Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூ­தியில் ஒரே வீட்டில் இரண்டு தட­வைகள் பணி­யாற்­றிய பெண் சட­ல­மாக அனுப்பி வைப்பு

Featured Replies

சவூதி அரே­பி­யாவில் வீடொன்றில் இரண்டு வரு­டங்கள் பணிப்­பெண்­ணாக பணி­யாற்­றிய பெண் ஒருவர் நாடு திரும்பி மீண்டும் சவூதி அரே­பி­யாவில் அதே வீட்­டுக்கு பணிப்­பெண்­ணாக சென்ற அப்பெண் 6 மாதங்­களின் பின்னர் சட­ல­மாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டொன்று கிடைத்­துள்­ள­தாக கட்­டு­நா­யக்க விமான நிலைய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

136_newsthumb_death.jpgதனது மகளின் மரணம் தொடர்பில் உயி­ரி­ழந்த பச­றையை சேர்ந்த பெண்ணின் தந்தை தெரி­விக்­கையில், தனது மகளின் கைவி­ரல்­களை காய­ம­டையும் வகையில் வெட்டி, கைகளை சுட்டுப் பொசுக்­கி­ய­தான படங்கள் தனது கைத்­தொ­லை­பே­சிக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அது தொடர்பில் தான் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறை­யிட்­ட­தை­ய­டுத்து விசா­ர­ணைகள் இடம்­பெற்­று­வரும் நிலையில், தனது மகளின் சடலம் நேற்று முன்­தினம் நாட்­டுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­தென அவர் கட்­டு­நா­யக்க பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

பசறை அர­லி­ய­காவ பிர­தே­சத்தை சேர்ந்த தினுஷி பிரி­யங்கா மஹேஷி டி அல்விஸ் (36) இரு பிள்­ளை­களின் தாயான உயி­ரி­ழந்த பெண், தனது கண­வ­னை­விட்டு பிரிந்து தந்­தையின் வீட்டில் வசித்­து­வந்த நிலையில், சுமார் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வி­லுள்ள தமாம் நக­ரி­லுள்ள வீடொன்­றுக்கு பணிப்­பெண்­ணாக சென்­றுள்ளார்.

இரண்டு வரு­டங்கள் எவ்­வித இன்­னல்­களும் இல்­லாது பணி­யாற்­றி­வந்த அவர் கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்னர் ஒரு மாத விடு­மு­றையில் நாடு திரும்­பி­யி­ருந்த நிலையில், விடு­முறை நிறை­வ­டைந்­ததன் பின்னர் மீண்டும் அதே பணி­யி­டத்­துக்கு சென்­றுள்ளார்.

அவர் சவூ­திக்கு சென்று முதல் இரண்டு மாதங்­க­ளுக்கு தமக்கு பணம் அனுப்­பி­ய­தா­கவும், அதன் பின்னர் அவ­ரி­ட­மி­ருந்து எவ்­வித தக­வலும் கிடைத்­தி­ருக்­க­வில்லை என்றும் உயி­ரி­ழந்த பெண்ணின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

பின்னர் தனது மகள் தொடர்பில், அவரை வெளி­நாட்­டுக்கு அனுப்பி வைத்த முகவர் நிலை­யத்தை தொடர்­பு­கொண்டு வின­வி­ய­போது, கடந்த 8 ஆம் திகதி அவர் உயி­ரி­ழந்­த­தாக அறி­வித்­தனர் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் அதி­காலை 5. 50 மணி­ய­ளவில் சவூ­தி­யி­லி­ருந்து கட்­டு­நா­யக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 266 என்ற விமானத்தில் வந்த தினுஷி பிரியங்காவின் சடலத்தை பொறுப்பேற்ற அவரது பெற்றோர், அதனை நீர்கொழும்பு ஆதார வைத்திய சாலையின் எடுத்துச் சென்றுள்ளனர்.

http://metronews.lk/?p=15453

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.