Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கடையிலான டெஸ்ட் ஆரம்பம் ; நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

Featured Replies

இலங்கை - சிம்பாப்வே அணிகளுக்கடையிலான டெஸ்ட் ஆரம்பம் ; நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே துடுப்பெடுத்தாடத் தீர்மானம்

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

sri-lanka-cricket--3.jpg

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோத­வுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி இலங்­கைக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–2 என வெற்­றி ­கொண்டு வர­லாற்று சாத­னையை நிகழ்த்­தி­யது.

இந்­நி­லையில் இந்தத் தொடரில் தோற்­றதன் எதி­ரொ­லியாக இலங்கை அணியில் பல அதி­ரடி மாற்­றங்கள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக ஒருநாள், டெஸ்ட் மற்றும் இரு­ப­துக்கு 20 என மூன்று வகைக் கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கும் தலை­வ­ராக இருந்த அஞ்­சலோ மெத்­தியூஸ் திடீ­ரென பதவி வில­கினார்.

இந்­நி­லையில் ஒருவர் வகித்த பத­வியை இரு­வ­ருக்கு பிரித்து வழங்­கி­யது இலங்கைக் கிரிக்­கெட் நிறு­வனம்.

அதன்­படி டெஸ்ட் போட்­டி­களுக்கு தினேஷ் சந்­தி­மா­லையும், ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 போட்டிகளுக்கு உபுல் தரங்­க­வையும் தலை­வர்­க­ளாக நிய­மித்­துள்­ளது.

இந்­நி­லையில் கடும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யி­ருக்கும் இலங்கை அணி இன்று டெஸ்ட்

போட்­டியில் சிம்­பாப்வே அணியை சந்­திக்­கி­றது.

இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாச சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

இலங்கை அணி 

தினேஷ் சந்­திமால் (தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), அஞ்­சலோ மெத்­தியூஸ், நிரோஷன் திக்­வெல்ல, திமுத் கரு­ணா­ரத்ன, தனுஷ்க குண­தி­லக, குசல் மெண்டிஸ், அசேல குண­ரத்ன, ரங்­கன ஹேரத், டில்­ருவன் பெரேரா, சந்­தகான், விஷ்வ பெர்னாண்டோ, துஷ்­மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார.

இலங்கை, டெஸ்ட் போட்­டி­யொன்றில் இறு­தி­யாக சிம்­பாப்வே அணியை அவர்­க­ளது சொந்த மண்ணில் கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சந்­தித்­தி­ருந்­தது. 

அதில், ரங்­கன ஹேரத்தின் சிறந்த பந்­து­வீச்சின் கார­ண­மாக

இலங்கை அணி இரண்டு போட்

­டிகள் கொண்ட தொடரை 2–-0 என கைப்­பற்­றி­யி­ருந்­தது.

இது­வ­ரையில் இரண்டு அணி­

களும் 17 டெஸ்ட் போட்­டி­களில்

விளை­யா­டி­யி­ருக்­கின்­றன. 

அதில் 12 போட்­டி­களில் இலங்கை அணி வெற்றி பெற்­றுள்­ள­தோடு, 5 போட்­டிகள் சம­நிலை அடைந்­தி­ருக்­கின்­றன. 

எந்­த­வொரு டெஸ்ட் போட்­டி­யிலும் சிம்­பாப்வே அணி­யா­னது இது­வரை இலங்­கையை வீழ்த்­த­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சந்­திமால், திற­மை­மிக்க துடுப்­பாட்ட வீரர் எனினும் தனது அண்­மைய மோச­மான ஆட்­டங்­களின் கார­ண­மாக இலங்கையின் ஒரு நாள் அணியில் சேர்க்­கப்­ப­டாது போயி­ருந்தார். எனினும், டெஸ்ட் போட்­டி­களில் 42.33 என்­கின்ற சிறப்­பான ஓட்ட சரா­ச­ரி­யினைக் கொண்­டி­ருக்கும் இவர் அணியின் தலைவர் என்­பதால் துடுப்­பாட்­டத்­தினை மேலும் சிறந்த முறையில் முன்­னெ­டுக்க வேண்­டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.

இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் சந்திமால், அழுத்தங்களுக்கு மத்தியில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பை என்னிடம் தந்திருக்கிறார்கள்.

இந்தப் போட்­டியில் நாம் கடு­மை­யாக விளை­யா­ட­வேண்டும். இதில் மட்­டு­மல்ல, எந்­த­வொரு போட்­டி­யாக இருந்­தாலும் எமது முழுத் திற­மை­யுடன் நாம் போட்­டி­யிட வேண்டும். மூத்த மற்றும் இளம் வீரர்­களைக் கொண்ட அணி­யாக நாம் இருக்­கிறோம். அதே­வேளை சிம்­பாப்வே அணியும் எமக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடும் என்று எதிர்­பார்க்­கிறோம். அதற்கு ஏற்ற வியூ­கங்­க­ளுடன் இன்­றைய போட்­டியில் களமிறங்குவோம் என்றார்.

http://www.virakesari.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Zimbabwe 112/4 (32.2 ov)

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே வீரர் எர்வின் அசத்தல் சதம்

 

கொழும்பில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே வீரர் கிரேக் எர்வின் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே வீரர் எர்வின் அசத்தல் சதம்
 
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கொழும்பில் தொடங்கியது. இலங்கை அணி சண்டிமல் தலைமையில் களம் இறங்கியது. ஜிம்பாப்வே அணி கிரிமர் தலைமையில் களம் இறங்கியது.

ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரிமர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் மசகட்சா, ரெகிஸ் சகப்வா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சகப்வா 12 ரன்னிலும், மசகட்சா 19 ரன்னிலும், அடுத்து வந்த அறிமுக வீரர் முசகண்டா 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

201707141627057770_3-Ervine-s._L_styvpf.

4-வது வீரராக களம் இறங்கிய எர்வின் சிறப்பாக விளையாடினார். ஹெராத், லக்மல் ஆகியோரின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். வில்லியம் (22), சிகந்தர் ரசா (36), மூர் (19) ஆகியோர் ஒத்துழைப்புக் கொடுக்க எர்வின் 60-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து, தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 146 பந்தில் 9 பவுண்டரி், 1 சிக்சருடன் சதம் அடித்தார். இவர் ஏற்கனவே நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.

எதிர்முனையில் விளையாடிய வாலர், 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜிம்பாப்வே 64 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது எர்வின் 108 ரன்னுடனும், கிரிமர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/14162659/1096330/SLvZIM-1st-Test-Craig-Ervine-Century-againts-sri-lanka.vpf

Zimbabwe 324/8 (83.3 ov)

  • தொடங்கியவர்

சிம்பாப்வே டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம்: கிரேக் எர்வின் அபார சதம்

 

 

சிம்பாப்வே டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம்: கிரேக் எர்வின் அபார சதம்
 

சர்வதேச ஒருநாள் தொடரில் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த சிம்பாப்வே, டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கிரேக் எர்வின் அபார சதமடித்ததுடன், சிம்பாப்வே அணி 08 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் 70 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

என்றாலும், ஐந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த சிக்கிந்தர் ராசா மற்றும் கிரேக் எர்வின் ஜோடி 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டது.

சிக்கிந்தர் ராசா 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்ட கிரேக் எர்வின் சதமடித்தார்.

இது டெஸ்ட் அரங்கில் கிரேக் எர்வின் பெற்ற இரண்டாவது சதமாகும்.

கிரெக் ஏர்வின் 151 ஓட்டங்களுடனும் டொனால்ட் டிரிபானோ 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், டெஸ்ட் அரங்கில் 375 விக்கெட்டுக்கள் எனும் மைல்கல்லை எட்டினார்.

அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ரங்கன ஹேரத் 16 ஆம் இடத்தில் உள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/07/சிம்பாப்வே-டெஸ்ட்-போட்டி/

  • தொடங்கியவர்

சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெ்ஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

Dinesh-Chandimal-and-Graeme-Cremer-pose.

இரு அணிகளுக்குமிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய டெ்ஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிம்பாப்வே அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட வேளையின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் சிம்பாப்வே அணியின் ஏர்வின் 160 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் ரங்கண ஹேரத்  5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/21899

  • தொடங்கியவர்

இலங்கை அணி நிதான ஆட்டம்! அரைச் சதம் கடந்தார் தரங்க!!

 
இலங்கை அணி நிதான ஆட்டம்! அரைச் சதம் கடந்தார் தரங்க!!
 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டம் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகின்றது.

இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சின் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 356 ஓட்டங்களை பெற்றது. கிரேக் எர்வின் அதிகபட்சமாக 160 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 116 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ள இலங்கை அணி மதிய நேர உணவு இடைவேளை வரை இலக்கு இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தரங்க 53 ஓட்டங்களுடனும், கருணாரத்னே 23 ஓட்டங்களுடனுடம் களத்தில் உள்ளனர்.

http://uthayandaily.com/story/11703.html

  • தொடங்கியவர்

கொழும்பு டெஸ்ட்: ஜிம்பாப்வே 356 ரன்னில் ஆல்அவுட்: இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 293

கொழும்பு டெஸ்டில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 293 ரன்கள் எடுத்துள்ளது.

 
கொழும்பு டெஸ்ட்: ஜிம்பாப்வே 356 ரன்னில் ஆல்அவுட்: இலங்கை 7 விக்கெட் இழப்பிற்கு 293
 
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் எர்வின் சதத்தால் ஜிம்பாப்வே அணி 90 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்திருந்தது. எர்வின் 151 ரன்னுடனும், டிரிபானோ 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டிரிபானோ மேலும் 3 ரன்கள் எடுத்து 27 ரன்னில் ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். எர்வின் 160 ரன்கள் எடுத்து குமாரா பந்தில் அவுட்டாக ஜிம்பாப்வே 94.4 ஓவரில் 356 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 5 விக்கெட்டும், குமாரா மற்றும் குணரத்னே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

201707151949129760_6-chandimal-s._L_styv
அரைசதம் அடித்த சண்டிமல்

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கருணாரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கருணா ரத்னே 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

அரைசதம் அடித்த உபுல் தரங்கா 71 ரன்னில் ரன்அவுட் மூலம் ஆட்டம் இழந்தார். கேப்டன் சண்டிமல் 55 ரன்னிலும், முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 41 ரன்னிலும், தில்ருவான் பெரேரா 33 ரன்னிலும் வெளியேற, இலங்கை அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. குணரத்னே 24 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

201707151949129760_6-Cremer-s._L_styvpf.
3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி கிரிமர்

தற்போது இலங்கை அணி 63 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 3 விக்கெட்டுக்கள் உள்ளன. இலங்கையை விட ஜிம்பாப்வே அணி சுமார் 40 ரன்கள் முன்னிலைப் பெற்று, 2-வது இன்னிங்சில் 250 ரன்களுக்கு மேல் எடுத்தால் ஒருநாள் தொடரை போல் சரித்திர வெற்றி பெற வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/15194910/1096566/Colombo-Test-zimbabwe-356-All-out-Sri-Lanka-293-runs.vpf

Zimbabwe 356 & 14/1 (3.1 ov)
Sri Lanka 346
  • தொடங்கியவர்

மீண்டும் சரித்திர சாதனைக்கு தயாராகிறது ஜிம்பாப்வே: கொழும்பு டெஸ்டில் 262 ரன்கள் முன்னிலை

 

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே 262 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

 
 
 
 
மீண்டும் சரித்திர சாதனைக்கு தயாராகிறது ஜிம்பாப்வே: கொழும்பு டெஸ்டில் 262 ரன்கள் முன்னிலை
 
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே, முடிவடைந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணி 3-2 எனத் தொடரைக் கைப்பற்றி சரித்திர சாதனைப் பெற்றது.

ஒருநாள் தொடரை முடிந்த பின்னர், தற்போது ஒரேயொரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நேற்று முன்தினம் (ஜூலை 14-ந்தேதி) கொழும்பில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி எர்வினின் (160) அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி உபுல் தரங்கா (71), சண்டிமல் (55), மேத்யூஸ் (41) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. குணரத்னே 24 ரன்னுடனும், ஹெரத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201707161913524511_7-chakabva-s._L_styvp
ஹெரத் பந்தில் சகப்வா போல்டாகிய காட்சி

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹெரத் 22 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த லக்மல் 14 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். கடைசி விக்கெட்டாக 45 ரன்கள் எடுத்த நிலையில் குணரத்னே அவுட் ஆக இலங்கை அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

201707161913524511_7-herath-s._L_styvpf.
2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றிய ஹெரத்

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணியை விட இலங்கை 10 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்கமே அந்த அணிக்கு பேரடியாக இருந்தது. மசகட்சா 7 ரன்னி்லும், சகப்வா 6 ரன்னிலும், முசகண்டா ரன்ஏதும் எடுக்காமலும், எர்வின் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் 23 ரன்கள் எடுப்பதற்குள் ஜிம்பாப்வே அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஹெரத் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே 100 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

201707161913524511_7-williams-s._L_styvp
ஸ்டம்பை பறிகொடுத்த வில்லியம்ஸ்

இந்த நிலையில்தான் 5-வது விக்கெட்டுக்கு வில்லியம்ஸ் உடன் சிகந்தர் ரசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்தது. அணியின் ஸ்கோர் 59 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து 6-வது விக்கெட்டுக்கு சிகந்தர் ரசாவுடன் பீட்டர் மூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. சிகந்தர் ரசா நம்பிக்கையுடன் விளையாட, மூர் அதற்கு துணையாக நின்றார்.

இருவரின் ஆட்டத்தால் ஜிம்பாப்வே 28.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. சிகந்தர் ரசா 62 பந்தில் அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 145 ரன்னாக இருக்கும்போது வில்லியம்ஸ் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது.

அடுத்து சிகந்தர் ரசாவுடன் மால்கம் வாலர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஹெரத்தின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது. குறிப்பாக வாலர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இவரது அதிரடி ஆட்டத்தால் ஜிம்பாப்வே 200 ரன்னைத் தாண்டி வீறுநடை போட்டது. வாலர் 54 பந்தில் அரைசதம் அடித்தார். சிகந்தர் ரசா சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.

201707161913524511_7-Waller-s._L_styvpf.
அரைசதம் அடித்து அவுட்டாகாமல் இருக்கும் வாலர்

2-வது நாள் முடியும் நேரம் வந்ததால் வாலர் பொறுமையான ஆட்டத்தை கடைபிடித்தார். இருவரும் 3--வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட்டுக்கள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

3-வது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்துள்ளது. சிகந்தர் ரசா 97 ரன்னுடனும், வாலர் 57 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஜிம்பாப்வே 262 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடினால் 350 ரன்களை தொட வாய்ப்புள்ளது. அப்படி 350 ரன்கள் முன்னிலைப் பெற்றுவிட்டால் மற்றொரு சரித்திர சாதனைப் படைக்க அந்த அணி தயாராகிவிடும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/16191351/1096674/zimbabwe-ready-to-another-history-win-colombo-Test.vpf

  • தொடங்கியவர்

இலங்கைக்கு கடினமான வெற்றி இலக்கை நிர்ணயித்தது சிம்பாப்வே

 

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி இலங்கை அணிக்கு 388 என்ற கடின இலக்கை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

slvzim.jpg

ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றுவரும் இரு அணிகளுக்குமிடையிலான  டெஸ்ட் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணி முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் அபா­ர­மாக ஆடிய எர்வின் 160 ஓட்­டங்­களைக் குவித்தார்.

 

பின்னர் இலங்கை அணி முதல் இன்­னிங்ஸை தொடங்­கி­யது. திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றங்­கி­னார்கள்.  திமுத் கரு­ணா­ரத்ன 25 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழக்க, அடுத்து வந்த குசல் மெண்டிஸ் 11 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார்.

 

மறு­மு­னையில் அரை­ச் சதம் கடந்த உபுல் தரங்க 71 ஓட்­டங்­க­ளுடன் ரன்­அவுட் மூலம் ஆட்­ட­மி­ழந்தார். அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் 55 ஓட்­டங்­க­ளு­டனும், முன்னாள் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் 41 ஓட்­டங்­க­ளு­டனும், தில்­ருவான் பெரேரா 33 ஓட்­டங்­க­ளு­டனும் வெளி­யேற, இலங்கை அணி 2ஆ-வது நாள் ஆட்­ட­நேர முடிவில் 7 விக்­கெட்­டுக்­களை இழந்து 293 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது. 

 

அசேல குண­ரத்ன 24 ஓட்­டங்­க­ளு­டனும், ரங்­கன ஹேரத் 5 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். 

 

இலங்கை அணி 63 ஓட்­டங்கள் பின்­தங்­கிய நிலையில் நேற்று தனது ஆட்­டத்தை தொடர்ந்­தது. 5 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்த ரங்­கன ஹேரத் 22 ஓட்­டங்­க­ளு­டனும், அசேல குண­ரத்ன 45 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். நேற்றுக் காலை போட்டி ஆரம்­பித்த ஒன்­றரை மணிநேரத்­திற்­குள்­ளேயே இலங்கை அணி மீத­மி­ருந்த மூன்று விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து  346 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. இதனால் சிம்­பாப்வே அணியை விட 10 ஓட்­டங்கள் பின்­தங்­கி­யது.

 

இதனைத் தொடர்ந்து தனது இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்­தது சிம்­பாப்வே. இலங்கை அணி பந்­து­வீச்­சா­ளர்­களின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சால் மஸ­கட்சா (7), சகப்­பவா (6), முஸ­கண்டா (0), கடந்த போட்­டியில் 160 ஓட்­டங்­களை விளாசி இலங்கை அணியை திண­ற­டித்த எர்வின் (5) என அடுத்­த­டுத்து ஆட்­ட­மி­ழக்க சிம்­பாப்வே அணி 23 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டுக்­களை இழந்து இக்­கட்­டான நிலைக்கு தள்­ளப்­பட்­டது. அடுத்து வந்த வில்­லி­யம்ஸும் 22 ஓட்­டங்­க­ளுடன் ஹேரத்தின் பந்தில் ஆட்­ட­மி­ழக்க 59 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­டுக்­களை இழந்து திண­றி­யது சிம்­பாப்வே.

 

அத்­தோடு நேற்று மூன்றாம் நாள் பகல் நேர இடை­வே­ளைக்­காக ஆட்டம் நிறுத்­தப்­பட்­டது. உணவு இடை­வே­ளையின் பின்னர் சிம்­பாப்வே அணி சொற்ப ஓட்­டங்­க­ளுக்குள் ஆட்­ட­மி­ழந்­து­விடும் என்று பர­வ­லாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அதற்குப் பிற­குதான் சிம்­பாப்வே தனது ஆட்­டத்தை ஆரம்­பித்­தது. 

 

சிகண்டர் மற்றும் மூர் ஜோடி சேர்ந்து சரி­வி­லி­ருந்து அணியை மீட்­டனர். இரு­வரும் சிறப்­பா­ன­தொரு இணைப்­பாட்­டத்தை ஆடி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை 145 வரை உயர்த்திக் கொண்டு போக இந்த ஜோடியை பிரித்தார் லஹிரு குமார. மூர் 40 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்தார்.

 

இத்­துடன் சிம்­பாப்வே கதை முடிந்­தது என்று மகிழ்ச்­சி­ய­டை­வ­தற்குள் அடுத்து வந்த வெல்லர் சிகண்டர் ரசா வுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்­றைய 3 ஆம்  நாள் ஆட்ட நேரம் முடி­யும்­வரை நங்­கூ­ர­மிட்­ட­துபோல் களத்தில் நின்று இலங்கை அணி பந்­து­வீச்­சா­ளர்­களை வெறுப்­பேற்­றியது.

 

இதனால் சிம்­பாப்வே அணி 252 ஓட்­டங்கள் வரை சேர்த்­தது. சிகண்டர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், வெலர் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்தனர்.

இன்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த சிம்பாப்வே அணி சிகண்டர் ரசாவின் சதத்தின் உதவியுடன் அனைத் விக்கெட்டுகளையும் இழந்து 387 என்ற வலுவான ஓட்ட இலங்கை இலங்கை அணிக்கு கொடுத்துள்ளது.

2 ஆவது இன்னிங்ஸில் சிம்பாப்வே அணியின் சிகண்டர் ரசா 127 ஓட்டங்களையும் வெல்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கண ஹேரத் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

388 என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. 

இதேவேளை, நாளை போட்டியின் 5 ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21978

Zimbabwe 356 & 377
Sri Lanka 346 & 108/2 (32.1 ov)
Sri Lanka require another 280 runs with 8 wickets remaining
  • தொடங்கியவர்

ஒருநாள், 7 விக்கெட்டுகள், 218 ரன்கள் - டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு உள்ள இலக்கு! #ZimVsSL

ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று முடிந்திருக்கிறது. ஜிம்பாப்வே நிர்ணயித்த 388 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கருணாரத்னே 49 ரன்களிலும், உபுல் தரங்கா 27 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கேப்டன் தினேஷ் சண்டிமால் 15 ரன்களில் வெளியேறினார். ஜிம்பாப்வே தரப்பில் கேப்டன் கிரீமர் 2 விக்கெட்டுகளையும், சீன் வில்லியம்ஸ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 

ஜிம்பாப்வே - இலங்கை டெஸ்ட் போட்டி 2017

நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருக்கிறது. அரைசதம் கடந்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ் 60 ரன்களுடனும், மேத்யூஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 218 ரன்கள் தேவை. கடைசிநாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், இப்போட்டி டிராவில் முடிவதற்கான வாய்ப்பு மிக குறைவு. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் இலங்கை அணி வெற்றி ஆறுதல் அடையுமா? ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று வரலாறு படைக்குமா என்பது நாளை தெரியும்.

சுருக்கமான ஸ்கோர் : 

ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸ் 356 - ஆல்அவுட். இரண்டாவது இன்னிங்ஸ் - 377 ஆல்அவுட். 

இலங்கை : முதல் இன்னிங்ஸ் : 346 - ஆல்அவுட், இரண்டாவது இன்னிங்ஸ் 170-3.

http://www.vikatan.com/news/tamilnadu/95833-srilanka-has-been-scored-1703-on-4th-day-test-against-zimbabwe-sl-need-218-runs-to-win-this-match.html

  • தொடங்கியவர்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: இலங்கைக்கு தேவை 218 ரன்; ஜிம்பாப்வேவுக்கு 7 விக்கெட்

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட் உள்ளது. இலங்கை அணியின் வெற்றிக்கு 218 ரன்கள் தேவைப்படுகிறது. ஜிம்பாப்வே 7 விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும்.

பரபரப்பான கட்டத்தில் கொழும்பு டெஸ்ட்: இலங்கைக்கு தேவை 218 ரன்; ஜிம்பாப்வேவுக்கு 7 விக்கெட்
 
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னி்ங்சை தொடங்கிய இலங்கை 346 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 252 எடுத்திருந்தது. இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 377 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

ஒட்டுமொத்தமாக இலங்கையை விட 387 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக குணரத்னே, உபுல் தரங்கா ஆகியோர் களம் இறங்கினார்கள். தரங்கா 27 ரன்னிலும், குணரத்னே 48 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சண்டிமல் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

201707172214118382_8-chandimal-s._L_styv
சண்டிமல் கேட்ச் ஆன காட்சி

4-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இலங்கை அணி 4-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணிக்கு நாளை கடைசி நாளில் 218 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுக்கள் மீதமுள்ளது. நாளை காலை உணவு இடைவேளைக்குள் ஜிம்பாப்வே அணி விரைவாக விக்கெட்டுக்கள்  வீழ்த்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையெனில் இலங்கை அணி 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸிங் செய்ய வாய்ப்புள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/17221409/1096878/Colombo-Test-218-runs-required-sri-Lanka-won.vpf

  • தொடங்கியவர்
Zimbabwe 356 & 377
Sri Lanka 346 & 372/6 (110.1 ov)
Sri Lanka require another 16 runs with 4 wickets remaining
  • தொடங்கியவர்
Zimbabwe 356 & 377
Sri Lanka 346 & 391/6 (114.5 ov)
Sri Lanka won by 4 wickets
  • தொடங்கியவர்

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 388 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அசத்தல் வெற்றி

கொழும்பில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே நிர்ணயித்த 388 ரன்கள் இலக்கை எட்டி இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 388 ரன்களை சேஸிங் செய்து இலங்கை அசத்தல் வெற்றி
 
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே எர்வின் (160) சதத்தால் 356 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் உபுல் தரங்கா (71), சண்டிமல் (55), மேத்யூஸ் (41), குணரத்னே (45) ஆகியோரின் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்சில் 346 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் 10 ரன்கள் முன்னிலையுடன் ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சை தொடங்கியது. சிகந்தர் ரசாவின் அபார சதத்தால் (127) அந்த அணி 377 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹெராத் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஜிம்பாப்வே அணி 387 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. குசால் மெண்டிஸ் 60 ரன்னுடனும், மேத்யூஸ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. குசால் மெண்டிஸ் மேலும் 6 ரன்கள் எடுத்த நிலையிலும், மேத்யூஸ் மேலும் 8 ரன்க்ள எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் டிக்வெல்லா உடன், குணரத்னே ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இதனால் இலங்கை அணி வெற்றியை நோக்கிச் சென்றது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வந்த நிலையில், டிக்வெல்லா 81 ரன்னில் ஆட்டம் இழந்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றிக்கு உற்சாகம் அளித்தனர். டிக்வெல்லா அவுட்டாகும்போது இலங்கை 324 ரன்கள் எடுத்திருந்தது.

டிக்வெல்லாவையடுத்து பெரேரா களம் இறங்கினார். குணரத்னே, பெரேரா உடன் இணைந்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். இலங்கை அணி 114.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 391 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்த்ல் அபார வெற்றி பெற்றது. குணரத்னே - பெரேரா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது.

குணரத்னே 80 ரன்களுடனும், பெரேரா 28 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். முதல் இன்னிங்சில் 45 ரன்னும், 2-வது இன்னிங்சில் 80 ரன்களும் சேர்த்த குணரத்னே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/18160320/1097071/Colombo-Test-sri-lanka-beats-zimbabwe-my-4-wickets.vpf

  • தொடங்கியவர்

இலங்கை நிம்மதிப் பெருமூச்சு – 4 இலக்குகளால் சிம்பாப்வேயை வென்றது!

 
 
இலங்கை நிம்மதிப் பெருமூச்சு – 4 இலக்குகளால் சிம்பாப்வேயை வென்றது!
  •  

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இலங்கை அணி 4 இலக்குகளால் வெற்றிபெற்றது. சிம்பாப்வே அணியின் வரலாற்று வெற்றிக் கனவு தகர்த்தது.

இலங்கை –சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான ஒரே­யொரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரே­ம­தாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.

 

265998.5.jpg

Sri Lankan cricketer Asela Gunaratne (R) and Dilruwan Perera on the final day of a one-off Test match between Sri Lanka and Zimbabwe at the R Premadasa Cricket Stadium in Colombo on July 18, 2017.
Sri Lanka beat Zimbabwe by four wickets after chasing a record 388 on the fifth and final day of the one-off Test. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சிம்­பாப்வே அணி எர்வின் விளாசிய சதத்தால் (160) முதல் இன்­னிங்ஸில் 356 ஓட்­டங்­களைக் குவித்­தது. பின்னர் முதல் இன்­னிங் ஸை தொடங்­கிய இலங்கை அணி 346 ஓட்­டங்­க­ளுக்கு ஆட்­ட­மி­ழந்­தது.

முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் சிம்­பாப்வே அணி 2ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது.

3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் சிம்­பாப்வே 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 252 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. சிகந்தர் ரசா 97 ஓட்­டங்­க­ளு­டனும், மெல்கம் 57 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்­தனர். நேற்று 4ஆ-வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. ஆட்­டத்தின் முதல் பந்துப் பரிமாற்றத்திலேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். மெல்கம் 68 ஓட்­டங்களுடனும், சிகந்தர் ரசா 127 ஓட்­டங்­க­ளுடனும் ஆட்­ட­மி­ழந்­தனர். அடுத்து வந்த தலைவர் கிரிமர் 48 ஓட்­டங்கள் எடுக்க சிம்­பாப்வே அணி 2-ஆவது இன்­னிங்ஸில் 377 ஓட்­டங்­களைக் குவித்­தது.

 

265999.3.jpg

 

Sri Lankan cricketer Dilruwan Perera (L) and Sri Lankan cricket captain Dinesh Chandimal celebrate winning over Zimbabwe on the final day of a one-off Test match between Sri Lanka and Zimbabwe at the R Premadasa Cricket Stadium in Colombo on July 18, 2017.
Sri Lanka beat Zimbabwe by four wickets after chasing a record 388 on the fifth and final day of the one-off Test. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

சிம்பாப்வே முதல் இன்­னிங்ஸில் 10 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­ததால் ஒட்­டு­மொத்­த­மாக 387 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்­றி­ருந்­தது. இலங்கை அணியின் வெற்­றிக்கு 388 ஓட்டங் கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

இலங்கை அணி சார்பில் ரங்­கன ஹேரத் முதல் இன்­னிங்ஸில் 5 இலக்கு­க­ளையும், 2ஆவது இன்­னிங்ஸில் 6 இலக்கு­க­ளையும் வீழ்த்­தினார். ஒரு போட்­டியில் 10 இலக்குகள் வீழ்த்­தியவர்கள் வரி­சையில் நான்­கா­வது இடத்தைப் பிடித்தார் ஹேரத். இவர் 81 போட்­டி­களில் விளை­யாடி 8 முறை 10 இலக்குகள் வீதம் வீழ்த்­தி­யுள்ளார். இதில் முத­லி­டத்தில் இலங்­கையின் சுழல் பந்துவீச்சாளர் முரளிதரன் இருக்­கிறார். இவர் 133 போட்­டி­களில் 22 முறை 10 இலக்குகளை வீழ்த்­தி­யுள்ளார்.

388 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் இலங்கை அணி 2-ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது.

உபுல் தரங்க மற்றும் திமுத் கரு­ணா­ரத்ன ஆகியோர் தொடக்க வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கினர். 27 ஓட்­டங்­க­ளுடன் தரங்க ஆட்­ட­மி­ழக்க, குசல் மெண்டிஸ் கள­மி­றங்­கினார். மறு­மு­னையில் நின்ற திமுத்தும் 49 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யே­றினார். அடுத்து வந்த சந்­தி­மாலும் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க, மத்­தியூஸ் கள­மி­றங்­கினார். மத்­தியூஸ் 17 ஓட்­டங்­க­ளு­டனும், குசல் மெண்டிஸ் 60 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் நிற்க இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 இலக்குகளை இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

266000.3.jpg

 

Sri Lankan cricket captain Dinesh Chandimal (L) shakes hands with Zimbabwe cricket captain Graeme Cremer after Sri Lanka beat Zimbabwe by four wickets on the final day of a one-off Test match between Sri Lanka and Zimbabwe at the R Premadasa Cricket Stadium in Colombo on July 18, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

போட்­டியின் கடைசி நாளான இன்று இலங்கை அணி வெற்­றி­பெற வேண்­டு­மானால் 7 இலக்குகள் கையிலுள்ள நிலையில் 218 ஓட்­டங்­களைப் பெற வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கியது இலங்கை அணி. மத்தியூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடியபோதும் மத்தியூஸ் 25 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மிகவும் பொறுப்புடன் ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். அவரும் 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிடிகொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் இணைந்த அசேல குணவர்தன மற்றும் டில்ருவான் பெரேரா இணை மிகவும் நிதானமாக ஆடி சிம்பாப்வேயின் வரலாற்று வெற்றிக்கனவை பறித்தது. இறுதியில் இலங்கை அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்று 1:0 என்ற ரீதியில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

http://uthayandaily.com/story/12252.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.