Jump to content

செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு


Recommended Posts

செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு

 

செட்டிநாடு ஸ்டைல் குழம்பு என்றால் பல பேருக்கு கொள்ளை பிரியம். இன்று செட்டிநாடு ஸ்டையில் நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு
 
தேவையான பொருட்கள் :

நாட்டு கோழி - 1 கிலோ
பட்டை, கிராம்பு - 2
சோம்புத்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் - 1 மூடி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது - 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தக்காளி - 250 கிராம்
சிறிய வெங்காயம் - 250 கிராம்
எண்ணெய் - 250 கிராம்

201708291508260302_1_countrychicken._L_s

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நாட்டுக்கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

மிக்சியில் மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.

தக்காளி சிறிதளவு வதங்கியதும் சுத்தம் செய்த நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். கறி நன்றாக வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

இப்போது சுவையான செட்டிநாடு ஸ்டைல் நாட்டு கோழி குழம்பு தயார்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பதிவு செய்யப்படாத ஆடம்பர காரினை 2020 முதல் லொகான் ரத்வத்தை பயன்படுத்தியுள்ளார் - விசாரணைகளின் மூலம் உண்மை வெளியானது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான்ரத்வத்தை சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பதிவுசெய்யப்படாத இலகத்தகடுகள் அற்ற ஆடம்பரகாரினை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. லொகான் ரத்வத்தையின் மனைவியின் மிரிஹான வீட்டில் மீட்கப்பட்ட கார் குறித்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. கண்டியில் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட தனது செயலாளரே அந்த காரை கொண்டு வந்தார் என தெரிவித்ததன் மூலம் லொகான் ரத்வத்தை விசாரணையை குழப்ப முயன்றார் என பொலிஸ் சட்டப்பிரிவின் தலைவர் பிரதிபொலிஸ்மாஅதிபர்  ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகளின் போது மீட்கப்பட்ட பல வீடியோக்கள் ஆவணங்கள் ரத்வத்தை அந்த காரை 2020 ம் ஆண்டிலிருந்து பயன்படுத்துவதை வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அந்த விசாரணையின் போது போலியான செசி இலக்கத்தினை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை மிரிஹானவில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் பதிவுசெய்யப்படாத  வாகனம் காணப்பட்டதை தொடர்ந்து கைதுசெய்யப்ட்டார். https://www.virakesari.lk/article/198166
    • சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024   சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை சம்பளம் கொடுத்து வைத்திருந்தார் இந்த மண்ணின் மரபுகளை மாற்ற முற்படுபவர். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர். மத மாற்ற செல்லும் போது சிவசேனையினர் கற்கள் வீசுகின்றனர், தடிகளால் அடிக்கின்றனர் என கூறப்பட்ட விடயம் மெதடிஸ் திருச்சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் உள்ளடக்கி ஏழாண்டுகளுக்கு முன்பே புத்தகங்கள். அடித்து பெரும்பாலான மக்களிடம் கையளித்துள்ளேன். இதுவரையில் சுமந்திரன் என் மீது வழக்கு தொடரவில்லை. முடிந்தால் வழக்கு தொடரட்டும் என மேலும் தெரிவித்தார்.   https://www.battinatham.com/2024/11/blog-post_28.html
    • இதில ஆக எரிச்சல் வாற விடையம் உதாரனமாக ஒரு கோழிப் பண்ணைக்கு போய் நின்டு கொன்டு இங்கை பாருங்கோ எவளவு கோழிகள் என்டு சொல்லுவினம்.கோழிப்பண்ணை என்டால் என்ன நாலு கோழியே நிக்கும்.ஒரு துறை சம்பச்தமாக எதுவும் தெரியாமல் என்ன ரோமத்துக்கு அஞ்கு போவான்.🙁
    • Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன? அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன்   
    • எல்லாரும் போய் கொழும்பில் கும்மி அடித்தால் இது தான நிலமை.இங்கால பல காணிகள் தரிசாக இருக்கிது.வந்து தோட்டம் செய்யலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லம்.மனதுக்கும் இதமாக இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.