Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயும் ஞாயும் - கவிதைகள்

Featured Replies

யாயும் ஞாயும் - கவிதைகள்

ஓவியங்கள்: ரமணன்

 

p3.jpg

40p11.jpg

பழைய முகப்படக்காரி

ன் பழைய புகைப்படத்தை
பீரோவுக்குள்ளிருந்து கண்டெடுத்தவள்
புதையுண்ட இளமை கிடைத்தவளாய்
உற்றுப் பார்க்கிறாள்.

இப்போதில்லாத நீண்ட தலைமுடியின்
இரட்டை ஜடைப் பின்னலை
விரலால் தடவிப்பார்க்கிறாள்.

தொலைத்ததற்காய் அப்பாவிடம் அடிவாங்கிக்கொடுத்த
அசையாதிருக்கும் வலதுகாது ஜிமிக்கியை
விரலால் சுண்டிவிட்டுச் சிரித்துக்கொள்கிறாள்.

கடன்வாங்கி அணிந்திருந்த
தோழியின் நீலநிறத் தாவணியில்
நட்பின் வாசத்தை நுகர்கிறாள்.

`ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற புகைப்படக்காரன்
தவறவிட்டப் புன்னகையை
நினைவூட்டிக்கொள்கிறாள்.

அழுக்கேறிய தாலிக்கயிறு உரசி உண்டான
கருத்தத் தழும்புகள் அறியா கழுத்தினில்
மெல்லியத் தங்கச்சங்கிலி மினுங்கக் காண்கிறாள்.
 
பழைய முகத்தின் கன்னங்களை வருடி
ஏதோ ஒன்று தட்டுப்பட
பெருமூச்சோடு நலம் விசாரிக்கிறாள்.
`என்னடி நல்லாருக்கியா?’


- ந.கன்னியக்குமார்


40p3.jpg

பறவைகளாலான உயிர்க்கூடு

நின் நேசப் பார்வையை எதிர்கொண்ட
ஐப்பசி அடைமழையின் குளிர்தினமொன்றில்தான்
என்னுள் சிலீர் சிறகடித்தது
அழகு பொருந்திய முதல் தேன்சிட்டு.
தீராத ப்ரியங்கள் என்றென்றைக்கும் என்னிடம்
நெடும்பயணமொன்றின் பின்னிரவில் காதல் குறிப்புணர்த்த 40p2.jpg
என் கரங்களைத் தழுவிய நின் ஸ்பரிசத்திலிருந்து
பறந்து வந்தன குதூகல மைனாக்கள்.
யதேச்சையாக நெஞ்சு படபடக்கப் பகிர்ந்துகொண்ட
நம் முதல் முத்தத்தை நினைவுறுத்திக்
கிரீச்சிடும் பனங்காடைக்கு
உன்னைப்போலவே குறும்பு அதிகம்.
வெவ்வேறு பொழுதுகளின் ஊடல் நிமிடங்களைக்
கரைசேர்த்தக் கரிச்சான்குஞ்சுகளிடம்
அன்பைத் தவிர புகார் எதுவுமில்லை.
கடந்த சித்திரையின் வன்கோடை தினமொன்றில்
எதிர்பார்த்திராத நின் பிரிவின் அம்பு தைத்த
மாடப்புறாவுக்கான ஆறுதல்மொழி பயனற்று
சலசலக்கும் கழிவுநீராகுமென நினைத்தேனில்லை.
அமைதியின் சமநிலை கலங்கும் வண்ணம்
கூக்குரல்களின் ஓலம் அதிகமெடுத்த ஒருநாளில்,
இதயக்கூண்டுடைத்துப் பதறிச் சிதறும் சிறுபறவைகள்
உன் நினைவுகளாக இருந்ததைப்போலவே
என் உயிராகவும் இருந்தது.

 
- தர்மராஜ் பெரியசாமி


40p4.jpg

குடமுழுக்கின் குதூகலம்

காலியான குடத்தை உனது கைகளால்
அள்ளி நிரப்பும்போதும்
நிரம்பிய குடத்தைக் கைகளால் அளைந்து தூக்கிச் செல்லும்போதும் 
உனது விரல்கள்பட்டு விலகிச்செல்லும்
நதியில் கலந்திருப்பது
ஒரு குடமுழுக்குக்குப் பின்பான குதூகலம்.

நீ பின்னிவிட்டதாய்
என் தங்கை சொன்ன அன்று முழுவதும்
அவளது முதுகில் நிகழ்ந்துகொண்டிருந்தது
இடைவிடாத ஒரு நாட்டியாஞ்சலி.

சூடியபடி நீ சுற்றிவருவதைப் பார்க்கும்
உனது விரல்கள் பட்ட வெற்றுக்காம்புகளில்
முகிழ்த்திருப்பது
ஒரு மோனலிசா புன்னகை.

`பொட்டு எங்கடி?’ என்ற
உன் அம்மாவின் கேள்விக்கு
சட்டென நடுவிரலை நெற்றிக்கு மத்தியில் வைத்துத் தொட்டுப்பார்க்கிறாய்
பொட்டென ஒரு கணம் மின்னிமறைகிறது
அழகு மருதாணி பிறையொன்று.

வெள்ளை மாவில்தான்
கோலம் போட்டுச் செல்கிறாய்
மிதிக்காமல் தாண்டிச் செல்வோரின் மனங்களில்
உதிர்கின்றன வண்ணத் தோகைகள்.


- கே.ஸ்டாலின்


40p5.jpg

சாலை அருந்தும் காபி

நீ காபி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்திருக்கிறாய்
உன் குரல் கேட்டவுடனே
கொதிக்கும் தண்ணீரில் தாவிக் குதிக்கின்றன
காபித்தூளும் சர்க்கரையும்
நான் முந்தி நீ முந்தி என.
உன் மேஜைக்கு வந்த காபி தம்ளரிலிருந்தபடி
கவிதை வரிகள் நிறைந்த உன் உதடுகளை
கண்களை எடுக்காது பார்த்துக்கொண்டேயிருக்கின்றன
நீ எடுப்பாய் உதடு குவிப்பாயென.
சூடு தணியட்டுமென நீ அமர்ந்திருக்கும்
அவகாசம் பொறுக்காது அழத்தொடங்கிய
காபியின் கண்ணீர்த்துளிகளால்
சூடு தணிகிறது கொஞ்சம் கொஞ்சமாய்.
உன் உதடுகளை வாசித்த காபி
அங்கே வசிக்கவேண்டுமெனத் தவமிருக்கிறது
மின்விசிறிக் காற்றால் அழுகையைத் துடைத்தபடி.
உன் பட்டுக்கைகளால் தொட்டெடுத்து
அருந்தத் துவங்குகிறாய்
உதடுகளில் பட்டும்படாமல்.
தவமிருந்த காபி நினைத்த வரம் கிட்டாது
அழத் தொடங்குகையில்
நினைக்காத மோட்சம் பெறுகிறது
ஒரு பேரதிர்ஷ்டமென.
காபி அருந்திவிட்டு உணவகத்திலிருந்து
வெளியேறி சாலையில் நடக்கிறாய்.
உணவகம் சர்க்கரையற்ற காபியாகி
கசக்கத் தொடங்குகிறது.
இனி இனிப்பான காபியை
அருந்தத் தொடங்கும் சாலை.


- சௌவி


 

74p1.jpg

ஓவியம்: சிவபாலன்

காதல் ஆசீர்வாதம்

திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிக்க‌
மகிழுந்தில் போய்க்கொண்டிருந்தோம்.
அத்துவானக் காட்டில் திடீரென
மகிழுந்தின் சக்கரம் கடைசி மூச்சை விட்டது.

மரத்தின் நிழலில்
தரிசன நேரத்தைப்பெற
என்ன செய்யலாமென்று
ஆலோசித்துக்கொண்டிருந்த
எங்களைச் சட்டைசெய்யாமல்
கடவுள் முன்சக்கரத்தின் மூச்சை சீராக்கிக்கொண்டிருந்தார்.
கடவுள் நம் காதலை இதைவிட
வேறு எப்படி ஆசீர்வதிக்க முடியும்?

- ராம்ப்ரசாத்


செளமியாவாகிய நான்…

சௌமியா’ என்பது என் பெயர்40p21.jpg
எனினும் வீட்டில் ‘சௌமி’ என்றழைப்பர்.
பள்ளிக்கூடத்தில் சௌமியா விஸ்வநாதன்
எனப் பெயர் பதிவுசெய்யப்பட்டது.
கல்லூரியில் முதலாமாண்டு 
இறுதித் தேர்வின் போதிலிருந்தே
`சௌ’ என்றுதான் அழைத்தார்கள்.
வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து
`எஸ்.வி’ எனப் பெயரின் முதலெழுத்தானேன்.
`அழகி’ `அம்மு’ `செல்லம்’ என
அப்போதைய மனநிலையில்
பெயர் வைத்துக்கொள்ளும் கணவன்,
உயர்திணைக்கும் அஃறிணைக்கும்
இடைப்பட்ட ஒன்றாய்
`இந்தாரு’ என்று அழைக்கும்போது
நான் கங்காருக் குட்டியாகிறேன்
அவன் மடியில்.

- ஆண்டன் பெனி


இதுவும் ஒரு காதல் கதைதான்

நிலையத்திலிருந்து கிளம்ப
அரை மணி இருக்க
காலிப் பேருந்தின் கடைசி இருக்கையில்
ஜோடியொன்று ஒருவருக்கொருவர்
இதழ்களைக் கவ்வியிழுத்திருந்தனர்

அவள் கண்கள் மூடியிருக்க
வேவு பார்த்தபடி மருகி உருண்டுகொண்டோடும்
அவன் கண்களில் என் நிழல் விழ
பதறிப் பிரிந்தனர்

மார்கழியில் பிணைந்துதிரியும் நாய்களுக்கும்
தொந்தரவு தராது நடக்கும் எனக்கா
இந்தப் பழி பாவம்?

திரும்பிப் பார்க்காது உடனிறங்கி
கிளம்ப முக்கால் மணியிருக்கும்
பேருந்தில் மாறிக்கொள்ள யத்தனித்து
பின்வாசல் ஏறுகிறேன்

அதுவும் காலியாகக் கிடக்க
எனக்கு முன் ஏறிய அதே ஜோடி
முன்னிருக்கையில் சரிந்தமர்ந்து
அவசரகதி ஆயத்தமாகின்றனர்

கடவுள் இன்று என்னைக்
கல்லை எடுக்கவைக்காமல்
ஓய மாட்டார் போலும்.

- ஸ்டாலின் சரவணன்

http://www.vikatan.com

15fe

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.