Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி

Featured Replies

பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி

 

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

 
 
பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி
 
பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் உள்ள செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலயத்தில் இன்று ஒரு மர்மநபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபர் யார்?, காரணம் என்ன? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

சம்பவ இடத்துக்கு பிரான்ஸ் நாட்டு உள்துறை மந்திரி கெரார்ட் கோல்லம்ப் விரைந்துள்ளதாகவும் அந்த ரெயில் நிலையத்துக்கு அருகாமையில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர் ' எனக் கூறியபடி கத்திக்குத்து : இரு பெண்கள் பலி : உரிமை கோரியது ஐ.எஸ். அமைப்பு

 

 

பிரான்ஸ் நகரின் தெற்கு பகுதியிலமைந்துள்ள மார்சே நகரின் புனித சார்லஸ் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

44EC740F00000578-0-image-a-26_1506867047

இதேவேளை, கத்தியால் தாக்குதல் மேற்கொண்ட மர்மநபரை பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

குறித்த ரயில் நிலையத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர், `அல்லாஹு அக்பர்` என உரக்கக் கத்தியவாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்னர்.

44EC1E9600000578-4938248-The_attack_took

இறந்த இருவரும் 17 மற்றும் 20 வயதுடைய பெண்கள் என்றும், ஒருவர் கழுத்து அறுபட்டும், மற்றொருவர் கத்தியால் குத்தப்பட்டும் இறந்துள்ளதாக பிரான்ஸின் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44EC9EA600000578-4938248-Two_women_were_

44EC96FD00000578-4938248-A_body_lies_und

44EC257B00000578-4938248-A_knife_man_sho

44EC603300000578-4938248-After_the_stabb

44ECAA7E00000578-4938248-The_assailant_w

44ED1E7600000578-4938248-The_assailant_w

44EDE30A00000578-4938248-French_police_s

44EFAD7100000578-4938248-The_body_of_one

44F073A900000578-4938248-The_suspect_tho

44F0498A00000578-4938248-The_assailant_w

 

http://www.virakesari.lk/article/25190

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.