Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

Featured Replies

காணாமல் போனோர் தினத்தைமுன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று முல்லைத்தீவில் இன்றுடன் 176 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

IMG_1228.JPG

முல்லைத்தீவு பிரதான பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பான குறித்த ஆர்ப்பாட்டம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கபட்டுவரும் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நிறைவடைந்தது. "தடுப்பில் உள்ள எங்களது பிள்ளைகளை தா" காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கு", இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டனர்.

IMG_1241.JPG

இந்த ஆர்பாட்டத்தில்  வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், புவனேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG_1248.JPG

http://www.virakesari.lk/article/23760

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இனியும் ஏமாறத் தயாரில்லை; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

 
59a657f775b8d-IBCTAMIL.jpg
59a657f7cb224-IBCTAMIL.jpg
59a657f809e35-IBCTAMIL.jpg
59a657f83d48e-IBCTAMIL.jpg

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டம் ஊர்வலமாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செலக முன்றலில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள், தமது உறவுகள் தொடர்பில் தீர்க்கமான பதில் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கோசங்களையும் எழுப்பினர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Relatives-of-disappeared-in-Kilinochchi

  • தொடங்கியவர்

எமது உறவுகள் எமக்கு வேண்டும்; வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி

 
59a64962f400d-IBCTAMIL.jpg
59a649632a479-IBCTAMIL.jpg
59a649636e1ae-IBCTAMIL.jpg
59a649639368a-IBCTAMIL.jpg

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பேரணியையும் முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா பேருந்து நிலையத்தின் முன்னால் உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டொரின் உறவினர்கள் ஏ9 வீதி வழியாகச் சென்று, 188 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்றனர்.

இதனையடுத்து பேரணி அங்கிருந்து வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது.  

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ' எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே? நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைத்தா, அரசே இனியும் காலத்தை கடத்தாதே என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன் சி.ஆ.ஜோதிலிங்கம் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/rally-in-Vavuniya

  • தொடங்கியவர்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளக் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தல்
 

 

image_4b882747c8.jpg

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளக் கிடைக்க வேண்டுமென, வலியுறுத்தி, மட்டக்களப்பு நகரில் சுடரேற்றி ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு நகரின் காந்திப் பூங்காவுக்கு முன்னால் இன்று (30) ஒன்று திரண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீளக் கிடைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெருமளவிளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் (இன்று) காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் அன்புக்குரியவர்களின் உண்மை நிலைமை கண்டறிவதற்கான பயணமாக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களைத் தாங்கி மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட இவர்கள், காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி மற்றும் இழப்பீடு வழங்குவதுடன், இவ்வாறான காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதிப்படுத்துமாறும் வலயுறுத்தினர்.

காணாமல் ஆக்கப்படுத்தலுடன் தொடர்புடைய படைத்தரப்பினர், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் பணி நீக்கம் செய்தல் மற்றும் அதிகாரங்களைக் குறைத்தல் கொடுப்பனவுகளை இரத்துச் செய்தல் போன்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டுமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதன் போது வலியுறுத்தினர்.

வடக்கு, கிழக்கில் இராணுவ  மயமாக்களை முடிவுக்கு கொண்டு வந்து, சிவில் வாழக்கையை மீளக் கட்டியெழுப்புமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கான மகஜரை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்கள் கையளித்தனர்.

image_8b9f591b8d.jpgimage_6933e3428b.jpgimage_b98b731c38.jpg

  •  

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/காணாமல்-ஆக்கப்பட்டவர்கள்-மீளக்-கிடைக்க-வேண்டுமென-வலியுறுத்தல்/73-203055

  • தொடங்கியவர்

யாழ்.நல்லூர் முன்றலில் ஒன்று கூடிய தமிழ் உறவுகள்!

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் முன்றலில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

அந்த மனுவில், "காணாமல் ஆக்கட்டவர்கள் தொடர்பில் சட்டமூலம் உருவாக்கப்பட வேண்டும், சுயாதீன நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் உள்நாட்டில் குற்றமாக்கப்பட வேண்டும். இறுதிப் போரின் போது படையினரிடம் கையளிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இழப்பீடு மற்றும் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்” உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/156855?ref=home-feed

  • தொடங்கியவர்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவினர்களால்கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணியொன்றும் ஆரம்பமானது.

இந்த கவனயீர்ப்பு ஊர்வலம் மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் நகர்ப் பகுதியை சென்றடைந்தது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அதனைத் தொடர்ந்து மன்னார் நகர்ப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களினால் அமைதிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண அமைச்சர் ஜீ.குணசீலன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/156857?ref=home-feed

  • தொடங்கியவர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்

 
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்
 

பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள போராட்டத்தின் 192 ஆவது நாளாகிய இன்று தலையில் சிவப்புப் பட்டி அணிந்து கவனவீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும், காணாமல் போனவர்களின் புகைப்படங்களையும் கைகளில் பிடித்தவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

 

 

21105713_841876709311909_676841673115239

21105818_841876579311922_848486271867298

21106826_841876439311936_638477354466754

21150061_841876615978585_635113053106758

21150338_841876362645277_567131397715797

21150205_841877115978535_306593300463894

21151242_841876785978568_427745138472419

21151351_841876865978560_736441034554138

21151711_841876839311896_653394229744338

 

21192211_841876512645262_121538958701978

21192217_841877169311863_291414999457014

21192331_841877055978541_849737023103685

21192959_841876745978572_635847724721332

21192999_841877002645213_754261533861356

21231028_841876922645221_352761982892630

21231240_841877082645205_879118629239514

http://newuthayan.com/story/24027.html

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

 


வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு
 

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வவுனியாவில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டம் ஏ9 வீதியூடாக, 188ஆவது நாளாக போராட்டம் நடத்தப்படும் இடத்தைச் சென்றடைந்து, வவுனியா நகர மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

நகர மத்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு, கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, தமது போராட்டத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபமடைவதாகத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல்வாதிகளுடன் முரண்பட்டனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி, ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நல்லூரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

நல்லூரிலிருந்து யாழ். நகரூடாக நாவல் வீதியை சென்றடைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு முன்பாக பேரணியை ஆரம்பித்தனர்.

பொது வைத்தியசாலை வழியாக சென்ற பேரணி, மன்னார் நகரை சென்றடைந்து கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாகவும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 

http://newsfirst.lk/tamil/2017/08/சர்வதேச-காணாமல்-ஆக்கப்பட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.