Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்?

Featured Replies

Page-14-489a2f00c56e5645dc50fab414f3ede30747edb2.jpg

சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்?

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-2

 

சம்பந்தன் என்னுடன் உறவாட தயங்குவதேன்?

 

நேர்­காணல் : ரொபட் அன்­டனி 

 

யுத்த காலத்தில் தலை­ந­கரில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக தைரி­ய­மாக குரல் கொடுத்த அர­சி­யல்­வா­தி­யான மனோ கணேசன் இன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ராக பணி­பு­ரி­கின்றார். அன்று காணாமல் போன அல்­லது கடத்தல் சம்­பவம் இடம்­பெற்றால் பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டு­வ­தற்கு முன்னர் இவ­ரி­டமே கூறும் வழக்கம் இருந்­தது. வீதி­களில் இறங்கி போரா­டி­யவர். காணாமல் போதல், கடத்­தல்கள் என்­ப­ன­வற்­றுக்கு எதி­ரா­கக்­குரல் கொடுத்­த­மையின் கார­ண­மாக அமெ­ரிக்க அர­சாங்­கத்­தினால் சுதந்­திர காவலர் என்ற விருதும் வழங்­கப்­பட்­டவர்.

அத்­த­கைய அர­சி­யல்­வா­தியின் இன்­றைய நிலை என்ன? அவர் திருப்­தி­க­ர­மாக நல்­லாட்சி அர­சாங்­கத்தில் கட­மை­யாற்­று­கின்­றாரா? தென்­னி­லங்கை தமிழ் மக்­களின் வாழ்க்­கையில் மாற்­றத்தை இவரால் ஏற்­ப­டுத்த முடி­யுமா? வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை பெறு­வதில் எவ்­வா­றான பங்­க­ளிப்பை அவரால் செலுத்த முடியும் போன்ற கேள்­வி­க­ளுக்கு பதில் ­காண அவரின் அலு­வ­ல­கத்தில் இவ்­வாரம் நான் அமர்ந்தேன். அவ­ருடன் சுமார் ஒரு மணி­நேரம் நேர்­காணல் கண்டேன்.

மனோ கணேசன் மனம் திறக்­கின்றார்

Q:- நீங்கள் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரிய அர்ப்­ப­ணிப்பை செய்த ஒருவர். யுத்த காலத்தில் கடத்­தல்கள், காணாமல் போதல் சம்­ப­வங்­க­ளுக்கு எதி­ராக போரா­டி­யவர். அந்த வகையில் உங்­க­ளுக்கு இந்த அர­சாங்­கத்தில் கிடைத்­துள்ள இடம் தொடர்பில் திருப்தி அடை­கின்­றீர்­களா?

A: நிச்­ச­ய­மாக திருப்­தி­யு­ட­னேயே இருக்­கின்றேன். அதில் எந்த மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. நான் எந்தத் துறை­யில் எந்த விட­யங்­க­ளில் ஆர்­வ­மாக செயற்­பட்­டேனா, அதே துறை­யி­லேயே நான் இன்று இந்த அர­சாங்­கத்தின் சார்பில் செயற்­ப­டு­கின்றேன். இந்த நாட்டில் வாழும் இனங்கள், மதங்கள், மொழி­க­ளுக்கு மத்­தியில் ஐக்­கி­யத்­தையும் ஒற்­று­மை­யையும் சமத்­துவம் என்ற அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பது எனது இலட்­சி­ய­மாகும். அந்தப் பணியை நான் தற்­போது அமைச்­ச­ரவை அதி­கா­ரத்­துடன் செய்து கொண்­டி­ருக்­கின்றேன்.

ஒன்றை நீங்கள் மறந்­து­விட வேண்டாம். நான் இந்த 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு முன்னர் எம்.பி.யாக இருக்­க­வில்லை.

2010 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் கண்­டியில் போட்­டி­யிட்­ட­போது வெற்­றி­பெற முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்டேன். அதில் நான் தோல்­வி­ய­டைந்­த­தாக கூற முடி­யாது. எனினும் வெற்­றி­பெற முடி­ய­வில்லை. அதன் பின்னர் மாகாண சபை உறுப்­பி­ன­ரா­கவே இருந்தேன். அந்த வகையில் இலங்கை வர­லாற்றில் மாகாண சபை­யி­லி­ருந்து அமைச்­ச­ர­வைக்கு சென்ற ஒரே­யொரு அர­சி­யல்­வாதி நான்தான். எனவே சாத­க­மான விட­யங்­களை பார்க்க வேண்டும். பாத­க­மான விட­யங்­க­ளையும் பார்க்க வேண்டும்.

Q:- அப்­ப­டி­யெனில் பாத­க­மான விட­யங்கள் உள்­ள­னவா?

A: இல்லை. உங்கள் கேள்­வியில் பாத­க­மான விஷ­யத்தை தேடும் ஒரு தொனி தென்­பட்­டது. அதை தான் கூறினேன்.

Q:- மனோ கணேசன் இந்த அர­சாங்­கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்­ப­தற்­கான நியா­ய­மான கார­ணங்­களை கூற முடி­யுமா?

A: ஒப்­பிட்­ட­ளவில் கடந்த ஆட்­சி­யை­விட இந்த ஆட்சி நன்­றாக இருக்­கின்­றது என்றே கூறுவேன். கடந்த ஆட்­சியை காட்­டாட்சி என்று வர்­ணிக்­கின்றோம். இந்த ஆட்­சியை நல்­லாட்சி என்று வர்­ணிக்­கின்றேன். நல்­லாட்சி என்றால் அதி­சி­றந்த நல்­லாட்சி என்று அர்த்தமல்ல. உல­கத்தில் அதி சிறந்­தது என்று எதுவும் கிடை­யாது. ஒப்­பிட்­டுத்தான் பார்க்க வேண்டும். அன்­றை­யதை விட இன்று நன்­றாக இருக்­கின்­றது. இன்­றை­யதை விட நாளைய ஆட்சி நன்­றாக இருக்­கலாம். அல்­லது மோச­மா­கவும் போகலாம். ஒப்­பீட்டு ரீதி­யி­லேயே நாம் இவற்றை நோக்­க­வேண்டும். அதனால் நான் இந்த அர­சாங்­கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நினைக்­கிறேன்.

Q:- நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்­பான உங்­க­ளது சுய மதிப்­பீடு என்ன?

A: இன்று சட்­டத்தின் ஆட்சி நில­வு­கின்­றது. பொலிஸ் துறையில் ஒரு சுயா­தீனம் தெரி­கி­றது. நீதித்­து­றையில் சுயா­தீனம் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த நிலை­மை­களை ஒப்­பிட்டு பார்க்­கும்­போது நிலைமை முன்­னேறி உள்­ளது. இங்கு ஒப்­பி­டுதல் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக காணப்­ப­டு­கி­றது. உதா­ர­ண­மாக அர­சியல் கைதி­களின் பிரச்­சி­னை­களை எடுத்து பாருங்கள். நாங்கள் பத­விக்கு வரும்­போது சுமார் 200 அர­சியல் கைதிகள் இருந்­தனர். ஆனால் இன்று சுமார் 100 பேர் வரை உள்­ளனர். ஏனையோர் ஏதோ­வொரு வழியில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். யுத்த காலத்தில் மக்­க­ளிடம் இருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. முழு­மை­யாக வழங்­கப்­பட்டு விட்­டன என்று கூற முடி­யாது. ஆனால் கணி­ச­மான தனியார் காணிகள் விடு­விக்­கப்­பட்டுக் கொண்டு தான் இருக்­கின்­றன. அண்­மையில் கூட மயி­லிட்டி துறை­முக பகு­தியை விடு­விக்­கப்­பட்­டது. இந்த விடயத்தில் இன்னும் செல்ல வேண்­டிய தூரம் அதிகம் உள்­ளது. காணா­மல்­போனோர் விவ­கா­ரத்தில் காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­லகம் அமைக்கும் நோக்கில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. மறு­புறம் பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தியில் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்கும் நோக்கில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த துறையில் நான் என்னை நேர­டி­யாக ஈடு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்றேன்.

Q:- இவற்றைக் கொண்டு உங்­களால் திருப்­தி­ய­டைய முடி­யுமா?

A: நான் எப்­போதும், எந்த விஷ­யத்­திலும் இலேசில் திருப்­தி­ய­டைய மாட்டேன். எனது அர­சியல் வாழ்வில் நான் ஒரு­போதும் திருப்தி அடை­வ­தில்லை. இங்­கேயும் கவ­னி­யுங்கள், ஒப்­பி­டு­த­லையே நான் செய்­கிறேன். நான் நினைத்­தி­ருந்தால் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அரசில் 2005 யிலேயே இணைந்­தி­ருக்­கலாம். 2010ல் ஒரு தேசிய பட்­டி­யலை வாங்­கிக்­கொண்டு இணைந்­தி­ருக்க்லாம். நல்ல விலைக்கு போயி­ருப்பேன். (சிரிக்­கிறார்).

ஆனால் மகிந்த அரசில் தமிழ் மக்கள் ஒப்­பிட்டுப் பார்ப்­ப­தற்­கான எந்­த­வொரு நியா­ய­மான கார­ணங்­களும் இருக்­க­வில்லை. அதனால் வெளி­யி­லி­ருந்து போரா­டினேன். தற்­போது உள்ளே இருந்து போரா­டு­கின்றேன்.

Q:- தொடர்ந்து போராட்­டம்தானா?

A: ஆம். அதனை மறுப்­ப­தற்­கில்லை. எப்­போதும் நான் ஒரு போரா­ளிதான். என் ஆயுதம் ஜன­நா­யகம். போராட்டம் எனக்கு எப்­போதும் மகிழ்ச்­சியை தரு­கி­றது. காரணம் எனது போராட்­டங்கள் நியா­யத்தை நோக்­கி­ய­தா­கவே இருக்­கின்­றன.

Q:- எதிர்க்­கட்­சியில் இருந்து போரா­டு­வதும், ஆளும் கட்­சி­யி­லி­ருந்து உள்­ளக ரீதியில் போரா­டு­வதும் எவ்­வாறு இருக்­கின்­றது?

A: எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து போராடும் போது அது பளிச்­சென தெரி­கி­றது. மக்­க­ளையும் சென்­ற­டை­கி­றது. ஆனால் ஆளும் கட்­ச­ியி­லி­ருந்து போரா­டும்­போது அது அவ்­வ­ள­வாக தெரி­யாமல் போய்­விடும். ஆனால், இந்த “தெரி­கி­றது..,தெரி­யா­ம­லி­ருக்­கி­றது” என்­ப­வை­க­ளை­பற்றி நான் அவ்­வ­ள­வாக அலட்­டி­கொள்­வ­தில்லை. என்மேல் மக்­க­ளுக்கு நம்­பிக்கை இருக்­கி­றது. அத­னால்தான் நான் எங்­கி­ருந்து போரா­டி­னாலும், மனோ கணேசன் சரி­யான திசை­யைதான் நோக்கி நகர்­கின்றார் என மக்கள் நம்­பு­கின்­றனர்.

Q:- ஜன­நா­யகம் குறித்து பேசி ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­மான தேர்­தலை நடத்­தாமல் இருக்­கி­றது. இதற்கு எவ்­வாறு பதி­ல­ளிக்கப் போகின்­றீர்கள்?

A: ஒரு விட­யத்தை முதன்­மு­த­லாக உங்கள் நாளேடு மூல­மாக நாட்­டுக்கு அறி­விக்­க­வேண்டும். நவம்பர் மாதம் இறுதி வாரத்­திலே நாடு முழு­வதும் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும். அதற்­கான முடிவு சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற கட்சிக் தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­பட்டு விட்­டது.

இந்த தேர்தல் தாமதம் அடைந்­த­மைக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் சட்­ட­ மூலத்தில் இருக்­கக்­கூ­டிய குள­று­ப­டி­களே பிர­தான கார­ண­மாகும். அந்தக் குள­று­ப­டி­களை கடந்த அர­சாங்­கத்தின் சக்தி வாய்ந்த அமைச்­ச­ரான பஷில் ராஜ­ப­க் ஷவே உரு­வாக்­கினார்.

அதில் குறிப்­பாக சிறிய மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு அப்­பட்­ட­மான அநீதி இழைக்­கப்­பட்­டி­ருந்­தது. மிக மோச­மான முறையில் தொகுதி வட்­டார எல்­லைகள் நிர்­ணயம் செய்­யப்­பட்­டி­ருந்­தன. எனவே சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு தமது பிர­தி­நி­தித்­து­வங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­படும் வகையில் திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கதான் இந்த தாமதம் நில­வு­கின்­றது. எங்­க­ளது அந்த இடை­வி­டாத உள்­ளகப் போராட்­டத்தின் கார­ண­மாக சட்­டத்தின் குள­று­ப­டி­களும், எல்லை நிர்­ணய குள­று­ப­டி­களும் மிக பெரும்­பாலும் சீர்­செய்­யப்­பட்­டுள்­ளன.

Q:- அப்­ப­டி­யாயின் வரப்­போகும் உள்­ளூ­ராட்சி தேர்தல் முறையில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு அநீதி இருக்­காதா?

A: பஷில் ராஜ­பக் ஷ ஏற்­பாடு செய்த அந்த சட்­ட ­மூ­லத்தில் இருந்த குள­று­ப­டிகள் உடைத்­தெ­றி­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. அவற்றை நாங்கள் இன்று பேசி முடித்­து­விட்டோம். எமது முடி­வு­க­ளின்­படி சட்­ட­மூல திருத்­தங்கள் சட்­ட­மா­தி­பரால் தயா­ரிக்­கப்­பட்டு அடுத்­த­வாரம் அமைச்­ச­ர­வைக்கு வழங்­கப்­படும். அமைச்­ச­ரவை அதனை ஏற்று பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்கும்.

Q:- தற்­போ­தைய அர­சாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை நீடிக்­காது என மஹிந்த அணி­யினர் கூறி வரு­கின்­றனர். இதற்கு என்ன பதில்?

A: நீடிக்­காது என்­பது மஹிந்த ராஜ­ப­க் ஷவின் கனவு. அது அவ­ரது ஆசை. அவ­ரது பேராசை என்றும் கூறலாம். ஆனால் அர­சாங்கம் எந்த சிக்­க­லு­மின்றி நீடிக்கும். ஏனெனில் ஒன்றாய் இருக்­கும்­வ­ரைதான் வாழ்வு என்று இங்கே உள்­ள­வர்­க­ளுக்கு நன்கு தெரியும்.

Q:- அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. அதில் தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வே முக்­கி­யத்­து­வம்­மிக்­கது. இதில் தற்­போது என்ன நடக்­கின்­றது என்ற உண்­மையை நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்­டிய பொறுப்பு உங்­க­ளுக்கு இருக்­கின்­றது. தயவு செய்து உண்­மையை கூறுங்கள்...?

A: அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணியில் அர­சாங்கம் மட்டும் ஈடு­ப­ட­வில்லை. மாறாக இன்று முழு நாடும் அதில் ஈடு­ப­ட்டுள்ளது. முழுப் பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு பிர­தான வழி­ந­டத்தல் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அந்தக் குழுவின் தலை­வ­ராக பிர­தமர் இருக்­கிறார். அந்த 21 பேர் கொண்ட குழுவில் ஆளும் கட்சி, எதிர்க்­கட்சி என அனைத்து தரப்­பி­னரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

சம்­பந்தன், அநு­ர­கு­மார, டக்ளஸ் தேவா­னந்தா, தினேஷ் குண­வர்த்­தன ஆகிய எதி­ரணி தலை­வர்­களும், ஹக்கீம், ரிசாத், சம்­பிக்க ரண­வக்க, நிமால் சிறி­பால டி சில்வா, மனோ கணேசன் என்ற ஆளும் அணி கட்சி தலை­வர்­களும் உள்­ளனர்.

1972 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ கொண்டு வந்த அர­சி­ல­ய­மைப்பு உரு­வாக்­கத்­திலும், 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். கொண்டு வந்த அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்­திலும் காணப்­ப­டாத பண்பு இம்­முறை உரு­வாக்­கப்­படும் அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கி­றது. ஜன­நா­யக பாரம்­ப­ரிய முறைமை பின்­பற்­றப்­ப­டு­கி­றது. சிறி­மாவின் காலத்தில் சமை­ய­லறை அமைச்­ச­ர­வையை அடிப்­ப­டை­யாகக் கொண்டே அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்தார். ஜே.ஆர். தனது நண்­பர்­களை வைத்துக் கொண்டே அர­சி­ய­ல­மைப்­பனை கொண்டு வந்தார்.

இன்று அப்­ப­டி­யல்ல. ஜன­நா­ய­க­ரீ­தி­யாக முழு நாட்டு மக்­க­ளி­னதும் கருத்­துக்கள் பெறப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. தற்­போது எமது வழி­ந­டத்தல் குழு­வுக்கு வந்த யோச­னை­களை எல்லாம் தொகுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம். வழி­ந­டத்தல் குழு­வுக்கு முடி­வுகள் எடுக்கும் அதி­கா­ரங்கள் இல்லை. ஆனால் வந்த யோச­னை­களை தொகுத்து அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கு கொடுப்போம். அங்­கேதான் இறு­தி­மு­டிவு எடுக்­கப்­படும்.

Q:- அர­சியல் தீர்வு தொடர்பில் எவ்­வா­றான நிலைமை காணப்­ப­டு­கி­றது.

A: இலங்கை தேசிய இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக நான் ஒரு விட­யத்தை கூறி விட வேண்டும். தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின், மனோ ­க­ணே­சனின் இது தொடர்­பான நிலைப்­பா­டுகள் மிகவும் தெளி­வா­னவை. அதா­வது வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும். இதற்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மற்றும் சிங்­கள மக்­களின் உடன்­பாடு பெறப்­பட வேண்டும். சமஷ்டி முறை­மை­யி­லான, மத­சார்­பற்ற அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். 13 ஆவது திருத்­தத்தை தாண்­டிய அதி­காரப் பகிர்வு இருக்க வேண்டும்.

தேர்தல் முறை­யா­னது சிறு­பான்மை மக்கள் இன்று பெற்றுக் கொண்­டி­ருக்கும் பிர­தி­நி­தித்­து­வங்கள் சற்றும் குறை­யாமல் அதனை இன்னும் வலு­வாக்கும் வகையில் அமைய வேண்டும். ஜனா­தி­பதி முறைமை முழு­மை­யாக நீக்­கப்­ப­டு­வதில் எமக்கு உடன்­பாடு இல்லை. அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்ட ஆனால் மக்­க­ளினால் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­ப­டக்­கூ­டிய ஜனா­தி­ப­தி­யொ­ருவர் இருக்க வேண்டும். அது ஆறு அல்­லது ஐந்து வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை சிறு­பான்மை மக்­க­ளுக்கு வாக்­கு­ப­லத்­தி­னூ­டாக பேரம் பேசும் சக்­தியை கொடுக்கும்.

அதே­நேரம் சிறு­பான்மை இனத்தை சார்ந்த ஒருவர் உப ஜனா­தி­ப­தி­யா­கவும் நிய­மிக்­கப்­பட வேண்டும். இதுதான் எமது நிலைப்­பாடு. இது எனது தெளிவான நிலைப்­பாடு என்­ப­தனை தெரி­விக்­கின்றேன். இதில் சில விட­யங்­களை வழி­ந­டத்தல் குழு­வுக்கு முன்­வைத்­துள்ளோம். சில விட­யங்­களை முன்­வைக்­க­வில்லை.

காரணம் வழி­ந­டத்தல் குழுவில் ஒரு யதார்த்தம் இருக்­கின்­றது. அந்த யதார்த்தம் என்­ன­வெனில் தற்­போது வடக்கு, கிழக்கு இணைப்­பிற்கு சாத்­தியம் கிடை­யாது. சமஷ்­டிக்கு சாத்­தி­ய­மில்லை. மத­சார்­பின்மை என்ற கொள்­கைக்கு சாத்­தியம் கிடை­யாது. இந்த யதார்த்­தத்­திற்கும், எமது எதிர்­பார்ப்­புக்கும் இடையில் பாரிய இடை­வெளி காணப்­ப­டு­கி­றது. இந்த உண்­மை­யைதான் நான் உரத்து கூறு­கின்றேன். இந்த யதார்த்­தத்தை தமிழ் மக்­க­ளுக்கு தெளி­வாக எடுத்து சொல்ல வேண்­டிய கடமை எனக்கு இருக்­கி­றது. சொன்­னால்தான் தமிழ் மக்கள் உண்­மையை தெரிந்து கொள்­வார்கள்.

உங்கள் கேள்­வியில் மக்­களின் எதிர்­பார்ப்பு தொக்கி நிற்­கி­றது. இது நியா­ய­மான கேள்­விதான். மக்கள் எழுப்பும் கேள்­வியை நீங்கள் என்­னிடம் கேட்­கின்­றீர்கள். அத­னால்தான் மக்கள் தெளி­வில்லாமல் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக உண்­மையை கூறு­கின்றேன். அர­சி­ய­ல­மைப்பு இன்னும் வர­வில்லை. அது வருமா, வராதா என்ற சந்­தேகம் கூட ஏற்­பட்­டு­விட்­டது. எனினும் இன்­றைய யதார்த்­தத்தை மக்­க­ளுக்கு எடுத்துக் கூறு­வதில் தயக்கம் இருக்­கக்­கூ­டாது.

காரணம் இந்த முறைதான் நாடு முழுக்க சென்று மக்கள் கருத்­து­களை பெற்­றுளோம். இந்த முறைதான் இந்த அர­சி­ய­ல­மைப்பு செயற்­பாட்டில் மக்­களின் பங்­க­ளிப்பு அதி­க­மா­க­வுள்­ளது என்று உரக்க கூறி நாம் தம்­பட்டம் அடித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அந்த தம்­பட்டம், ஏன் தற்­போது, மக்­க­ளிடம் உள்ளே இருக்கும் உண்­மையை எடுத்து கூறு­வதில், என்னை தவிர, ஏனை­யோ­ரிடம் நின்று போய்­விட்­டது என்று தெரி­ய­வில்லை.

திங்கட்கிழமை தொடரும்...

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

Page-17-8c3338eb003be559fa985ca9b3e6f550

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.