ஏற்படுத்தி அவர்கள் ஊடாக வங்கி கணக்குகளை ஆரம்பித்து அந்தன் டெபிட் அட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதன் ஊடாக 25 இலட்சத்துக்கும் அதிகமான தொகை பலரிடம் இருந்து மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

இந்நிலையில் இவ்வாறான மாபியா கும்பல் ஒன்று செயற்படுகின்றமை தொடர்பில் பல்வேறு தகவல்கல் கிடைக்கப் பெற்றிருப்பதால், திடீரென உண்டாகும் இவ்வாறான நட்புகள் தொடர்பில் நம்பி, வங்கிக்கணக்குகள் ஆரம்பித்து கொடுக்கவோ, அல்லது வெளிநாட்டு இலக்கங்களில் இருந்து பரிசு எனக் கூறியதும் பணம் வைப்பிலிடவோ வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-08#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.