Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் சுரக்ஷா போர்க்கப்பல் இன்று இலங்கையிடம் ஒப்படைப்பு

Featured Replies

இந்தியாவின் சுரக்ஷா போர்க்கப்பல் இன்று இலங்கையிடம் ஒப்படைப்பு

 

 

இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள புதிய கடற்படை பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை வந்தடையும். இக் கப்பலுக்கு சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. இந்த ஆண்டில் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் இரண்டாவது பாதுகாப்பு ஆயுதக் கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கடற்படை இந்திய அரசாங்கத்திடம் இருந்து கொள்வனவு செய்துள்ள ஈ–ஜி 60  ரகத்தை சேர்ந்த கடல் பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்பு  துறைமுகத்தில் நங்கூரமிடப்படும். அத்துடன் இன்று இக்  கடற்படை பாதுகாப்பு போர்க்கப்பலுக்கு  சுரக் ஷா என்ற பெயர் சூட்டப்படவுள்ளது. 

இதற்கு முன்னரும் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 4ஆம்  திகதி இந்தியாவிடம் இருந்து வருண என்ற கடல் பாதுகாப்பு ரோந்துக்கப்பலை இலங்கை கடற்படை கொள்வனவு செய்திருந்தது. அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டிலும் இந்தியாவிடம் இருந்து இலங்கை கடற்படை சயுர என்ற போர்க்கப்பலை கொள்வனவு செய்திருந்தது. இந்நிலையில் குறுகிய  காலத்தில் இந்தியாவிடம் இருந்து இலங்கை கொள்வனவு செய்யும் மூன்றாவது கடல் பாதுகாப்பு கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தோனேசியக் கடற்படையின் இலகு ரக பலநோக்குப் போர்க்கப்பல் ஒன்றும்  நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பல் மூன்று நாட்கள் இலங்கையில் தரித்திருக்கும்.  கே. ஆர். ஐ பங் ரோமோ என்ற இந்த கப்பலில்  107 இந்தோனேசியக் கடற்படை மாலுமிகள் பணியாற்றுகின்றனர். மேலும் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் நாட்களில் இலங்கையுடன் இணைந்து பல்வேறு கூட்டு கடற்படை பயிற்சிகளிலும் பல்வேறு கலை விளையாட்டு செயற்பாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

http://www.virakesari.lk/article/26095

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.