Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய

Featured Replies

”நேற்று திருமணம், இன்று போட்டி” ; தோற்றது கவலையே அகில தனஞ்சய

 

thumb_large_Akila-Dananjaya1.jpg

கண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்ற போட்­டியில் இந்­திய அணி வென்­றி­ருந்­தாலும் ஆட்ட நாயகன் விருதை வென்­றது இலங்கை அணியின் மந்­திர சுழற்­பந்­து­வீச்­சாளர் அகில தனஞ்­ச­யதான். காரணம் முக்­கி­ய­மான கட்­டத்தில் சீரான இடை­வெ­ளியில் ரோஹித் ஷர்­மாவில் ஆரம்­பித்த விக்கெட், விராட் கோஹ்லி, ராகுல், பாண்­டியா, ஜாதேவ், அக்ஸர் பட்டேல் வரை நீண்­டது. 

 

இலங்கை - இந்­திய அணிகள் மோதிய இரண்­டா­வது ஒருநாள் போட்டி கண்டி பல்­லே­க­லயில் நேற்று நடை­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் இந்­திய அணி 3 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. 

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 236 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. 

இப் போட்டியில் இலங்கை அணியின் அகில தனஞ்­சய தனது மாயா­ஜால சுழற்பந்­து­வீச்சில் 6 விக்­கெட்­டுக்­களை கைப்­பற்றி ஒட்­டு­மொத்த கிரிக்கெட் ரசி­கர்­க­ளையும் தன்­பக்கம் திருப்­பினார்.

ஒரு­புறம் விக்­கெட்­டுகள் விழுந்­தாலும்  டோனியும், புவ­னேஷ்வர் குமாரும் போராட்­டத்தை தொடர்ந்­தனர். இந்த ஜோடி கடைசி வரை நிலைத்து நின்று விளை­யாடி இலக்கை எட்­டி­யது. 45ஆவது ஓவரில் இந்­தியா 7 விக்­கெட்­டுக்­களை இழந்து வெற்றி இலக்கை அடைந்­தது. 

இந்தப் போட்­டியில் இந்­திய அணி வெற்­றி­பெற்­றா­லும்­கூட ஒட்­டு­மொத்த ரசி­கர்­களின் பார்­வையும் இருந்­தது அகில தனஞ்­சய மீதுதான். அனை­வரும் அவரை கவ­லை­யு­டன்தான் பார்த்­தனர். காரணம் ஆறு விக்­கெட்­டுக்­களை வீழ்த்தி அதுவும் முக்­கி­ய­மான துடுப்­பாட்ட வீரர்­களின் விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தியும் இலங்கை அணியால் வெற்­றி­பெற முடி­யாமல் போய்­விட்­டதே என்­ப­துதான்.

இத்­த­னைக்கும் அகி­ல தனஞ்­சய நேற்­று­முன்­தி­னம்தான் இரவு 11 மணி­ய­ள­வில் கண்டி வந்­த­டைந்­துள்ளார். காரணம் நேற்­று­முன்­தினம் காலை­யில்தான் அவ­ருக்கு திரு­மணம் நடந்­துள்­ளது.

திரு­ம­ணத்­தன்­றுதான் அவர் அணியில் இணைக்­கப்­பட்­டுள்ளார் என்ற தகவல் கிடைத்­துள்­ளது. அதன்­பி­றகே அவர் உட­ன­டி­யாக போட்டி நடை­பெறும் கண்டி பல்­லே­கலக்கு வந்­த­டைந்­துள்ளார்.

இந்தப் போட்­டியில் இந்­தியா வென்­றி­ருந்­தாலும் ஆட்ட நாயகன் விருதை அகில தனஞ்­ச­யதான் வென்றார். ஆட்ட நாயகன் விருதை வாங்­கிய பின் அவர் பேசு­கையில்,

ஆறு விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தி­யது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. ஆனால் தோற்­று­விட்­டோமே என்ற கவலை அதை­வி­டவும் இருக்­கி­றது.

வென்­றி­ருந்தால் மகிழ்ச்­சி­யாக சென்­றி­ருப்பேன். நேற்றுத்தான் ( புதன்கிழமை) நான் திருமண பந்தத்தில் இணைந்தேன். திருமண வைபவம் முடிந்தவுடன் நான் போட்டியில் பங்கேற்க இங்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி முடித்தார் சோகமாக.

நேற்றைய போட்டியில் இந்திய அணியை மிரட்டிய அகில தனஞ்சய தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் இல்லற வாழ்க்கையிலும் சிறப்புற வாழ நாமும் வாழ்த்துகிறோம்.

http://www.virakesari.lk/article/23574

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அகில தனஞ்சயவை புகழ்ந்த விராட் கோலி

Published by Priyatharshan on 2017-08-25 17:54:38

 

அகில தனஞ்சயவை நாம் நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஓஃப் ஸ்பின்னர் என்று தான் நினைத்தோம் ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் கைப்பற்றினார். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானதும் பாராட்டத்தகுந்ததென இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்தார்.

vitat-koli.jpg

பல்லேகலயில் நேற்று நடைபெற்ற 2 ஆவது ஒருநாள் போட்டியில் மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்தில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 

இந்நிலையிலேயே விராட் கோலி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கோலி மேலும் தெரிவிக்கையில்,

21055130_2294219613942566_49192512119013

நான் 3 ஆம் நிலையில் களமிறங்கியிருந்தாலும் கூட அந்தக் குறிப்பிட்ட பந்தில் நான் ஆட்டமிழந்திருப்பேன். தனஞ்சய அப்படி அபாரமாகவே பந்து வீசினார். 

நாங்கள் அவரை நல்ல லெக்பிரேக்குகள் வீசும் ஒரு ஓஃப்  ஸ்பின்னர் என்று நினைத்தோம், ஆனால் அவரோ 4 விக்கெட்டுகளைக் கூக்ளியில் முறையில் கைப்பற்றினார்.

அவருக்கு எதிராக அடுத்த முறை இன்னும் எச்சரிக்கையாக இருப்போம். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ததும், அவரிடம் உள்ள கட்டுப்பாடும் அபாரமானது, பாராட்டத்தகுந்தது.

இதேவேளை, மிகவும் விறுவிறுப்பான ஆட்டம். ரசிகர்களும், வீரர்களுக்கும்  நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். 230 ஓட்டங்கள் விரட்டலில் இரண்டு 100 ஓட்டக் கூட்டணி விநோதமானதுதான்.

230 ஓட்ட விரட்டலில் ஒரு விக்கெட்டுக்கு  110 ஓட்டங்கள் எனும்போது அனைவருக்கும் துடுப்பெடுத்தாடக்கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கோலி நேற்று தனது வழக்கமான 3 ஆம் நிலையில் களமிறங்கவில்லையென்பதுடன்  4 ஓட்டங்களுடன் அகில தனஞ்சயவின்  கூக்ளியில்  போல்ட்  முறையில்  ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23607

  • தொடங்கியவர்
தனது மாய சுழலுக்காக பாராட்டு மழையில் நனையும் அகில தனன்ஞய
Social-Media.png

தனது மாய சுழலுக்காக பாராட்டு மழையில் நனையும் அகில தனன்ஞய

TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

அண்மைய காலங்களில், தொடர் தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருந்த இலங்கை அணிக்கும், இலங்கை அணியின் இரசிகர்களுக்கும் நடந்து முடிந்த இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டி மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போயிருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெறும் 23 வயதேயான இலங்கை அணியின் சுழல் வீரர் அகில தனன்ஞயவின் அபார பந்துவீச்சாகும்.

பல்லேகலையில் இடம்பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான  இரண்டாவது ஒரு நாள் போட்டியில், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 231 ஓட்டங்களை 47 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடியிருந்த இந்திய அணி தமது இலக்கினை அடைவதற்கு ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாகவே செயற்பட்டிருந்தது.   

இந்திய அணி, ஆரம்பத்தில் விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி தமது தொடக்க வீரர்களின்  அதிரடியான ஆட்டத்துடன் 109 ஓட்டங்களுடன் மிகவும் வலுவான நிலையில் காணப்பட்டிருந்தது.

எனினும், அப்போது பந்துவீச ஆரம்பித்த அகில தனன்ஞய இந்திய அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, விராத் கோலி, லோக்கேஷ் ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஷார் பட்டேல் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து, பலம்மிக்க எதிரணியினை ஒரு கட்டத்தில் 131 ஓட்டங்களிற்கு 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த ஒரு இக்கட்டான நிலைக்கு மாற்றியிருந்தார்.

தனன்ஞயவின் இவ்வாறான பந்துவீச்சு பற்றி சமூக வலைதளமான டுவிட்டரில், இலங்கை அணியின் தற்போதைய, முன்னாள் வீரர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தன.

என்னால், (தனன்ஞயவின்) ஆட்டத்தினை நேரடியாகப் பார்க்க முடியாமல் போயிருப்பினும், இந்தியா போன்ற நாடொன்றிற்கு எதிராக தனன்ஞய இப்படியான ஒரு பந்து வீச்சினை வெளிப்படுத்தியிருப்பது என்பது மிகவும் பாராட்டுக்குரிய விடயம். அதோடு இப்படியான நகர்வுகள் மிகவும் சிறப்பானது.” எனக் குறிப்பிட்டு குமார் சங்கக்கார தனன்ஞயவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கம் அளித்திருந்தார்.

Sanga on Tweeter

அதேபோன்று, இலங்கை அணியின் சிரேஷ்ட பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரங்கன ஹேரத் இந்திய அணியுடனான குறித்த போட்டி நடைபெற்ற தினத்திற்கு முந்தைய தினத்திலேயே திருமண வாழ்க்கையில் இணைந்த இளம் சுழல் வீரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, தான் தனது வாழ்க்கையில் கண்ட மிகவும் சிறந்த பந்து வீச்சுக்களில் அகில தனன்ஞயவின் குறித்த பந்து வீச்சும் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

Herath on Tweeter

இலங்கை அணிக்காக இதுவரையில், ஒருநாள் போட்டிகளில் 135 விக்கெட்டுக்களை பதம் பார்த்திருக்கும் பர்வீஸ் மஹரூப், அகில தனன்ஞயவின் பந்து வீச்சினையும் தாண்டி இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால் சிறிது ஏமாற்றம் அடைவதாகவும், குறித்த போட்டியில் அணி தோற்றது தனன்ஞயவிற்கு சற்று கடினமானதாக அமையக்கூடும் என்ற விதத்தில் கருத்தினை வெளியிட்டிருந்தார்.

Mahroof on Tweeter

மேலும், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ்  சந்திமாலும், கிரிக்கெட் வர்ணனையாளர் ரொஷான் அபேசிங்கவும் தனன்ஞயவின் பந்து வீச்சிற்காகவும் புதிதாக திருமண வாழ்வில் இணைந்தமைக்காகவும் வாழ்த்துக்களை வெளியிட்டிருந்தனர்.

Chandimal on Tweeter

Roshan on Tweeter

அகில தனன்ஞயவினை, இலங்கை அணியில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக செயற்பட்டிருந்த மஹேல ஜயவர்தன, இலங்கை அணிக்கு எதிர்பாராத ஒரு போட்டி முடிவு. ஆனாலும் ஒரு அணியாக இலங்கை நல்ல முறையில் செயற்பட்டிருந்தது. அகில தனன்ஞயவிற்காகவும் மிகவும் சந்தோமடைகின்றேன். என குறிப்பிட்டிருந்தார்.

Mahela on Tweeter

2012 ஆம் ஆண்டிலேயே இலங்கை அணிக்கு அறிமுகமாயிருந்த தனன்ஞயவிற்கு, இதுவரையில் நான்கு ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாட வாய்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, லஹிரு திரிமான்ன, நீண்ட காலத்திற்குப் பின்னர் இவ்வாறனதொரு சிறந்த பந்து வீச்சினை தான் பார்ப்பதாகவும், அது தனக்கு இலங்கை அணியில் ஒரு காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அஜந்த மெண்டிசை ஞாபகமூட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

Lahiru on Tweeter

இன்னும், நீண்ட உபாதைகள் காரணமாக ஓய்விலிருக்கும் வேகப்பந்து வீச்சாளரான தம்மிக்க பிரசாத், தனன்ஞயவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து, இலங்கை அணி காட்டிய போராட்டத்தினை கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், அடுத்த போட்டியில் இலங்கை சாதிக்கும் என தான் எதிர்பார்க்கின்றேன் எனவும் கூறியிருந்தார்.

Dhammika on Tweeter

இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்திருப்பினும் சீரான பயணம் ஒன்றில்  இருந்த மிகவும் சவால்மிக்க இந்திய அணியினை தனது மாய சுழலின் மூலம் அச்சுறுத்தினார் அகில தனன்ஞய. இது போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனில், தற்போது துவண்டு போயிருக்கும் இலங்கை கிரிக்கெட், மீண்டும் எழுந்து வீர நடைபோடும் காலம் மிகத்தொலைவில் இல்லை என்பதே பலரதும் கருத்தாகும்.

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.