Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள்

Featured Replies

           அவுஸ்திரேலியா இங்கிலாந்து  ஆஷஸ் தொடர்  செய்திகள்

 

பிராட், ஆண்டர்சனுக்கு வயதாகி விட்டது; ஆஸி. 3-1 என்று வெல்லும்: ஸ்டீவ் வாஹ் கருத்து

 
steve%20waugh

இங்கிலாந்தால் ஆஷஸை வெல்ல முடியாது என்கிறார் ஸ்டீவ் வாஹ்.   -  கோப்புப் படம். | ஜி.பி.சம்பத்குமார்

பிரிஸ்டல் தெருச்சண்டையில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடர் ஆடாததையடுத்து இங்கிலாந்து ஆஷஸ் தொடரை வெல்வது மிகக் கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் வானொலியில் ஸ்டீவ் வாஹ் வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பற்றி கூறியதாவது:

பென் ஸ்டோக்ஸ் வரவில்லையெனில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல முடியாது என்றே நான் நம்புகிறேன். பென்ஸ்டோக்ஸ் இல்லாமல் நாங்களே வெல்வோம்.

ஸ்டோக்ஸ் இல்லாததால் பிராட், ஆண்டர்சன் ஆகியோரது சுமை அதிகரிக்கும் மேலும் இவர்கள் இருவருக்கும் கொஞ்சம் வயதாகி விட்டது, 5 டெஸ்ட் போட்டிகளில் இவர்கள் தொடர்ச்சியாக ஆடிப் பார்த்ததில்லை.

ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை 3-1 என்று வெற்றி பெறும்.

பென் ஸ்டோக்ஸ் பொதுவெளியில் இப்படி நடந்து கொண்டது மிக மோசமானது. இது ஆட்டத்தின் மீது மோசமான ஒரு இமேஜை ஏற்படுத்தியுள்ளது.

அவரை உடனடியாக ஆஷஸ் தொடரிலிருந்து நீக்காமல் இங்கிலாந்து வாரியம் தவறிழைத்து விட்டது. ஆஸ்திரேலியாவாக இருந்தால் கதையே வேறு.

அணித்தேர்வாளர்கள் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் விளையாட வேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்தனர். அந்த அணியின் சிறந்த வீரர் ஸ்டோக்ஸ், எனவே அவர் இந்தத் தொடரில் ஆடாதது இங்கிலாந்துக்கு அவமானமே.

இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.

http://tamil.thehindu.com/sports/article19853526.ece

  • Replies 110
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கு எதிரான போர்; வெறுப்பும் ரவுத்திரமும் பழகுவோம்: டேவிட் வார்னர்

 

 
DAVIDWARNER

டேவிட் வார்னர்.   -  படம். | ஏ.பி.

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது என்பது போர் போன்றது என்றும் அந்த அணிக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டால்தான் உத்வேகம் பிறக்கும் என்று ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது ‘ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களைப் பார்த்து இங்கிலாந்து வீரர்களின் கண்களில் பயம் தெரிகிறது’என்றார் டேவிட் வார்னர்.

இந்த முறை ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “வரலாறு, பெருமை ஆகியவைதான் இந்தத் தொடரில் முக்கியம், எனவே இதனைக் காப்பாற்ற களமிறங்கும் போது அது போர் தான்.

போரில் மிகவிரைவில் களமிறங்க முயற்சி செய்வோம். எதிரணி வீரர்களின் கண்களை கூர்ந்து நோக்கி, அவரை நான் எப்படி வெறுக்க வேண்டும், அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதைப் பழக வேண்டும்.

நமக்குள் இந்தத் தீப்பொறியைக் கண்டுபிடித்துக் கொண்டால்தான் எதிரணியினரிடத்தில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் நம்மில் ஆழ்ந்து சென்று நம்மை நாமே தோண்டிச் சென்று அவர்கள் மீதான ஒரு வெறுப்பை வந்தடைய வேண்டும்.

ஸ்டார்க், கமின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் கூல்ட்டர் நைல், ஜேக்சன் பேர்ட் ஆகியோர் ஒரு அணியாக தாக்குதலுக்குத் தயாராக உள்ளனர். எனக்கே வலைப்பயிற்சிக்குச் செல்ல பயமாக இருக்கிறது. எனவே அவர்களும் அஞ்சுவார்கள்” என்றார் வார்னர்.

http://tamil.thehindu.com/sports/article19870509.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

‘ஆஷஸ்’ தொடரை வார்னர் போருடன் ஒப்பிட்டது மோசமானது: ஜோ ரூட் சொல்கிறார்

ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனான டேவிட் வார்னர், ஆஷஸ் தொடரை போருடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது என ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார்.

 
 
‘ஆஷஸ்’ தொடரை வார்னர் போருடன் ஒப்பிட்டது மோசமானது: ஜோ ரூட் சொல்கிறார்
 
இரு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானது ஆஷஸ் தொடர். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக செயல்படும்.

201710281654142871_1_2warner001-s._L_styvpf.jpg

அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் ஆஷஸ் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். ஆனார், வாலிபரை தாக்கிய வழக்கில் விசாரணை நடப்பதால் ஆஷஸ் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

201710281654142871_2_2joeroot001-s._L_styvpf.jpg

‘‘வரலாறு, பெருமை ஆகியவைதான் இந்தத் தொடரில் முக்கியம், எனவே இதனைக் காப்பாற்ற களமிறங்கும் போது அது போர் தான்.

போரில் மிகவிரைவில் களமிறங்க முயற்சி செய்வோம். எதிரணி வீரர்களின் கண்களை கூர்ந்து நோக்கி, அவர்களை நான் எப்படி வெறுக்க வேண்டும், அவரை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதைப் பழக வேண்டும்.

நமக்குள் இருக்கும் தீப்பொறியைக் கண்டுபிடித்து எதிரணியினரிடத்தில் அதனைக் கொண்டு செல்ல வேண்டும். நாம் அவர்கள் மீதான வெறுப்புணர்வை பெற, ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.’’ என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன வார்னர் கூறியிருந்தார்.

201710281654142871_3_2warner002-s._L_styvpf.jpg

வார்னரின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், கேப்டனும் ஆன ஜோ ரூட், ஆஷஸ் தொடரை போர் உடன் ஒப்பிட்டது மிகவும் மோசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘கிரிக்கெட் மிகவும் போட்டிற்குரிய ஆட்டம். ஒவ்வொருவரும் மைதானத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பார்கள். நான் அதை போர் என்று குறிப்பிடமாட்டேன். இது சற்று அதிகப்படியாக வார்த்தை என்று நினைக்கிறேன்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/28165413/1125626/Ashes-2017-England-captain-Joe-Root-says-it-was-extreme.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்

 

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்
 
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது.

தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஷஸ் தொடர் குறித்து வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எதிரணியின் பலவீனத்தை சுற்றிக்காட்டி ஒவ்வொரு வீரர்களும் கூறிவருகிறார்கள். இதற்கு தக்க பதிலடியும் கொடுப்பார்கள்.

தற்போது இந்த தொடருக்கான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இடத்தில் களம் இறங்கி விளையாட இருக்கும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

201710291536225432_1_2fastbowlers001-s._L_styvpf.jpg

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா அணி சில வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால், பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவில் அதிக அளவிலான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. எனக்கும் அவருக்கும் ஒரு பரிசோதனை தொடராக இருக்கும்.

எங்களை விட ஆஸ்திரேலியாவில் அதிக அளவிலான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் பிராட் மற்றும் ஆண்டர்கன் ஆகிய இரண்டு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் உள்ளனர். அவர்களுடன் நானும் சில வேகப்பந்து வீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளோம். பிராட், ஆண்டர்சனுடன் எங்களுடைய பந்து வீச்சும் இணைந்து ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்க போதுமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

201710291536225432_2_2chriswoakes-s._L_styvpf.jpg

ஆஸ்திரேலியா மோதுமான பேக்-அப் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கவில்லை. மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோரில் யாராவது ஒருவர் காயத்தால் அவதிப்பட்டால், யாரைக் கொண்டு அவர்கள் இடத்தை நிரப்புவார்கள்?

தற்போது வரை அவர்கள் ஏற்கனவே விக்கெட் கீப்பர் உடன் இணைந்து பேட்ஸ்மேனை தேர்வு செய்யவில்லை. அந்த இடத்தில் அவர்களுக்கு வெற்றிடம் உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் அது முக்கியமானது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/29153619/1125737/Ashes-Series-ENGvAUS-Woakes-questions-Australia-pace.vpf

  • தொடங்கியவர்

பிரிஸ்பேன் டெஸ்ட்: 31 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்- ஆண்டர்சன்

பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 31 வருடங்களாக வெற்றிபெற முடியாத நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஆண்டர்சன் கூறியுள்ளார்.

 
 
பிரிஸ்பேன் டெஸ்ட்: 31 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்- ஆண்டர்சன்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட பாரம்பரிய டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவிற்கு மிகுவும் ராசியானதாகும்.

1988-ம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. அதன்பின் அந்த அணி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் தோல்வியடைந்ததே கிடையாது.

1989 முதல் ஆஸ்திரேலியா இந்த மைதானத்தில் 28 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.

இங்கிலாந்து 1986-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. அதன்பின் 1998 மற்றும் 2010-ல் இரண்டு முறை டிரா செய்துள்ளது. 31 வருடங்களாக வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து உள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் கடந்த 31 வருடங்களாக வெற்றி பெற முடியாததற்கு முடிவு கட்ட வேண்டும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

201710312045498848_1_Anderson001-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில் ‘‘பிரிஸ்பேன் கப்பா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா கடந்த 1988-ல் இருந்து தோல்விகளை சந்தித்தது கிடையாது. வெற்றி அல்லது டிரா என்ற முடிவுகளை மட்டுமே ஆஸ்திரேலியா கண்டுள்ளது. இந்த தொடர் எப்படி செல்லப்போகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் அதிக அளவில் ஸ்விங் ஆகாது. அதனால் விக்கெட் இழப்பிற்கு மாற்று வழியைத்தேட வேண்டியது எனக்கு முக்கியமானது. பொதுவாக இங்கிலாந்து ஆடுகளம் போன்றுதான் ஆஸ்திரேலிய ஆடுகளம் இருக்கும். இங்கிலாந்தை விட கூடுதல் பவுன்ஸ் இருக்கும். புற்கள் சற்று குறைவாக இருந்தாலும், அதிக அளவில் வித்தியாசம் இருக்காது’’ என்றார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: மொயீன் அலி, ஸ்டீபன் ஃபின் காயத்தால் இங்கிலாந்து கவலை

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்து மொயீன் அலி, ஸ்டீவன் பின் ஆகியோர் காயம் அடைந்துள்ளதால் அந்த அணி கவலையடைந்துள்ளது.

 
ஆஷஸ் தொடர்: மொயீன் அலி, ஸ்டீபன் ஃபின் காயத்தால் இங்கிலாந்து கவலை
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. வரலாற்று சிறப்புமிக்க தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தொடரை வெல்ல தயாராகி வருகின்றன.

இந்த தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இங்கிலாந்து அணி வருகிற 4-ந்தேதி பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இதற்கு தயாராகிய நிலையில் மொயீன் அலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். நாளை பெர்த்தில் அவர்கள் இருவருக்கும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.


அப்போதுதான் அவர்கள் காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும். ஒருவேளை எழும்பு முறிவு ஏதும் இருந்தால் முதல் டெஸ்டில் பங்கேற்பது கடினமானதாகிவிடும். இதனால் இங்கிலாந்து அணி கவலை அடைந்துள்ளது.

201711021718281694_1_4moeenali001-s._L_styvpf.jpg

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் வலைப்பயிற்சியின்போது பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது முட்டுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பயிற்சி சீசனை புறக்கணித்தார்.

மொயின் அலி காயத்தால் அவதிப்பட்டுள்ள வந்துள்ளார். இதனால் 4-ந்தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/02171816/1126525/Moeen-Finn-to-undergo-scans-following-injury-concerns.vpf

  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காயப்படுத்துங்கள்: ஹசில்வுட் அறிவுரை

 

ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காயப்படுத்தி பேட்டிங் ஆர்டர்களை சீர்குலையச் செய்யுங்கள் என ஹசில்வுட் கூறியுள்ளார்.

 
பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காயப்படுத்துங்கள்: ஹசில்வுட் அறிவுரை
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

வெஸ்டன் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, இரண்டு நாட்கள் கொண்ட முதல் பயிற்சி ஆட்டம் நாளை பெர்த் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன்களை காயப்படுத்தி முன்னணி பேட்ஸ்மேன்களை பயத்திற்குள்ளாக்குங்கள் என்று ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கும் ஹசில்வுட் கூறியுள்ளார்.

வெஸ்டன் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கவுல்டர்-நைல் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்குத்தான் ஹசில்வுட் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார்.

201711031105014319_1_hazlewood001-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஹசில்வுட் கூறுகையில் ‘‘கவுல்டர்-நைல் தனது வேகப்பந்து வீச்சால் தொடக்கத்திலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை காயப்படுத்த முடியும். இதன்மூலம் அவர்களுக்கு பயத்தை உருவாக்க முடியும். இங்கிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடலாம். கவுல்டர்-நைல் போன்ற வீரர்கள் அவர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, பயத்தை உருவாக்க முடியும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

201711031105014319_2_hazlewood003-s._L_styvpf.jpg

என்னைப் பார்த்தோ, நாதன் லயனைப் பார்த்தோ இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பயப்படப்போவதில்லை. ஆனால் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரால் பயமுறுத்த முடியும்’’ என்றார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் உடன் இணைந்து ஹசில்வுட் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த இருக்கிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/03110448/1126609/Let-Crack-Open-the-English-Batting-Line-up-Says-Josh.vpf

  • தொடங்கியவர்
இங்கிலாந்து வீரர்களின் குடிக்கு விதிகள்

image_f72c46855f.jpg

ஆஷஷ் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், குடிக்கான நடைமுறைக்கேற்ற விதிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இணங்கியுள்ளதாகத் தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ், ஆனால் ஊரடங்குகள் எதுவுமிருக்காது எனக் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இங்கிலாந்தின் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின்போது, பிறிஸ்டல் இரவுவிடுதியொன்றுக்கு வெளியே இடம்பெற்ற கைகலப்பின் பின்னர் இவ்வாண்டு செப்டெம்பரில் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே பெய்லிஸின் மேற்கூறப்பட்ட கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, மேலும் கருத்துத் தெரிவித்த பெய்லிஸ், போட்டிகளுக்கிடையே குடிக்காமல் விடுவது நடைமுறைக்கேற்றது எனக் கூறியுள்ளதுடன் எப்போது குடிக்க வேண்டும் என்பதை வீரர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் ஆனால் எப்போது அதிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்றும் அறிந்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்து-வீரர்களின்-குடிக்கு-விதிகள்/44-206694

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: ஸ்டீவன் ஃபின் விலகல்

 

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் விலகி உள்ளார்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் பெர்த் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் காயம் அடைந்தார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டதில் இடது முழங்காலில் உள்ள குருத்தெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆஷஸ் தொடரில் இருந்து ஸ்டீவன் ஃபின் விலகி உள்ளார்.

அவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 2010-ம் ஆண்டு இரு டெஸ்ட்டில் விளையாடி உள்ளார். அவருக்கு பதிலாக 22 வயதான வேகப்பந்து வீச்சாளரான டாம் குர்ரான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டம் வரும் 23-ம் தேதி பிரிஸ்பனில் தொடங்குகிறது.

http://tamil.thehindu.com/sports/article20008725.ece

  • தொடங்கியவர்

பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி ‘பூனைக்குட்டிகள்’- விவ் ரிச்சர்ட்ஸ் கருத்து

 

 
viv%20richards

1979 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 138 நாட் அவுட், ரிச்சர்ட்ஸ் ஷாட் ஆடும் காட்சி.   -  படம். | தி இந்து ஆர்கைவ்ஸ்

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிமுக்கியமான ஆல் ரவுண்டர் ஆடவில்லை எனில் இங்கிலாந்து அணி களத்தில் ‘பூனைக்குட்டிகள்’ போல் காட்சியளிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் அவர் இது தொடர்பாகக் கூறியதாவது:

நான் பென் ஸ்டோக்ஸின் பெரிய விசிறி. அவரது உத்வேகமும், ஆக்ரோஷமும் ஆஸ்திரேலியாவில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

நம்மிடம் இத்தகைய குணங்கள் இல்லாவிடினும் ஆஸ்திரேலியர்கள் நம்மிடத்தில் இதனை ஏற்படுத்தி விடுவார்கள். பென் ஸ்டோக்ஸ் உடல் அளவிலும் மனத்தளவிலும் வலுவான வீரர். எனவே பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய களங்களில் பூனைக்குட்டிகள் போல் காட்சியளிக்கும்.

பென் ஸ்டோக்ஸ் அணிக்குப் பங்களிப்புச் செய்யும் நம்பிக்கை மிக மிக முக்கியமானது, ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டுமென்றால் அதற்கு பென் ஸ்டோக்ஸ் தவிர்க்க முடியாத ஒரு வீரர்.

இவ்வாறு கூறினார் மே.இ.தீவுகள் லெஜண்ட் விவ் ரிச்சர்ட்ஸ்.

http://tamil.thehindu.com/sports/article20013105.ece

  • தொடங்கியவர்

உக்கிரமான, உரத்த, ரவுடித்தனமான சூழல் நிலவும்: பிரிஸ்பன் டெஸ்ட் பற்றி கேப்டன் ஜோ ரூட்

 

 
joe%20root

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.   -  படம்.| ஏ.எஃப்.பி.

வரவிருக்கும் ஆஷஸ் தொடர் பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கவிருப்பதையடுத்து அங்கு தங்கள் அணிக்கு களத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கணித்துள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணி எதிரணியினரின் கேப்டன்களைக் குறிவைத்து கேலி, கிண்டல் செய்வது வழக்கம், இம்முறை ஜோ ரூட் இதற்கு இலக்காகவுள்ளார், இதற்கான முன்னறிகுறிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் ஜோ ரூட் கூறியதாவது:

“எங்களைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர்கள் ஒவ்வொருவரையும் குறி வைப்போம். கொண்டு வாருங்கள், எங்களிடம் உங்களால் முடிந்ததைக் கொண்டு வாருங்கள், போட்டிமனப்பான்மை வேண்டுமெனால் சிறிது பகைமையும் தேவைப்படுகிறது.

இது ஒரு மகா தொடர், அவர்களிடம் சில பெரிய வீரர்கள் உள்ளனர், சிலபல குணச்சித்திரங்களையும் அந்த அணி கொண்டுள்ளது. அவர்கள் பந்து வீச்சில் தரம் உயர்ந்தது, எங்களிடமும் சரிசமமான பவுலிங் உள்ளன.

பிரிஸ்பன் மைதானத்தில் ஆடும் போது பகைமையான, உரத்த, ஒருமாதிரியான ரவுடி சூழலை எதிர்பார்க்கிறோம், ஆனால் எதற்கும் தயாராக இருக்கிறோம்.

அலிஸ்டர் குக் உட்பட பெரிய சதங்களை எடுக்கத் தொடங்கி விட்டால், அது 5 டெஸ்ட் போட்டிகளுக்குமான உயிரோட்டமுள்ள மனநிலையை அளிக்கும்.

சிலர் கூறுகின்றனர், மிகவும் விரைவிலேயே உச்சத்தைத் தொட்டுவிட வேண்டாம் என்று கருதுகின்றனர், அதனால் பயிற்சி ஆட்டங்களிலேயே பெரிய சதங்கள் தேவையில்லை என்று நினைக்கின்றனர், ஆனால் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது எப்போதும் நல்லது.

இவ்வாறு கூறினார் ஜோ ரூட்.

http://tamil.thehindu.com/sports/article20445567.ece

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

 

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு
 
சிட்னி:

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 23-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய ஆயுதமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி வீரர்கள் விவரம் வருமாறு: 

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பாங்க்ரூப், ஜாக்சன் பேர்ட், பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹான்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், ஷான் மார்ஷ், டிம் பைன், சாட் சையர்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 

ஏற்கனவே, 2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/17055508/1129302/Australia-squad-for-first-two-Ashes-tests-v-England.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணியின் குழப்பம் இங்கிலாந்துக்கு சாதகம்- வார்னே சொல்கிறார்

 

 
 

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் ஏற்பட்டுள்ள குழப்பம், இங்கிலாந்துக்கு சாதகம் என வார்னே தெரிவித்துள்ளார்.

 
ஆஷஸ்: ஆஸ்திரேலிய அணியின் குழப்பம் இங்கிலாந்துக்கு சாதகம்- வார்னே சொல்கிறார்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிக்கான (பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு) ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் அணியில் சேர்க்கப்பட்டார். 7 வருடத்திற்குப் பிறகு பெய்ன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரர் ரென்ஷா நீக்கப்பட்டு கேமரூன் பான்கிராஃப்ட், ஷேன் மார்ஷ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். மேக்ஸ்வெல்லுக்கு அணியில் இடமில்லை.

மேத் வடே மற்றும் நெவில் ஆகியோரை புறந்தள்ளிவிட்டு டிம் பெய்ன்-க்கு இடம் அளித்ததற்கு முன்னாள் வீரர் விமர்சனம் செய்துள்ளனர்.

201711171938338814_1_bancroft-s._L_styvpf.jpg
கேமரூன் பேன்கிராஃப்ட்

13 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ததிலும், ஆஸ்திரேலிய அணியில் யாரை களம் இறக்குவது என்பதில் குழப்பம் நிலவுவதாலும், பிரிஸ்பேன் போட்டியில் இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய அணி குழப்பமாக நிலவுகிறது. ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பராக பெய்ன்-ஐ தேர்வு செய்துள்ளது. அவரை சொந்த மாநில அணிக்கூட தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து முதல் போட்டிக்கு சிறந்த சூழ்நிலையுடன் சென்று கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்’’ என்றார்.

201711171938338814_2_timpaine-s._L_styvpf.jpg
விக்கெட் கீப்பர் டிம் பெய்ன்

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/17193819/1129478/Advantage-England-Australia-confused--Warne.vpf

  • தொடங்கியவர்

வார்னர் வம்பிழுக்கலாம்... ப்ராட் முறைக்கலாம்..! ஆஷஸ் எனும் போர் #Ashes

 
 

உலகில் ஏதேதோ காரணங்களுக்காக போர் உருவானதைப் பார்த்திருப்போம். 5 அங்குல கோப்பை, அதில் கொஞ்சம் சாம்பல் இதற்காக 135 வருடங்களாக ஒரு போர் தொடர்ந்து நடந்து வருகிறது என்றால் நம்புவீர்களா. ஆனால், அதுதான் உண்மை! ஆஷஸ் கிரிக்கெட் தொடர். இது போட்டி அல்ல, போர். கிரிக்கெட் போட்டிகளில் சில போட்டிகள் மட்டும்தான் போட்டியாக அல்லாமல் போராக இருக்கும். அப்படிப்பட்டவையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னோடி இந்த ஆஷஸ் போட்டிகள். களத்தில் வசைபாடுவது, மற்ற வீரர்களுடன் சண்டை, தோற்றால் கேப்டன் பதவி விலகுவது எனப் பல எமோஷனல் தருணங்களுக்கு பஞ்சமில்லாத தொடர் என்றால் அது ஆஷஸ்தான். 70-வது ஆஷஸ் தொடர் வரும் நவம்பர் 23-ம் தேதி தொடங்குகிறது. அதில் வெற்றி யாருக்கு எனக் கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. 135 வருட ஆஷஸ் ஒரு பார்வை...

ஆஷஸ்

 

ஆஷஸ் வரலாறு:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 1882-ம் ஆண்டுக்குப்  பிறகு 'ஆஷஸ் தொடர்' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன. 1882-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வென்றதில்லை. ஆனால் 1882-ல் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றது.

Ashes

இத்தனைக்கும் அந்த ஒரு போட்டியில்தான் இங்கிலாந்து தோற்றிருந்தது. தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்துதான். ஆனாலும், ஓவல் தோல்வியை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'தி ஸ்போர்டிங் டைம்ஸ்',  ''இங்கிலாந்து கிரிக்கெட் இறந்துவிட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் எரிக்கப்பட்டு சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது'' என இரங்கல் செய்தியாக அறிவித்தது.

ஆஷஸ்

பின்னர், 1882-83 சீசனில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட்களின் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட்டை இங்கிலாந்து வென்று பழிதீர்த்தது. அதற்குப் பரிசாக மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக்கிற்கு ஒரு கோப்பையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெயில்ஸ்களை எரித்து சாம்பலாக வழங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

ஆஷஸ்

அதன்பின் 20 வருடங்கள் கழித்து 'ஆஷஸ்' என்ற பெயரில் அதிகாரபூர்வ தொடர் தொடங்கப்பட்டது. 1921-ல் லண்டனைச் சேர்ந்த பத்திரிகையில் ஆஷஸ் கோப்பையின் வடிவம் வெளியிடப்பட்டது. மரக்கோப்பைக்குள் சாம்பல் அடைக்கப்பட்டது போன்ற 5 அங்குல கோப்பையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தக் கோப்பையை எந்த அணி வென்றாலும் அந்த அணிக்கு ஆஷஸ் சாம்பியன் என்ற பெயர் இருக்கும்; ஆனால் கோப்பை எம்.சி.சி-யில் பாதுகாக்கப்படும். ஆனால், இது பிலிக்கிடம் இருந்த கோப்பையின் மாதிரிதான் என்றும் புதுமையாக வடிவமைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தா, ஆஸ்திரேலியாவா?

இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மாறி மாறி நடைபெற்றுவருகிறது. இதுவரை 69 தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 325 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 130 போட்டிகளை ஆஸ்திரேலியாவும், 106 போட்டிகளை இங்கிலாந்தும் வென்றுள்ளன, 89 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஆஷஸ்

இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளையும், ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணி அதிகமான போட்டிகளையும் வென்றுள்ளது. 69 தொடர்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தலா 31 தொடர்களை வென்றுள்ளன. இந்தத் தொடர், முன்னிலையை நிர்ணயிக்கும் தொடராக இருக்கும். 

Ashes

வார்னே, ஃபிளின்டாப், பீட்டர்சன், ஸ்ட்ராஸ், ரிக்கி பாண்டிங் போன்ற வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவை மிகவும் பிரபலமாகும். 1989-க்குப் பிறகு தொடர்ந்து தோற்ற இங்கிலாந்து, 2005-ல் ஃப்ளின்டாப், பீட்டர்சன் எனப் பெரும்படையோடு, தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை 'ரிட்டர்ன் ஆஃப் ஆஷஸ்' ஆக்கியது. கடந்த தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த முறை வென்றே தீருவோம் என்று பழிதீர்க்கக் காத்திருக்கிறது. இந்த வருட ஆஷஸ் கணிப்புகளில் அதிபயங்கர வீரர்களாக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும், இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் ப்ராடும் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

 

வெற்றி, தோல்வி, சதம், விக்கெட்கள், சாதனைகள் என்பதையெல்லாம் தாண்டி களத்தில் ஆக்ரோஷம், ஸ்லெட்ஜிங் எனப் பரபரப்பான டெஸ்ட் தொடராக இது இருக்கும். டெஸ்ட் போட்டிக்கான ஆர்வம் குறைந்துவிட்டது எனக் கூறுபவர்களுக்கு ஸ்லெட்ஜிங்காலும், சாதனைகளாலும் பதில் சொல்லும் ஆஷஸ் 2017.

https://www.vikatan.com/news/sports/108359-the-history-of-the-ashes-cricket-series.html

  • தொடங்கியவர்

`பல பேரின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிப்போம்!' - இங்கிலாந்துக்குச் சவால்விடும் நாதன் லயன்!

 
 

ஆஷஸ் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கப்போகிறது. ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே பரஸ்பரம் வாதம், பிரதிவாதம் நடந்த வண்ணம் இருக்கின்றன. வழக்கம்போல மைதானத்துக்கு வெளியே நடக்கும் இந்த ஸ்லெட்ஜிங் யுத்தத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களே முந்திக்கொண்டு கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர், நாதன் லயன், `இந்த ஆஷஸ் தொடர் மூலம் பலரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்று சூளுரைக்கிறார்.

Nathan Lyon

 
 

லயன், `எங்கள் அணியில், 150 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீச இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். 2013-14-ல் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர்களுக்குக் கடுமையான சவாலாக இருந்தார் மிட்சல் ஜான்சன். ஸ்வான் மற்றும் கெவின் பீட்டர்சன் அந்தத் தொடருக்குப் பிறகு விளையாடவே இல்லை. அதை, ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ், இம்முறை ரிபீட் செய்வர். பல இங்கிலாந்து வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை இந்தத் தொடரோடு முடிப்போம் என்று நம்புகிறேன்' என்று சவால்விட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/sports/108509-could-we-end-some-careers-i-hope-so-nathan-lyon.html

  • தொடங்கியவர்

பல மைல்கள் ஸ்விங் ஆகும் மேஜிக் பந்துகளையா வீசி விடப்போகிறார்கள்? பார்த்து விடுவோம் என்கிறார் குக்

 

 
cook

அலிஸ்டர் குக்.   -  படம்.| ஏ.பி.

ஆஷஸ் தொடர் பிரிஸ்பன் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில் ஆஸி. வேகப்பந்து வீச்சு குறித்து பேசப்படும் உயர்வு நவிற்சிகளை அலிஸ்டர் குக் அனாயசமாகத் தட்டிவிட்டுள்ளார்.

ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க், கமின்ஸ் கூட்டணியைப் பாராடிய அலிஸ்டர் குக் தாங்கள் பார்க்காத வேகப்பந்து வீச்சா என்ற தொனியில் ஆஸி.வேகப்பந்து வீச்சை வார்த்தையால் தட்டிவிட்டுள்ளார்.

“நாங்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் இதற்கு முன் பார்க்காதது எதுவும் இல்லை. அவர்கள் ஒன்றும் திடீரென மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசவில்லையே. ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி மைல்கள் கணக்கில் ஸ்விங் ஆகும் மேஜிக் பந்துகள் அவர்கள் பந்து வீச்சில் இல்லை.

அவர்கள் சிறந்த வீச்சாளர்கள், நல்ல சாதனை வைத்திருக்கிறார்கள். வரும் 7 வாரங்களில் எங்களுக்கு சவால் காத்திருக்கிறது.

பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன, ஆனால் ரெக்கார்டுகள் உடைக்கப்படுவதற்குத்தானே. ஒருநாள் பிரிஸ்பனில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் தோல்வியடையும். சாதனைகள் இருந்து கொண்டே இருக்காது. அனைத்து விளையாட்டுக்களிலும் அனைத்தும் மாறுவதுதானே வழக்கம்.

பிரிஸ்பனில் தோற்கும் ஆஸ்திரேலிய அணியை ஒருவரும் விரும்ப மாட்டார்கள்” என்றார் அலிஸ்டர் குக்.

http://tamil.thehindu.com/sports/article20616337.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை தொடக்கம்
 
பிரிஸ்பேன்:

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக எதையும் இழக்கத் தயார் என்கிற ரீதியில் இரு அணிகளும் களத்தில் ஆக்ரோஷமாக மல்லுகட்டி நிற்பார்கள். இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. 4 ஆண்டுகள் இடைவெளிக்குள் தலா ஒரு முறை இவ்விரு நாடுகளிலும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கும். கடைசியாக 2015-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த தொடரில் இங்கிலாந்து அணி 3-2 கணக்கில் வென்று இருந்தது.

இந்த முறை சொந்த மண்ணில் கால்பதிக்கும் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை நையபுடைக்கும் உத்வேகத்துடன் காத்திருக்கிறது. காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் அணிக்கு திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்தியுள்ளது.

நேற்றைய பீல்டிங் பயிற்சியின் போது துணை கேப்டன் டேவிட் வார்னர் கழுத்தில் காயம் அடைந்தார். கழுத்தில் ஏற்பட்டுள்ள பிடிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், முதலாவது டெஸ்ட் போட்டிக்குள் முழு உடல்தகுதியை பெற்று விடுவேன் என்று நம்புவதாகவும் வார்னர் குறிப்பிட்டார். 
 
201711221323376209_1_xprnmqe9._L_styvpf.jpg


தொடக்க ஆட்டக்காரரான வார்னருடன் அறிமுக வீரர் கேமரூன் பான்கிராப்ட் களம் இறங்குகிறார். பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு உள்ளூரில் விளையாடுவது சாதகமான அம்சமாகும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆஷஸ் கோப்பையை தக்கவைக்க தீவிர முனைப்பு காட்டுகிறது. கடந்த 5 ஆஷஸ் தொடர்களில் 4-ல் இங்கிலாந்து தான் மகுடம் சூடியது. ஆனால் இந்த முறை அவர்களின் ஆதிக்கம் நீடிக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.

அந்த அணிக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆணிவேராக விளங்கினார். பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிரட்டக்கூடியவர். இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கிய வழக்கில் அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. இதனால் அவர் அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு விட்டார். அவர் இல்லாதது இங்கிலாந்துக்கு நிச்சயம் பின்னடைவாகும். ஆனால் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் எங்களால் சாதிக்க முடியும் என்று இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக ஆஷஸ் அணியை வழிநடத்துகிறார்கள். இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
201711221323376209_2_lek6dkt3._L_styvpf.jpg


பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு 1988-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியை யாரும் வீழ்த்தியது கிடையாது. கடந்த 29 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா இங்கு விளையாடியுள்ள 28 டெஸ்டுகளில் 21-ல் வெற்றியும், 7-ல் டிராவும் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஜாக்சன் பேர்டு, பேட் கம்மின்ஸ், ஹேன்ட்ஸ்கோம்ப், ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சயேர்ஸ், மிட்செல் ஸ்டார்க்.

இங்கிலாந்து: ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, ஜாக்பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலஸ்டயர் குக், மாசோன் கிரேன், பென் போக்ஸ், ஜார்ஜ் கார்டன், டேவிட் மலான், கிரேக் ஓவர்டான், மார்க் ஸ்டோன்மான், ஜேம்ஸ் வின்சி, கிறிஸ் வோக்ஸ்.

இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/22132327/1130340/Ashes-test-serious-Australia-vs-England-match-starts.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவின் வெற்றி வரலாற்றை திருத்தி எழுதுமா இங்கிலாந்து?! #Ashes

"You hit me once I hit you back. You gave a kick I gave a slap"

'ஆஷஸ்' தொடரின் முன்னோட்டத்தை இப்படித்தான் ஆரம்பித்து வைத்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். ஏன் இப்படி என நினைப்பதற்குள்,  2013-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஹைலைட்ஸைப் போட்டு, இந்த ஆஷஸ் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது அந்த சேனல். அன்று கெவின் பீட்டர்சன், ஜானதன் டிராட், க்ரீம் ஸ்வான் என ஒரு தலைமுறைக்கான இங்கிலாந்து வீரர்களை நிலைகுலையவைத்த 'ஆஷஸ்' இன்று தொடங்குகிறது.  இந்தமுறை, கொஞ்சம் கட்டுக்கோப்புடன் விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வீரர்களின் நடத்தை குறித்து பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC). கால்பந்தில் இருப்பதைப்போல, யெல்லோ, ரெட் கார்டுகளை கள நடுவர்கள் வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளது. மேலும், ஐபிஎல் போன்ற போட்டிகளால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நட்புடன் பழகும்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஆனாலும், ஆஷஸின் அந்த மாஸ் எலிமன்ட்ஸை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

 

Ashes

வரலாறு:

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 1882-ல் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றவுடன், அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஒன்று, "இங்கிலாந்தில் கிரிக்கெட் செத்துவிட்டது' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிடவே, அதுமிகப்பெரிய மானக்கேடாகி போனது. அந்த போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸை எரித்து, அதனின் சாம்பலைக் கொண்டு நிரப்பப்பட்ட சிறிய கோப்பை ஒன்றுக்காக விளையாடப்படும் தொடர்தான் ஆஷஸ். ஆனால், இதையெல்லாம் தாண்டி வெவ்வேறு குணாதிசயங்களும், பாரம்பரியமும் இதற்கு உண்டு. 

முன்னோட்டம்:

மைக்கேல் கிளார்க், அலிஸ்டர் குக் இருவரிடத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக வித்தைகளை கற்று, இன்று தங்கள் அணிகளுக்கு தலைவர்களாக உயர்ந்து நிற்கும் ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். இதை இருவரும் பலமுறை நிரூபித்து விட்டனர். ஸ்டீவ் ஸ்மித், இலங்கை, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற முக்கியமான சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட படுதோல்விகளுக்கு தன்னுடைய சொந்த மண்ணில் ஆறுதல் தேட ஆயத்தமாகி இருப்பார். அதே நேரத்தில், கேப்டனாக, ஜோ ரூட்டிற்கு சவாலான ஒரு தொடராக இது அமையும். முதன்முறையாக ஆஸ்தேரேலிய மண்ணில் திறம்பட வழிநடத்தி, தொடரை வெல்லும் முனைப்பில் ஜோ ரூட் தன்னையும் அணியையும் தயார்படுத்தியிருப்பார்.

ஆஸ்திரேலியா v இங்கிலாந்து  (பேட்டிங்)

ஆஷஸ்

இந்த தொடரைப் பொறுத்த வரையில், இரு அணிகளுக்குமே பெரிய தலைவலியாக இருக்கப்போவது நடுவரிசை ஆட்டக்காரர்கள்தான். இரு அணிகளிலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தால் நிலைத்து நின்று, 'இந்த ஒரு பேட்ஸ்மேன் அணியைத் தூக்கி நிறுத்திவிடுவார்' என்று சொல்லத் தகுந்த வீரர்கள் இல்லை. சுய கட்டுப்பாடில்லாத காரணத்தால் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட, ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் சோபிக்காமல்இருப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பெரிய இழப்பு

இங்கிலாந்தின் மிடில் ஆர்டரில் ஜோ ரூட்டைத் தவிர, சொல்லிக்கொள்ளும்படி வேறு யாரும் இல்லை. விக்கட் கீப்பராக ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலியின் பன்முகத்தன்மையை நம்பி புதிய வீரர்களையும், அதிக அனுபவமில்லாத வீரர்களையும் களமிறக்குகிறார்கள். இதில், யாரேனும் ஒருவர் சொதப்பினாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வீரரை கட்டம்கட்டி தூக்கி விடுவார்கள். இப்படித்தான் சென்ற முறை, ஜானதன் டிராட், "நான் விலகிக்கொள்கிறேன்.." என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு இரண்டு போட்டிகளிலேயே விலகிக்கொண்டார். க்ரீம் ஸ்வானுக்கும் கிட்டத்தட்ட அதே கதி. ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல, பத்திரிகைகள், ரசிகர்களின் கூச்சல், ஏச்சுக்கள் என எதிரணியினரை ஆஸ்திரேலியா டீல் செய்வதே வேற லெவலில்தான். இந்த ஒரு காரணத்தினாலேயே, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிபெறுவதும், சாதிப்பதும் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகி விட்டது.

ஆஷஸ்

ஆஸ்திரேலியாவும் இந்தமுறை கடும் சவாலைச் சந்திக்கும். எதிரணி மூலம் அல்ல, தன்னுடைய சொந்த வீரர்கள் மூலமாகவே. வார்னர், ஸ்மித் என இரண்டு வீரர்களைச் சுற்றியே மற்றவர்கள் ஆட வேண்டுமென்கிற கட்டாயம். ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், உஸ்மான் கவாஜா போன்றவர்கள் அவ்வப்போது ஜொலித்தாலும், ஆஸ்திரேலியாவின் தரத்துக்கேற்ப அவர்கள் உள்ளனரா என்றால் ஆஸ்திரேலியர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நெடுங்காலமாக தன்னுடைய திறமையை நிரூபிக்காமல் இருந்த மேத்யூ வேடை நிர்வாகம் ஓரம்கட்டியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியிருக்கிறார் விக்கட் கீப்பர் டிம் பெயின். அவரது செயல்பாடு அனியின் வெற்றி/தோல்வியில் பெரும் பங்கு வகிக்கும்.

பௌலிங்:

Ashes

இரு அணிகளுமே பௌலிங் டிபார்ட்மெண்டில் சம பலத்தில் உள்ளன. ஏறக்குறைய ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவருக்குமே இது கடைசி ஆஷஸ் தொடராக அமையக்கூடும். ஆனாலும், இன்னமும் டெஸ்ட்அரங்கில் அட்டகாசமாகச் செயல்படும் வேகப்பந்து வீச்சாளர்கள். மொயீன் அலி தன்னுடைய திறமையை அப்படியே பௌலிங் பக்கம் திசை திருப்பி உலகின் தலைசிறந்த ஆஃப் ஸ்பின்னராக உருமாறியுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமில்லாத ஆடுகளங்களில் தன்னுடைய உடம்பை வளைத்தும், மணிக்கட்டிலிருந்து வெவ்வேறு ஆங்கிள்களில் பந்தை விடுவித்து விக்கெட் வீழ்த்துவதிலும் வித்தைக்காரர். 

 

ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்தைப் போல, அனுபவம் நிறைந்த பந்துவீச்சாளர்கள் இல்லையென்றாலும், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹெசில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயான் போன்றவர்கள் வேகம், ஸ்விங், துல்லியம், ஸ்பின் என அனைத்து பாக்ஸ்களிலும் டிக் அடித்து வைத்துள்ளனர். முதல் போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் மைதானம் ஆஸிக்கு ராசியான மைதானம். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதால், முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கை ஒங்குமென்றே தெரிகிறது.

https://www.vikatan.com/news/sports/108641-ashes-series-preview.html

101/1 * (42 ov)    1.png&h=42&w=42

 

  • தொடங்கியவர்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து நிதானமான பேட்டிங்

 
inkpng

பந்தை எல்லைக் கோட்டுக்கு விரட்டும் ஜேம்ஸ் வின்ஸ்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி நிதானமாக ரன்களை சேர்த்து வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 5.30 மணியளவில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக அலாஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மென் களத்தில் இறங்கினர்.

ஆரம்பத்திலேயே இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 10 பந்தில் 2 ரன்கள் சேர்த்திருந்த அலாஸ்டர் குக், மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த, மார்க் ஸ்டோன் மேன், ஜேம்ஸ் வின்ஸ் இணை ரன்களை நிதானமாக சேர்த்து வருகின்றனர். 53.4 ஓவர் நிலவரப்படி இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் சேர்த்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/article20676424.ece?homepage=true

138/2 * (56.3 ov)

  • தொடங்கியவர்

196/4 * (80.3 ov)

 

1.png&h=42&w=42

 
  • தொடங்கியவர்
ஆஷஸின் முதல் நாளில் 2 அணிகளும் போராட்டம்
 

image_4fbdc7ed5b.jpgimage_bc61ea516d.jpg

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர், பிறிஸ்பேணில் இன்று ஆரம்பித்த முதலாவது போட்டியுடன் ஆரம்பித்தது.

இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இங்கிலாந்து, 4 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், டேவிட் மலன் 28, மொயின் அலி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஜேம்ஸ் வின்ஸ் 83, மார்க் ஸ்டோன்மன் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ் 2, மிற்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இன்றைய முதல் நாள் மதிய நேர இடைவேளையைத் தொடர்ந்து மழை பெய்ததனால், ஆட்டம் வழமையாக முடிவுறும் நேரம் நீடிக்கப்பட்டிருந்தாலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட 80.3 ஓவர்கள் மாத்திரமே வீசக் கூடியதாய் இருந்தது. அந்தவகையில், நாளைய  இரண்டாம் நாள் ஆட்டம் அரை மணித்தியாலம் முன்பதாக, அதாவது நாளை அதிகாலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ றூட்டே தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இரண்டு அணிகளும் தாம் நேற்று அறிவித்த அணிகளையே களமிறக்கியிருந்தன. அவுஸ்திரேலியாவின் உப அணித்தலைவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான டேவிட் வோணர், சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் ஷோர்ன் மார்ஷ் ஆகியோர் உபாதைகளைக் கொண்டிருந்தபோதும் போட்டியின் பங்கேற்பதற்கான உடற்றகுதியைப் பெற்றிருந்தனர்.  

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/ஆஷஸின்-முதல்-நாளில்-2-அணிகளும்-போராட்டம்/44-207788

  • தொடங்கியவர்

ஆஷஸ்: கேட்ச் விட்ட டிம் பெய்ன் மீது ட்விட்டர் வாசிகளின் கேலிப்பார்வை

 

 
tim%20paine

ஆஷஸ் தொடர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு டிம் பெய்னை விக்கெட் கீப்பராகத் தேர்வு செய்ததற்கு பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் குவிந்த நிலையில் அருமையாக ஆடிய இங்கிலாந்து பேட்ஸ்மன் ஜேம்ஸ் வின்ஸுக்கு கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டார் அவர்.

இதனையடுத்து அவர் மீதான விமர்சனங்கள் மேலும் நியாயப்பாடு எய்தி ட்விட்டர்வாசிகள் டிம் பெய்ன் மீது விமர்சனப்பார்வைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அதாவது டிம் பெய்ன் 2006 முதல் முதல் தர கிரிக்கெட்டில் கூட சதமெடுக்காதவர், கடந்த 2 ஆண்டுகளில் ஷீல்ட் போட்டிகளில் 3-ல் மட்டுமே விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். அவரை எப்படி ஆஷஸ் தொடர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய முடியும் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று அவர் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக வீசிய நேதன் லயன் பந்தில் வின்ஸ் கொடுத்த கேட்சை விட்டார். இதனையடுத்து ட்விட்டர்வாசிகள் அவரை கேலி செய்துள்ளனர்.

ட்விட்டர் வாசகங்களில் சில...

1.நேதன் லயன் சில வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்றார், அவர் அப்படிச் சொன்னது டிம் பெய்னை அல்ல என்று நினைக்கிறோம்...

2. இப்போதைக்கு அவரைப் பார்த்தாலே சோர்வாக உள்ளது.

3. ஆஸ்திரேலியாவின் சிறந்த விக்கெட் கீப்பராம். கம்ரன் அக்மல் கூட அந்தக் கேட்சை விட்டிருக்க மாட்டார்.

4.இப்படியே போனால் இந்த டெஸ்டிலேயே பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டி வரும்

5. டிம் பெய்ன் கீப்பிங் செய்வதைப் பார்க்கும் போது விருத்திமான் சஹாவை இன்னும் அதிகமாகப் பாராட்டலாம்.

6. பாவம் டிம் பெய்ன், கையில் வந்து உட்காருவதை விடுகிறார், பந்தில் பணம் வைத்திருக்கலாம்...

http://tamil.thehindu.com/sports/article20706471.ece

 

  • தொடங்கியவர்

        1.png&h=42&w=42

     302

2.png&h=42&w=42

 
76/4 * (25.2 ov)
  • தொடங்கியவர்

பிரிஸ்பன் டெஸ்ட்: மலான் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து 302 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து

 

 
malan%20out

திருப்பு முனை விக்கெட். மலான் ஆட்டமிழப்பை கொண்டாடும் ஆஸி.   -  படம். | ஏ.பி.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்குச் சுருண்டது.

196/4 என்று தொடங்கிய இங்கிலாந்து அருமையாக ஆடி வந்த மலான் விக்கெட்டை ஷாட் தேர்வின் காரணமாக இழந்ததையடுத்து 302 ரன்களுக்குச் சுருண்டது. மலான் ஆட்டமிழந்த பிறகு 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

பிட்சில் ஈரப்பதம் காய்ந்து பந்துகள் ஓரளவுக்குச் சீராக வரத் தொடங்கின. ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தி கைகொடுத்தது. ஆனால் நேதன் லயன் பந்து வீச்சு திகைக்க வைத்தது. மலான், மொயின் அலி ஆகிய 2 இடது கை பேட்ஸ்மென்களுக்கும் அவர் தனக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினாலும் பந்துகள் நல்ல லெந்தில் லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி நன்றாகத் திரும்பி, எழும்பி மட்டையை பீட் செய்தன, ஓரு சில பந்து ஷேன் வார்னின் நூற்றாண்டின் பந்து போல் திரும்பி ஸ்டம்புக்கு அருகில் சென்றன. மலான், மொயின் அலி உண்மையில் நேதன் லயனிடம் திணறினர். மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்களில் கமின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் பந்துகளில் ஓரிரு பந்துகளில் பீட்டன் ஆயினர், ஆனாலும் சவுகரியமாகவே இருவரும் ஆடினர், விக்கெட் வீழ்த்துவது போல் அச்சுறுத்தியது நேதன் லயன்.

ஸ்மித்தின் கேப்டன்சி அபாரம் அருமையான களவியூகம், அருமையான பந்து வீச்சு மாற்றம், சமயோசித ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒருவிதத்தில் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் ஒருமணி நேரத்தில் விக்கெட்டைக் கொடுக்காமல் ஆஸி.யின் முயற்சிகளை முறியடித்து ஆடினர், ஆனால் மலான் தனது விக்கெட்டை பரிசளித்ததால் வினை தொடங்கியது.

மலான் மிக இயல்பான புல், ஹூக் வீரர் என்று தெரிகிறது. டீப் ஸ்கொயர் லெக், டீப் ஃபைன் லெக் நிறுத்தி வைத்து ஷார்ட் பிட்ச் போட்டாலும் அருமையாக தரையில் புல், ஹூக் ஆடினார், ஒன்றுமே செய்ய முடியவில்லை. மொயின் அலி நேதன் லயனிடம் பீட் ஆனாலும் ஸ்வீப் ஷாட்டில் ஒரு பவுண்டரி அடித்தார், இருவரும் சிங்கிள்கள் என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தனர்.

மலான் 130 பந்துகளில் 11 ஆக்ரோஷமான பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையிலும் இவரும் மொயின் அலியும் இணைந்து 83 ரன்களைச் சேர்த்து வலுவாக செல்ல வேண்டிய நிலையிலும் ஸ்டார்க் தனது 2-வது ஸ்பெல்லை வீச அழைக்கப்பட்டார்.

ரவுண்ட் த விக்கெட்டில் சரமாரி ஷார்ட் பிட்ச் பந்துகளை மலானுக்கு வீசினார் ஸ்டார்க். மலான் அசராமல் புல் ஆடினார், ஒர் பந்து ஸ்கொயர் லெக் பவுண்டரியில் தெறித்தது, மற்றொன்று ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த பேங்க்கிராப்ட் ஹெல்மெட் முன்பக்க கம்பியை பதம் பார்த்தது. ஆனாலும் ஸ்டார்க் ஷார்ட் பிட்ச் உத்தியை நிறுத்தவில்லை, திடீரென ஒரு பந்தை சற்று கூடுதல் வேகத்துடன் அதிகம் எழுப்ப இரண்டு கால்களையும் தூக்காமல் மலான் ஹூக் செய்தார் டாப் எட்ஜ் ஆனது, ஸ்கொயர் லெக்கில் பாதியிலேயே ஷான் மார்ஷ் கேட்ச் எடுத்தார். இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்க வேண்டாம்தான், ஆனால் அவர் அந்தப் பந்துகளை ரன் எடுக்கும் வாய்ப்பாகப் பார்க்கிறார். நல்ல அணுகுமுறை, ரிஸ்க்கி அணுகுமுறை. இது திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது ஸ்டார்க்கின் 150-வது டெஸ்ட் விக்கெட்.

102 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி, நேதன் லயன் ஒரு பந்தை லெக் அண்ட் மிடில் குட் லெந்தில் நேராக்க கால்காப்பில் வாங்கினார், நடுவர் அலீம் தார் அவுட் என்றார், ரிவியூ செய்தார் மொயின், பயனில்லை. ஆனால் லயன் பந்துவீச்சுக்கு அவர் குறைந்தது 5 விக்கெட்டுகளையாவது வீழ்த்தியிருக்க வேண்டும். ஏனெனில் எண்ணற்ற பந்துகள் மட்டையைக் கடந்தும் ஸ்டம்பை நூலிழையில் தவிர்த்தும் சென்றன. கிறிஸ் வோக்ஸ் ரன் எடுக்காமல் லயன் பந்தை மேலேறி வந்து டிரைவ் ஆட முயன்றார், பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் குட்லெந்தில் பிட்ச் ஆகித் திரும்பி ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

ஜானி பேர்ஸ்டோ கமின்ஸை ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் பின்னால் சென்று நேர் மட்டையில் ஆஃப் திசையில் ஆட வேண்டிய பந்தை புல் ஷாட் ஆட டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் ஆனது.

ஜேக் பால் இறங்கி நேதன் லயன் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார், பிறகு ஒரு ஸ்வீப், ஒரு கட் என்று மேலும் 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார். 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தை வார்னரிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

பிராட் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து கடைசியாக ஹேசில்வுட் பந்தை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 302 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் கமின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, லயன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://tamil.thehindu.com/sports/article20746447.ece?homepage=true

  • தொடங்கியவர்

பிரிஸ்பன் டெஸ்ட்: ஸ்மித், ஷான் மார்ஷ் போராட்டம்; ஆஸ்திரேலியா 165/4

 

 

 
shaun%20marsh

ஷான் மார்ஷுக்கு அமைக்கப்பட்ட களவியூகம் மற்றும் பவுன்சர் வீசிய ஸ்டூவர்ட் பிராட்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடர், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை 302 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ஸ்மித் 65 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இருவரும் சேர்ந்து 89 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.

முன்னதாக இங்கிலாந்து அணி 246/4 என்ற நிலையிலிருந்து மலான் விக்கெட்டை ஸ்டார்க் பவுன்சரில் வீழ்த்த, இங்கிலாந்து 302 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஜோ ரூட்டின் சமயோசிதமான கேப்டன்சி மற்றும் நெருக்கும் பந்து வீச்சின் காரணமாக ஆஸ்திரேலியா 25-வது ஓவரில் 76/4 என்று சரிவுமுகம் கண்டது.

முதல் நாளை விட பிட்ச் கொஞ்சம் வேகம் காட்டியது. இதனால் தொடக்க வீரர் பேங்கிராப்டுக்கு பிராட் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆனது, அவர் பந்தை மட்டையால் சீண்டினார் பேர்ஸ்டோ பிடித்தார். 5 ரன்னில் அவுட்.

500 விக்கெட் சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பந்தை வீசுவது போல் இன்னொரு பந்தை வீசவில்லை ஆனால் அனைத்தும் ஆஃப் ஸ்டம்பை நோக்கியது. இவர் இவ்வாறு வீசினாலும் 3-ம் நிலையில் உஸ்மான் கவாஜா இறங்கியதையடுத்து நேதன் லயன் பவுலிங்கைப் பார்த்த ஜோ ரூட், மொயின் அலியைக் கொண்டு வந்தார். 11 ரன்கள் எடுத்த கவாஜா, ஒரு பந்து நன்றாகத் திரும்பி மட்டையைக் கடந்து சென்றதைப் பார்த்தார், அடுத்ததாக அதே லெந்தில் பந்து நேராக வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார்.

டேவிட் வார்னர் நிதானமாக ஆடி வந்தார் மொயின் அலியை அபாரமான கவர் டிரைவ் அடித்து வரவேற்றார். 43 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் ஜேக் பால் ஓவரில் ஆஃப் ஸ்டம்பில் வந்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடினார், ஆனால் அவர் முழுநிறைவான புல் ஷாட்டை ஆடவில்லை, ஷாட் மிட்விக்கெட்டில் மலானிடம் கேட்ச் ஆனது.

தேநீர் இடைவேளை முடிந்து, கடும் நெருக்கடியில் கிரீஸிற்குள்ளேயே நின்று ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘வொர்க் அவுட்’ செய்தார். 2 பந்துகளை மணிக்கு 139, 135 கிமீ வேகத்தில் வீசி விட்டு பிறகு 132 கிமீ வேகத்தில் அரை யார்க்கர் அரை இன்ஸ்விங்கர் போல் வீசினார். பந்து நேராக பின் கால் பேடைத் தாக்கியது. கடும் முறையீட்டுக்கு நடுவர் செவிசாய்க்கவில்லை, ஆனால் 3-வது நடுவர் செவிசாய்த்தார். 76/4 என்று ஆஸி.க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஸ்மித் முதலில் பவுண்டரி அடித்தாலும் 2-வது பவுண்டரி 20 ஓவர்களுக்குப் பிறகுதான் அடித்தார், ஆஸ்திரேலியாவின் ரன் வாய்ப்புகளை சில டைட்டான பவுலிங் மூலம் இங்கிலாந்து முறியடித்தது. கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் முதல் 1 மணி நேரத்தில் ரன்கள் வேகமாக வரமுடியவில்லை என்றாலும். கடைசியில் ரன்கள் விரைவில் வந்தன. ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்களுடனும் மார்ஷ் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினால்தான் இங்கிலாந்து 302 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்ட வாய்ப்பு கிடைக்கும்.

http://tamil.thehindu.com/sports/article20770293.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.