Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாயை மோசடி செய்த பெண்கள் ஐவர் விளக்கமறியலில்…

Featured Replies

யாழில் வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாயை மோசடி செய்த பெண்கள் ஐவர் விளக்கமறியலில்…

fraud.jpg

 

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய் பணம் மீதியாக இருக்க வேண்டும் என முகவர் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கமைவாக 20 இலட்ச ரூபாய் பணத்தினை தனது கணக்கில் வைப்பிலிட்டுள்ளார்.

அதன் பின்னர் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை தூரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறி குறித்த முகவர் நிறுவனம் அவற்றை பெற்றுள்ளது.

அந்நிலையில் சில நாட்களில் குறித்த நபர் தனது வங்கி கணக்கினை பரிசிலீத்த போது , கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் மீள பெறப்பட்டமையை அறிந்துள்ளார். அதனை தொடர்ந்து அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் முகவர் நிறுவனத்தில் பணியாற்றிய 5 பெரும்பான்மையின பெண்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தபப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 5 பெண்களும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் 5 பெண்களில் மூவர் சாட்சியால் அடையாளம் காணப்பட்டனர். அதனை தொடர்ந்து 5 பெண்களையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

http://globaltamilnews.net/archives/46160

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.