Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கூட்டு எதிர்க்கட்சி அறிவிப்பு

Featured Replies

பிர­த­ம­ர் ரணிலுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை

Ranil2000-164d2e738c9d7262c0abf22f5808e0eb4408202c.jpg

 

கூட்டு எதிர்க்­கட்சி அறிவிப்பு

(எம்.சி.நஜி­முதீன்)

மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள பிணை­முறி மோச­டி­யி­லி­ருந்து அர­சாங்கம் தப்­பித்­துக்­கொள்­வ­தற்கு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பத­வி­யிலி­ருந்து விலக்க முற்­ப­டலாம். எனினும் அதற்கு மாத்­திரம் நாம் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. எனவே பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­ ஆகிய இருவருக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி எதிர்­பார்த்­துள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.பி.ரத்­நா­யக்க தெரி­வித்தார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­ செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பகல் பாரா­ளு­மன்ற கட்­டடத்  தொகு­தியில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பாதுகாக் வேண்­டிய பொறுப்பு பொலி­ஸா­ருக்கு உள்­ளது. எனினும் பொலிஸ் மா அதிபர் தற்­போது சட்­டத்தை அர­சாங்­கத்தின் தேவைக்கு அமை­வாக மாற்­று­கிறார். வடக்கில் ஒரு வித­மா­கவும் தெற்கில் மற்­று­மொரு வித­மா­கவும் சட்டம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. 

மேலும் அர­சாங்கம் வகை­தொ­கை­யின்றி தேசிய வளங்­கைள வெளி­நா­டு­க­ளுக்கு தாரை வார்க்­கி­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு விற்­பனை செய்­வ­தற்­கான ஒப்­பந்தம் எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது. இது மிகவும் பார­தூ­ர­மா­ன­தாகும். ஏனெனில் அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் மிக முக்­கிய இடம் வகிக்­க­வுள்­ளது.

துறை­மு­கங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக அர்­ஜ­ஶண ரண­துங்க பதவி வகித்­த­போது அவர் அவ்­வொப்­பந்­தத்­திற்கு உடன்­ப­ட­வில்லை. எனவே அவரை அவ்­வ­மைச்­சி­லி­ருந்து நீக்­கி­விட்டு தற்­போது தேசியப் பட்­டியல் மூலம் தெரி­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரூ­டாக குறித்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொள்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை அமைச்­ச­ரை­வயின் அனு­மதி பெறப்­பட்­ட­துடன் வெள்­ளிக்­கி­ழமை (இன்று) பாரா­ளு­மன்றில் விவாதம் நடத்தி எதிர்­வரும் சனிக்­கி­ழமை கைச்­சாத்­தி­டு­வ­தற்கும் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். ஏன் இவ்­வாறு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்? ஆகவே அவ்­வு­டன்­ப­டிக்­கைக்கு எதி­ராக நாட்­டு­மக்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரள வேண்டும்.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் இடம்­பெற்­றுள்ள மோச­டிக்­காக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மாத்­தி­ர­மல்­லாது நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்­டி­யுள்­ளது. எனவே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை மட்டும் பதி­வி­யி­ருந்து விலக்கி அர­சாங்கம் குறித்த குற்றச்சாட்டிலிருந்து விலகுவதற்கு எத்தணிக்கலாம். எனினும் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.

ஆகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய இருவருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருவதற்கு கூட்டு எதிர்கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.