Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பையடுத்து மட்டக்களப்பிலும் குப்பைப் பிரச்சினை : திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள்

Featured Replies

கொழும்பையடுத்து மட்டக்களப்பிலும் குப்பைப் பிரச்சினை : திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள்

 

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வாழும் பொதுமக்கள் தங்களினால் சேகரிக்கப்படும் குப்பைகளை தெருவோரங்களிலும், அரச, தனியார் காணிகளிலும், பொதுவிடங்களிலும் வீசவேண்டாம், திண்மக்கழிவுகளை மீள்சுழற்ச்சியில் முகாமை செய்யுங்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

Local_News.jpg

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் திண்மக் கழிவு அகற்றாமை, மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சவால்கள், பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்களப்பு மாநகர சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் வெ.தவராசா, பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், பொறியியலாளர் த.தேவதீபன் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

"மட்டக்களப்பு மாநகர சபையானது 1935ஆம் ஆண்டு திருப்பெருந்துறையில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் மாநகரத்துக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக முகாமைத்துவம் செய்து அகற்றி வந்தது,

சுமார் அறுபது, எழுபது ஆண்டுகளாக இந்த திண்மக்கழிவகற்றலை  நாளாந்தம் உக்கக்கூடிய , உக்கமுடியாத வகையில் தரம்பிரித்து செய்து வருகின்றோம்.

மட்டக்களப்பு மாநகரத்துக்குள் அமைந்துள்ள 29,442 குடும்பங்கள் மூலமும் ஏனைய நிறுவனங்கள் மூலமும் நாளாந்தம் 90 டொன் குப்பைகள்  சேருகின்றது.

இவற்றில் 70 டொன் குப்பைகளை மாநகரசபை ஊழியர்களைக் கொண்டு அகற்றி வருகின்றோம், இவற்றில் உக்கக்கூடிய கழிவுகள் 23 டொன் ஆகும்.இவை திருப்பெருந்துறையில் உள்ள சேதனைப்பசளை தயாரிக்கும் நிலையத்தில் உரம் தயாரித்தலுக்காக பயன்படுத்தப்படுவதுடன் உரம் தயாரித்தல் தனித்த செயற்பாடாக அமைகின்றது.

ஏனைய 46 டொன் கழிவுகள் உக்காத கழிவுகளாகவும், கலப்புக்கழிவுகளாகவும் அகற்றப்பட்டு திருப்பெருந்துறை நிலப்பரப்புத் தளத்தில் கொட்டப்படுகின்றது.

எஞ்சிய 1.5 டொன் கழிவுகள் பிளாஸ்டிக், காட்போட் கழிவுகளாக சேகரிக்கப்பட்டு அவை மீள்சுழற்ச்சி நிலையத்தின் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றது. மீகுதி 20 டொன் குப்பைகளை பொதுமக்கள் முகாமைத்துவம் செய்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் இருக்கின்ற வணக்கஸ்தலங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொலிஸ் நிலையங்கள், நீதிமன்ற வளாகம், சிறைச்சாலை, போதனா வைத்தியசாலை, பொதுச்சந்தைகள், கொல்களங்கள் என்பனவற்றில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வேலைத்தள மேற்பார்வையாளர்களின் வழிகாட்டல்களுடன் கிரமமாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுகின்றது.

மாநகரசபை கட்டளைச்சட்டம் அத்தியாயம் 252 இன் மூலம் கழிவகற்றல் மாநகரசபைக்களிக்கப்பட்ட கடமையாக காணப்படுவதுடன் 2015/53 என்ற 2017 ஏப்ரல் 20ஆம் திகதி அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அத்தியாவசிய சேவையாக திண்மக்கழிவு முகாமைத்துவம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 22 மற்றும் 25ஆம் திகதிகளில் குப்பை மேட்டிற்கு தீ மூட்டப்பட்டது இதனால் மாநகரம் பூராகவும் திண்ம கழிவகற்றல் பாரிய பிரச்சனையாக தோன்றியுள்ளது.

தனிப்பட்டவர்களின் விமர்சனங்களுக்கும், கேள்விகளுக்கும் தீர்வு சொல்ல முடியாமல் போனது, சேகரிக்கப்படும் கழிவுகளை கொண்டு கொட்டப்படும் இடத்திற்கு அருகாமையில் இருக்கும் மக்களால் குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் இடைக்கால தடையுத்தரவு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுத் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்றுவரையும் மாநகர எல்லைக்குள்  மாநகரசபையால் திண்மக்கழிவகற்றல் பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே எதிர்வரும் 14 ஆம் திகதி தீர்ப்பு கிடைக்கும் வரை மாநகர பொதுமக்கள் தங்களின் திண்மக்களிவுகளை நீங்களே முகாமை செய்யுங்கள்.

மாறாக தங்களின் வீட்டுக்கழிவுகளையும், கடைகளின் கழிவுகளையும், குறித்த இடத்திலிருந்து உரப்பைக்குள் இட்டு அதனை எடுத்துக்கொண்டு சூட்சுமமான முறையில் வீதிகளிலும், பொது இடங்களிலும், கடல் ஆறுகளிலும், தனியார் அரச காணிகளிலும் வீச வேண்டாம், அவ்வாறு வீசுபவர்களை கையும் மெய்யுமாக  பிடித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/24316

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.