Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலியில் கிடைத்த தமிழ்க்கல்

Featured Replies

காலியில் கிடைத்த தமிழ்க்கல்

-அன்பரசு-

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ணுர்நுNபுர்நு) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினார்.

புத்தர், சிவன், அல்லா ஆகிய தெய்வங்களுக்குச் சம அளவில் தோத்திரம் கூறும் கற்பலகை இத்தெய்வங்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் பற்றியும் கூறுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் 1,000 தங்க வில்லைகள், 5,000 வெள்ளி வில்லைகள், எண்ணிக்கை குறிப்பிடப்படாத பட்டுத் துணிச்சுருள்கள், தங்கச் சாடிகள், நறுமண எண்ணெய்கள் அளவுப்பாகுபாடின்றி வழங்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சீனா பற்றிய உலகளாவிய விழிப்பு இன்று ஏற்பட்டுள்ளதால் இந்தக் கல் தொடர்பான ஆய்வுகளும் அதை நாட்டியவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றுத் தேடல்களும் தொடங்கிவிட்டன. கல்லின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதை கொழும்பு மியூசியத்தில் வைத்துள்ளனர். இப்போது அங்கு அதைப் பார்க்க முடியும். கல்லின் பிரதி காலித் துறைமுகத்திலுள்ள தேசிய கடலியல் மியூசியத்தில் காட்சிப்படுத்;தப்பட்டுள்ளது.

கடற்பயணங்கள் பற்றிய வரலாற்று நூல்கள் செங்கீ என்ற கடற் தலைவன் உண்மையில் இருந்தாரா? என்ற ஐயப்பாட்டை எழுப்புகின்றன. மேற்கு நாடுகளின் சாதனைகளை மாத்திரம் வரலாறாகக் கொள்வோர் செங்கீ பற்றிய செய்தியை அசட்டை செய்துள்ளனர். இன்று நிலைமை மாறிவிட்டது. காலியில் கிடைத்த கல் அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க உதவுகிறது. அத்தோடு சீன மொழிக்கு அடுத்த இடத்தில் தமிழ் மொழி இடம்பெறுவது இன்னுமோர் உண்மையை உணர்த்துகிறது. இந்துமா கடலின் வர்த்தக மற்றும் கடலோடிகள் மொழி தமிழ் என்பது உறுதியாகிறது. சிங்களப் பேரினவாதிகளால் இதைச் சீரணிக்க முடியவில்லை. ஒரு மரம் தோப்பாக முடியுமா, இக்கல்லின் மூலம் பெரிதாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் சாதிக்கின்றார்கள்.

கறுப்பர்கள் ஆட்சி செய்யும் தென்னாபிரிக்க நாட்டுப் பாராளுமன்றக் கட்டிடத்தினுள் 2002 நவம்பர் 18 ஆம் நாள் கி.பி. 1389 இல் சீனாவின் மிங் சாம்ராச்சியம் தயாரித்த உலக வரைபடப் பிரதி வைபவ ரீதியாகத் தொங்க விடப்பட்டது. இதில் கிழக்கு, தெற்கு ஆபிரிக்கா மாத்திரமல்ல, மேற்கு ஆபிரிக்காவின் தென்பகுதியும் தெளிவாகத் தெரிகின்றன. இந்த வரைபடத்தைத் திறந்து வைத்துப் பேசிய தென்னாபிரிக்கப் பாராளுமன்றச் சபாநாயகர் பிறீனி ஜின்வாலா (குசுநுNநு புஐNறுயுடுயு) 'வரைபடங்கள், பாறைகளில் பொறிக்கப்பட்ட கலைகள் உள்ளிட்ட எங்கள் நம்பிக்கை மரபுகளுக்கு அப்பால் நாம் செல்லவேண்டும்" என்று கூறினார். போத்துக்கேயர்கள் ஆபிரிக்காக் கண்டத்தின் மேற்குக் கரைகளைத் தொடுவதற்குப் பல தசாப்தங்கள் இருக்கையிலேயே தா மிங் குன் ஈ தூ என்ற சீன உலக வரைபடம் தயாரிக்கப்பட்டுவிட்டது.

போத்துக்கேய மாலுமியான பாத்த லோமியூடயஸ் (டீயுசுவுர்ழுடுழுஆநுறு னுஐயுளு) 1487 இல் நன்நம்பிக்கை முனை என்றழைக்கப்படும் ஆபிரிக்கக் கண்டத்தின் கீழ்ப் பகுதியைக் கடல் மார்க்கமாகக் கடந்தார். அவர் திட்டமிட்டு இப்பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவருடைய கப்பலை கடற்புயல் தள்ளிச் சென்றது. முனைக்கு அப்பால் அவர் செல்லத் துணியவில்லை. சரியாகப் பத்து வருடங்களுக்குப் பின் வஸ்கொடகாமா என்ற போத்துக்கேயர் இந்த முனையைக் கடந்து இந்தியாவின் மேற்குக் கரையை அடைந்தார். பாத்தலோமியூ டயசுக்கு முன்பாக சீனக் கடலோடிகள் முனையைக் கடந்துவிட்டார்கள் என்பதற்கு மேற்கூறிய வரை படம் தவிர்ந்த பிற சான்றுகளும் கிடைத்துள்ளன. தென்னாபிரிக்காவின் லிம் போப்போ மாகாணத்தில் சீன மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் முனைத்தரைப் பகுதியிலுள்ள பாறைகளில் சீன உடலமைப்புள்ள உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்கப் பாராளுமன்றத்தில் தொங்க விடப்பட்ட கணனி முறையில் பிரதியாக்கம் செய்யப்பட்ட வரைபடம் 12 அடி உயரம் 12 அடி அகலம் கொண்டது. இப்போது வழக்கொழிந்த சீன மஞ்சு மொழியில் அதில் இடப்பெயர்களும் பிற குறிப்புக்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தின் மூலப்பிரதி பட்டுச்சேலையில் வரையப்பட்டுள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள காப்பகத்தில் பூட்டிய கதவுக்குப் பின்னால் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 1389 ஆம் ஆண்டிற்குரியது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். 1320 ஆம் ஆண்டிற்குரிய இது போன்ற இன்னுமோர் வரைபடம் இருந்திருக்கிறது. அது இப்போது இல்லை. ஆனால், 1389ஆம் ஆண்டின் படம் 1320 ஆம் ஆண்டுப் படத்தின் பிரதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் காவின் மென்சீஸ் சீனக் கடற்தலைவன் செங்கீ பற்றிய ஆராய்ச்சியைத் தனது வாழ்க்கைப் பணியாகக் கொண்டுள்ளார். காவின் மென்சீஸ் (புயுஏஐN ஆநுNணுஐநுளு) பிரிட்டிஷ் கடற்படையில் நீர்மூழ்கிக் கப்பல் பொறியியலாளராக இருந்து இளைப்பாறியவர்.

1421 என்று தலைப்பிட்ட செங்கீ பற்றிய ஆராய்ச்சி நூலை காவின் மென்சீஸ் வெளியிட்டுள்ளார். 1421இற்கும் 1423இற்கும் இடைப்பட்ட காலத்தில் செங்கீ பூமியைச் சுற்றிக் கடற்பயணம் மேற்கொண்டார் என்ற தகவல் இந்த நூல் மூலம் எமக்குக் கிடைக்கிறது. அவர் சென்ற கடற்பாதைகள், தொட்ட இடங்கள் அனைத்தையும் மென்சீஸ் பார்வையிட்டுள்ளார். வட அமெரிக்க, மிசிசிப்பி நதிக் கரையில் சீனர்கள் விட்டுச் சென்ற சிறிய படகுகளைத் தான் கண்டதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் கலிபோர்னிய மாநிலத்தில் குடியேறிய சீனர்களின் பிற சந்ததியினர் இன்னும் அங்கிருப்பதாக இந்நூல் அறியத்தருகிறது. வேறு பல சான்றாதாரங்களும் அதில் காணப்படுகின்றன.

உலக வரலாறு பற்றிய பல கருதுகோள்களை மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாடப் புத்தகங்களில் தரப்பட்ட தரவுகளும் கேள்விக்குரியதாக அமைகின்றன. போத்துக்கேயரான மாலுமி பேர்டினன்ட் மகலன் (குநுசுனுஐNயுNனு ஆயுபுநுடுடுயுN) 1519இற்கும் 1522இற்கும் இடைப்பட்ட காலத்தில் பூமியைச் சுற்றிக் கடற்பயணம் மேற்கொண்டார் என்று படித்துள்ளோம். அவர் உயிரோடு நாடு திரும்பவில்லை. பிலிப் பைன்ஸ் தீவு ஒன்றில் கொல்லப்பட்டார். அவருக்குச் சொந்தமான கப்பல்களில் ஒன்று மாத்திரம் 18 மாலுமிகளோடு நாடு திரும்பியது என்றும் அறிகிறோம்.

இப்பயணம் மூன்று வருடங்கள் எடுத்தது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்பாக செங்கீ பூமியைச் சுற்றி விட்டார் என்று காவின்மென்சீஸ் அடித்துக் கூறுகிறார்.

தென்னாபிரிக்க நிர்வாகத் தலைநகர் பிறெற்ரோறியவின் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவைச் சேர்ந்த கரன் ஹரிஸ் (முயுசுநுN ர்யுசுசுஐளு) சீனர்கள் உலகம் சுற்றியிருந்ததால் அவர்களுடைய எச்சங்கள் ஏன் பரவலாகக் காணப்படுவதில்லை என்பதற்கு விளக்கம் கூறுகிறார். 'அவர்கள் தமது இறந்தவர் உடலை சீனாவுக்கு எடுத்துச் சென்று அங்கு தான் புதைப்பார்கள். இது அவர்களது பாரம்பரியம்" என்கிறார் கரன் ஹரிஸ். செங்கீயின் உத்தியோகபூர்வ வரலாற்று நூலைச் சீனா வெளியிட்டுள்ளது. அதில் பிரான்சும் போத்துக்கல்லும் இணைந்த பிரங்கா (குசுயுNஊயு) பற்றியும் ஒல்லாந்து நாடு பற்றியும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஒல்லாந்து நாட்டவர்களின் உடலமைப்பு விபரங்களும் அதில் உண்டு.

சீனாவின் மேற்கு மாகாணம் யூனானில் 1371 ஆம் ஆண்டில் செங்கீ பிறந்தார். அவருடைய இயற்பெயர் மாகீ (ஆயுர்நு) மொங்கோலியர்களை அழித்தொழிப்பதற்காக அப்பகுதிக்கு வந்த மிங் சீனப் பேரரசின் படைகள் சிறுவன் மாகீயை உயிரோடு பிடித்துச் சென்றன. அப்போது அவனுக்கு வயது பதினொன்று. அவன் மிங் அரண்மனையில் சேர்க்கப்பட்டான். அப்போதைய சீன வழக்கப்படி அவனுடைய ஆண் உறுப்பு விதை அகற்றப்பட்டது. மிங் அரசகுமாரன் சூடீயின் ஆப்த நண்பனாகவும் மெய்ப்பாதுகாப்பாளனாகவும் மாகீ வளர்ந்தான். சூடீ சக்கரவர்த்தியானவுடன் தனது நம்பிக்கைக்கு உரிய நண்பனுக்கு செங்கீ என்ற பட்டப் பெயரை வழங்கினான். செங்கீ இஸ்லாம் மதத்தினன். அவர் இறுதிவரை இஸ்லாம் மதத்தவராக வாழ்ந்தார். ஒரு கடற் பயணத்தின்போது 1433 இல் கடலில் காலமானார். அவர் விரும்பியபடி உடல் கடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவருடைய விதையின் புதைகுழிமேல் கட்டப்பட்ட நினைவாலயத்தைச் சீனாவில் இன்றும் காணலாம். அவர் இறக்கும்வரை அவருடைய விதை பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருந்தது.

குபிளாய்கான் மொங்கோலிய வம்சத்தினரின் ஆட்சி கி.பி. 1368இல் முடிவுக்கு வந்தது. மிங் வம்சத்தினரின் புகழ்பூத்த ஆட்சி 1368இல் தொடங்கி 1644 வரை நீடித்தது. இது சீனாவின் பொற்காலம். சீனாவின் விரிவைக்காட்டவேண்டிய தேவை மிங் பேரரசிற்கு ஏற்பட்டது. தனது வலுவை வெளிக்காட்ட மிகப் பிரமாண்டமானதொரு கடற்கலத் தொகுதியை சீனா நிர்மாணித்தது. அதற்குத் தலைவனாக செங்கீ நியமிக்கப்பட்டார். அவர் தனது முதற் பயணத்தை 1405இல் தொடங்கினார். அவர் மொத்தம் ஏழு பயணங்களை மேற்கொண்டார். இந்துமா கடலில் சீன மேலாதிக்கத்தை அவர் உறுதியாக நிலைநாட்டினார். போர் வீரன், கடற்தளபதி, இராசதந்திரியாக இருபத்தியெட்டு வருடகாலம் அவர் சீனக் கடல் வலுவை நிறுவினார்.

1405 இல் சீனக் கடலில் இறக்கிய கடற்கலத் தொகுதியில் 300 கலங்கள் இடம்பெற்றன. இதில் 30,000 பேர் பயணித்தனர். மனித வரலாற்றின் மிகப்பெரிய கடற்கலத் தொகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. செங்கீயின் தலைமையில் இயங்கிய கொடிக் கப்பல் 130 மீற்றர் நீளம், 60 மீற்றர் அகலம் கொண்டது. அதில் ஒன்பது பாய்கள் பொருத்தப்பட்டன. முற்றுலும் தேக்கு மரத்தால் கட்டப்பட்ட அந்தக் கப்பலைப் போல் பிறிதொரு நாடும் எக்காலத்திலும் அமைக்கவில்லை. செங் கீ மேற்கொண்ட ஏழு பயணங்களிலும் சுற்றிய தூரம் 300,000 கி.மீ. இது 7.5 தடவை பூமியைச் சுற்றிவரும் தூரமாகும்.

மிதக்கும் நகரங்கள் என்று வர்ணிக்கப்பட்ட இந்தச் சீனக் கப்பல்கள் போர் வீரர்கள், மாலுமிகள், மருத்துவர்கள், சமையற்காரர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சோதிடர்கள், வர்த்தகர்கள், நாட்குறிப்பு எழுதுபவர்கள், மதகுருமார்கள், பாலியல் தேவைக்கு பெண்கள் போன்றவர்களை ஏற்றிச் சென்றன. ஒரு கப்பல் நன்நீர் சுமப்பதற்கு ஒதுக்கப்பட்டது. இன்னுமொன்று மண் நிரப்பப்பட்டு பயிர்ச்செய்கைக்கு விடப்பட்டது. செங் கீயின் சுற்றுப் பயணங்கள் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய விவகாரங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தின. சுமாத்திரத் தீவு மீது தாக்குதல் நடத்திய சீனச் சார்ப்பு அரசனை அவர் நியமித்தார். சிறிலங்காவுக்கு வருகை தந்தபோது புத்தரின் பல்லைத்தரும்படி செங்கீ கட்டளையிட்டார். மறுக்கப்பட்டதற்குத் தண்டனையாக அழககோனாறா என்ற சிங்கள அரசனையும் குடும்பத்தினரையும் சீனாவிற்குக் கொண்டு சென்று சிறைவைத்தார். அதன் பின் சிறிலங்கா சீனாவிற்கு திறை செலுத்தியது. கேரளத்தில் இன்று பாவனையிலிருக்கும் மீன்பிடி வலைகளின் மாதிரிகள் செங் கீயின் தொடர்பை வலியுறுத்துகின்றன. அவை சீனா வலைகள் என்று அழைக்கப்படுகின்றன.

மிங் சாராம்சிய முடிவோடு சீனா கடலாதிக்கத் திட்டங்களைக் கைவிட்டது. அதன் வரலாற்றையும் மாற்றிவிட்டது. உள்நாட்டுக் குழப்பங்கள் ஆரம்பித்ததால் சீனாவின் கவனம் உள்நாட்டோடு நின்றுவிட்டது. செங் கீ காலம்போல் சீன வரலாறு தொடர்ந்திருக்குமானால், முழு உலகும் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். இப்படி இன்றைய மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் எழுதியும், பேசியும் உள்ளனர். வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல.

நன்றி- தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.