Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை!

Featured Replies

எச்சரிக்கை!
 

image_58011e2b54.jpgநாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

காலி, பொத்துவில் ஊடான மட்டக்களப்பு கடற்கரைப்பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அகலவத்தை, வலலவிட்ட, பலிந்துனுவர, இங்கிரிய, பதுரலிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற அவசர உதவி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/எச்சரிக்கை/150-203383

குகுலே கங்கையின் வான் கதவு திறப்பு : அயல்பிரதேச மக்கள் எச்சரிக்கை

Published by RasmilaD on 2017-09-07 10:02:07

 
 

அகலவத்தை பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Image result for குகுலே கங்கை virakesari

இதன் காரணமாக, குகுலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புளத்சிங்கள, பதுரலிய, பலிந்தநுவர, அகலவத்தை மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/24087

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.