Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஆஷஸ் வெற்றி: ஆஸி. வீரர்களுக்கு இது கொண்டாட்டமான நேரம்! (படங்கள்)

 

 
ashes_victory7

 

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரையும் வென்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தத் தொடரில் அந்த அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும் தலைமை தாங்குவது இது முதல் முறையாகும். கடந்த முறை 2015-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் இந்தமுறை ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியா வசம் சென்றுள்ளது.

இதையடுத்து கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். ஆஷஸ் கோப்பையுடன் அவர்கள் கொண்டாடிய தருணங்களின் புகைப்படங்கள் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகியவற்றின் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

ashes_victory88.jpg

ashes_captains.jpg

ashes_victory1.jpg

ashes_victory781711.jpg

ashes_victory6161611.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/18/celebrating-a-memorable-ashes-win-2828664.html

  • Replies 110
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒரு சதம் கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானித்து விடாது: மிட்செல் மார்ஷுக்கு டேரன் லீ மேன் மெசேஜ்

 

 

 

marsh

மிட்செல் மார்ஷ்.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலியா அணிக்குள் வருவதும் போவதுமாக இருந்து வரும் மிட்செல் மார்ஷ், பெர்த்தில் தன் கிரிக்கெட் வாழ்க்கையின் திருப்பு முனை சதத்தை (181) அடித்தார். ஆனால் ஒரு சதம் கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானிக்காது என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் அவருக்கு அதிரடியாக ஒரு அறிவுறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

“ஒரு இன்னிங்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையை தீர்மானிக்காது. இதே விதமான ஆட்டத்தை அவர் தொடர்ந்து ஆட வேண்டியுள்ளது. உள்ளபடியே கூற வேண்டுமென்றால் இதுதான் நிலைமை.

அடுத்த டெஸ்ட்டிலும் இதே விதமான ஆட்டத்தை அவர் ஆடி தன் இடத்துக்கான நியாயத்தை வலியுறுத்துவது அவசியமாகிறது.

மிட்செல் மார்ஷின் பந்து வீச்சு சற்றே ஏமாற்றமளிக்கிறது. அவரும் இது குறித்து என்னுடன் ஆலோசித்தார்.

அவர் பந்துவீச்சை, பீல்டிங்கை சரி செய்வதும் அவசியம். எனவே பேட்டிங், பவுலிங், பீல்டிங் ஒன்றிணையும் போது அது அபாரமாக இருக்கும்” என்றார் டேரன் லீ மேன்.

மிட்செல் மார்ஷ் இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் ஸ்லிப்பில் கையில் வந்த கேட்சை விட்டதும் டேரன் லீ மேன் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/sports/article21937879.ece

  • தொடங்கியவர்

காயத்தால் ஸ்டார்க் அவதி

 

 
21CHPMUMITCHELLSTARC

மிட்செல் ஸ்டார்க்   -  REUTERS

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது. இந்த தொடரின் 4-வது ஆட்டம் வரும் 26-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

பெர்த்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 4-வது நாள் ஆட்டத்தின் போது மிட்செல் ஸ்டார்க் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு நேற்று ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.

இதில் அவரது வலது குதிகாலில் சிராய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர், மெல்போர்ன் டெஸ்ட்டில் களமிறங்குவது சந்தேகம் என்றே கருதப்படுகிறது. அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஜேக்சன் பேர்டுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். - பிடிஐ

http://tamil.thehindu.com/sports/article22121576.ece

  • தொடங்கியவர்

ஆஷஸ் தொடர்: பாக்சிங் டே டெஸ்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் நீக்கம்

 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ‘பாக்சிங் டே’ டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஷஸ் தொடர்: பாக்சிங் டே டெஸ்டில் இருந்து மிட்செல் ஸ்டார்க் நீக்கம்
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் வருகிற 26-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் தொடங்கும் இப்போட்டிக்கு ‘பாக்சிங் டே’ என்று பெயர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடும் லெவனில் விளையாட விரும்புவார்கள்.

முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் விளையாட ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் வலதுகாலின் குதிக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் மிட்செல் ஸ்டார்க் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

201712241206130085_1_starc0022-sss._L_styvpf.jpg

ஸ்டார்க் விளையாட விரும்பிய நிலையிலும், அடுத்து தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலியா விளையாட இருக்கிறது. இதனால் ஸ்டார்க்கை விளையாட வைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதனால் பாக்சிங் டே டெஸ்டில் இருந்து நீக்கியுள்ளது.

‘‘அணியில் விளையாடாதது மிகச்சிறந்தது அல்ல. இருந்தாலும் 100 சதவீதம் உடற்தகுதி இல்லாமல் விளையாடுவது சுயநலமாக இருக்கும். நாங்கள் தொடரை வென்றுள்ளதால் பாதுகாப்பான நிலையுடன் விளையாட முடியும்’’ என ஸ்டார்க் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/24120613/1136412/Mitchell-Starc-Ruled-Out-of-Boxing-Day-Test.vpf

  • தொடங்கியவர்

‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடக்கம்: தீவிர பயிற்சியில் ஆஸி. - இங்கிலாந்து வீரர்கள்

 

 
 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.

 
 
 
 
‘பாக்சிங் டே’ டெஸ்ட் நாளை தொடக்கம்: தீவிர பயிற்சியில் ஆஸி. - இங்கிலாந்து வீரர்கள்
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், மெல்போர்ன் ஆடுகளத்தை பார்வையிடுகிறார்.
மெல்போர்ன்:
 
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை மீண்டும் வசப்படுத்தி விட்டது.
 
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
 
‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் குஸ்தியில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. அந்த பெயர் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு.
 
ஆஸ்திரலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்களின் முன்பு பெரிய பாக்ஸ் வைப்பார்கள். ஆலயத்திற்கு வருபவர்கள் நன்கொடை வழங்குவார்கள். மறுநாள் (டிசம்பர் 26) அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருட்கள் ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.
 
முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மறுநாள் தான் தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்வார்கள். அப்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக கொடுத்து அனுப்புவது வழக்கம். அதன் அடையாளமாகவும் ‘பாக்சிங் டே’ பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
 
1951-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ பெயருடன் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்டியை நடத்த முடியவில்லை. இதன் பிறகு 1980-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்டை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும். இந்த முறை அந்த பாரம்பரிய நாளில் இங்கிலாந்து அணி கால்பதிக்கிறது.
 
90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் 2010-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. இங்கிலாந்து அணி இங்கு இதுவரை 55 டெஸ்டுகளில் விளையாடி அதில் 20-ல் வெற்றியும், 28-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டு இருக்கிறது.
 
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது குதிகாலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதால் 4-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்டார்க்கின் விலகல் அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
 
மிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ‘இந்த டெஸ்டை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. 100 சதவீதம் உடல்தகுதியை எட்டாத நிலையில் இந்த டெஸ்டில் நான் விளையாடினால் அது சுயநலமாக இருக்கும். இப்போது சில நாட்கள் ஓய்வு கிடைப்பதால் காயம் முழுமையாக குணமடைவதற்கு உதவிகரமாக இருக்கும். சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்டில் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன். ஆஷஸ் தொடரை வென்றது மகிழ்ச்சியான விஷயம். இனி கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும்’ என்றார்.
 
இதே போல் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரேக் ஓவர்டானும் இந்த டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக வீரர் டாம் குர்ரன் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
 
இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/25104118/1136540/Australia-vs-England-Boxing-Day-fourth-Ashes-Test.vpf

  • தொடங்கியவர்

பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

மெல்போர்னில் இன்று தொடங்கிய ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

 
பாக்சிங் டே டெஸ்ட்: ஆஸி. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
 
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. ஆஷஸ் தொடரில் தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா, பாக்சிங் டே டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களம் இறங்கி உள்ளது.

முதல் மூன்று போட்டிகளிலும் தனது வேகப்பந்து வீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த மிட்செல் ஸ்டார்க் வலது காலின் குதிக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டார்க்கிற்குப் பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
 
201712260628572599_1_ashes2._L_styvpf.jpg


இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டிவன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி:  டேவிட் வார்னர், கேமரான் பான்கிராப்ட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் மார்ஷ், மிட்செல்  மார்ஷ், டிம் பெயின், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லயோன், ஜாக்சன் பேர்ட்.

இங்கிலாந்து அணி: அலைஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மாலன், மொயீன் அலி, ஜோனி பெர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவார்ட் பிராட், ஜிம்மி ஆண்டர்சன், டாம் கியூரன்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரான் பான்கிராப்ட்டும், டேவிட் வார்னரும் களமிறங்கியுள்ளனர். சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/26062858/1136685/Australia-won-the-toss-and-chose-to-bat-first-in-boxing.vpf

233/3 * (82.1 ov)
  • தொடங்கியவர்

ஆஷஸ் மெல்போர்ன் டெஸ்ட்: 99-ல் நோ-பாலில் அவுட் ஆகி சதம் அடித்தார் வார்னர்

 

 
warner

மெல்போர்ன் டெஸ்ட்டில் சதம் அடித்த வார்னர்   -  படம். | ராய்ட்டர்ஸ்.

ஆஷஸ் தொடர் பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் அதிரடி சதம் அடித்தார். சதமெடுத்த பிறகு 103 ரன்களில் அவுட் வார்னர் அவுட் ஆக ஆஸ்திரேலியா தேநீர் இடைவேளை நெருங்கும் தருணத்தில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

நல்ல வெழுமுனாக மழிக்கப்பட்ட பேட்டிங் பிட்சில் இங்கிலாந்தில் டாஸில் தோற்றது. முதல் 3 பந்து வீச்சு சாதக ஆட்டங்களில் எழும்பாத வார்னர் இன்று எழுச்சி கண்டார்.

பேங்கிராப்ட் சிலபல ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொண்டு திண்டாடினார், ஆனாலும் விக்கெட்டை கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் மற்றபடி அவர் இன்னிங்ஸ் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அஞ்சுமன் கெய்க்வாட், இங்கிலாந்தின் கிறிஸ் டேவரே ரக அறுவை இன்னிங்ஸ் பேங்கிராப்ட் ஆடியது.

உணவு இடைவேளையின் போது வார்னர் 83 ரன்களில் இருந்தார் என்றால் பேங்கிராப்ட் 19 ரன்களில் இருந்தார்.

ஒன்றுமில்லாத பிட்சில் வார்னர் பந்தை மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் முறையே அனுப்பி வைத்தார். ஒன்றிரண்டு கட் ஷாட்கள் பாயிண்ட் பீல்டர் அருகில் கேட்ச் உயரத்தில் சென்றது, அதையெல்லாம் ஜாண்டி ரோட்ஸ்தான் பிடிக்க முடியும். ஆண்டர்சனை ஒரு பச் என்ற ஆஃப் டிரைவ், பிராடை ஒரு ஆஃப் டிரைவ் என்று 2 பவுண்டரிகளுடன் ஆரம்பித்தார் வார்னர்.

64 பந்துகளில் அரைசதம் கண்டார் வார்னர், கிறிஸ் வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் ஆர்ம் புல் மூலம் அரைசதம் கண்டார். மொயின் அலியை லாங் ஆனில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்தார். உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 11 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்திருந்தார் வார்னர். பேங்கிராப்ட்., அறிமுக வீச்சாளர் டாம் கரன் பந்தை ஸ்லிப்புக்கு மேல் அடித்த ஒரே பவுண்டரியுடன் திணறி வந்தார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு வார்னர் 83-லிருந்து 99 ரன்களுக்கு வந்தார், 99 ரன்களில் வார்னரை ஜோ ரூட் தனது களவியூகத்தினால் கட்டிப்போட வார்னர் ஒரு ரன் எடுக்க திணறினார்.

இப்படியாகத் திணறி வந்த போதுதான் அறிமுக வீச்சாளர் டாம் கரன் வீசிய ஒரு ஷார்ட் பந்தை புல் ஷாட்டும் இல்லாமல், ஷார்ட் ஆர்ம் புல் ஷாட்டாகவும் இல்லாமல் இரட்டை மன நிலையில் வார்னர் ஆட பந்து எழும்பி மிட் ஆனில் எளிதான கேட்ச் ஆனது.

என்னடா இப்படி ஒரு மட்டமான ஷாட்டை ஆடி விட்டோமே என்று அவர் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டியபோது நடுவர் காத்திருக்குமாறு செய்கை செய்ய, நோ-பால் சரிபார்க்கப்பட்டது, டாம் கரன் வீசியது சற்றே பெரிய நோ-பால்தான், 99-ல் தப்பித்தார் வார்னர்.

பென் ஸ்டோக்ஸ், மார்க் உட் ஆகியோருக்குப் பிறகு முதல் டெஸ்ட் விக்கெட்டை நோ-பாலில் இழந்த 3-வது இங்கிலாந்து பவுலரானார் டாம் கரன். வார்னர், டாம் கரன் வீசிய அடுத்த பந்திலேயே சதம் கண்டார். இது வார்னரின் 21-வது டெஸ்ட் சதம் என்பதோடு தன் 70-வது டெஸ்ட் போட்டியில் 6,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் வார்னர்.

103 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே சென்ற பந்துடன் உறவாட நினைத்து எட்ஜ் ஆகி வெளியேறினார் வார்னர். முன்னதாக பேங்கிராப்ட் 95 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸின் இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆகி வெளியேறினார்.

தற்போது கவாஜா 10 ரன்களுடனும் ஸ்மித் 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. மெல்போர்னில் ஸ்மித்தின் கடந்த 3 முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்கள் 192, 134 நாட் அவுட், 165 நாட் அவுட். இது இங்கிலாந்துக்கு உண்மையில் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடிய புள்ளி விவரம்தான்.

http://tamil.thehindu.com/sports/article22279632.ece

 

  • தொடங்கியவர்

88 ஆயிரம் பேர் கண்டுகளித்த பாக்ஸிங் டே டெஸ்ட்! புதிய சாதனை!

 

 
mel_record1

 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி மெர்ல்பர்னில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் காணும் ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.

முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 103 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்நிலையில் மிகவும் சம்பிரதாயமான பாக்ஸிங் டே நாளான இன்று மெர்ல்பர்ன் மைதானத்துக்கு 88,172 ரசிகர்கள் வருகை தந்துள்ளார்கள். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பதிவாகியுள்ள நான்காவது பெரிய ரசிகர் கூட்டம் இது.

இந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாமல் கால்பந்து போட்டிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 110 டெஸ்ட் போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளன.

2015 உலகக் கோப்பை போட்டி இறுதிப் போட்டிக்கு 93,013 ரசிகர்கள் வருகை தந்தது இன்றுவரை சாதனையாக உள்ளது. மெல்பர்னில் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அதிக ரசிகர்கள் வந்தது அப்போதுதான். 2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 91,112 ரசிகர்களும் 2006-ல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 89,155 ரசிகர்கள் வருகை தந்தார்கள். இந்நிலையில் இன்றைய 88,172 ரசிகர்கள் வருகை பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.

melbourne1.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/26/a-tremendous-crowd-of-88172-for-day-one-of-the-boxing-day-test-2833347.html

  • தொடங்கியவர்

 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் இருந்து சில காணொளி பதிவுகள்

  • தொடங்கியவர்

1.png&h=42&w=42

 
 
 
142/2 * (44.6 ov)
  • தொடங்கியவர்

‘பாக்சிங் டே’ டெஸ்ட்: குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாளில் 192/2

 

மெல்போர்னில் நடைபெற்று வரும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்துள்ளது.

 
‘பாக்சிங் டே’ டெஸ்ட்: குக் சதத்தால் இங்கிலாந்து இரண்டாம் நாளில் 192/2
 
 
மெல்போர்ன்:
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்துள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 3-0 என வென்றதுடன் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்நிலையில் 4-வது டெஸ்ட் நேற்று பாரம்பரியமான மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ டெஸ்டில் 90 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணி வீரர்கள் களம் இறங்கினார்கள்.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் பான்கிராஃப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 64 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். பான்கிராஃப்ட் 26 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். சதம் அடித்த 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
201712271530006735_1_ashes2712._L_styvpf.jpg
 
முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 65 ரன்னுடனும், ஷான் மார்ஷ் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. ஸ்மித 76 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஷான் மார்ஷ் 61 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலேயா அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
இங்கிலாந்து அணி பந்துவீச்சில் பிராட் 4 விக்கெட்களும், ஜிம்மி ஆண்டர்சன் 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களும், டாம் குர்ரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக், மார்க் ஸ்டோன்மேன் இருவரும் களமிறங்கினர். ஸ்டோன்மேன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் 17 ரன்களில் ஹசில்வுட் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆனார். 
 
201712271530006735_2_ashes2712-1._L_styvpf.jpg
 
அதன்பின் குக்-உடன், ஜோ ரூட் இணைந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய குக் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. குக் 104 ரன்களுடனும், ஜோ ரூட் 49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ஸ்டோன்மேன், ஹசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/27153001/1136975/Cook-hundred-propels-England-to-192-for-2-at-end-of.vpf

  • தொடங்கியவர்

67 ரன்களுக்கு 7விக். இழந்து 327 ரன்களுக்கு ஆஸி. சுருண்டது; குக் சதத்துடன் இங்கிலாந்து ஆதிக்கம்

 

 
cook

சதம் அடித்த அலிஸ்டர் குக்கிற்கு சதம் அடித்த டேவிட் வார்னர் கை கொடுக்கும் காட்சி.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில் குக் சதமெடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்தின் கை ஓங்கியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியா 327 ரன்களுக்குச் சுருண்டது.

ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையிலிருந்து 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

அலிஸ்டர் குக் 166 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 104 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களுடனும் 2-ம் நாள் ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காமல் பெவிலியன் சென்றுள்ளனர். குக் தனது 32-வது சதத்தை எடுக்க, கடும் விமர்சனங்களுக்கு ஆளான ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன்னை நிரூபித்தார். கடந்த ஓரண்டில் பிராட் எடுக்கும் முதல் 4 விக்கெட்டுகளாகும் இது.

ஸ்டீவ் ஸ்மித்தை வீழ்த்த முடியுமா? அவராகவே அவுட் ஆனால்தான் உண்டு என்பதற்கேற்ப 76 ரன்களில் இருந்த போது டாம் கரன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை வீச அதனை அடிக்க முனைந்தார் ஸ்மித் பந்து மட்டையின் அடி விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. ஆம். அவராகவேதான் அவுட் ஆனார். கரன் தன் முதல் விக்கெட்டைக் கைப்பற்றினார், கரனின் பெருமை இது. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஒரு ஷாட்டை ஸ்மித்தை ஆடத் தூண்டியது முக்கியமானது.

ஸ்மித், ஷான்மார்ஷ் கூட்டணி 100 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஸ்மித் மட்டுமல்ல, மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன் ஆகியோரும் பந்தை உள்ளே வாங்கி விட்டுக் கொண்டனர், முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் பிட்ச் போல் அல்ல மெல்போர்ன் பிட்ச் கொஞ்சம் துணைக்கண்ட முதல் நாள் பிட்ச் போல் உள்ளது, அதனால் ஃபோர்சிங் ஷாட்கள் ஆடுவது கொஞ்சம் கடினம். உமேஷ் யாதவ்வுக்குப் பிறகு டாம் கரன் ஸ்மித்தை மெல்போர்னில் வீழ்த்தியவரானார்.

ஷான் மார்ஷ், பிராடின் ஃபுல் லெந்த் பந்தை காலில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் இது பிளம்ப் அவுட் என்று ரிவியூவில் தெரிய அவுட் தீர்ப்பளிக்கப்பட்டது, மார்ஷ் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

வோக்ஸ் பந்தை உள்ளே வாங்கி விட்டுக் கொண்டு மிட்செல் மார்ஷ் பவுல்டு ஆக, டிம் பெய்ன், புல் ஷாட் ஆடப்போய் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டு கொண்டார். ஆண்டர்சன் கார்ட்னி வால்ஷைக் கடந்து 520 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார்.

ஜேக்சன் பேர்டை எல்.பி.யும், கமின்ஸை எட்ஜ் ஆக்கி குக்கிடம் கேட்ச் ஆக்கியும் பிராட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லயனை, ஆண்டர்சன் எல்.பி.செய்தார். ஆஸ்திரேலியா 327 ரன்களுக்குச் சுருண்டது.

ஆண்டர்சன் 61 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஸ்டூவர்ட் பிராட் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார். கரன் ஒருவிக்கெட்.

குக் 32-வது சதம்:

இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக 3 டெஸ்ட்களில் 13 ரன்கள் சராசரியுடன் 83 ரன்களையே அடித்திருந்த அலிஸ்டர் குக், இந்த பேட்டிங் பிட்சில் தன் பார்மை கண்டுபிடித்துக் கொண்டார், மிட்செல் ஸ்டார்க் இல்லாததும் குக்கிற்கு சவுகரியமாகப் போனது, இல்லையெனில் அந்த ஓவர் த விக்கெட் பெரிய இன்ஸ்விங்கர் பந்தில் கால்காப்பை ஒளித்து வைக்க முடியாமல் வெளியேறியிருப்பார். மேலும் கடந்த 10 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட குக் அடித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பந்துகள் அவ்வளவாக எழும்பாமல், சீரான உயரத்தில் வந்ததால் குக் கட், புல் ஷாட்களை நம்பிக்கையுடன் ஆடினார். சில டிரைவ்களையும் அருமையாக ஆடினார்.

ஆட்டம் முடிவடையும் தருணத்தில் கடைசி ஓவரை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் வீசினார், முதல் பந்து புல்டாஸ் பவுண்டரி, பிறகு குக் லெக் திசையில் தன் வழக்கமான பிளிக் ஒன்றில் 2 ரன்களை எடுக்க சதத்தை நெருங்கினார், ஸ்மித் பீல்டர்களை நெருக்கமாக வர அழைத்தார். ஆனால் ஸ்மித் ஷார்ட் பிட்ச் ஒன்றை வீச லெக் திசையில் அதனை பவுண்டரிக்கு அனுப்பி 32-வது சதத்தை எடுத்தார். ஆஸ்திரேலியாவில் 5-வது சதம், 2011-க்குப் பிறகு ஆஷஸ் சதம். அதிக டெஸ்ட் ரன்கள் பட்டியலில் குக், மகேலா ஜெயவர்தனேயைக் கடந்து 8-ம் இடத்தில் உள்ளார்.

ஆனால் குக்கிற்கு ஆஸ்திரேலியா வாழ்வளித்தது என்றுதான் கூற வேண்டும் 66 ரன்களில் இருந்த போது மிட்செல் மார்ஷ் பந்தில் வந்த கேட்சை ஸ்மித் கோட்டை விட்டார். ஆனால் இது சவாலான கேட்ச் என்றுதான் கூற வேண்டும்.

முன்னதாக மார்க் ஸ்டோன்மேன் 15 ரன்களில் நேதன் லயன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேலேறி வந்து ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர் திசையில் ஆட நினைத்தார். முன் விளிம்பில் பட்டு லயனுக்கு வலது புறம் வந்தது. லயன் அதனை பிரமாதமாக பிடித்தார்.

ஜேம்ஸ் வின்ஸ் துரதிர்ஷ்டவசமாக 17 ரன்களில் ஹேசில்வுட் இன்ஸ்விங்கரில் பீட்டன் ஆகி எல்.பி.ஆனார், குக்கிடம் ரிவியூ செய்யலாமா என்று கேட்டார், குக் என்ன கூறினார் என்று தெரியவில்லை, ரிவியூ வேண்டாம் என்று வெளியேறினார், ஆனால் அது மட்டையின் உள்விளிம்பில் லேசாக பட்டது ரீப்ளேயில் தெரிந்தது. பந்து மட்டையில் பட்டது வின்ஸுக்கே தெரியவில்லை. இந்தக் காலத்து மட்டைகள் அப்படி. பேட்ஸ்மென் உணரமுடியாத அளவுக்கு அடர்த்தியான விளிம்புகளைக் கொண்டுள்ளது.

ஜோ ரூட் 49 ரன்களுக்கு அனாயசமாக ஆடினார், சதமெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஸ்மித் 104 நாட் அவுட், இங்கிலாந்து 192/2 என்று உள்ளது. நாளை காலை வந்து இன்று ஆஸ்திரேலியா சரிந்தது போல் சரியாமல் இருக்க வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/article22286570.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் இருந்து சில காணொளி பதிவுகள்

  • தொடங்கியவர்

காலையில் ஸ்டூவர்ட் பிராட்... மாலையில் அலெஸ்டர் குக்... இன்று இங்கிலாந்தின் தினம்! #Ashes

 
 

260/4 to 327/10. வாட்டே கம்பேக். எல்லோரும் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஸ்டூவர்ட் பிராட் அள்ளியது நான்கு விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 327 ரன்களில் ஆல் அவுட். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள், இங்கிலாந்தின் நாள். ஆம், முதன்முறையாக ஆஷஸ் (Ashes) தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சமேனும் ஆட்டம் காட்டியிருக்கிறது இங்கிலாந்து. பெளலர்கள் 67 ரன்களில் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்த, அலெஸ்டர் குக், ஜோ ரூட் பேட்டிங்கில் சார்ஜ் எடுத்துக்கொண்டனர். டெஸ்ட் அரங்கில் குக் 32-வது சதம் அடித்து நாட் அவுட். அவருக்குப் பக்கபலமாக ஜோ ரூட் 49 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இரண்டாவது நாள் முடிவில் இங்கிலாந்தின் ஸ்கோர் 192/2.

Alastair Cook - Ashes

 
 

ஆஷஸ் எப்போதோ இங்கிலாந்திடம் இருந்து கைநழுவிவிட்டது. பிரிஸ்பேன், அடிலெய்டு, பெர்த் டெஸ்ட்களில் சுரத்து இல்லை. கிட்டத்தட்ட எல்லாமே ஒன்சைட் கேம். ஸ்மித் சதம் அடிப்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆஷஸின் இயல்பான ஆக்ரோஷம் மிஸ்ஸிங். பாக்ஸிங் டே டெஸ்ட் கிட்டத்தட்ட இந்த ஆஷஸின் டெட்ரப்பர். இதில் வென்றாலும் கோப்பை வரப் போவதில்லை. ஆனால், இங்கிலாந்தின் மானம் காக்கப்படும். டெஸ்ட் போட்டிகளை ஐந்து நாள்கள் நடக்கும் போட்டியாகப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். அதையே Session, Session-ஆகப் பிரித்துப் பார்த்தால் எளிது. இது டிராவிட் பாணி. லஞ்ச் பிரேக் வரை தாக்குப் பிடித்துவிட்டால் போதும் என்பாராம். மதிய உணவு இடைவேளைக்குப் பின், டீ பிரேக் வரை தாக்குப்பிடித்துவிட்டால் போதும் என்பாராம். Second session முடிந்ததும், ‘இவ்வளவு நேரம் ஆடிட்டோம், இனி ஒரு Session தாக்குப்பிடிக்க முடியாதா?’ என்பாராம். டெஸ்ட் போட்டிகளில் தாக்குப் பிடிக்கும் கலை இது. 

Stuart broad celebrates his 4 wicket haul- Ashes

ஒரு வழியாக, இங்கிலாந்து வீரர்கள் முதன்முறையாக இந்த ஆஷஸ் தொடரில் Session-ல் தாக்குப்பிடிக்கும் ஃபார்முலாவைக் கண்டுபிடித்துவிட்டனர். மெல்போர்னில், பாக்ஸிங் டே அன்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளில், டேவிட் வார்னர் சதம், ஸ்மித் சதத்தை நோக்கிய வேகம் என ஆஸ்திரேலியா மிரட்டியது. 244/3. நாட் பேட். ஆனால், இரண்டாவது நாளில் ‘இது எங்க நாள்...’ என மிரட்டினர் ஸ்டூவர்ட் பிராட் அண்ட் கோ.

இங்கிலாந்து பேட்டிங். ஸ்டோன்மேன் 15, வின்ஸ் 17 ரன்களில் வெளியேற, கேப்டனும், முன்னாள் கேப்டனும் பொறுப்பேற்க வேண்டிய நிலை. அலெஸ்டர் குக் கடந்த 10 இன்னிங்ஸ்களில் அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆஷஸ் போன்ற பெரிய தொடரில், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக, பெரிய இலக்கைத் துரத்தும்போது, குக் போன்ற அனுபவ வீரர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும். ஆனால், குக் இந்தத் தொடரில் நேற்று வரை இப்படியொரு ஆட்டம் ஆடவில்லை. ஆனால், இன்று ஆடினார். பாயின்ட், கவர், லெக் சைடு என எல்லா திசைகளிலும் தேர்ந்தெடுத்து ஷாட் ஆடினார். 66 ரன் எடுத்திருந்தபோது மிட்செல் மார்ஷ் பந்தில் ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்தார். கேட்ச் மிஸ். நம்பமுடியவில்லை. குக் தப்பினார். இங்கிலாந்து தப்பியது.

Smith dropped a catch

எப்படியும் குக் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். ஜோ ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை் பிரிக்க வேண்டும் என போராடினார் ஸ்மித். பெளலர்களை மாற்றினார். ஃபீல்டர்களை மாற்றினார். ம்ஹும்... ‘நானே முதல்ல பெளலர்டா, அப்புறம்தான் பேட்ஸ்மேன்...’ என பந்தைக் கையில் எடுத்தார். பலனில்லை. குக்கை அவுட் செய்யமுடியவில்லை. ரூட் - குக் பார்ட்னர்ஷிப்பை பிரேக் செய்ய முடியவில்லை. மாறாக, குக் சதத்தை நெருங்கியிருந்தார். கேட்ச் மிஸ் செய்ததை விக்கெட் எடுத்து நேர்த்தி செய்துவிடலாம் என முயன்றார் ஸ்மித். விதி, அவர் பந்திலேயே லெக் சைடில் ஒரு பவுண்டரி அடித்தார் குக். சதம். டெஸ்ட் அரங்கில் 32-வது சதம். கூடவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில், எட்டாவது இடத்தில் இருந்த இலங்கையின் ஜெயவர்தனேவை  (11,814)ப் பின்னுக்குத் தள்ளினார். தற்போது வெஸ்ட் இண்டீஸின் சந்தர் பாலுக்கு (11,867) அடுத்த இடத்தில் இருக்கிறார்.  11,816 ரன்களுடன் எட்டாவது இடத்தில் இருக்கும் குக், நாளை பெரிய இன்னிங்ஸ் ஆடினால் சந்தர் பாலையும் பின்னுக்குத் தள்ள நேரிடும். 

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த எட்டாவது வீரர், சுனில் கவாஸ்கருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் முக்கியமான (பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்டு,சிட்னி, மெல்போர்ன்) ஐந்து மைதானங்களில் சதம் அடித்தவர் என்ற பெருமையுடன் பெவிலியன் திரும்பிய குக்கை, ஆஸ்திரேலிய வீரர்கள் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். டிரெஸ்ஸிங் ரூம் திரும்பியதும், நாளை குக்கை முதல் Session முடிவதற்குள் வீழ்த்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணி திட்டம் தீட்டும். குக் 104 ரன்னுடன் நிற்காமல், ஸ்மித் போல, விராட் கோலி போல இரட்டைச் சதம் நோக்கி நகர்ந்தால் மேட்ச் நன்றாக இருக்கும். குக் மட்டுமல்ல அரைசதத்தை சதமாக மாற்ற முடியாமல் திணறும் ஜோ ரூட், பெரிய இன்னிங்ஸ் ஆடினால், ஆட்டம் இன்னும் களைகட்டும். ஆஷஸ் அதன் இயல்பைப் பெறும்!

https://www.vikatan.com/news/sports/111981-alastair-cooks-century-keep-england-on-course.html

  • தொடங்கியவர்

 

1.png&h=42&w=42

 
 
413/8 * (127.5 ov)
 
  • தொடங்கியவர்

பாக்சிங் டே டெஸ்ட்: அலஸ்டைர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து ஆதிக்கம்; 491/9

 

 
 

மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலஸ்டைர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

 
பாக்சிங் டே டெஸ்ட்: அலஸ்டைர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து ஆதிக்கம்; 491/9
 
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் வார்னர் சதத்தாலும், ஸ்மித் அரைசதத்தாலும் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.

ஆனால் நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்தின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 327 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணியில் பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அனுபவ வீரர் அலஸ்டைக் குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். இவர்கள் ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 104 ரன்னுடனும், ஜோ ரூட் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த தாவித் மலன் (14), பேர்ஸ்டோவ் (22), மொயீன் அலி (26), கிறிஸ் வோக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அலஸ்டைர் குக் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்.

201712281520439132_1_1cook0001-s._L_styvpf.jpg

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது விக்கெட்டுக்கு அலஸ்டைர் குக்  உடன் பிராட் ஜோடி சேர்ந்தார். அப்போது குக் 182 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் குக் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ஸ்டூவர்ட் பிராட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் குக் இரட்டை சதத்தை நோக்கிச் சென்றார்.

128-வது ஓவரை ஜேக்சன் பேர்டு வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி குக் இரட்டை சதம் அடித்தார். குக்கிற்கு இது ஐந்தாவது இரட்டை சதம் ஆகும். மறுமுனையில் விளையாடிய பிராட் 59 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு குக் உடன் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். ஆண்டர்சனை ஒருபக்கம் வைத்துக் கொண்டு குக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரும் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்தனர்.

201712281520439132_2_1cook0002-s._L_styvpf.jpg

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்துள்ளது. அலஸ்டைர் குக் 244 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து விரைவாக அவுட்டானாலும், பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/28152044/1137159/Boxing-day-Melbourne-Test-Alastair-Cook-double-ton.vpf

  • தொடங்கியவர்

குக் சாதனைத் துளிகள்; பிராட் அவுட் சர்ச்சை: மெல்போர்ன் டெஸ்ட் சுவையான தகவல்கள்

 

 
khawaja

ஸ்டூவர்ட் பிராடுக்கு ‘கேட்ச்’ எடுத்த உஸ்மான் கவாஜா.   -  படம். | ராய்ட்டர்ஸ்.

மெல்போர்ன் மைதானத்தில் ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்திலும் அலிஸ்டர் குக்கை ஆஸி.யால் வீழ்த்த முடியவில்லை. அவர் 244 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆஸ்திரேலியா 491/9 என்று இன்றைய தினத்தை 164 ரன்க்ள் முன்னிலையில் முடித்துள்ளது.

தொடர்ந்து 2-வது நாளாக நாட் அவுட்டாகத் திகழும் அலிஸ்டர் குக்கிற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் 2-வது நாளாக கைகொடுத்தனர்.

குக் அடித்த அவரது 5-வது டெஸ்ட் சதம் சில சாதனைகளுக்கு அவரைச் சொந்தக் காரராக்கியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை சதம் அடித்த 3வது வீரரானார் குக்.

cookjpg

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் அலிஸ்டர் குக்.   -  படம். | ஏ.எஃப்.பி.

 

வாலி ஹேமண்ட் மற்றும் பிரையன் லாரா மற்ற இரட்டைச் சத வீரர்களாவார்கள். மெல்போர்னில் வருகை தந்த அணி வீரர் அடித்த அதிக ஸ்கோர் சாதனையையும் குக் நிகழ்த்தியுள்ளார். விவ் ரிச்சர்ட்ஸ் இங்கு 1984-ல் அடித்த 208 ரன்களே சாதனையாக இருந்தது.

பிரிஸ்பனில் 2010-11-ல் 235 ரன்கள் எடுத்த குக், ஆஸ்திரேலியாவின் பிரதான மைதானங்களில் இரண்டில் அதிக ஸ்கோர்களை அடித்த அயல்நாட்டு பேட்ஸ்மென் என்ற சாதனைக்குரியவரானார்.

ஓராண்டில் 2 இரட்டைச் சதம் அடித்த இரண்டே வீரர்கள் தற்போது விராட் கோலி, அலிஸ்டர் குக்.

பிரிஸ்பனில் குக் 235 அதிக ஸ்கோர், மெல்போர்னில் குக் 244 (இன்னும் அவுட் ஆகவில்லை) அதிக ஸ்கோர், அடிலெய்டில் ராகுல் திராவிட் எடுத்த 233 ரன்கள் இங்கு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர். பெர்த்தில் ராஸ் டெய்லர் 290 ரன்கள் எடுத்து பெர்த் சாதனையை கைவசம் வைத்துள்ளார். சிட்னியில் மட்டும் 1903-ல் டிப் ஃபாஸ்டர் எடுத்த 287 தான் இன்று வரை அதிகபட்ச தனி வீரர் ஸ்கோராக இருந்து வருகிறது.

அதே போல் 150+ ஸ்கோர்களை குக் 11 முறை எடுத்துள்ளார். இவர்தான் அதிக முறை 150+ ஸ்கோர்களை எடுத்த இங்கிலாந்து வீரராகிறார்.

அதே போல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மகேலா ஜெயவர்தனே, சந்தர்பால், பிரையன் லாரா ஆகியோரைக் கடந்து இன்று 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் குக்.

ஸ்மித், குக்கிற்கு 153 ரன்களில் மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

ஸ்டூவர்ட் பிராட் அதிரடி அரைசதமும் அவுட் சர்ச்சையும்

அலிஸ்டர் குக்கும், ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து 9-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர், அதாவது 373/8லிருந்து 473/9 வரை கொண்டு சென்றனர், இதில் பிராட் 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இவருக்கு பவுன்சர்களாகவே ஆஸ்திரேலியா வீசினர், இவரும் சில பந்துகளில் ஒதுங்கினார், குனிந்தார், பிறகு ஹூக், புல், ஸ்லேஷ் ஷாட்களை ஆடினார், நேதன் லயனை நேராக ஒரு சிக்ஸ் தூக்கினார், டைமிங்கில் அவரை ஒரு பாயிண்ட் பவுண்டரி விளாசினார். மொத்தத்தில் அபாராமாக ஆடி கிறிஸ் லூயிஸுக்குப் பிறகு 9-ம் நிலை வீரராக அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 9-வது விக்கெட்டுக்காக இதுவரை 8 முறை சதக்கூட்டணியை அனுமதித்துள்ளனர், கடந்த முறை சென்னையில் தோனி 224 ரன்கள் விளாசிய போது புவனேஷ்வர் குமாருடன் இணைந்து தோனி 9-வது விக்கெட்டுக்காக 140 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிராடுக்கு இன்று அவுட் கொடுக்கப்பட்டது பரிதாபமே. இன்னிங்ஸின் 138-வது ஓவர், கமின்ஸ் வீசினார், மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து. ஸ்லேஷ் செய்தார் தேர்ட்மேனில் பந்து காற்றில் சென்று இறங்கும் தருணத்தில் கவாஜா ஒடி வந்து தரைக்கு சற்று மேலே கேட்சைப் பிடித்தார் பந்து கையிலிருந்து நழுவியது தெரிந்தது, கவாஜா உருண்டு பந்தோடு பந்தாக எழுந்து கேட்ச் பிடித்துவிட்டேன் என்றார்.

நடுவர் தர்மசேனா அவுட் என்ற சிக்னலுடன் 3-வது நடுவர் திரும்பத் திரும்ப ரீப்ளேவைப் பார்த்தார் ஒரு கோணத்தில் பந்து தரையில் பட்டது போல் தெரிந்தது, ஆனால் தீர்மானமாக, உறுதியாக கேட்ச் தானா என்று கூற முடியவில்லை, சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குப் போவதற்குப் பதிலாக பீல்டருக்கு அளிக்கப்பட்டது, பிராட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

மொயின் அலி 7 இன்னிங்ஸ்களில் இன்று 6-வது முறையாக நேதன் லயனிடம் விக்கெட்டை இழந்தார்.

நாளை 200 ரன்கள் முன்னிலையை குக் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/article22296247.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியில் இருந்து சில காணொளி பதிவுகள்

  • தொடங்கியவர்

 

2.png&h=42&w=42

327 & 103/2 * (43.5 ov)
 
 

1.png&h=42&w=42

491
 
 
 
 
  • தொடங்கியவர்

இங்கிலாந்து வெற்றிக்கு தடைபோட்ட மழை: 4-வதுநாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு

 

மெல்போர்ன் டெஸ்டில் இன்றைய 4-வதுநாள் ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டதால் இங்கிலாந்துக்கு இருந்த வெற்றி வாய்ப்பு கரைந்துள்ளது. #AUSvENG #Ashes

 
இங்கிலாந்து வெற்றிக்கு தடைபோட்ட மழை: 4-வதுநாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு
மழையால் ஆடுகளம் மூடப்பட்டிருந்த காட்சி
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆன இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர் (103), ஸ்மித் (76), ஷேன் மார்ஷ் (61) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 327 ரன்கள்  எடுத்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக்கின் அபார இரட்டை சதத்தால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரனகள் குவித்திருந்தது. அலஸ்டைர் குக் 244 ரன்னுடனும், ஆண்டர்சன் 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201712291506466406_1_2warner-s._L_styvpf.jpg
2-வது இன்னிங்சில் 40 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருக்கும் வார்னர்

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதல் பந்திலேயே ஆண்டர்சன் ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து 491 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 194 ரன்கள் முன்னிலைப் பெற்றது. 194 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா 43.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்னாக இருக்கும்போது மழை பெய்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. வார்னர் 40 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

201712291506466406_2_2khawaja-s._L_styvpf.jpg
கவாஜாவை வீழ்த்திய சந்தோசத்தில் ஆண்டர்சன்

தற்போது ஆஸ்திரேலியா 61 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது நாளான இன்று 44 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டுள்ளது. மழையால் 46 ஓவர்கள் தடைபட்டுள்ளது. இந்த 46 ஓவர்களும் வீசப்பட்டிருந்தால் இங்கிலாந்து அணி மேலும் 100 ரன்கள் அளவில் விட்டுக்கொடுத்து ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்த வாய்ப்பு இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் மழையால் இங்கிலாந்தின் நம்பிக்கை வீண்போகியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/29150647/1137349/AUSvENG-ashes-melbourne-Test-Rain-hampered-England.vpf

  • தொடங்கியவர்

மீண்டும் சதம் அடித்தார் ஸ்மித்! டிராவில் முடிந்த 4-வது டெஸ்ட்!

 

 
smith_new1xx

 

* கடந்த 24 வருடங்களில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடியது இப்போதுதான். 

* 2017-ல் ஸ்மித் அடித்த ஆறாவது டெஸ்ட் சதம்.

* ஸ்மித்தின் இரண்டாவது நிதானமான சதம்.

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முடிவில் இந்தப் புள்ளிவிவரங்கள் தான் அதிகக் கவனத்துக்கு ஆளாகியுள்ளன. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி, வெற்றி தோல்வியில்லாமல் டிராவில் முடிவடைந்துள்ளது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகள் எட்டப்பட்ட நிலையில் மழையாலும் பேட்டிங்குக்குச் சாதகமான பிட்சினாலும் இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆகியுள்ளது.

மெல்போர்ன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 103 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 144.1 ஓவர்களில் 491 ரன்கள் குவித்தது. அலாஸ்டர் குக் 409 பந்துகளில் 27 பவுண்டரிகள் உள்பட 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 4, ஹேஸில்வுட் மற்றும் நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 4-ஆம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. வார்னர் 40, ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட அந்த அணி 61 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்தன. இன்று ஆட்டத்தைத் தொடங்கிய ஸ்மித்தும் வார்னரும் நிதானகமாகவே ரன்கள் சேர்த்தார்கள். டெஸ்ட் போட்டியிலேயே 161 பந்துகளில் 150 ரன்கள் அடிக்கக்கூடிய வார்னர், இன்று அதில் 50 ரன்கள்தான் சேர்த்தார். ஸ்மித்தின் அரை சதத்துக்கு 151 பந்துகள் தேவைப்பட்டன. சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த வார்னர், ரூட் பந்துவீச்சில் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷான் மார்ஷ் 4 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் லேசாக சூடு பிடித்தது.

பிறகு ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ், நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றினார். இதனால் தேநீர் இடைவேளை வரை இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. ஆஸ்திரேலிய அணி 118-வது ஓவரில்தான் 250 ரன்களைத் தொட்டது. ஆறே பவுண்டரிகளுடன் 259 பந்துகளில் சதமெடுத்தார் ஸ்மித். இது அவருடைய 23-வது டெஸ்ட் சதமாகும். 

smith_4th1.jpg

ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் இருந்தபோது இரு கேப்டன்களும் ஆட்டத்தை முடித்துக்கொண்டார்கள். அப்போது ஸ்மித் 102, மார்ஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கிட்டத்தட்ட முழு நாளில் ஆஸ்திரேலிய அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என முன்னிலை வகித்துத் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 4 அன்று சிட்னியில் தொடங்கவுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/30/steven-smith-caps-epic-2017-with-hundred-to-deny-england-2835820.html

  • தொடங்கியவர்

‘சோம்பேறி’ விமர்சனத்துக்கு உஸ்மான் கவாஜா பதில்

 

 
khawaja

ஆண்டர்சனிடம் அவுட் ஆன உஸ்மான் கவாஜா.   -  படம். | ஏ.பி.

ஸ்மித் தலைமை ஆஸ்திரேலிய அணியில் தேறாத ஒரு வீரர் உஸ்மான் கவாஜா என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்ததையடுத்து உஸ்மான் கவாஜா தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, உஸ்மான் கவாஜாவை ‘சோம்பேறி’ என்று வர்ணித்தார்.

இதனையடுத்து உஸ்மான் கவாஜா கூறியதாவது:

இந்த விமர்சனங்கள் எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே உள்ளது. முதல் இன்னிங்ஸில் என்னுடைய ஸ்கோரிங் விகிதம் மீது ஓரிருவர் விமர்சனங்களை வைத்திருந்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட், சில வேளைகளில் ரன்களை எளிதில் எடுத்து விட முடியாது. அதற்காக அடிப்பதற்கான நோக்கம் எனக்கில்லை என்று கூறுவதா?

என்னுடைய டிரைவ்கள் சில பீலடர்கள் கைக்குச் சென்றன. பந்தும் அதன் திடத்தன்மையை இழந்து மென்மையானதால் என்னால் வியூகத்தை ஊடுருவ முடியவில்லை. பந்து திடமாக இருந்திருந்தால் அடித்திருக்கலாம்.

முதல் நாளில், மந்தமான பிட்சில் என் பேட்டிங்கை மட்டும் குறைகூறியது எனக்கு அதிசயமாக இருக்கிறது. ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளில் விரைவில் ரன் எடுக்க முடியாது, பிராடும் கடும் விமர்சனத்துக்குப் பிறகு நன்றாக வீசினர், பொதுவாக அவர்கள் சிக்கனமாக வீசினர். இந்நிலையில் என் பேட்டிங்கை விமர்சிப்பது அதிசயமாகவே இருக்கிறது.

இவ்வாறு கூறினார் கவாஜா.

http://tamil.thehindu.com/sports/article22338551.ece

  • தொடங்கியவர்

90 மைல் வேகப்பந்து வீச்சு, பெரிய செஞ்சூரி இருந்தால் மட்டுமே ஆஷஸ் கோப்பை: ஆண்டர்சன்

 

90 மைல் வேகப்பந்து வீச்சாளர்களும், பெரிய செஞ்சூரி அடிக்கும் பேட்ஸ்மேன்களும் இருந்தால்தான் ஆஸி. மண்ணில் ஆஷஸ் தொடரை வெல்ல முடியும் என ஆண்டர்சன் கூறியுள்ளார். #Ashes #AUSvENG

 
90 மைல் வேகப்பந்து வீச்சு, பெரிய செஞ்சூரி இருந்தால் மட்டுமே ஆஷஸ் கோப்பை: ஆண்டர்சன்
 
இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திகழ்ந்து வருகிறார்கள். ஆண்டர்சன் 522 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சர்வதேச அளவில் 5-வது இடத்தில் உள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 398 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 15-வது இடத்தில் உள்ளார்.

இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு பல்வேறு வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளது. இங்கிலாந்து ஆடுகளத்தில் இருவரும் ராஜாக்கள். இவர்களது ஸ்விங் பந்தை எதிர்கொள்வது சுலபமல்ல. ஆனால் இங்கிலாந்தை விட்டு வெளியே செல்கின்றபோது திணறுகிறார்கள். இவர் நன்றாக பந்தை ஸ்விங் செய்யும் வல்லமை படைத்தவர்கள். ஆனால் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் இவர்களால் தொடர்ச்சியாக பந்து வீச முடியாது.

தற்போது ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். ஆடுகளத்தில் ஸ்விங் அதிக அளவில் இல்லாததாலும், பவுன்சஸ்கு சாதகமான ஆடுகளத்தில் 140 கி.மீட்டருக்கு மேல் வீச முடியாததும்தான் இதற்கு காரணம். மேலும் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் எந்த பேட்ஸ்மேன்களும் நீண்ட இன்னிங்ஸ் விளையாடவில்லை.

இந்நிலையில் 90 மைல் வேகத்திற்கு மேல் பந்து வீசும் பவுலர்களும், பெரிய செஞ்சூரி அடிக்கும் பேட்ஸ்மேன்களும் இருந்தால்தான் அடுத்த ஆஷஸ் தொடரை கைப்பற்ற முடியும் என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். மெல்போர்ன் டெஸ்டில் ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் ஒத்துழைக்கவில்லை.

201801012100036745_1_anderson001-s._L_styvpf.jpg

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘58 அல்லது 59-வது ஓவரில் என்னுடைய வேகம் குறைந்தது என்பது எனக்குத் தெரியும். நான் பந்து வீசிய பின் எனது பந்து என்ன வேகத்தில் சென்றது என்பதை பார்ப்பேன். அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் அந்த பந்துகளில் எத்தனை ரன்கள் எடுப்பார் என்பதையும் பார்ப்பேன். நான் வேகமாக பந்து வீச முயற்சி செய்தேன். ஆனால், ஆடுகளம் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

அங்குள்ளவர்கள் என்னிடம், உங்களால் கூக்கபுர்ரா பந்தில் வேகமாக பந்து வீச முடியாது என்று கூறினார்கள். அது அவர்கள் பார்வை என்று நான் கூறினேன்.

ஆனால் ஸ்டார்க் போன்ற வீர்ரகள் அல்லது 90 மைல் வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுக்கள் கிடைக்கும். 90 மைல் வேகத்திற்கு மேல் பந்து வீசும் நபரை நாங்கள் பெற்றிருந்தால் சிறந்ததாக இருந்திருக்கும். இது ஒரு முக்கியமான காரணி.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுகுறித்து யோசிப்பது காலதாமதமானது. இருந்தாலும் நான் 5 கி.மீட்டர் வேகத்தை கூட்டினால் சிறந்ததாக இருக்கும்.

அதேபோல் எங்களது அணி வீரர்கள் பெரிய செஞ்சூரி அடிப்படி அவசியமானது. நாம் அனைத்து டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தோம் என்றால், ஒரு அணி வெற்றி பெற்றிக்கிறது அல்லது உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றால், அந்த அணியின் ஒரு வீரர் பெரிய செஞ்சூரி அடித்திருப்பார். மெல்போர்னில் அலஸ்டைர் குக் இரட்டை சதம் அடித்திருந்தார். இருந்தாலும் வெற்றி பெற முடியாமல் போனது’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/01210004/1137940/Ashes-AUSvENG-England-will-need-a-90mph-bowler-and.vpf

  • தொடங்கியவர்

டிராவில் முடிந்த டெஸ்ட்: மெல்போர்ன் ஆடுகளம் மோசம் என ஐசிசி அறிக்கை!

 

 
melbourne1

 

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி டிராவில் முடிந்தது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த ஆட்டம் வெற்றி-தோல்வி இல்லாமல் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை மோசம் என ஐசிசி மதிப்பிட்டுள்ளது.

மெல்போர்ன் நகரில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 103 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஸ்மித் 76 ரன்களுக்கு வீழ்ந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 51 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தொடங்கிய இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் அலாஸ்டர் குக் அபாரமாக ஆடினார். இரட்டைச் சதம் கடந்த அவர் 27 பவுண்டரிகள் உள்பட 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரால் இங்கிலாந்து 144.1 ஓவர்களில் 491 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஹேஸில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸில் 164 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா 124.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 102, மிட்செல் மார்ஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இத்துடன் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக அலாஸ்டர் குக் அறிவிக்கப்பட்டார்.

mel_record1.jpg

இந்நிலையில் ஆடுகளம் குறித்த அதிருப்தியை இரு அணி கேப்டன்களும் தெரிவித்தார்கள். பந்துவீச்சுக்கு ஏற்றதாக இல்லாமல் பேட்டிங்க்குச் சாதகமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்கள்.

4-வது டெஸ்ட் போட்டிக்கான ஐசிசி நடுவர் ரஞ்சன் மடுகலே மெல்போர்ன் ஆடுகளம் குறித்த தனது அறிக்கையை ஐசிசியிடம் சமர்ப்பித்தார். அதில், 5 நாள்களில் 24 விக்கெட்டுகள் மட்டும் வீழ்ந்த மெல்போர்ன் ஆடுகளம் மோசம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய ஆடுகளம் ஒன்று மோசம் என ஐசிசி நடுவரால் மதிப்பிடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதையடுத்து இந்தப் புகாருக்கு 14 நாள்களில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பதில் அளிக்கவேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/02/mcg-on-notice-after-icc-rates-pitch-poor-2837543.html

  • தொடங்கியவர்

ஆஷஸ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறுமா?

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.#Ashes #AUSvENG

 
ஆஷஸ் கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்: இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறுமா?
 
சிட்னி:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 5 போட்டி கொண்ட தொடரில் முதல் 3 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது.

பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் 120 ரன் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 41 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது.

இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்டதால் ஆறுதல் வெற்றி பெற கடுமையாக போராடும். அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் தொடரை இழந்தது. ஆனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக காணப்படுகிறது. கேப்டன் ஸ்டீபன் சுமீத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இத்தொடரில் அவர் 3 சதம் அடித்து உள்ளார். பந்துவீச்சிலும் பலம் வாய்ந்து உள்ளது.
 
201801031122234238_1_smith._L_styvpf.jpg


கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலிஸ்டயர் கூக் 12 ஆயிரம் ரன்னை நெருங்குகிறார். அவர் 151 டெஸ்டில் 11 ஆயிரத்து 956 ரன் எடுத்து உள்ளார்.
 
201801031122234238_2_cook._L_styvpf.jpg


12 ஆயிரம் ரன்னுக்கு இன்னும் 44 ரன்னே தேவை. கடைசி டெஸ்டில் அவர் 12 ஆயிரம் ரன்னை கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/03112223/1138201/AUSvENG-Ashes-last-Test-starts-tomorrow.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.