Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட்

Featured Replies

வெண்கலத்துடன் விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட்

 

 

தடகள தங்க மகன், உலகின் அதிவேக மனிதன் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் ஓட்டவீரர் உசேன் போல்ட் தனது ஓட்ட வாழ்க்கை வரலாற்றில் லண்டனில் இடம்பெற்ற உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டியின்  100 மீற்றர் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

20645895_10207920484284707_203176883_n.j

உலக மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் நேற்று லண்­டனில் ஆரம்­ப­மா­கின்­றன. உலகின் அதி­க­வேக மனிதன் என்று வர்­ணிக்­கப்­படும் உசைன் போல்ட் மற்றும் மரதன் சம்­பியன் மோ பரா ஆகியோர் இந்தத் தொட­ருடன் தமது தட­கள வாழ்க்­கை­யி­லி­ருந்து ஓய்வு பெறு­கின்­றனர்.

20668436_10207920484244706_249066339_n.j

 

லண்டனில் நடைபெற்றுவரும் உலக தடகள் சாம்பியன்ஷிப் போட்டி 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 9.95 நொடிகளில் எல்லையை கடந்து உசேன் போல்ட் சாதனையை நிகழ்த்திய அதே மைதானத்தில் 100 மீட்டர் ஓட்டம் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இப்போட்டியோடு தனது ஓய்வு பெறப்போவதாக அறிவித்த உசேன் போல்ட் பங்கேற்றார்.

இப்போட்டியில் அமெரிக்க தடகள வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.92 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

 

அமெரிக்க வீரர் க்றிஸ்டியன் கோல்மேன் 9.94 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தனது இறுதி போட்டியில் தங்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த போல்ட் 9.95 நொடிகளில் எல்லையை கடந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

20643661_10207920484404710_160152923_n.j

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற இருக்கும் 4x100 தொடர் ஓட்டப்போட்டி தான் போல்ட்டின் கடைசி போட்டி என்றாலும், தனிநபர் பிரிவில் இதுதான் அவருக்கு கடைசிப்போட்டியாகும்.

 

அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2005ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பதும், தனது கேரியரில் இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடை செயப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிவுகள்:

20668211_10207920484444711_537111559_n.j

1. ஜஸ்டின் கேட்லின் (அமெரிக்கா) 9.92 வினாடிகள்

 

2. க்றிஸ்டியன் கோல்மேன் (அமெரிக்கா) 9.94 வினாடிகள்

 

3. உசேன் போல்ட் (ஜமைக்கா) 9.95 வினாடிகள்

 

4. யோகன் ப்ளேக் (ஜமைக்கா) 9.99 வினாடிகள்

 

5. அகனி சிம்பைன் (தென்னாப்பிரிக்கா) 10.01 வினாடிகள்

 

6. ஜிம்மி விகார் (பிரான்ஸ்) 10.08 வினாடிகள்

 

7. ரீஸ் ப்ரெஸ்காட் (ப்ரிட்டன்) 10.17 வினாடிகள்

 

8. சு பிங்டியன் (சீனா)10.27 வினாடிகள்

 

http://www.virakesari.lk/article/22792

  • தொடங்கியவர்
மின்னல் வீரனின் பின்னடைவுக்குக் காரணம் என்ன?
 

image_9aeabb56d9.jpg

உலக தடகள சம்பியன்ஸின் 100 மீற்றர் ஓட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று அதிர்ச்சியளித்தார் ஜெமெய்க்காவின் உசைன் போல்ட்.

உலகின் மின்னல் வீரர் என்றழைக்கப்படும் உசைன் போல்ட் உலக தடகள சம்பியன்ஸ் தொடருடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

image_99b9adb90c.jpg

இந்நிலையில் அவர் பங்கேற்ற 100 மீற்றர் ஓட்டம் நேற்று (05) லண்டனில் நடைபெற்றது.
இதில் முதல் இரண்டு இடங்களையும் ஐக்கிய அமெரிக்க வீரர்கள் பெற்றுக்கொள்ள உசைன் போல்ட் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

image_e21682a52b.jpgimage_54a7aa3b49.jpg

ஜெஸ்டின் கெட்லின் முதலிடத்தையும் கிறிஸ்டியன் கொல்மன் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

image_d7f88f5c96.jpg

உசைன் போல்ட்டின் ஓட்டத்தைக் காண அரங்கம் முழுதும் இலட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். சர்வதேச ஓட்டப்பந்தயத்தை வெற்றியோடு நிறைவு செய்யவுள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

image_cf1fbb8db5.jpg

இந்நிலையில், போட்டியின் ஆரம்பத்தை வேகமாக தொடராமையே தனது பின்னடைவுக்குக் காரணம் என உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

உசைன் போல்ட் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"உலகின் மிகச் சிறந்த தடகள வீரர் என்பதை நான் நிரூபித்திருக்கிறேன். இன்றைய பின்னடைவு அதில் மாற்றம் எதனையும் செய்துவிடாது என நினைக்கிறேன்.

நான் தனித்துவமானவன் என்பதை கடந்த வருடங்களில் வெளிக்காட்டியிருக்கிறேன். நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட விதமாக செயற்படுகிறேன். என்னைப் போலவே இன்னொருவர் உருவாகுவார் என நினைக்கவில்லை" என்றார்.

இதேவேளை, போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஜெஸ்டின் கெட்லின், உசைன் போல்ட்டுக்கு பணிந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
image_b338f91c24.jpg
அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தளங்களில் பெரிதும் பேசப்படுகின்றன.

உலக தடகள சம்பியன்ஸ் போட்டிகள் லண்டனில் ஓகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.

உசைன் போல்ட் பங்கேற்கும் இறுதி 4X100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மின்னல்-வீரனின்-பின்னடைவுக்குக்-காரணம்-என்ன/44-201891

  • தொடங்கியவர்

காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார்

ஜஸ்டின் காட்லின் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது சரியான முறையல்ல என்று தடகள பெடரேஷனின் சர்வதேச சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

 
காட்லின் வெற்றி சரியான முறையல்ல: ஐ.ஏ.ஏ.எஃப். தலைவர் சொல்கிறார்
 
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இரண்டு பேருக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. ஒருவர் 10 ஆயிரம் மீ்ட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட மோ பரா. இங்கிலாந்தைச் சேர்ந்த இவருக்கு இதுதான் கடைசி உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர். இதனால் இந்த தொடரை வெற்றிகரகமாக முடிக்க எண்ணினார். அதன்படி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 10-வது வெற்றியை பதிவு செய்தார்.

மற்றொருவர் உசைன் போல்ட். உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். 30 வயதாகும் உசைன் போல்ட் கடந்த 2008-ல் இருந்து, அதாவது அவரது 21 வயதில் இருந்து உலகின் அதிவேக மனிதனாக திகழ்ந்து வருகிறார். 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியவர்.

201708062133328287_1_9-gatlin-bolt-s._L_

2009-ம் ஆண்டு முதல் 2015 வரை இந்த மூன்று போட்டிகளிலும் உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் 8 தங்க பதக்கத்தை வென்று உலக சாதனைப் படைத்தவர். 2011-ல் 100 மீட்டர் ஓட்டத்தில் தவறு செய்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் லண்டன் உலக தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முடிசூடா மன்னனாக திகழ்வேன் என்றார்.

ஆனால், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 3-வது இடத்தையே பிடித்தார். அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் முதல் இடத்தை பிடித்தார். இவர் இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடைபெற்றவர்.

உசைன் போல்டுக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காட்லின் வெற்றியால் அது முடியாமல் போனது.

201708062133328287_2_9-gatlin-bolt1-s._L

இந்நிலையில் காட்லின் வெற்றி பெற்றது சரியான முறையல்ல என்று தடகள பெடரேஷன் சர்வதேச சங்கத்தின் தலைவர் செபஸ்டியான் கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செபஸ்டியான் கோ கூறுகையில் ‘‘இரண்டு முறை ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக தடைபெற்ற ஒருவர், நம்முடைய பரிசை பெறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவர் இங்கே பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளார்.

இது சரியான முறையாக தெரியவில்லை. உசைனின் கருத்துக்கள் பொதுப்படையானது என நான் கருதுகிறேன். இந்த பந்தயம் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/06213331/1100884/Justin-Gatlin-win-not-the-perfect-script-says-IAAF.vpf

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

உசைன் போல்ட் ஹீரோ, நான் கெட்டவனா? - ஊடகங்கள் மீது காட்லின் வருத்தம்

 

 
godlin

காட்லின்

ஐஏஏஎஃப் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட்டை வீழ்த்திய ஜஸ்டின் காட்லின் தன்னை ஊடகங்கள் ‘கெட்டவனாக’ சித்தரித்து அதன் மூலம் பரபரப்புப் பயனடைகின்றன என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இருமுறை ஊக்க மருந்தால் தடை பெற்றதால் காட்லின் பெற்ற வெற்றியை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரை கேலி செய்யும் விதமாக கூக்குரல்களை எழுப்பினர்.

இந்நிலையில் உசைன் போல்ட்டை வீழ்த்திய பிறகு காட்லினிடம் நிருபர் ஒருவர், கெட்டவனாக தன்னைக் காட்டிக் கொள்வதில் காட்லினுக்கு பெருமை உள்ளது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த காட்லின் “என்னை கெட்டவனாகச் சித்தரிப்பதற்கு நான் என்ன செய்து விட்டேன்?

நான் யாரைப்பற்றியாவது கெடுதலாக ஏதாவது சொன்னேனா? அல்லது எனது உடல் செய்கைகள் அசைவுகள் மோசமாக, அசிங்கமாக உள்ளதா? நான் அனைவருக்கும் கை கொடுக்கிறேன். நான் அடுத்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன், அவர்களின் நல்லதிர்ஷ்டத்திற்காக வேண்டுகிறேன். இவையெல்லாம் நான் கெட்டவனாக எனக்கு என்னை உணர்த்தவில்லை.

அதாவது உசைன் போல்ட் ஹீரோ, அவரை அப்படிச் சித்தரிக்க என்னை கெட்டவனாக சித்தரிக்க வேண்டும், அப்படித்தான் ஊடகங்கள் செயல்படுவதாக நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும் ரசிகர்கள் கேலி செய்தது பற்றி காட்லின் கூறும்போது, “எனக்கு அதைப் புரிந்து கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன். 2010 முதல் 15 வரை அவர்கள் என்னை கேலி செய்யும் விதமாக குரல் எழுப்பவில்லை. பகைமை புரிகிறது ஆனால் கசப்பான பகைமை அல்ல இது. நான் எப்பவுமே உசைன் போல்ட்டை மதிக்கிறேன். எப்பவும் யார் வெற்றி பெற்றாலும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வோம்.

நான் சமூகப்பணி செய்தேன், குழந்தைகளுக்கு உத்வேகம் அளித்தேன். அதனால்தான் விளையாட்டுக்குத் திரும்பினேன், இந்தக் காரணங்களுக்காகத்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

மற்றவர்களை ஊக்குவிக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தை விட என்னை கேலி செய்யும் ஆரவாரங்கள் அதிக சப்தமெழுப்பின என்பது வருத்தம்தான். பந்தயம் முடிந்தவுடன் உசைன் போல்ட் முன்னால் சிரம் தாழ்ந்தேன், மண்டியிட்டேன். அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். அவர் ஏகப்பட்டது செய்து விட்டார், நான் பல போட்டியாளர்களில் ஒருவன் அவ்வளவே.

நான் முதல் முறையாக எனக்காக ஓடவில்லை. எனக்கு என் மீதே நம்பிக்கையில்லாமல் இருந்த காலங்களில் என்னால் முடியும் என்று நம்பியவர்களுக்காக முதன் முறையாக ஓடினேன். அவர்களைப் பற்றி சிந்தித்ததால் என் மீதான அழுத்தம் இல்லாமல் ஓடினேன்.

இவ்வாறு கூறினார் காட்லின்.

http://tamil.thehindu.com/sports/article19443417.ece?homepage=true

  • தொடங்கியவர்

உசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பயணம் (9.58 வினாடிகள்) வரைபடங்களில்

Usain Bolt

அனைத்து காலகட்டங்களிலும், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்று உலகெங்கும் பரவலாக உசைன் போல்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தற்போது லண்டனில் நடைப்பெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பிறகு ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஓய்வுபெறவுள்ள நிலையில், அவர் ஏன் ஒரு சாதனையாளராக கருதப்படுகிறார் என்பதையும், அவர் எவ்வாறு சாதனை நிகழ்த்தினார் என்பதும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

1

உசைன் போல்ட் வரலாற்றின் மிக அதிக வேக மனிதர் என்று கருதப்படுகிறார். 100 மீட்டர் ஒட்டப் பிரிவில், கடந்த காலங்களில் மூன்றுமுறை புதிய சாதனைகள் நிகழ்த்தியுள்ளார் போல்ட்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில் Image caption9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

கடந்த 2008 மே மாதத்தில் நடந்த போட்டியில், தனது சக போட்டியாளர் அஸாஃபா பவலின் 9.74 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து 9.72 வினாடிகளில் பந்தய தூரத்தை போல்ட் கடந்தார்.

அதே ஆண்டில் நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில், 9.69 வினாடிகளில் பந்தய தூரத்தை போல்ட் கடந்தார். பின்னர், தனது இந்த சாதனையையும் முறியடித்த உசைன் போல்ட், 2009-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 9.58 வினாடிகளில் இலக்கை அடைந்து புதிய சாதனை படைத்தார்.

அதே வேளையில், கடந்த 1912-இல் விளையாட்டு உலகின் புதிய அதிகார அமைப்பான ஐஏஏஎஃப் அமைப்பால், 10.6 வினாடிகளில் பந்தய தூரத்தை அமெரிக்க வீரர் டொனால்ட் லிப்பின்காட் எட்டியது முதல்முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

2

மற்ற போட்டியாளர்களுக்கும், உசைன் போல்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

3

100 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமல்ல, 200 மீட்டர் ஒட்டப் போட்டியிலும், உசைன் போல்ட் சிறப்பாக பங்களித்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை உசைன் போல்ட் செய்திருப்பது மற்றுமொரு சிறப்பு.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டியில், 200 மீட்டர் ஒட்டப்பிரிவில், அமெரிக்க வீரர் மைக்கேல் ஜான்சனின் 12 ஆண்டு சாதனையாக இருந்த 19.32 வினாடிகள் என்பதை முறியடித்து, 19.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து உசைன் போல்ட் புதிய சாதனை படைத்தார்.

இதற்கு அடுத்த ஆண்டில் பெர்லினில் நடந்த போட்டியில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டிய போல்ட் , மேலும் ஒரு சாதனை படைத்தார்.

4

நம்பமுடியாத அளவுக்கு, எப்போதும் சீரான மற்றும் அதிவேக பாணி கொண்டவர் உசைன் போல்ட்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

5

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

தனது நாட்டவரான யோஹான் பிளேக்கால், 2012-ஆம் ஆண்டின் ஜமைக்கா தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளால் தோற்கடிக்கப்பட்டது மட்டும்தான், 2008-ஆம் ஆண்டு முதல், 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் உசைன் போல்ட் தோல்வியுற்ற ஒரே போட்டியாகும்.

6

நாம் நினைத்து பார்ப்பதைவிட வேகமாக ஓடக்கூடியவர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதல் 10 மீட்டர் தூரத்தை 0.81 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் உசைன் போல்ட்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

7

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

எவ்வாறு இவ்வளவு சாதனைகளை உசைன் போல்ட் நிகழ்த்துகிறார்?

ஜர்னல் ஆஃப் ஹீமன் கைனடிகிஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 6 அடி 5 அங்குலம் என்ற அவரது அசாத்திய உயரம் மற்ற போட்டியாளர்களைவிட அவரை சாதனை படைக்க உதவுவதாக குறிப்பிட்டுள்ளது.

8

உலகின் அதி வேக மனிதர் உசைன் போல்ட் என்பதற்கு காரணம் என்ன ? உசைன் போல்டின் இந்த மின்னல் வேகத்துக்கு காரணமென்ன? விளக்குகிறது இந்த வரைபடம்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

9

ஆரம்பத்தில் சற்றே தாமதமாக ஆரம்பித்த தருணங்களிலும், அசாத்திய மற்றும் சீரான வேகம் கொண்டு சமாளித்து வெற்றி பெற்றுள்ளார் உசைன் போல்ட்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

9.58

எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓட்டப்போட்டியை வென்று "தடகள ஜம்பவான்" என்ற பெருமையை எளிதாக வென்றார்.

100 மீட்டர், 200 மீட்டர், மற்றும் 4x100 தொடர் ஓட்டம் ஆகிய மூன்றிலும் பெய்ஜிங் 2008, லண்டன் 2012, ரியோ 2016 என கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் போல்ட் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

9 முறை உலக சாம்பியனின் சாதனை பயணம் வரைபடங்களில்

சமூகவலைத்தளங்களில் ஏரளாமான மக்கள் உசைன் போல்ட்டை பின்தொடர்கின்றனர். ஓய்வுபெற்ற பின்னர் உசைன் போல்ட் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.

அண்மையில், ஐ ஏஏஎஃப் அமைப்பின் தலைவர் லார்ட் கோ பிபிசியிடம் தெரிவித்தபடி, ''உசைன் போல்டின் ஆளுமையை நாம் கண்டிப்பாக இழப்போம். ஆளுமையுள்ள வீரர்களை நாங்கள் எப்போதும் விரும்புவோம்'' என்று தெரிவித்திருந்தார்.

விளையாட்டு உலகம் உசைன் போல்ட்டையும், களத்தில் அவரது ஆளுமையயும் நிச்சயமாக இழக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

http://www.bbc.com/tamil/sport-40888880

  • தொடங்கியவர்

விடைபெற்றார் மின்னல் வீரர் உசேன் போல்ட்!

 

உலகின் அதிவேக மனிதன் உசேன் போல்ட் தன் இறுதிப்போட்டியான 4x100 தொடர் ஓட்டத்தில்  காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே நின்றுவிட்டார். ஆனாலும், உலகத் தடகளத்தில் போல்ட் நிகழ்த்திய சாதனை இனி யாராலும் தொட முடியாத உச்சத்தில் உள்ளது.

உசேன் போல்ட்

`மின்னல் மனிதன்’ உசேன் போல்ட் தன்னுடைய ஓய்வை அறிவித்துவிட்டார். இனித் தடகள வீரர்கள் அச்சம்கொள்ளத் தேவையிருக்காது. உசேன் போல்ட்டின் பாதம் படுமா என ஏங்கிக்கொண்டிருந்த தடகள ட்ராக்குகள் வருத்தப்படலாம். லண்டனில் நடந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி ஓட்டத்தையும் ஓடி முடித்துவிட்டார் உசேன். முகமது அலியைப்போல, மைக்கேல் ஜோர்டனைப்போல உசேனுக்கும் கடைசிப்போட்டித் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. இருந்தும் இனி ஓட்டப்பந்தய வரலாறு உ.மு, உ.பி என்றே எழுதப்படும். காரணம் உலகத் தடகள அரங்கில் இந்த நெட்டைப்பையன் உண்டாக்கியிருக்கிற அதிர்வலைகள் அத்தகையவை! 

அந்த நூறுமீட்டர்களை ஓடிக்கடக்க கோடி மீட்டர்களை ஓடி ஓடி பயிற்சி பெற்றவை போல்ட்டின் கால்கள். செய்கிற எதையுமே நம்மையும் பிறரையும் மகிழ்விப்பதற்காகச் செய்ய ஆரம்பிக்கும்போது அது தன் நோக்கத்தில் முழுமையை எட்டிவிடுகிறது. ‘`நான் விளையாட்டு வீரன் அல்ல; நான் ஒரு என்டர்டெயினர். மக்களை மகிழ்விப்பவன். அதற்காகத்தான் ஓடுகிறேன்.’’ இவர்தான் உசேன்போல்ட். மக்களை பரவசத்தில் ஆழ்த்திய பாதங்கள் இனியாவது ஓய்வெடுக்கட்டும்.

http://www.vikatan.com/news/world/98970-usain-bolt-bids-farewell.html

  • தொடங்கியவர்

காயமடைந்து ஓடமுடியாமல் கண்ணீருடன் போல்ட் ஓய்வு

 
காயமடைந்து ஓடமுடியாமல் கண்ணீருடன் போல்ட் ஓய்வு
 

உலக சம்பியன்ஷிப் தடகளத் தொடரில், காயம் காரணமாக ஓடமுடியாமல் கண்ணீருடன் விடைபெற்றார் உசைன் போல்ட்.
உலக தடகளத் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

4 வீரர்கள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சலோட்டம் இன்று அதிகாலை (இலங்கை நேரப்படி) நடைபெற்றது. ஜமைக்க அணியில் போல்ட்டும் இடம்பெற்றிருந்தார். இந்த ஓட்டமே பன்னாட்டு அரங்கில் போல்ட்டின் கடைசி ஓட்டம் என்பதால் அவருக்கு விடைகொடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

100 மீற்றர் ஓட்டத்திலும் தடுமாற்றம் காட்டிய காரணத்தால் இந்தப் போட்டியிலாவது சாதிப்பாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அஞ்சலோட்டத்தின் கடைசி 100 மீற்றர் பகுதிக்காக (நான்காவது வீரர்) கோலைக் கையில் வாங்கினார் போல்ட். அவர் தனது பாணியில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின் போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் தசைக் கிழிவு ஏற்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து ஓடமுடியாமல் களத்தில் விழுந்தார்.

காயமடைந்த வீரர்களைக் காவும் சக்கர நாற்காலி கொண்டுவரப்பட்ட போதிலும், போல்ட் அதைத் தவிர்த்து எழுந்து நடந்து சென்றார்.

athletics-world-m100relay.jpgUsain-Bolt-injured.jpgusain-bolt-injury-afp-650_650x400_715025

 

http://newuthayan.com/story/19040.html

  • தொடங்கியவர்

யானைக்கும் அடி சறுக்கும் ! உசைன் போல்ட்டுக்கு நடந்தது என்ன ? தங்கமில்லாது முடிந்தது அத்தியாயம்

 

 

உலகின் சிறந்த தடகள வீரரான ஜமைக்காவின் அதிவேக மனிதன் உசைன் போல்ட் தனது இறுதி சர்வதேச போட்டியில் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென கீழே வீழ்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

bolt-usain__1_.jpg

இலண்டனில் இடம்பெறும் சர்வதேச தடகள சம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட்க்கான இறுதிப் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது.

 

இதன்போது, தனது இறுதி 4x100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இறுதியில்  உசைன் போல்ட் ஓடிக் கொண்டிருந்த போது திடீர் என கிழே வீழ்ந்துள்ளார்.

bolt-down.jpg.size.custom.crop.1086x654_

இதன் காரணமாக தனது இறுதிப் போட்டியிலும் தடகள வாழ்வின் இறுதி சர்வதேசப் போட்டியிலும் தங்கம் வெல்ல விரும்பிய உசைன் போல்ட்டின் கனவு இறுதியில் நிறைவேறாமல் போயுள்ளது.

usain-bolt-7593.jpg

கடந்த காலங்களில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசைன் போல்ட் , 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக்க பதக்கத்துடன் தனது சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விடை பெற்றார்.

a2336ded3aeef38d1b6fb9a4853545b9__1_.jpg

usain-bolt-injury-afp-650_650x400_415025

 

 

 

http://www.virakesari.lk/article/23116

  • தொடங்கியவர்

போல்ட் காயத்திற்கு டி.வி. செய்த மாயமே காரணம்: காட்லின் சாடல்

 

4x100 மீட்டர் ஓட்டப் போட்டியின்போது உசைன் போல்டிற்கு ஏற்பட்ட காயத்திற்கு டிவி செய்த மாயமே காரணம் என காட்லின் குற்றம்சாட்டியுள்ளார்.

 
போல்ட் காயத்திற்கு டி.வி. செய்த மாயமே காரணம்: காட்லின் சாடல்
 
லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட் 4x100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார். இப்போட்டிதான் இவர் கலந்து கொள்ளும் கடைசி தடகள போட்டி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து உசேன் போல்ட் பங்கேற்கும் இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. உசைன் போல்ட்டின் கடைசி போட்டி என்பதால் அரங்கம் முழுவதும் அவரது ரசிகர்கள் கூடியிருந்தனர்.

201708131645238277_1_2-Bolt001-s._L_styv

இந்நிலையில் போட்டியின்போது 4-வது வீரராக ஓடிய உசைன் போல்ட் தனது பாணியில் கடைசி நேரத்தில் வேகமெடுத்து தனக்கு முன் ஓடுபவரை முந்தும் முயற்சியின்போது எதிர்பாராத விதமாக அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியில் ஓட முடியாமல் டிராக்கிலேயே விழுந்தார். இதனால் உசைன் போல்ட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

201708131645238277_2_2-Bolt002-s._L_styv

உசைன் போல்ட் காயத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் காக்க வைத்ததே காரணம் என்று உசைன் போல்ட் உடன் ஓடிய சக வீரர் பிளேக் குற்றம்சாட்டியுள்ளார். இதை அமெரிக்க வீரர் காட்லின் ஒத்துக் கொண்டுள்ளார்.

4x100 மீட்டர் ஓட்டத்திற்கு முன்பு காத்திருந்தது குறித்து யோகன் பிளேக் கூறுகையில் ‘‘உசைன் போல்ட் மிகவும் குளிர்ச்சான நிலையில் இருந்தார். நமது ஓட்டத்திற்கு முன் 40 நிமிடங்கள் மற்றும் இரண்டு பதக்கம் வழங்கப்பட வேண்டியதற்காக காக்க வைத்திருப்து முட்டாள்தனமானது என உசைன் போல்ட் என்னிடம் தெரிவித்தார்’’ என்று கூறியிருந்தார்.

இந்த கருத்தை ஆமோதித்துள்ள காட்லின் ‘‘இதற்கு தொலைக்காட்சியின் திட்டமிடல் தொடர்பான மாயம்தான் காரணம் என கருதுகிறேன். ஒவ்வொருவரும் தங்களது பார்வையாளர்களை தருப்திப்படுத்த சரியாக திட்டமிட வேண்டியுள்ளது.

201708131645238277_3_2-Bolt004-s._L_styv

ஆனால், என்னை பொறுத்தவரையில் நான் நினைப்பது என்னவென்றால், நாங்கள் ஸ்டேடியத்தில் உடைகள் இல்லாமல் நீண்ட நேரம் தாமதப்படுத்தி வைக்கப்ட்டிருந்தோம். அங்கு சற்று அனலாக இருந்தது. வியர்வை எல்லாம் வெளியேறியதால் உடல் சூட்டை நான் இழந்துவிட்டேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/13164522/1102158/Justin-Gatlin-blames-TV-scheduling-for-Usain-Bolt.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.