Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு

Featured Replies

மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம்

 

இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

20 ஆவது திருத்­தச்­சட்ட மூலத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்பான்­மையும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என உயர்­நீ­தி­மன்றம் பாரா­ளுமன்­றத்­திற்கு அறி­வித்­துள்ள நிலையில் அதற்கு மாற்­றீ­டாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்­டத்தில் திருத்­தத்­தினை மேற்­கொள்­வ­தென எதிர்ப்புக்களுக்கு மத்­தியில் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணிக்கு நடை­பெற்ற கட்­சித்­ த­லை­வர்கள் கூட்­டத்தின் போது இவ்­வி­டயம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­போது பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழுந்­தி­ருந்­தன.

சபா­நா­யகர் கரு ஜய­­சூ­ரிய தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினை கைவிடு­வ­தெ­னவும் வலுக்­கட்­டா­ய­மாக காண­ம­லாக்­கப்­ப­டுதல் தொடர்­பான சர்­வ­தேச சம­வாயச் சட்­டத்­தினை பிற்­போ­டு­வ­தென்றும் அறி­வித்தார்.

அத­னை­ய­டுத்து 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்­ட­த்தில் பெண்­க­ளுக்கு 30 சத­வீ­த­மான ஒதுக்­கீட்­டினை வழங்கும் திருத்தச் சட்டமூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை நாளை (இன்று) விவா­தத்­திற்கு எடுப்­ப­தெ­னவும் அதில் திருத்தங்களை மேலும் உள்ளடக்குவது என்றும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த சட்டமூல நகலுக்குப் பதிலாக மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து விவாதம் நடத்தி அதனை நிறைவேற்றுவது என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 60 வீதம் தொகுதிவாரியாகவும் 40 வீதம் விகிதாசார முறையின் அடிப்படையிலும் தேர்தல் முறையினை மாற்றும் வகையில் திருத்தம் கொண்டுவரப்படும்.

இந்த திருத்தம் சபையில் நிறைவேற்றப்படுமானால் மாகாண சபைகள் மத்தியில் எல்லை நிர்ணயத்தை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். இவற்றை நிறைவு செய்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதே சிறந்தது என்று இங்கு அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மஹிந்த சம­ர­சிங்­கவும் அக்­க­ருத்­துக்­க­ளுக்கு ஒத்­த­க­ருத்­தி­னையே தெரி­வித்­தி­ருந்த நிலையில் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க் கட்சிகளான தமிழ் முற்­போக்கு கூட்­டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு மிகக்­க­டு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

முன்­ன­தாக 20ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் குறித்தம் தமக்­கு­ரிய தெளிவு­ப­டுத்­தல்கள் செய்­யப்­ப­ட­வில்லை. அதே­போன்று ஏற்­க­னவே தேர்தல் முறைமை குறித்து சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­க­ளான நான்கு தரப்­புக்கள் கூட்­டி­ணைந்து முன்­மொ­ழி­வினை செய்­துள்­ளன. ஆகவே அவை தொடர்பில் கவ­ன­மெ­டுக்­க­ வேண்டும். கண்ணை மூடிக்­கொண்டு அனைத்­திற்கும் எமக்கு ஆத­ர­வ­ளிக்க முடி­யாது என்று தொனிப்­பட இந்தக் கட்சிகளின் தலைவர்கள் கருத்­துக்­களை முன்­வைத்­துள்ளனர்.

கூட்டு எதிர்க்­கட்­சித்­ த­ரப்­பிலும் கடு­மை­யான எதிர்ப்­புக்கள் வெளியி­டப்­பட்­டன. குறிப்­பாக தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கான முனைப்­புடன் அர­சாங்கம் இத்­த­கைய செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக குற்றம்சாட்­டப்­பட்­டது. ­இ­தனால் கட்­சித்­த­லைவர் கூட்­டத்தில் கடு­மை­யான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நடை­பெற்­றன. எவ்­வா­றா­யினும் நாளைய தினம் (இன்று) மாகாண சபை தேர்தல் சட்­ட­மூ­லத்­தினை விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தென்று இணக்­கப்­பா­டின்றி ஆளும் தரப்­பினால் அறி­விக்­கப்­பட்­டுள்ளது.

பிரதமருடன் கூட்டுக் கட்சிகளின் தலைவர் சந்திப்பு

இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அடுத்து மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் எம்.பி.க்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதன்போது மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான முறையில் திருத்தம் செய்யப்படுவதை தாம் எதிர்ப்பதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

அத்துடன் மாகாண சபை தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதென்றால் தமது யோசனைகளையும் அதில் உள்ளடக்க வேண்டும் என்று மூன்று கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அவ்வாறு திருத்தம் செய்வதானால் விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 50 வீதமான உறுப்பினர்களும் தொகுதி அடிப்படையில் 50 வீதமான உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பது உட்பட சில திருத்தங்களை கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.

கூட்டுக் கட்சிகளின் உயர்பீடங்கள் அவசர சந்திப்பு

இதனையடுத்து நேற்றிரவு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்கள் சந்தித்து இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், ரிஷாத் பதியுதீன், பி.திகாம்பரம், வீ.இராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது மாகாண சபை தேர்தல் சட்டத் திருத்தத்தில் தம்மால் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் உள்ளடக்கப்படாவிடின் இன்றைய தினம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. தமது யோசனைகள் உதாசீனம் செய்யப்பட்டால் மூன்று கூட்டுக் கட்சிகளையும் சேர்ந்த 18 உறுப்பினர்களும் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருத்தம் இன்றேல் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை

இதனையடுத்து இந்த மூன்று கட்சிகளின் அதியுயர் பீட உறுப்பினர்களும் தனித்தனியாக தமக்குள் சந்தித்துள்ளனர். இந்த விடயம் குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உயர்பீடம் நேற்றிரவு கூடி ஆராய்ந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தில் தாம் முன்வைத்த திருத்தங்கள் இணைத்துக் கொள்ளப்படாவிடின் இந்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பில் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு

இவ்­வா­றான நிலையில் குறித்த சட்ட திருத்­தத்­தினை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­பது குறித்து பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நாளை (இன்று) தீர்­மா­னிக்­க­வுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கிழமை நடை­பெற்­றி­ருந்து. அக்­கூட்டம் குறித்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள விடயங்கள் தொடர்பாக நாம் விரிவாக கலந்துரையாடியிருந்தோம். உறுப்பினர்களுக்கு காணப்பட்ட சந்தேகங்கள் தொடர்பாகவும் அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆழமாக கவனம் செலுத்தினோம்.

இதேவேளை 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பதிலாக அரசாங்கம் மாகாண சபை தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தினை ஆதரிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை (இன்று) எமது பாராளுமன்றக் குழு கூடி தீர்மானிக்கவுள்ளது என்றார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் இன்று மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் மீது விவாதம் இடம்பெறவுள்ளமையினால் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை சபையில் சமூகமளித்திருக்குமாறும் எந்தவேளையிலும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெறலாம் எனவும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் படியே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.