Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா இங்கிலாந்து ஆஷஸ் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்!

 

 
5thtest1

 

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

இத்தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-ஆவது ஆட்டத்தை டிரா செய்தது இங்கிலாந்து. கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்த ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றியாவது அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஸ்டோன்மேனை வீழ்த்தினார் கம்மின்ஸ். நிதானமாக விளையாடி வந்த குக்குக்கு நல்ல இணையாக இருந்த வின்ஸ், 25 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் 39 ரன்களில் உறுதியுடன் விளையாடி வந்த குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேஸில்வுட். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. இதனால் மிகவும் கவனமுடன் விளையாடி வருகிறார்கள். 

தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ரூட், மலன் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/04/ஆஷஸ்-டெஸ்ட்-இங்கிலாந்து-நிதான-ஆட்டம்-2838739.html

136/3 * (50.2 ov)

  • Replies 110
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டெஸ்ட்: முதல்நாளின் முடிவில் மீண்டு வந்த ஆஸ்திரேலியா! குக், மலான் அரை சதங்கள்!

 

 
5th_cook1

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று தொடங்கியுள்ளது. 

இத்தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-ஆவது ஆட்டத்தை டிரா செய்தது இங்கிலாந்து. கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்த ஆஸ்திரேலியா முனைப்புடன் உள்ளது. அதேநேரம், ஆறுதல் வெற்றியாவது அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இங்கிலாந்து.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஸ்டோன்மேனை வீழ்த்தினார் கம்மின்ஸ். நிதானமாக விளையாடி வந்த குக்குக்கு நல்ல இணையாக இருந்த வின்ஸ், 25 ரன்களில் வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் 39 ரன்களில் உறுதியுடன் விளையாடி வந்த குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேஸில்வுட். ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்கமுடியவில்லை. இதனால் மிகவும் கவனமுடன் விளையாடி வருகிறார்கள். 

தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 42 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. ரூட், மலான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

அதன்பிறகு இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். ரூட் 82 பந்துகளிலும் மலான் 146 பந்துகளிலும் அரை சதமெடுத்தார்கள். 80 ஓவர்களுக்குப் பிறகு புதிய பந்தைக் கையில் எடுத்தது ஆஸ்திரேலியா. இதற்கு உடனே பலன் கிடைத்தது. 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இங்கிலாந்து இருந்தபோது திருப்பம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட முதல் நாள் முடிவடையும் தருவாயில் ஸ்டார்க் பந்துவீச்சில் மார்ஷின் அபாரமான கேட்சினால் ரூட் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தவந்த பேர்ஸ்டோவ் ஹேஸில்வுட் பந்துவீச்சில் 5 ரன்களில் வீழ்ந்தார். 

முதல்நாள் முடிவில் 81.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. மலான் 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/04/starc-and-hazlewood-strike-late-as-england-waste-hard-work-2838770.html

  • தொடங்கியவர்

 

1.png&h=42&w=42

346
 
 
 

 

2.png&h=42&w=42

159/2 * (54.2 ov)

 

 
 
 
  • தொடங்கியவர்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் கவாஜா, ஸ்மித் பொறுப்பான ஆட்டம்: இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 193/2

ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் கவாஜா, ஸ்மித் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால், ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் சேர்த்துள்ளது. #Ashes #AUSVENG

 
ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் கவாஜா, ஸ்மித் பொறுப்பான ஆட்டம்: இரண்டாம் நாளில் ஆஸ்திரேலியா 193/2
 
சிட்னி:

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலஸ்டைர் குக் 39 ரன்களும், ஸ்டோன்மேன் 24 ரன்களும் எடுத்தனர். வின்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.

4-வது விக்கெட் ஜோடியான ஜோ ரூட்- தாவித் மலன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால்  அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ஜோ ரூட் 83 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து 81.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது. தாவித் மலன் 55 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய மலன் 62 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 30, குரன் 39, பிராட் 31 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சைத் தொடங்கியது. துவக்கவீரர் பான்கிராப்ட் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால், அதன்பின்னர் இணைந்த வார்னர்-கவாஜா ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அரை சதம் கடந்த வார்னர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
201801051343010408_1_2hme9ls0._L_styvpf.jpg


இதேபோல் அரை சதம் கடந்த கவாஜாவும் சதத்தை நோக்கி நெருங்கினார். மறுமுனையில் கேப்டன் ஸ்மித்தும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
 
201801051343010408_2_ck33p1ph._L_styvpf.jpg


இதனால் இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 91 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/05134301/1138594/AUSvENG-Usman-Khawaja-and-Steve-Smith-lead-strong.vpf

  • தொடங்கியவர்

 

2.png&h=42&w=42

442/4 *
 
  • தொடங்கியவர்

சிட்னி டெஸ்ட்: கஜாவா, மார்ஷ் சகோதரர்களால் 3-வது நாள் முடிவில் ஆஸி. 479-4

 

சிட்னியில் நடைபெற்று வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது. #Ashes #AUSvENG

 
சிட்னி டெஸ்ட்: கஜாவா, மார்ஷ் சகோதரர்களால் 3-வது நாள் முடிவில் ஆஸி. 479-4
சதம் அடித்த மகிழ்ச்சியில் பேட்டை உயர்த்தும் கவாஜா
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜோ ரூட் (83), தாவித் மலன் (62) ஆகியோரின் அரைசதத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீர்ர பான் கிராப்ட் டக்அவுட் ஆனாலும் அடுத்து வந்த கவாஜா வார்னர் உடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வார்னர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் பெவிலியன் திரும்பினார். 3-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.

201801061526336054_1_1marsh002-s._L_styvpf.jpg
ஷேன் மார்ஷ் பந்தை விரட்டும் காட்சி

கவாஜா சதத்தை நெருங்கிய நேரத்தில் நேற்றைய 2-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. கவாஜா 91 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 67 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கஜாரா சதமும், ஸ்மித் அரைசதமும் அடித்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஸ்மித் 83 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்தில் ஆட்டம் இழந்தார். கவாஜா - ஸ்மித் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது.

4-வது விக்கெட்டுக்கு கவாஜா உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். 150 ரன்களை தாண்டி விளையாடிய கவாஜா 171 ரன்கள் எடுத்த நிலையில் மேசன் கிரேன் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்திருந்தது.

201801061526336054_2_1Marsh001-s._L_styvpf.jpg
அரைசதம் அடித்து களத்தில் நிற்கும் மார்ஷ் சகோதரர்கள்

5-வது விக்கெட்டுக்கு ஷேன் மார்ஷ் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். மார்ஷ் சகோதரர்களாக இவர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரைசதம் கடந்தனர். ஷேன் மார்ஷ் சதத்தை நெருங்கிய நிலையில் 3-வது நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஷேன் மார்ஷ் 98 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 63 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் குவித்துள்ளது.

தற்போது வரை ஆஸ்திரேலியா 133 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வேகமாக விளையாடி 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது. #Ashes #AUSvENG #SydneyTest

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்
  •  
Day 4 Session 3: England trail by 223 runs with 6 wickets remaining
 
 
  • தொடங்கியவர்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸி. 649 ரன் குவிப்பு- இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

 

ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடி வருகிறது. #Ashes #AUSvENG

 
ஆஷஸ் கடைசி டெஸ்ட்: ஆஸி. 649 ரன் குவிப்பு- இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?
சதம் அடித்த மார்ஷ் சகோதரர்கள்
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 479 ரன் எடுத்து இருந்தது. உஸ்மான் கவாஜா 117 ரன் குவித்தார்.

ஷான் மார்ஷ் 98 ரன்னுடனும், மிட்சேல் மார்ஷ் 63 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 133 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடியது.

மார்ஷ் சகோதரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். ஷான் மார்ஷ் முதலில் சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 28-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 6-வது சதமாகும்.

201801071408265646_1_1cook001-s._L_styvpf.jpg
குக்கை வீழ்த்திய சந்தோசத்தில் ஸ்டார்க்

அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் மிட்சேல் மார்ஷ் சதம் அடித்தார். அவர் 140 பந்துகளில் 15 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 24-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3-வது செஞ்சூரியாகும். சதம் அடித்த சிறிது நேரத்தில் மிட்செல் மார்ஷ் 101 ரன்னில் அவுட் ஆனார். ஷேன் மார்ஷ் 156 ரன்கள் எடுத்து ரன்அவட் மூலம் வெளியேறினார்.

மார்ஷ் சகோதரர்கள் அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பெய்ன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

201801071408265646_2_1vince-s._L_styvpf.jpg
அவுட்டாகிய கவலையில் தாவித் மலன்

பின்னர் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து குக் உடன் வின்ஸ் ஜோடி சேர்ந்தார். குக் 10 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் க்ளீன் போல்டானார். வின்ஸ் 18 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார்.

4-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ஜோ ரூட் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்து வந்த தாவித் மலன் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் இங்கிலாந்து 68 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

201801071408265646_3_1Lyon-s._L_styvpf.jpg
விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் நாதன் லயன்

5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 42 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்துக்கு இன்னும் 210 ரன்கள் தேவைப்படுகிறது. இங்கிலாந்துக்கு தோல்வி அல்லது டிரா என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. டிரா செய்ய வேண்டுமென்றால் இந்த ஜோடி நாளைய கடைசி நாள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். ஏறக்குறைய ஒருநாள் முழுவதும் நிலைத்து நிற்பது எளிதான காரியம் அல்ல. இதனால் சிட்னி டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. #Ashes #AUSvENG #NathanLyon #Alastaircook #JoeRoot

http://www.maalaimalar.com/News/TopNews/2018/01/07140827/1138903/Ashes-AUSvENG-australia-649-dec-england-struggle-93.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி: தொடர் நாயகன் விருதை வென்றார் ஸ்மித்

 
+

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.#Ashes #AUSvENG AUS v ENG

 
 
 
 
ஆஷஸ் கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி: தொடர் நாயகன் விருதை வென்றார் ஸ்மித்
 
சிட்னி:

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 346 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரூட் 83 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது.

உஸ்மான் கவாஜா 171 ரன்கள், ஷான் மார்ஷ் 156 ரன்கள், மிட்செல் மார்ஷ் 101 ரன்கள், ஸ்மித் 83 ரன்கள் குவித்தனர். இதனால் 4-ம் நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய அணி  7 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
 
201801080952396034_1_12._L_styvpf.jpg


பின்னர் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.ஸ்டோன்மேன் ரன் எதுவும் எடுக்கமல் அவுட் ஆனார். குக் 10 ரன்களும், வின்ஸ் 18 ரன்களும், தாவித் மலன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 42 ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஜோ ரூட் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஆட்டத்திலிருந்து பாதியில் விலகினார். அதன்பின் இணைந்த வீரர்களும் நிலைக்கவில்லை.
 
201801080952396034_2_root._L_styvpf.jpg


மொயீன் அலி 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். விக்கெட்டை காப்பாற்ற கடுமையாகப் போராடிய பேர்ஸ்டோவ் 38 ரன்கள் சேர்த்தார். பிராட் 4 ரன்கள், கிரேன் 2 ரன்கள், ஆண்டர்சன் 2 ரன்கள் என வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து அணி 180 ரன்களில் சுருண்டது. குரன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட் கம்மின்சுக்கு ஆட்டநாயகன்விருதும், ஸ்டீவன் ஸ்மித்துக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/08095239/1139007/Australia-won-by-an-innings-and-123-runs-in-Ashes.vpf

  • தொடங்கியவர்

ஆஷஸ் வெற்றி: கொண்டாடி மகிழ்ந்த ஆஸி. வீரர்கள் (புகைப்படங்கள்)

 

 
smith1

 

இங்கிலாந்து எதிரான 5-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியடைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரை 4-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 346 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 83 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 193 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட கடைசி நாளான இன்று இங்கிலாந்து 210 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகளே இருந்தன. இந்நிலையில் இன்று 180 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. ரூட் 58 ரன்கள் எடுத்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ரன்கள் வித்தியாசத்தில் 5-வது டெஸ்டை வென்று ஆஷஸ் தொடரை 4-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.

5-வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனான கம்மின்ஸும் தொடர் நாயகனாக ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

ஆஹஸ் கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியினர், இந்த வெற்றியை மிகவும் கொண்டாடினார்கள். பரிசளிப்பு விழா முடிவடைந்தவுடன் ஆஷஸ் கோப்பையுடன் அனைவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்கள். ரசிகர்களிடமும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த வெற்றித் தருணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவர்கள் அனுபவித்தார்கள். 

அந்நிகழ்வுகளின் புகைப்படங்கள்:

ahes2.jpg

ashes7777.jpg

ashes77.jpg

ashes1.jpg

ashes1888.jpg

 

ashes_win1.jpg

ashes90.jpg

ashes_2017.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/08/the-aussies-regain-the-ashes-4-0-2841143--2.html

 

 

 

இங்கிலாந்திடமிருந்த ஆஷஸ் கிண்ணத்தை பறித்தெடுத்த ஆஸி 

 

 

 

இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, இங்கிலாந்திடமிருந்த ஆஷஸ் கிண்ணத்தை பறித்தெடுத்துள்ளது.

 271754.jpg

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.

271755.jpg

பிரிஸ்பேனில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

அடிலெய்டில் இடம்பெற்ற 2 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

271748.jpg

பேர்த்தில் இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய அணிய இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மெல்பேர்ணில் இடம்பெற்ற 4 ஆவது போட்டி மாத்திரம் இங்கிலாந்து அணிக்கு நிம்மதியைகொடுத்த போட்டியாக அமைந்தது. இப் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

271738.jpg

இந்நிலையில் இன்று சிட்னியில் இடம்பெற்று முடிந்த 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 123 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

271047.jpg

இத் தொடரின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, மெல்போர்ன் ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாகியதால் குக்கின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையானது. இல்லையெனில் இங்கிலாந்து அணி வையிட்வொஷ் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29113

  • தொடங்கியவர்
ஆஷஸ்: எவ்வாறு இங்கிலாந்து தோற்றது?
 
 

image_80bb0d0211.jpgimage_f9ab868006.jpg

 

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் 4-0 என அவுஸ்திரேலியா வென்றுள்ளது.

அந்தவகையில் இந்த ஆஷஸ் தொடரில் மைதானத்துக்கு வெளியே இடம்பெற்ற சம்பவங்களால் சிக்கல்களை எதிர்நோக்கிய இங்கிலாந்து, மைதானத்துக்குள்ளும் அவுஸ்திரேலியாவில் வைத்து அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு போதுமான மட்டத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டியிருந்தது.

ஆஷஸின் சில தருணங்களில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தாலும் முக்கியமான தருணங்களை அவுஸ்திரேலியாவுக்கு ஆஷஸை தாரை வார்த்திருந்தது.

ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக இந்த ஆஷஸ் ஆரம்பிப்பதற்கு முன்னரே பென் ஸ்டோக்ஸை இழந்திருந்த இங்கிலாந்துக்கு, அண்மைய போட்டிகளில் சகலதுறையில் பிரகாசித்த மொயின் அலி இந்த ஆஷஸில் இங்கிலாந்துக்கு கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவர் முற்றிலுமாக சொதப்பியிருந்தார். துடுப்பாட்டத்தில் மிகவும் நம்பிக்கையிழந்தவராகக் காணப்பட்ட மொயின் அலி, பந்துவீச்சில் அதை விட இன்னும் மோசமாக, ஆகக் குறைந்தது ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாதவராகக் காணப்பட்டார். மொயின் அலியின் இந்தப் பெறுபேறுகள் மூலமாக, வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து வெல்வதற்கு முழுமையான சுழற்பந்துவீச்சாளரொருவரை தேடுவதற்கு அவசியமானதொன்று என வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அடுத்து, அணியின் சிரேஷ்ட வீரரான அலிஸ்டயர் குக், அண்மைக் காலங்களில் பெரிதாக ஓட்டங்களைப் பெறாத நிலையில், இங்கிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த அனுபவமிக்கவராக இருந்தபோதும் சொதப்பியிருந்தார். ஆஷஸை மூன்றாவது போட்டியில் இழந்த பின்னர், மிற்செல் ஸ்டார்க் இல்லாததுடன் சர்வதேச கிரிக்கெட் சபையால் மோசாமானது எனக் குறிப்பிடப்பட்ட மெதுவான மெல்பேண் ஆடுகளத்தில் இரட்டைச் சதத்தைப் பெற்றிருந்தபோதும் அது எதற்கும் உதவியிருக்கவில்லை.

இதேவேளை, கடந்த காலங்களில் ஓட்டங்களைப் பெற்றிருக்காதபோதும் அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் ஓட்டங்களைப் பெறுவார் என தேர்வாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜேம்ஸ் வின்ஸ், ஒவ்வொரு இனிங்ஸிலும் ஆரம்பத்தைப் பெறுவதும் பிறகு ஆட்டமிழப்பதுமாக இருந்தார். இனிவரும் காலங்களில் இங்கிலாந்து அணியில் இவர் இடம்பெறுவது சந்தேகத்துக்குரியதொன்றாகவே காணப்படுகிறது.

அடுத்து, ஓரளவுக்கு சிறப்பாக ஆரம்பித்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான மார்க் ஸ்டோன்மன், மூன்றாவது போட்டியில் தொடர்ச்சியாக எழும்பி வரும் பந்துகளை எதிர்கொண்டு திணறியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த இனிங்ஸ்களில் குறைவான ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்திருந்தார். எனினும், அடுத்துவரும் நியூசிலாந்து தொடரிலும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த முறை ஆஷஸுக்காக வந்த இங்கிலாந்து அணி நம்பிக்கை இழந்தது போல் நடக்காமல் சிறப்பாக அணித்தலைவராக செயற்பட்ட ஜோ றூட், துடுப்பாட்டத்தில் ஓரளவுக்கு ஓட்டங்களைப் பெற்றபோதும் பெற்ற அரைச்சதங்களை சதங்களாகவே அல்லது 150க்கு மேற்பட்ட ஓட்டங்களாகவே மாற்றி போட்டியில் தாக்கம் செலுத்துமளவுக்கு மாற்றாதது குறையாகவே காணப்பட்டது.

இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் ஜொனி பெயார்ஸ்டோ, அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கமரோன் பன்குரோப்டை ஆஷஸ் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் தலையால் முட்டியதன் விளைவுகளை எதிர்கொண்டிருந்தார். எனினும், முதலிரண்டு போட்டிகளிலும் ஏழாமிடத்தில் களமிறக்கப்பட்டதால் சொல்லிக் கொள்ளும்படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்காதபோதும் மூன்றாவது போட்டியில் ஆறாமிடத்தில் களமிறங்கி சதம் பெற்றிருந்தார். எவ்வாறெனினும் இவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஓட்டங்களை இவர் பெற்றிருக்கவில்லை.

இவ்வாறாக இங்கிலாந்தின் துடுப்பாட்ட வரிசையில் அனைத்துமே ஏதோவொரு வகையில் குறையாகவே இருக்க, மிளிருக் ஒளிக்கீற்றாக டேவிட் மலன் காணப்படுகின்றார். மூன்றாவது போட்டியில் சதமும் அரைச்சதமும் பெற்றதுடன் பின்னரும் நம்பிக்கையளித்திருந்தார்.

பந்துவீச்சுப் பக்கம், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் குறைவான வேகத்தைக் கொண்டிருந்தபோதும் கட்டுக்கோப்பாக தொடர் முழுவதும் பந்துவீசியிருந்தார். எனினும் மற்றைய சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட்டும் குறைவான வேகம் காரணமாக விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்க முடியவில்லை. இங்கிலாந்தின் பந்துவீச்சாளர்களில் வேகமானவராக கிறிஸ் வோக்ஸ் இருந்தபோதும் இவரின் பந்துவீச்சுப்பாணி அவுஸ்திரேலிய ஆடுகளங்களுக்கு ஒத்ததாகக் காணப்பட்டிருக்கவில்லை. பந்துவீச்சாளர்களில் இங்கிலாந்துக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய ஒருவராக கிரெய்க் ஒவெர்ட்டனே விளங்கியபோதும் காயம் காரணமாக இறுதி இரண்டு போட்டிகளையும் அவர் தவறவிட்டிருந்தார்.

மறுபக்கம், உலகில் தோன்றிய தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களிலொருவராகக் கருதப்படும் டொன் பிரட்மனுடன் ஒப்பிடுமளவுக்கு மிகச் சிறப்பாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பெடுத்தாடியிருந்தார். இவரின் விக்கெட்டைக் கைப்பற்றுவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்திருந்தது. அணித்தலைவராக, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பொலோ ஒன் வழங்காதது விமர்சனங்களைச் சந்தித்தபோதும் தனது பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்.

அடுத்து, மிற்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், பற் கமின்ஸ் அச்சுறுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சுக் குழாமை அவுஸ்திரேலிய அணி கொண்டிருந்தபோதும் அவர்கள் அந்தவகையில் செயற்பட சுழற்பந்துவீச்சாளர் நேதன் லையனே அனுமதித்திருந்தார். தேவைப்படும் நேரங்களில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி தொடர்ந்து பந்துவீசிய நேதன் லையன், சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் முக்கியமானவராக விளங்கியிருந்தார்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த ஆஷஸில் மிற்செல் ஜோன்சன் ஆற்றிய வகிபாகத்தை ஏறத்தாழ மிற்செல் ஸ்டார்க் ஆற்றியபோதும் காயங்களால் போட்டிகளைத் தவறவிட்டிருந்த பற் கமின்ஸ் தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் விளையாடியதுடன், முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி போட்டிகளின் போக்கை மாற்றியிருந்தார். இதுதவிர, மிற்செல் ஸ்டார்க், பற் கமின்ஸ் ஆகியோரே வேகமாக பந்துவீசுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல என்ற ரீதியில் வேகமாக பந்துவீசியிருந்த ஜொஷ் ஹேசில்வூட் தொடரின் ஆரம்பத்தில் தடுமாறியிருந்தபோதும் பின்னர் விக்கெட்டுகளைக் கைப்பற்றிருந்தார்.

துடுப்பாட்டப் பக்கம், ஸ்டீவ் ஸ்மித்துக்கு அடுத்ததாக, மத்தியவரிசையில் ஷோர்ன் மார்ஷ் ஓட்டங்களைக் குவித்திருந்தார். ஷோர்ன் மார்ஷ் குழாமில் தெரிவுசெய்யப்படும்போது, இளம் வீரர்களை விட்டு இவர் ஏன் தெரிவு செய்யப்படுகின்றார் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டபோதும் அக்கேள்விகளுக்கான பதிலை தனது துடுப்பாலேயே வழங்கியிருந்தார்.

இதேவேளை, பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் தடுமாறிய நிலையில், அண்மையில்தான் மீண்டும் பந்துவீச ஆரம்பித்த மிற்செல் மார்ஷ் சகலதுறை வீரராக அணிக்குள் வந்திருந்த நிலையில், கடந்த காலங்களை விட பல முன்னேற்றங்களைக் கண்டு மூன்றாவது, ஐந்தாவது போட்டிகளில் நிலைத்து நின்று ஓட்டங்களைப் பெற்றதுடன், நான்காவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துடன் நின்று போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிக்க உதவி, துடுப்பாட்ட வீரராக தானடைந்த வளர்ச்சியை வெளிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், விக்கெட் காப்பாளராக தெரிவாக டிம் பெய்ன் தனது உள்ளூர் அணிக்காகவே விளையாடியிருக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்ததுடன், தொடரின் முதல்நாளில் பிடியொன்றைத் தவறவிட்டிருந்த நிலையில் விமர்சனங்கள் அதிகரித்திருந்தன. எனினும் அதன்பின்னர் சுதாகரித்துக் கொண்ட டிம் பெய்ன் மிகச் சிறப்பாக விக்கெட் காப்பில் ஈடுபட்டதுடன், தேவையான நேரங்களில் ஓட்டங்களைப் பெற்று, அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதேவேளை, உப அணித்தலைவரான டேவிட் வோணர் தனது வழமையான அதிரடியை விட்டு கவனமாக இத்தொடரில் துடுப்பெடுத்தாடியிருந்த நிலையில், நான்காவது போட்டியிலேயே சதம் பெற்றிருந்தார். ஆக, எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை டேவிட் வோணர் வழங்கியிருக்கவில்லை. இதோடு, டேவிட் வோணரோடு ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய கமரோன் பன்குரோப்டும் பிரகாசிக்காத நிலையில், தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்துக்கான குழாமில் இடம்பெறுவது சந்தேகத்துக்கிடமானதாகவேயுள்ளது.

ஆக, அண்மைய கால டெஸ்ட் போட்டிகளை போல, சொந்த மண்ணில் புலிகளாக இருக்கும் இங்கிலாந்து, வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெல்லுவதற்கு மலையளவுக்கு, முக்கியமாக வேகமாக பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளரைக் கண்டுபிடித்து முன்னேறவேண்டியிருக்கிறது. மறுபக்கம், ஆஷஸை வென்றுள்ள அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டேல் ஸ்டெய்ன், வேர்ணன் பிலாந்தர், மோர்னி மோர்கல், கஜிஸ்கோ றபடாவை எதிர்கொள்கையிலேயே உண்மையான சவாலை எதிர்கொள்ளவுள்ளது.

http://www.tamilmirror.lk/sports-articles/ஆஷஸ்-எவ்வாறு-இங்கிலாந்து-தோற்றது/139-210142

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.