Jump to content

ஆகஸ்டில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்: அதிகாரப்பூர்வ தகவல்


Recommended Posts

பதியப்பட்டது

ஆகஸ்டில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்: அதிகாரப்பூர்வ தகவல்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டொங்சென் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ஆகஸ்டில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்: அதிகாரப்பூர்வ தகவல்
 
சீயோல்:
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.  
 
புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 
சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஃபேப்லெட் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. 
 
 
201707162116073648_Galaxy%20Note%208._L_
 
கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்
 
* 6.3 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ்
* ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் பிரைமரி கேமரா
* 3300 எம்.ஏ.எச். பேட்டரி

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/16211606/1096685/Samsung-Galaxy-Note-8-to-launch-next-month-CEO-Gao.vpf

  • 1 month later...
Posted

வெளியீட்டிற்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்

 

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 
 
 
 
வெளியீட்டிற்கு முன் வெளியான சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்
 
சீயோல்: 
 
தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிற்றேடு (பிரவுச்சர்) ஆஸ்டிராய்டு (Ausdroid) எனும் தளத்திற்கு கிடைத்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் புதிய கேலக்ஸி நோட் 8 பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் டீப் புளூ சீ நிறம் கொண்ட நோட் 8 வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது. 
 
இத்துடன் நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்மர்ட் எஸ்-பென், ஐரிஸ் ஸ்கேனர், 2X சூம் கொண்ட டூயல் கேமரா மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி சாம்சங்கின் ஸ்மார்ட் ஸ்விட்ச் ஆப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
 
201708181029026499_1_Galaxy-Note-8-1._L_
 
சமீபத்தில் GFX தளத்தில் காணப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் தெரியவந்தது. இதில் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1440x2960 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் மற்றும் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 8 பிராசஸர் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. 
 
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 
 
 
 
 

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டீசர்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனி்ற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 8 டீசர்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள்
 
புதுடெல்லி
 
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இம்மாதம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்சங் வெளியிட்டுள்ள புதிய டீசரில் அந்நிறுவனத்தின் புதிய மற்றும் பெரிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 23-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் புதிய டீசரில் ஒவ்வொரு அம்சமும் முழுமையாக மாற்றப்பட்டு புதிய பெயர் பெற்றுள்ளது. இத்துடன் முடியாததை செய் (#DoWhatYouCan't) என்பதை விளக்கும் ஹேஷ்டேக் சாம்சங் பதிவிட்டுள்ளது.  
 
டீசரில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் எஸ்-பென் அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. 
 
201708151254197072_1_galaxy-note-8._L_st
 
சாம்சங் கேலக்ஸி S8 சீரிஸ் போன்றே புதிய ஃபேப்லெட் 6.3 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 8 ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதிக ரேம் கொண்டு வெளியாகும் மூன்றாவது சாம்சங் ஸ்மார்ட்போனாக நோட் 8 இருக்கும் என்றும் 3300 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஸ்ப்லிட்- ஸ்கிரீன் அம்சம் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. நோட் 8 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் வெளியாகும் என்றும் சாம்சங் டெக்ஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 
சாம்சங் வெளியிட்டுள்ள புதிய டீசரை கீழே காணலாம்..,
 
 
 
http://www.maalaimalar.com/Technology/newgadgets/2017/08/15125416/1102461/Samsung-releases-official-teaser-video-for-Galaxy.vpf
 
 
 
 
 
 
Posted

டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8 அறிமுகமானது

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா உள்பட பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 
 
 
 
டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8 அறிமுகமானது
 
நியூ யார்க்: 
 
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை சாம்சங் நிறுவனம் நியூ யார்க் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டுள்ள நோட் 8 பல்வேறு புதிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 
 
புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்ச்சிட் கிரே மற்றும் டீப் சீ புளூ நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள கேலக்ஸி நோட் 8 துவக்க விலை 930 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.59,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோருக்கு கியர் 360 கேமரா அல்லது சார்ஜிங் பன்டிள் கூடுதல் விலையின்றி வழங்கப்படும். இத்துடன் கேலக்ஸி நோட் 7 வாடிக்கையாளர்கள் நோட் 8 வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
 
 
201708241149532394_1_Note-8-Official._L_
 
சாம்சங் கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்:
 
 
- 6.3 இன்ச் குவாட் எச்டி+AMOLED டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- சாம்சங் எக்சைனோஸ் ஆக்டா கோர் சிப்செட் (சில சந்தைகளில் மட்டும்)
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ப்ளூடூத் 5.0, எல்டிஇ
- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா அமைப்பு
- 8 எம்பி செல்ஃபி கேமரா
- 3300 எம்ஏஎச் பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
 
புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு ஐபோன் 7 பிளஸ் கேமராவிற்கு போட்டியாக இருக்கிறது. 
 
இத்துடன் எஸ்-பென், ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே, லைவ் மெசேஜஸ் போன்ற ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/24114948/1104180/Samsung-Galaxy-Note-8-With-63Inch-AMOLED-Display-Launched.vpf

Posted

கேலக்ஸி நோட் 7 ஆல் இழந்த சந்தையை மீட்டெடுக்குமா கேலக்ஸி நோட் 8

 
 

கடந்த வருடம் இதே மாதத்தில்தான் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சாம்சங். ஆனால் வெளியான சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பல மொபைல்கள் வெடித்து சிதற வேறுவழியின்றி திரும்ப பெற்றது சாம்சங். விற்பனையான 3 மில்லியன் போன்களில் 96% திரும்ப பெறப்பட்டன. அதில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டாலும் அது கைவிடப்பட்டது. அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து இப்போது வெளியாகியிருக்கிறது கேலக்ஸி நோட் 8.

முந்தைய கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களோடு ஒப்பிடுகையில் மிகப்பெரிய மாற்றங்களுடன் வெளியாகியிருகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 8.

 நோட் 8

Samsung Galaxy Note 8 சிறப்பம்சங்கள்

  • 6.3 இன்ச் 1440×2960 பிக்சல் AMOLED திரை.
  • கொரில்லாகிளாஸ் 5 பாதுகாப்பு வசதி
  • 6 ஜிபி ரேம் மற்றும் Exynos 8895 ஆக்டா கோர் பிராசஸசர்
  • 12+12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமரா OIS மற்றும் 2x Optical zomm வசதியுடன்
  • 8 மெகாபிக்சல் முன்புற கேமரா
  • 3300 mAh பேட்டரி திறன்
  • ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயக்குதளம்

முந்தைய மாடல்ளோடு ஒப்பிடுகையில் இருப்பதிலேயே பெரிய திரை கேலக்ஸி நோட் 8 ல்தான். அண்மையில் வெளியான S8 ஸ்மார்ட்போனில் infinity display எனப்படும் புதிய வகை திரையை அறிமுகப்படுத்தியிருந்தது. அதே வகையிலான திரை தான் இதிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் 6.3 இன்ச் திரையில் S pen ஐ  பயன்படுத்தி வேலைகளை மேற்கொள்வது எளிதாக இருக்கும்.12+12 மெகாபிக்சல் டூயல் பின்புற கேமராக்களால் 4K வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முடியும்.2X Optical zoom செய்ய முடியும். 8 மெகா பிக்சல் முன்புற கேமராவில் f/1.7 இருப்பதால் குறைந்த வெளிச்சம் இருக்கும் இடங்களிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும்.

முன்புறமாக இருந்த கைரேகை சென்சார் பின்புறமாக கேமராவிற்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. கைரேகை மட்டுமில்லாமல் கண் கருவிழி மற்றும் முகத்தின் மூலமாகவும் அன்லாக் செய்ய முடியும். முழுவதும் நீர்புகா தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது கேலக்‌ஸி நோட் 8. எனவே நீரினால் பாதிக்கப்படாது.

 சாம்சங்

வசதிகள் அருமை; ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் எப்படி இருக்கும் என யோசிப்பவர்களுக்கு நோட் 7 ல் ஏற்பட்ட பிரச்சினை இதில் ஏற்படாது என உறுதியளிக்கிறது சாம்சங். முந்தைய கேலக்ஸி நோட் 7 பேட்டரி பிரச்சனையால் சாம்சங் நிறுவனம் மொபைல் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்தது. எனவே இதில் பாதுகாப்பு விஷயத்தில் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. பேட்டரியை தயாரிக்கும் முறை முதல் அது மொபைலில் பொருத்தப்படும் வரையிலான வழக்கமான முறையை மாற்றியிருக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி 8 விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

சாம்சங்

பாதுகாப்பு காரணங்களுக்காக நோட் 7 உடன் ஒப்பிடுகையில் பேட்டரியின் அளவை 3500 mAh லிருந்து 3300 mAh ஆக குறைந்திருக்கிறது. ஆனால் மேம்படுத்தப்பட்ட  பிராசஸர் மூலமாக பேட்டரியின் செயல்திறன் அதிகமாக இருக்கும் என்கிறது சாம்சங்.

 

செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் இதன் விலை இந்திய மதிப்பில் 75000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.முந்தைய நோட் மாடல்கள் சந்தையில் பெற்ற மதிப்பை அடியோடு சரித்தது கேலக்ஸ் நோட் 7. அதை கேலக்ஸி நோட் 8 மீட்டெடுக்குமா என்பதும், சாம்சங் இந்தியாவில் மட்டும் தீபாவளி கொண்டாடுமா இல்லை உலகம் முழுதும் கொண்டாடுமா என்பதும் கேலக்ஸி நோட் 8 கையில்தான் இருக்கிறது. 

http://www.vikatan.com/news/information-technology/100575-will-galaxy-note-8-recover-market-value-of-samsung.html

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.