Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் கலந்துரையாடல்

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் கலந்துரையாடல்

 
 
59ae4eb92b58e-IBCTAMIL.jpg
59ae4eb95e84e-IBCTAMIL.jpg
59ae4eb9c1778-IBCTAMIL.jpg
59ae4eba03d80-IBCTAMIL.jpg

தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் ஸ்ரீலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Discussion-at-Veerasingham-Hall

  • தொடங்கியவர்
‘அடக்கியாளும் அரசமைப்பு விமோசனத்தை தராது’
 

பெரும்பான்மையினரின் தற்துணிபின் பேரில் அவர்கள் அடக்கியாளக்கூடிய அதிகாரத்துடன் தயாரிக்கப்படுகின்ற எந்த ஓர் அரசமைப்பும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை அளிக்காது. மாறாக, முற்று முழுதாக சட்டப்படி வர்ணிக்கப்பட்டு, தமிழருக்குத் தரப்படும் அதிகாரங்கள் திரும்பிப்பெற முடியாதவையாக இருந்தால்தான் நாம் எதிர்காலத்தில் சுதந்திரமாக வாழமுடியும்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  

தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசமைப்பு தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

 “உகந்த கேள்விகளைக் கேட்டு அவற்றை அலசி ஆராய்வதால் கூட்டத்தில் இருந்து செவிமடுப்போர் நன்மை பெறுகின்றார்கள். உண்மை நிலையை விளங்கிக் கொள்கின்றார்கள். அந்த வகையில், 5 விடயங்கள் இன்று ஆராயப்பட இருக்கின்றன” என்றார். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அடக்கியாளும்-அரசமைப்பு-விமோசனத்தை-தராது/71-203279

  • தொடங்கியவர்

 

தமிழ் மக்கள் பேரவையின் கருத்து பகிர்வும் பிரகடனமும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

  • தொடங்கியவர்

அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை சி.வி வலியுறுத்தல்

 
அரசின் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை சி.வி வலியுறுத்தல்

போர் குற்றங்களுக்காக சீருடை அணிந்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி சூளுரைத்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் மூலம் நீதியை எதிர்பார்க்க முடியுமா என வட மாகாண முதலமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரன் சர்வதேச சமூகத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இறுதிக்கட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான நீதி விசாரணையொன்றின் ஊடாக மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வட மாகாண முதலமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவை இன்றைய தினம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமொன்றை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியது.

இதில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வசரன், தமிழ் மக்கள் பேரவை இரண்டு பிரமாண்டமான “எழுக தமிழ்” கூட்டங்களின் பின்னர் கும்பகர்ணன் போல் தூங்கப் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் தற்போதைய மைத்திரி - ரணில் தலைமையிலான அரசாங்கமும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளி்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமது மக்களுக்கு எதிரானவர்களாக தற்போதைய தமிழ்த் தலைமைகள் மாறிவிடக்கூடாது எனவும் வட மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழர்களின் பெரும் மரியாதைக்குரிய சிங்களத் தலைவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா புதவி ஆசையால் 1972ஆம் யாப்பு உருவாக்கத்தின் போது தமிழர்களுக்கு எதிரானவராக மாரியதாகவும் அவர் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சலுகைகளை வழங்கி எதையும் சாதிப்பது தென்பகுதி மக்களுக்கு கைவந்த கலை எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தினை போர்க்குற்ற விசாரணைகளுக்கான ஆதாரமாக கொள்ள முடியுமெனவும் வலியுறுத்தினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/No-confidence-in-the-government-s-internal-inquiry

  • தொடங்கியவர்

இராணுவத்தை காக்க துடிக்கும் ஜனாதிபதியால் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க முடியுமா?

 

இராணுவ வீரர்கள் யுத்த குற்றங்களில் கட்டாயமாக ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறைமுகமாக் தெற்கத்தைய அரசியல்த தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இராணுவத்தை காக்க துடிக்கும் ஜனாதிபதியால் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க முடியுமா?
இன்றையதினம்(5) தமிழ் மக்கள் பேரவையின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் இணைத்தலைவர் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.

இராணுவத்தை காக்க துடிக்கும் ஜனாதிபதியால் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க முடியுமா?
அவர் மேலும் தெரிவிக்கையில்....
எமது இராணுவ வீரர்களை விட்டுக் கொடுக்க மாட்டோம், அவர்களுக்கெதிராக விசாரணை செய்ய விடமாட்டோம் என்று அமைச்சர்கள் மட்டத்திலும் ஜனாதிபதி மட்டத்தில் அடித்துக் கூறும் போது தமது இராணுவ வீரர்கள் யுத்த குற்றங்களில் கட்டாயமாக ஈடுபட்டிருந்தார்கள் என்பதை மறைமுகமாக் தெற்கத்தைய அரசியல்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று கூட்டிக்காட்டினார்.

இதனால் குறித்த விடயம் தமிழ் மக்களுக்கு  சார்பாகவே அமைகின்றது.தற்போது தளபதி சரத் பொன்சேகா, ஜகத் ஜயசூரிய என்ற முன்னைய இராணுவத் தளபதி யுத்தக்குற்றங்களில்  ஈடுபட்டார் என்பது பற்றி சாட்சியம் அளிக்கப்போவதாக பகிரங்கமாகக் கூறியுள்ளார்.


ஆகவே குற்றவாளிகள் தாமாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே தான் சர்வதேச நீதிபதிகளுடன் யுத்தக் குற்ற விசாரணையானது விரைவில் நடைபெற வேண்டும் என்று கோருகின்றோம்.

ஜனாதிபதி தமது போர்வீரர்களை எப்படியும் காப்பாற்றுவோம் என்று கூறும் போது உள்ளுர் நீதிபதிகள் உரியவாறு நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதேபோல் காணாமல் போனோரின் விடயமும் இதனோடு சம்பந்தப்பட்டதே.

குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்கவிடக்கூடாது. இன்றிருக்கும் நிலையில் காணாமல்ப் போனோர் பற்றி இந்த அரசாங்கம் எந்த ஒரு திடமான நடவடிக்கையையும் எடுக்காது என்பது தெரிகின்றது. எனவே எமது மக்களின் தொடர் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் போன்றவை எந்தவிதப் பலனையும் அளிக்கவில்லை.

ஆகவே சர்வதேச உள்ளீடல்களுடனான விசாரணை ஒன்றே எமக்கு நீதியைப் பெற்றுத் தரும். உண்மையை வெளிக் கொண்டுவரும்.

இராணுவத்தை காக்க துடிக்கும் ஜனாதிபதியால் தமிழர்களுக்கான தீர்வை கொடுக்க முடியுமா?

முன்னைய தளபதி ஜகத் ஜயசூரிய பற்றி ஜெனரல் சரத் பொன்சேகா  அவர்கள் கூறியிருப்பது யுத்தக் குற்ற விசாரணைகள் உரியவாறு நடைபெறுமோ என்ற நப்பாசையை எழுப்பினாலும் தற்போதைய அரசியல்வாதி சரத் பொன்சேகாவின் கருத்துக்கள் அரசியல் பால் பட்ட கருத்துக்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

அத்துடன் அவர் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களின் பிரதிபலிப்பு என்பதையும் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

அத்துடன் பதவி மோகம் எமது தமிழ்த் தலைவர்களையும் பீடிக்கக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை. அதைத் தந்து இதைத் தந்து எம்மை வாங்கிப்போடுவது தெற்கத்தையருக்குக் கைவந்த கலை.

எமது நிறைகளையும் குறைகளையும் உன்னிப்பாகக் கவனித்து எம்மை வீழ்த்துவதில் எமது தென்னவர், தமிழ் நாட்டில் கூறுவது போல் 'பலே கில்லாடிகள்'.

அடுத்து ஜகத் ஜயசூர்ய பற்றி தளபதி சரத் பொன்சேகா அண்மையில் கூறிய கூற்றும் எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட்டு யுத்தக் குற்றங்கள் நடை பெற்றமைக்கு போதிய ஆதாரம் அவர் கூற்றில் பொதிந்திருக்கின்றது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/President-be-able-to-deliver-solution-Tamils

  • தொடங்கியவர்

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை மறு­த­லிக்­கி­றது அர­சாங்கம்

 

சர்­வ­தே­சத்தின் அவ­சர தலை­யீட்டை வலி­யு­றுத்தி தமிழ் மக்கள் பேரவை பிர­க­டனம் 
(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற மனித உரிமை, மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்­பி­லான பொறுப்புக் கூறலில் மட்­டு­மல்­லாது புதிய அர­சி­ய­ல­மைப்பிலும் தமிழ்  மக்­களின் அபி­லா­ஷை­களை ஆட்­சி­யி­லுள்ள அர­சாங்கம் நேர­டி­யாக மறு­த­லிக்­கின்­றது.  

இதனால் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் மீதும் தமிழ் மக்கள் நம்­பிக்கை இழந்­தி­ருக்­கின்­றார்கள். எனவே சர்­வ­தேசம் உட­ன­டி­யாக தலை­யீடு செய்­ய­வேண்டும் என்­பதை வலி­யு­றுத்தி தமிழ் மக்கள் பேரவை ஏழு பிர­க­ட­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது.

யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் "ஓர் அர­சியல் தீர்வை எதிர்­கொள்ளல்" எனும் தலைப்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற துறைசார் நிபு­ணர்கள், அர­சியல் தலை­வர்கள் மற்றும் பொது­மக்கள் கலந்­து­கொண்ட கலந்­து­ரை­யா­டலின் இறு­தியில் மக்­களின் கருத்­து­களின் முடி­வாக தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லைவர் வசந்­த­ராஜா வெளி­யிட்ட பிர­க­ட­னத்தில் மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­க­ட­னத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

* இலங்­கைத்­தீவின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வா­னது, இந்த இனப்­பி­ரச்­சி­னையின் அடிப்­ப­டைக்­கா­ர­ணி­களை இனம்­கண்டு நிரந்­த­ர­மாகத் தீர்ப்­ப­தாக அமைய வேண்டும்.

* வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில், சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டை­யி­லான, மத­சார்­பற்ற சமஸ்­டித்­தீர்வே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக அமையும் என்­ப­தோடு இலங்­கைத்­தீவின் கௌர­வமும் சமா­தா­னமும் மதிக்­கப்­பட்டு சகல இனங்­களும் சமத்­து­வத்­து­டனும் வாழக்­கூ­டிய நிரந்­தர சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தவும் வல்­லது. இது தமி­ழர்­களின் அடிப்­படை அர­சியல் அபி­லாசை என்­பதும் பல தசாப்­தங்­க­ளாக தேர்­தல்­களில் வழங்­கிய ஆணைகள், திம்பு பிர­க­டனம் போன்ற சர்­வ­தேச பிர­க­ட­னங்கள், பொங்­கு­தமிழ், எழு­க­தமிழ் போன்ற மக்கள் எழுச்சி நிகழ்­வுகள் மூலமும் மிகத் தெ ளிவாக பல­த­ட­வைகள் வெ ளிப்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக விருப்பும் ஆகும்.

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ்­தே­சத்தின் சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்ப்ட்டு அதன் தனித்­து­வ­மான இறை­மையின் அடிப்­ப­டை­யி­லான சம­ஷ­டித்­தீர்வு என்­பது விட்­டுக்­கொ­டுக்­க­மு­டி­யாத அடிப்­படை அர­சி­யல்­கோ­ரிக்கை என்­பதும் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான எந்த தீர்வும் இதன் அடிப்­ப­டி­யி­லேயே அணு­கப்­ப­டு­வதே நேர்­மை­யா­னதும் நீடித்து நிலைக்­கக்­கூ­டி­யதும் ஆகும்.

* வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தில் (திட்­ட­மிட்ட அரச குடி­யேற்­றங்­களால் குடி­யேற்­றப்­பட்­ட­வர்கள் நீங்­க­லாக) இயற்­கை­யா­கவே வாழும் முஸ்லிம், சிங்­கள மக்­களும் இந்த சமஸ்ட்டி அலகின் சகல உரி­மை­க­ளுக்கும் உரித்­தா­ன­வர்கள். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் தமக்­கான அர­சியல் அதி­கார அலகை கோரு­வ­தற்­கான உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர்கள்.

* இலங்­கையின் உத்­தேச அர­சி­ய­ல­மைப்­பா­னது, மலை­ய­கத்­த­மி­ழர்­களின் அர­சியல் அபி­லா­சைகள், அடிப்­ப­டைத்­தே­வைகள் என்­ப­வற்றை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்­க­வேண்டும். இதற்­கான குர­லையும் தோழமை உறு­திப்­பாட்­டையும் நாம் என்றும் வழங்­குவோம்.

* கடந்த எழு­பது ஆண்­டு­க­ளாக தமி­ழர்கள் மீது திட்­ட­மிட்­ட­வ­கையில் சிறி­லங்கா அரசால் மேற்­கொள்­ளப்­படும் இனப்­ப­டு­கொ­லையில் இருந்து எமது இனத்தின் இருப்பை பாது­காத்­துக்­கொள்­ளவும் மேற்­சொன்ன அர­சியல் கோரிக்­கைகள் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.

அத்­தோடு, சர்­வ­தேச நீதி­மன்றம் அல்­லது ஐநா மேற்­பார்­வை­யி­லான சர்­வ­தேச குற்­ற­வியல் தீர்ப்­பாயம் போன்ற சுயா­தீன சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி விசா­ர­ணப்­பொ­றி­முறை மூலம் இந்த இனப்­ப­டு­கொ­லைக்­கான பொறுப்­புக்­கூறல் மேற்­கொள்­ள­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­பட வேண்டும்.

எமது அர­சி­யல்­தீர்­வுக்­கான கோரிக்­கையும் இனப்­ப­டு­கொ­லைக்­கான பொறுப்­புக்­கூ­றலும் விட்­டு­கொ­டுப்­புக்கோ தம்­மி­டையே பதி­லீட்­டுக்கோ உரி­யவை அல்ல. இவை இரண்டும் புர்த்தி செய்­யப்­ப­டு­வதன் மூலமே இயற்கை நீதியின் அடிப்­ப­டையில் தமி­ழர்­க­ளுக்­கான நியாயம் கிடைக்கும்.

* அர­சியல் தீர்வு குறித்தும் பொறுப்­புக்­கூறல் குறித்தும் சர்­வ­தேச அரங்­கு­களில் வாக்­கு­று­தி­களை வழங்கி விட்டு, அவற்றை புர்த்தி செய்­யாது, காலத்தை இழுத்­த­டித்து ஏமாற்­று­வதே, சிறி­லங்கா அரசு காலம் கால­மாக மேற்­கொண்­டு­வரும் நடை­மு­றை­யாகும்.

சர்­வ­தேச நெருக்­கு­வா­ரங்­களில் இருந்து தம்மை பாது­காப்­ப­தற்­கான ஒரு யுக்­தி­யா­கவே இந்த பொய் வாக்­கு­று­தி­களை வழங்­கு­வ­த­னையே சிறி­லங்கா அர­சாங்­கங்கள் தம் வழக்­க­மாக கொண்­டுள்­ளன.

அந்த வகையில் இந்த அர­சாங்­கமும் முன்­னைய அர­சாங்­கங்­க­ளி­லி­ருந்து எது­வி­தத்­திலும் தம்மை வேறு­ப­டுத்­த­வில்லை.

இந்த அர­சாங்­க­மா­னது, 2015, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­களில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களில் எத­னையும், நேர்­மை­யான முறையில், ஐநா பேர­வையில் வலி­யு­றுத்­தப்­பட்­டது போன்று, பாதிக்­கப்­பட்ட மக்­களின் கருத்­துக்­களை உள்­ளீர்த்து பூர்த்தி செய்­ய­வில்லை. மாறாக, சர்­வ­தே­சத்தை ஏமாற்றும் பெய­ர­ள­வி­லான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தையே முற்­கொண்டு செல்­கி­றது.

உலகின் உயர் சபை­யா­கிய ஐ.நா.வின் மனித உரிமை பேர­வை­யி­னதும் மற்றும் ஜன­நா­யக செயன்­மு­றை­களில் நம்­பிக்கை கொண்­டுள்ள நாடு­க­ளி­னதும் கௌர­வத்தை மதிப்­பி­ழக்­கச்­செய்யும் வகை­யிலும் அவற்­றிற்கு சவால் விடும் வகை­யிலும், ஐநா மனித உரிமை பேர­வையில் குறிப்­பி­டப்­பட்ட சர்­வ­தேச நீதி­ப­திகள், பயங்­க­ர­வாத தடை­சட்ட நீக்கம் போன்­ற­வற்றை அப்­பட்­ட­மா­கவே மறு­த­லித்து தற்­போ­தைய சிறி­லங்கா அர­சாங்­கத்தின் அதி­கார உயர்­பீ­டத்­தி­ன­ரான ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­ச­ரவை ஆகியோர் வௌிப்­ப­டை­யா­கவும் உத்­தி­யோ­க­புர்­வ­மா­கவும் கருத்­துகள் வௌியிட்­டு­வ­ரு­வது குறித்து சர்­வ­தேச சக்­திகள் தமது தீவி­ர­மான கரி­ச­னையை செலுத்த வேண்டும்.

* பொறுப்­புக்­கூ­றலில் மட்­டு­மல்­லாது, தமிழ்­மக்­களின் அர­சியல் விருப்பை, புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான மக்கள் கலந்­தாய்­வுக்­கு­ழு­வுக்­கான சமர்ப்­பணம் உட்­பட பல­த­ட­வை­களில் மக்கள் வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருந்த போதிலும் அவற்­றை­யெல்லாம் ஒரே­ய­டி­யாக புறந்­தள்­ளு­வ­தா­கவே ஜனா­தி­பதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கலந்தாய்வுக்குழு தலைவர் மற்றும் உத்தேச அரசியலமைப்பை வரையும் பிரமுகர்களின் கருத்துகள் இருக்கின்றன.

அரசாங்க உயர்பீடத்தின் உத்தியோகபூர்வ மறுதலிப்புகள், இந்த அரசாங்கத்துக்கும் தமிழர்களின் அரசியற் பிரச்சினையை தீர்ப்பது குறித்தோ அல்லது நேர்மையான பொறுப்புக்கூறல் குறித்தோ உண்மையான அரசியல் விருப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வெளிப்ப்டுத்துவதாலும் நடைமுறை அனுபவத்தில் அரசின் முன்னெடுப்புகள் மீது தமிழர்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாலும் , சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் தமது நேரடித்தலையீட்டை தாமதமின்றி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை, மேலே பிரகடனப்படுத்தப்பட்ட மக்களது விருப்புகளின் அடிப்படையில் வழங்க வழிவகை செய்யவேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-06#page-1

  • தொடங்கியவர்

 

 

 

  • தொடங்கியவர்

வௌிநாடுகளின் நிகழ்ச்சி நிரலுடன் முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் முத்திரை

சட்­டத்­த­ரணி மௌசூர் மௌலானா

 

வடக்கு – கிழக்­கில் முஸ்­லிம் களை தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தும் கலா­சா­ரம் பிராந்­திய பன்னாட்டு நிகழ்ச்சி நிர­லு­டன் திட்­ட­மிட்ட முறை­யில் இடம்­பெ­று­கின்­றது – என சட்­டத்­த­ர­ணி­யும் சித்­தி­லெப்பை ஆய்­வு­மை­யத்­தின் தலை­வ­ரு­மான மௌசூர் மௌலானா தெரி­வித்­துள்­ளார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில் உத்­தேச அர­ச­மைப்பு முயற்சி குறித்த கருத்­துப் பகிர்வு மற்­றும் தீர்மானம் வெளிப்படுத் துகை நிகழ்வு நேற்­று­முன் தி­னம் யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது.
அதில் கலந்­து­கொண்டு ‘வடக்கு, கிழக்கு இணைப்­பும் முஸ்­லிம்­க­ ளும்’ என்ற தலைப்­பில் கருத்­துரை வழங்­கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வடக்கு, கிழக்­கில் முஸ்­லிம் களை தீவி­ர­வா­தி­க­ளாக முத்­திரை குத்­தும் கலா­சா­ரம் பிராந்­திய பன்னாட்டு நிகழ்சி நிர­லு­டன் இணைந்து இட­ம­பெ­று­கின்­றது. இத­னால் ஒட்­டு­மொத்த தமிழ் பேசும் இனத்­த­வ­ரு­டைய இருப்­பும் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டும். இது திட்­ட­மிட்ட முறை­யில் இந்த தேசத்­தில் இடம்­பெ­று­கி­றது.

இது பல்­வேறு பன்னாட்டு அர­சி­யல் மட்­டத்­து­டன் தொடர்­பு­பட்­டுள்­ளது. எனவே தமிழ், முஸ்­லிம் தரப்பு இதில் மிக­வும் நிதா­ன­ மா­கவும் கவ­ன­மா­க­வும் இருக்­க­வேண்­டும்.இலங்­கை­யில் தற்­போது வௌிநாடுகளின் தலை­யீ­டு­கள் அதா­வது இந்­தியா, அமெ­ரிக்கா, சீனா போன்ற நாடு­கள் இங்கு விளை­யா­டு ­கின்றன.

இந்த சித்து விளை­யாட்­டு­கள் மூலம் தமிழ், முஸ்­லிம் உறவை பல துரு­வங்­க­ளாக்கி தொடர்ந்­தும் விரி­சல் நிலை­யில் வைத்­தி­ருக்க ஆசைப்­ப­டு­கி­றார்­கள். வடக்கு, கிழக்­கில் தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் நிலத்­தொ­டர் பற்ற விதத்­தில் இணைந்து வாழ்­கி­றோம். முஸ்­லிம்­களை பன்னாட்டு ரீ­தி­யில் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்க வேண்­டிய உலக நாடுகளின் பொறி­முறை பிராந்­திய ரீதி­யில் இருக்­கி­றது.

சேதா­ரம் இல்­லாத விட்­டுக் கொ­டுப்பு என்ற ஒரு வார்த்­தையை முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வர் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். அவ­ருக்கு சேதா­ரம் பற்­றி­யும் புரி­ய­ வில்லை செய்­கூலி பற்­றி­யும் புரி­ய­ வில்லை.
செய்­கூலி பற்றி உணர்ந்­த­வ­ருக்குதான் சேதா­ரம் பற்­றிய வலி தெரி­யும்.

துர­திஸ்­ட­வ­ச­மாக முஸ்­லிம்­க­ளின் முதன்மை அர­சி­யல் கட்­சி­யி­டம் கருத்­தி­ய­லும் இல்லை. வெறு­மனே வாய்ச்­ச­வ­ால்­க­ளும் தேர்­த­லுக்­கான உணர்ச்சி பூர்­வ­மான அர­சி­யல் கலா­சா­ர­மும்தான் இருக்­கி­றது – – என்­றார்.

http://newuthayan.com/story/26485.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.