Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கட்டாரிலுள்ள பாடசாலையில் தூதுவர் லியனகேவின் தலையீடு

Featured Replies

கட்டாரிலுள்ள பாடசாலையில் தூதுவர் லியனகேவின் தலையீடு
 

 - நிர்மலா கன்னங்கர

கட்டாருக்கான இலங்கைத் தூதுவர், டோகாவிலுள்ள தனியார் இலங்கைப் பாடசாலையொன்றுக்குத் துன்புறுத்தல்களை வழங்க, தனது இராஜதந்திர அதிகாரங்களைப் பயன்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினை, அங்கு வாழும் இலங்கையரிடையே விசனத்தைத் தோற்றுவித்தது.

தூதுவர் A.S.P. லியனகே, சட்டத்துக்குப் புறம்பான வகையிலும் நீதியற்ற வகையிலும், ஸ்டஃபோர்ட் இலங்கைப் பாடசாலையின் விவகாரங்களில், அண்மையில் தலையிட்டாரென விமர்சிக்கப்படுகின்றார். இவர், பாடசாலையின் வங்கிக் கணக்கை முடக்கியதோடு, பாடசாலை முகாமைத்துவத்துக்கு எதிராக, கட்டார் கல்வியமைச்சில் முறைப்பாடுகளை செய்ததன் மூலம், இராஜதந்திர அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் அளவுக்குச் சென்றுள்ளார்.

லியனகேயின் முறைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தப் பாடசாலையின் தலைவர், கட்டார் பொலிஸாரினால் எவ்வாறு தடுப்பில் வைக்கப்பட்டார் என, ஸ்டஃபோர்ட் இலங்கைப் பாடசாலை அலுவலர்கள், இந்தப் பத்திரிகைக்கு உறுதி செய்தனர். பாடசாலைத் தலைவர் கைது செய்யப்பட்டமை, லியனகேக்கும் பாடசாலை தலைவருக்கும் இடையே, ஆறு வாரங்களுக்கு முன்னர்  நடந்த வட்ஸ்அப் செய்திப் பரிமாற்றங்களுடன் தொடர்பானது.

“பாடசாலைத் தலைவர், பல மணித்தியாலமாக விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னர், அவர் அரச வழக்கு நடத்துநர் முன்னே ஆஜர் செய்யப்பட்டார். மத்திய கிழக்கு நாடுகளில், ஒரு வெளிநாட்டு தூதுவர் முறைப்பாடு செய்யுமிடத்து, பொலிஸார் துரித நடவடிக்கை எடுப்பார்கள். நாம், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம், இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, பாடசாலை நிர்வாகத்தை, தூதுவர் துன்புறுத்துவதை நிறுத்தும்படி அறிவுறுத்துமாறு வினயமாகக் கேட்கின்றோம்” என, டோகாவிலுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைப் பிரஜைகள் விசனம் 

முன்னைய இலங்கைத் தூதுவர்கள் போலன்றி லியனகே, தனது அதிகாரத்தின் கீழ் வராத விடயங்களில் தலையீடு செய்து, நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துகிறாரென, டோகாவிலுள்ள இலங்கையர்கள் கூறுகின்றார்கள்.

“எமது பிள்ளைகள், இலண்டன் எடெக்ஸல் பாடத்திட்டத்தை இங்கு படித்தாலும், பாடசாலையில், இலங்கை க.ெபா.த (சா/த) பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பிள்ளைகளுக்கும் ஏற்பாடுகள் உள்ளன.

“ஆனால், அண்மைக்காலமாக தூதுவர் லியனகேயின் தேவையற்ற தலையீடு காரணமாக, பாடசாலையின் செயற்பாடு குழப்பமடைந்துள்ளது” என, டோகாவில் வாழும் இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இராஜதந்திர வாண்மையாளர் கருத்து 

இதே சமயம், பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திர வாண்மையாளர் ஒருவர், ஒரு நாட்டின் தூதுவரது கடமை, தனது நாட்டுப் பிரஜைகளுக்கு உதவுவது ஆகும். 

அவர்களுக்குத் தொந்தரவு கொடுப்பதல்ல எனக் கூறினார். தூதுவர் லியனகேயின், பாடசாலை மீதான சட்டவிரோதத் தலையீடு, நாட்டுக்குப் பாதகமான விளைவுகளைத் தருமென அவர் கூறினார்.

“நாட்டின் தூதுவர் என்ற வகையில், பாடசாலை விவகாரங்களில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது. உதவி கோரினால், அவர்களுக்கு உதவ வேண்டும். வெளிநாட்டில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுபவமின்மை, இந்த நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

அவர் தொழில்வாண்மையுள்ள இராஜதந்திரி அல்லர், இலங்கை நிர்வாகச் சேவையைச் சேர்ந்தவருமல்லர். எமது நாட்டை, வேறு நாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்த, வாண்மையாளர் அல்லாதவரை நியமிக்கக் கூடாது என்ற பாடத்தை, இது எமது அரசியல்வாதிகளுக்குக் கற்றுத்தந்துள்ளது” என, அந்த இராஜதந்திரி கூறினார்.

தூதுவர் லியனகே, ஜூலை 18, 2017இல், மோசடிகள் நடப்பதாகக் கூறி, பாடசாலையின் டோகா வங்கிக் கணக்கை, தனது இராஜதந்திர அதிகாரத்தைப் பயன்படுத்தி முடக்கினார். இதற்கு மேலாக, ஸ்டஃபோர்ட் ஸ்ரீ லங்கா பாடசாலைக்கு எதிராக, ஆதாரம் ஏதுமில்லாமல், கட்டார் கல்வி அமைச்சிலும் தொழில் திணைக்களத்திலும் பல முறைப்பாடுகளைச் செய்தார்.

கட்டார் நாட்டு அனுசரணையாளர்

எவ்வாறெனினும், கட்டார் நாட்டு அனுசரணையாளர், உடனடியாக வங்கிக் கணக்கை இயக்க நடவடிக்கை எடுத்து விட்டார். அவர், தானே பாடசாலையின் உரிமையாளர் என்பதையும் வங்கிக்கு அறிவித்துள்ளார்.

ஸ்டஃபோர்ட் பாடசாலைத் தலைவர் குமுது பொன்சேகா, தூதுவரின் தேவையில்லாத தலையீடு காரணமாக, பாடசாலைச் செயற்பாடு பாதிக்கப்படவில்லை என, கூறினார்.

ஆயினும், இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே விசனம் ஏற்பட்டதாகக் கூறினர்.

பதினைந்து இலங்கை மாணவர்களுடன், 2001இல் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்டஃபோர்ட் பாடசாலையில், இப்போது பாலர் வகுப்பிலிருந்து தரம் 13 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு,  1,100 மாணவர்களும் 82 இலங்கை ஆசிரியர்களும் உள்ளனர்.

தூதுவர் லியனகே, டோகாவிலுள்ள இலங்கைத் தூதரகமே இப்பாடசாலையின் அனுசரணையாளர் எனவும் எனவே, பாடசாலை முகாமைத்துவத்தில் தலையீடு செய்ய, தூதரகத்துக்கு உரிமை உள்ளது  என்றும் கூறினார். இது, பிழையான கருத்து. இலங்கைத் தூதரகம், இப்பாடசாலைகளுக்காக ஒரு சதமேனும் செலவளிக்கவில்லை. இது முழுதான தனியார் பாடசாலை. இதன் அனுசரணையாளர், கட்டார் பிரஜை. பாடசாலையின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பதனால், தூதுவர் இப்போதே பாடசாலை நிர்வாகத்தில் தலையீடு செய்ய விரும்புகின்றார்” என, பொன்சேகா கூறினார்.

தேவையில்லாத தலையீடு

தான், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் பேசியதைத் தொடர்ந்தே, இந்தத் தேவையில்லாத தலையீடு தொடங்கியது என, பொன்சேகா கூறினார்.

“இந்த அமைச்சர், கட்டாருக்கு வந்தபோது, நான் அவரை நேரில் சந்தித்து, இந்தப் பாடசாலையின் அபிவிருத்திக்காக, இலங்கை அரசாங்கத்திடம் உதவி பெற்றுத்தரும்படி கேட்டேன். பாடசாலைக்கு புதிய கட்டடங்களை அமைக்க, சகலரும் இலங்கையராகவுள்ள நம்பிக்கை பொறுப்புச் சபையானது, வங்கிகள் அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்து கடன்பெற வசதியாக, மத்திய வங்கி கடனுக்கான உத்தரவாதத்தை வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் கேட்டேன்.

“இந்த வேண்டுகோளுக்கு ஆதரவாக, உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சரவைப் பத்திரமொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார். இவ்விடயத்தில் நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவும் முன்னாள் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வாவும் ஆதரவாக உள்ளனர். 

“அமைச்சர் கிரியெல்ல இங்கு வந்திருந்தார். அவர், பாடசாலையின் தொழிற்பாட்டையிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். அமைச்சர் அத்துகோரளையும் இப்பாடசாலைக்கு மிக ஆதரவாக உள்ளார். இந்த அமைச்சரவைப் பத்திரம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.

ஆயினும், குறித்த அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது, அவர் பாடசாலை வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைப்பற்றி கேட்டார். நான் 8 மில்லியன் கட்டார் றியால் (498 மில்லியன் இலங்கை ரூபாய்) எனக் கூறியபோது அவர் ஆச்சரியப்பட்டார். இதிலிருந்து தான் பிரச்சினை தொடங்கிற்று. அவர்கள், பாடசாலை நிதியில் கண் வைத்துள்ளதால், தூதரகத்தின் தேவையில்லாத தலையீடு தொடங்கியது” என பொன்சேகா கூறினார்

இலாப நோக்கில்லாத நிறுவனம்

ஸ்டஃபோர்ட் ஸ்ரீலங்கன் பாடசாலை, இலாபத்தை நோக்காகக் கொண்டு செயற்படாத ஒரு நிறுவனம். இதன்நோக்கம், கட்டாரில் உள்ள இலங்கைப் பிள்ளைகளுக்கு, சரியான கல்வி ஊட்டுவதாகும். இந்தப் பிள்ளைகளுக்கு உயர் கட்டணம் அறவிடும் வேறு பாடசாலைகளில் படிக்க, கட்டுபடியாகாது.

“நானும் 15 இலங்கையர்களும் சேர்ந்து, 2001இல் இதற்கான நிதியை வழங்கினோம். நாம் ஒரு யாப்பைத் தயாரித்தோம். பாடசாலை, நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்தச் சபை உறுப்பினர் யாவரும், இலங்கையர்கள். கட்டார் நாட்டுச் சட்டப்படி, இந்த நிறுவனத்தில் முழு உரிமையாளராக நாம் இருக்க முடியாது.

ஒரு கட்டார் நாட்டு தொண்டர் எமக்கு உதவ முன்வந்தார். அவர் உதவியால், இந்தப் பாடசாலை வர்த்தக பதிவு இல. 40,169இன் கீழ், சமுதாயப் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டது. இதனால், இது இப்போது யூசுப் அஹமட் அல் பெரைய்டன் என்பவருக்கு, முழு உரிமையானதாக உள்ளது. ஆயினும் அல் பெரைய்டனோ, நம்பிக்கை பொறுப்புச் சபை உறுப்பினர்களோ, இலாபத்தில் பங்கு கேட்பதில்லை” என பொன்சேகா கூறினார்.

லியனகே, சட்டவிரோதமாகப் பணம் சேர்ப்பதாகவும் பாடசாலை நன்கு செயற்படவில்லை எனவும் கூறுகிறார் என பொன்சேகா கூறினார். இவையே, வங்கிக் கணக்கை முடக்கவும் தொழில் திணைக்களத்துக்கும் கட்டார் கல்வி அமைச்சுக்கு லியனகே முறையிடவும் காரணங்களாகும்.

“ லியனகே, ஓகஸ்ட் 15 அன்று, கல்வி அமைச்சுக்கு முறையிடச் சென்றபோது, நானும் போயிருந்தேன். லியனகே, மறு நாளே கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு வர வேண்டும் என விரும்பினார். ஆனால், திருத்த வேலைகள் நடப்பதனால், நான் அவர்களைப் பிந்தி வரும்படி கேட்டேன். அவர்கள், 26ஆம் திகதி வந்தனர். அதிகாரிகள் இங்கிருந்த வசதிகளையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அத்தோடு தூதுவர் ஏன் இப்படி குற்றம் கூறுகின்றார் எனவும் ஆச்சரியப்பட்டனர். பின்னர் செப்டெம்பர் 28 அன்று லியனகே, கட்டார் தொழில் திணைக்களம் சென்று, இந்தப் பாடசாலையில், வேலை செய்யக்கூடிய விசா இல்லாத இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக முறைப்பாடு செய்தார். 

“மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், கட்டாரில் தொழில் சட்டத்தை மீறுவதாக உள்ளதெனவும் முறையிட்டார்.

திருமணம் செய்து தனது கணவன்/ மனைவியுடன் ‘ஜோடி’ விசாவில் அழைத்துவரப்படும் கணவன்/ மனைவிக்கு நாம் வேலை கொடுப்பதுண்டு. இது, அவர்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே செய்யப்படுகின்றது. நாம் சட்டத்துக்கு அமைந்த பிரஜைகள். நாம், கட்டார் சட்டத்துக்கு எதிராக எதையும் செய்வதில்லை” என பொன்சேகா கூறினார்.

லியனகேயின் மறுப்பு

ஆயினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த லியனகே, இலங்கையர்கள் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கவே, தான் நன்னோக்குடன் செயற்படுவதாகக் கூறினார்.

“இந்த பாடசாலை, சமுதாயப் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமுதாயப் பாடசாலையில், எவ்வாறு 8 மில்லியன் கட்டார் றியால் அளவுக்கு பெருமளவான பணத்தை ஈட்டமுடியும்? இந்தப் பாடசாலைக்கு, கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் அனுசரணை வழங்குகின்றது. பாடசாலையின் முழுப்பொறுப்பும் தூதுவரிடம் உள்ளது. 

மோசடிகள் நடைபெறின், தூதுவர் என்ற வகையில் தலையிட்டு, நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை, மோசடி வழியில் பணம் ஈட்டுவதைத் தடுப்பது, எனது கடப்பாடு ஆகும்” என, தூதுவர், இப்பத்திரிகைக்குக் கூறினார்.

அவர், ஏன் பாடசாலையின் வங்கிக் கணக்கை மூடினார், பாடசாலைக்கு எதிராக கல்வி அமைச்சிலும் தொழில் திணைக்களத்திலும் ஏன் முறைப்பாடு செய்தார் எனக் கேட்டபோது, கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் எழுத்துமூல அறிவுறுத்தலின் படியே அவ்வாறு செய்யப்பட்டது என, லியனகே கூறினார்.

“முன்னாள் செயலாளர் ஒருவர், வங்கிக் கணக்கை முடக்கும்படியும் பாடசாலை பற்றி உரிய அதிகாரிகளிடம் முறையிடும்படியும், எமுத்துமூலம் என ஆலோசனை வழங்கினார். அதை நான் செயற்படுத்தினேன்.

“நம்பிக்கைப் பொறுப்புச் சபையில் 16 உறுப்பினர்கள் உள்ளனர். பாடசாலை ஆரம்பித்த காலம் தொட்டு, ஒரே ஆட்களே இந்தச் சபையில் உறுப்பினர்களாக உள்ளனர் இது சட்ட விரோதமானது. இவர்கள், 3 வருடத்துக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இலங்கைத் தூதரகம், இந்த நிர்வாகிகளை சட்ட விரோதமாகப் பணம் சேர்க்க அனுமதிக்க முடியாது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 25இல் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கட்டார் வருகின்றார். அவரது விஜயத்தின் பின்னர் இலங்கைத் தூதரகம், இப்பாடசாலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்” என தூதுவர் லியனகே கூறினார்.

சங்கடப்பட வைக்கும் நிலைமை 

இலங்கையில் தமது சார்பாக செயற்பட ஸ்டஃபோர்ட் பாடசாலை நியமித்துள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் காப்புறுதி ஒம்புட்ஸ்மனுமான டொக்டர் விக்ரம வீரசூரிய, இந்தப் பாடசாலை, தனியார் நிறுவனமாகச் செயற்படுத்தப்படுகின்றது எனவும் இதில் கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீடு அல்லது ஈடுபாடு இல்லை எனவும் குறிப்பிடுகிறார்.

“தலைவர் பொன்சேகா, பாடசாலையின் இலங்கை அடையாளத்தைப் பேணும் வகையில், பாடசாலையின் அனுசரணையை, கட்டார் அனுசரணையாளரிடமிருந்து இலங்கைத் தூதரகத்துக்கு, 2010இல் மாற்றினார்.

“அப்போது தூதுவராக இருந்த விஜயசிறி பாதுக்க, பாடசாலையின் யாப்புக்கு, ஒரு பின்னணியைச் சேர்த்தார். மேலும், ஓர் அட்டோனி தத்துவம் மூலம் (திகதி டிசெம்பர் 12, 2010), நம்பிக்கை நிதியத் தலைவருக்கு, பாடசாலையை நடத்தும் அதிகாரத்தை வழங்கினார். இப்படியிருந்தும் தற்போதைய தூதுவர், சட்டத்தைத் தனது கையில் எடுத்து, கட்டார் வாழ் இலங்கையர்களைத் தொந்தரவு செய்வது கவலை அளிக்கிறது.

இது, கட்டாரில் உள்ள வேறு நாட்டுத் தூதரங்களின் பார்வையில், இலங்கை பற்றி மோசமான கருத்தைத் தோற்றுவிக்கும். முன்னாள் தூதுவர் என்ற வகையில், நான் எனது மக்களின் நலனில் ஆகக்கூடிய அக்கறையுடன் செயற்பட்டேன். நான் அப்போது தனியார் நிறுவனங்களில் தலையிடவில்லை” என, டொக்டர் வீரசூரிய தெரிவித்தார்.

“ஜனாதிபதி சிறிசேன, தொலைபேசியில் அழைத்து, பாடசாலையின் முகாமைத்துவம் தொடர்பில் விசாரணை நடத்தமாறு, கட்டார் அமிரிடம் கூறியதாக, தன்னிடம் லியனகே கூறினார்” என்று, டொக்டர் வீரசூரிய மேலும் தெரிவித்தார். “லியனகே, கொழும்பு வெளிநாட்டு அமைச்சு அலுவலக சிரேஷ்ட அலுவலருக்கும் இதையே கூறியுள்ளார். நான் ஜனாதிபதியின் நெறிமுறையைக் கடைப்பிடிப்பவர் என்பதை அறிவேன்.

அவர் வெளிநாட்டு அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல், நேரடியாக அமிருடன் பேசியிருக்க மாட்டார். நான் ஜனாதிபதியிடம், கட்டார் அமிரிடம் தொலைபேசியில் பேசினீர்களா எனக் கேட்கவுள்ளேன் எனக் கூறியபோது, அவர் அதை மறுந்துவிடும்படியும், ஜனாதிபதியிடம் அதைக் கேட்க வேண்டாமெனவும் கூறினார்.

“இந்தத் தூதுவர், பொய் கூறுகிறார். இவர், வௌிநாட்டு அமைச்சால் நியமிக்கப்படவில்லை எனவும், இவர் அரசியல் நியமனம் பெற்றவர் எனவும் பிரதமருக்குத் தெரியும். இவரது நடத்தை, வாண்மைத்துவ இராஜதந்திரிகளுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது” என டொக்டர் வீரசூரிய கூறினார்.

மேலும், லியனகே நம்பிக்கை நிதிய சபையினருக்கு எதிராக குற்றங்களைக் கூறுவதாக, விக்ரமசூரிய கூறினார்.

“நம்பிக்கை நிதியம் பற்றி, லியனகேக்கு என்ன தெரியும்?
நான் நம்பிக்கை நிதிய வேலையில் ஈடுபட்டுள்ளேன். அது எப்படிச் செய்யப்படும் என்பதும் எனக்குத் தெரியும். இது ஒரு நல்ல முனையில் அமையும் நம்பிக்கை நிதியம். சகல உறுப்பினர்களும் வாண்மைமிக்கவர்கள்” என டொக்டர் வீரசூரிய தெரிவித்தார்.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கட்டாரிலுள்ள-பாடசாலையில்-தூதுவர்-லியனகேவின்-தலையீடு/91-205585

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.