Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை - இந்திய கலைப்பாலம் சமைத்தவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய  ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
                      ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில்  நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார்.  ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர்  முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி.
 
Related image'ராஜகுமாரி' தான் 1946  இல் இருந்து   வசனகர்த்தாவாக திகழ்ந்தஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்த முதற்பாடம். அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் இலங்கையில், கொழும்பில் தங்கியிருந்து கொடடாஞ்சேனை    St. Benedict 's கல்லூரியில் கற்றதாக ஒரு குறிப்பில் வாசித்தறிந்தேன். [நானும் அக்கல்லூரிப்  பழைய மாணவன் என்பதால் அத்தகவல் நினைவில் பதிந்துவிட்டது.]  'உதயணன் வாசவதத்தை' யின் வசனகர்த்தாவாக 1946 இல் அடியெடுத்து வைத்த ஏ.எஸ்.ஏ.சாமி 1961 இல் 'கடைசியாக இயக்கிய 'அரசிளங் குமரி' வரை கதாசிரியராக[ஒரு படம்], வசனகர்த்தாவாக                [07 படங்கள்], இயக்குனராக [07படங்கள்], கதை வசன நெறியாளராக [03 படங்கள்]  மொத்தமாக 21படங்களில் -கே.ஆர்.ராமசாமி,[05],எம்ஜியார்[05], சிவாஜி[03], ஜெமினி[02] என அந்நாளைய பிரபலமான நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அவற்றுள் 10 படங்கள் ஜூபிடடர் சோமுவின் தயாரிப்புகள்.
 
'வேலைக்காரி'[1949], 'மர்மயோகி'[1951], 'காவேரி'[1954],  'நீதிபதி'[1955], 'தங்கப் பதுமை'[1959], 'ஆனந்தஜோதி'[1961], 'அரசிளங் குமரி'[1961] என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கன. அண்ணாவின்'வேலைக்காரி'யை[1949] இயக்கிய ஏ.எஸ்.ஆரோக்கியசாமி மதத்தால் ஒரு கத்தோலிக்கர்.
Image result for images of old  tamil  comedy actorsRelated image                              ஏறக்குறைய இதே கால கட்டத்தில் Grandpass ,St. Joseph 's பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த இன்னொரு கத்தோலிக்கர் ஜே.பி.சந்திரபாபு. பரவரான அவரது பிறப்பிடம் தூத்துக்குடி. நடிகனாக வேண்டுமென்ற ஆர்வக் கோளாறால் தமிழகம் திரும்பி 1947 இல் ஒருவாறாக 'தன அமராவதி'யில் தலைகாட்டினார். பின்னர் அவர் செய்த சாதனைகளும் பட்ட வேதனைகளும் பலருமறிந்ததே.
 
  கொழும்பு St Benedict’s கல்லூரியில்  கற்ற இன்னுமொருவரும் தமிழ்த் திரைவானில்  நாயக வில்லனாக மின்னி மறைந்தார். அவர் E.L. ஆதித்தன். 'விளக்கேற்றியவள்'[1965],  'தாயும் மகளும்'[1965] -அவர் நடித்த இரு படங்கள். அவரது இளைய சகோதரர் இயூஸ்டஸ்  லியோன் என்னுடன் ஒன்றாகப் படித்தவர். இருவருமாக நான்காம் ஐந்தாம் வகுப்புகளில் நாடகம் போட்டது  பசுமையான நினைவுகள். ஆதித்தன் ஆறாம் வகுப்பில் படித்த போது பாடசாலைத் தமிழ் மன்றப்பேச்சுப் போட்டியில் 'கள்ளத்தோணி' என்ற தலைப்பில் பேசி முதற் பரிசை இன்னொரு மாணவருடன் பகிர்ந்து கொண்டார்.  'தாய் -அன்பின் பிறப்பிடம்..'.என ஆரம்பித்து அடுக்கு மொழியில் 'மனோகரா' வுக்காக கலைஞர் எழுதிய வசனத்தையும் இடைச் செருக்கலாக்கிப் 'பெண்' என்ற தலைப்பில் பேசி முதற் பரிசை அவருடன்    பகிர்ந்து கொண்ட சிறுவன் வேறு யாருமல்ல. அடியேன்தான்!. அப்போது நான் படித்தது மூன்றாம் வகுப்பில்!
SS-Chandran-is-died-5-150x150.jpg  தமிழகத்தில் இருந்து இலங்கை வந்து இங்கு சிலகாலம் குப்பை கொட்டியபின் மீண்டும் தாயகம் புகுந்து திரையுலகில் திறமை காட்டிய மற்றுமொருவர் நடிகர் SS சந்திரன். 1941 இல் பிறந்த எஸ்.எஸ். சந்திரன் இலங்கை தி.மு.க.கழகச்  செயலாளர் மணவைத்தம்பியுடன் கொழும்பு ஆட்டுப் பட்டித் தெருவில்  ஈயோட்டிக் கொண்டிருந்த காலத்தில் சில நாடகங்களிலும் நடித்திருப்பதாகத் தெரிகிறது. [அந்நாட்களில் கொழும்பில் பிரபலமான ராஜேந்திரன் மாஸ்ட்டரின் குழுவிலோ லடிஸ் வீரமணியின் குழுவிலோ இருந்திருக்கலாம்] நல்லவேளையாக அவர்  தமிழகம் மீண்டு திரையுலகில் நுழைந்தார்.அதனால்  700 படங்கள் மட்டில் நடித்து,  நகைச்சுவை நடிகனாகப் பெயரெடுத்து தயாரிப்பாளராகவும் தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினராகவும் உயர முடிந்தது.
 
 
பிரபல பின்னணிப் பாடகியான பி.ஏ.பெரியநாயகியின் தாயகம் தமிழகம் தான். பண்ருட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது பாலப் பருவத்தில்  வளர்ந்தது இலங்கையின் மலையகத்தில். அவரது அக்கா  நடிகை பி.ஏ.ராஜாமணியும் கூட இலங்கையில் தான் வளர்ந்தார்.  'சங்கீத  ஞானமுடைய பண்ருட்டி ஆதிலட்சுமி அம்மாளுக்கு இரண்டு பெண்கள்.1.பி.ஏ.ராஜாமணி. 2.பி.ஏ.பெரியநாயகி. இவர்களது சங்கீதப்பணி இலங்கையில் நடந்து வந்தது. இசைத்தட்டுகளும் பேசும்படமும் தமிழகத்தில் பிரபலமாகிக் கொண்டிருந்த போது தாயும் மக்களும் தாயகம் திரும்பினர்.' என் அறந்தை நாராயணன் 'தமிழ் திரைவானின் நேற்றைய நட்ஷத்திரங்கள்' எனும் தமது நூலில்  குறிப்பிட்டுள்ளார். ராஜாமணி 1938 இல்  வெளியான  'பூகைலாஸ்' படத்தில் நடித்துள்ளார். அதற்கு முன்னரே இசைத்தட்டு நிறுவனத்துக்காக பெரியநாயகி தனிப் பாடல் பாடியிருக்கிறார். அதன்படி பார்த்தால் 1927 இல் பிறந்த பெரியநாயகி 8-9 வயதுவரை இலங்கையில் தான் இருந்துள்ளார். 1941 இல் 'சபாபதி' படத்தில் நாயகி ஆர்.பத்மாவுக்காக பின்னணி பாடியதன் மூலம் முதல் தமிழ்ப் பின்னணிப் பாடகி என்ற பெருமை அவரைச் சார்ந்தது. கொத்தமங்கலம் சீனுவுடன் அவர் நடித்த 'ஏகம்பவாணன்' [1947], கே.சுப்ரமணியத்தின்'கீதகாந்தி'[1949] என்பன பி.ஏ.பி. நாயகியாக  நடித்த இரு குறிப்பிடத்தக்க படங்கள்.
                                       கு.மா.பா.எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படட     கு.மா.பாலசுப்ரமணியம்                                                                                                                                                                    ஒரு நல்ல     பாடலாசிரியர்.      1954 இல் 'நாஸ்திகன்','சம்ராட்' என இரு ஹிந்தி மொழிமாற்றப்  படங்களுக்கும், பின்னர் பி.ஆர்.பந்துலுவின் ஆஸ்தானக் கவிஞராகி அவர் தமிழில் தயாரித்த 'தங்கமலை ரகசியம்'[1957],  'சபாஷ் மீனா'[1958], 'வீரபாண்டிய கட்ட்பொம்மன்'[1959]போன்ற படங்களுக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர். .'யாரடி நீ மோகினி'[உத்தம புத்திரன்], 'குங்குமப் பூவே'[மரகதம்],  'வான மீதில்  நீந்தியோடும் வெண்ணிலாவே'[கோமதியின் காதலன்],  'மாசிலா நிலவே நம்'[அம்பிகாபதி],   'காதலெனும் சோலையிலே ராதே ராதே'[சக்கர வர்த்தித் திருமகள்']  'சிங்கார வேலனே தேவா'[கொஞ்சும் சலங்கை] என நெஞ்சை விட்டு நீங்காத எத்தனையோ பாடல்களைப் புனைந்தவர் கு.மா.பா. 1945 இல் அவர் கொழும்பில் பிரபலமான'வீரகேசரி' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
மேற்குறிப்பிடடவர்களுள்  தவமணிதேவி தவிர்ந்த ஏனையோர் இலங்கையை வசிப்பிடமாக மட்டும் கொண்டவர்கள். இனி இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டு தமிழகத்து திரையுலகில் தடம் பதித்த  ஒரு சிலரைப் பற்றிப் பார்ப்போம். யாழ்-பருத்தித்துறையைச் சேர்ந்தவர்ஸ்ரீசங்கர்.இலங்கையின் முதற் தமிழ்த் திரைப்படமான 'தோட்டக்காரி' யின் கதாநாயகன். தமிழகத் திரைப் படத்தில் தலையையாவது காட்டி விட வேண்டுமென்ற வெறி பிடரி பிடித்து உந்த சிவாஜியின் 'கர்ணன்'[1964]இல் ஈழவேந்தனாக ஒரு காட்சியில் ஒரு நிமிடம் வந்து போனார்.
Image result for a.e.manoharan images'சுராங்கனி' பாடல் புகழ்'பொப்'பிசைச் சக்கரவர்த்திஏ.ஈ.மனோகரன்யாழ்ப்பாணத்தவர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட  வாடைக்காற்று' படத்தில் நாயகனாக நடித்தார்.அதற்கு முன்னதாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'பாசநிலா'[1964] என்ற 16mm படத்தில் நடித்திருந்தார். 1972 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் நாடகத் தயாரிப்பாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். 80-90 களில் தமிழகத்து திரையுலகில் நுழைந்து வில்லனாக வில்லனின் கையாளாக- சிவாஜி, ரஜனி, கமல், தர்மேந்திரா, மம்முட்டி முதலான பிரபல நடிகர்களின் படங்களில்-ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் 250 க்கு மேற்படட படங்களில்- நடித்துள்ளார். இவற்றுள் இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்புகளான 'தீ','பைலட் பிரேம்நாத்' என்பனவும் அடக்கம். 'விரும்புகிறேன்',ஜேஜே, தொட்டி ஜெயா, காதல் கடிதம், வாலிபன் - அவர் 2000 இல் நடித்த சில படங்கள். 'அஞ்சலி', 'அத்திப்பூக்கள்', 'திருமதி செல்வம்' போன்ற  சின்னத் திரைத் தொடர் நாடகங்களிலும் பின்னாட்களில் அவரைக் காண முடிந்தது.
 
ஏ.ஈ.மனோகரனைப் போலவே வில்லனாகத் தமிழ்த்  திரையில் புகுந்து சிவாஜி படங்களில் நடித்த ஒருவர் விஜேந்திரன். யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்த விஜேந்திரன் ஈழத்தில் ஒரு முன்னணிக் கவிஞராக அறியப்படடவர். ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேரன். சுழலும் விழிகளுடன் திரையில் மிக்க குறுகிய காலமே வலம் வந்தவர் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு[?] புலம் பெயர்ந்து விட்டார்.
  கவிஞர்கள் அவ்வளவாக நடிக்க முன்வருவதில்லை. ஏனோ தெரியாது அப்படி வந்தவர்களையும் வில்லன்களாகத் தான் தமிழ்த் திரையுலகு அறிமுகம் செய்திருக்கிறது. பராசக்தியின் பூசாரியாக வந்தவரைச் சிலருக்கு கொஞ்சம் ஞாபகமிருக்கலாம். வில்லன் நடிப்பில் பாலையாவுக்கு முன்னோடி என அவரைப்பற்றி அறந்தை நாராயணன் குறிப்பிடுவார். வாழ்க்கை',பராசக்தி, பெண்' போன்றAVM படங்களுக்கு மெட்டுக்குப் பாட்டெழுதிய பாடலாசிரியர். 'சிற்பி செதுக்காத பொற்சிலை' [எதிர்பாராதது] யின்  சிருஷ்டிகர்த்தா. அவர்தான் கவிஞர் கே.பி.காமாட்சிசுந்தரம்.அவருக்கும் இலங்கைக்கும் தொடுசல் ஏதுமில்லை. கவிஞர்-வில்லன் பொருத்தப்பாட்டில் ஞாபகம் வந்ததால் குறிப்பிடடேன். அவ்வளவுதான். கவிஞர் ஈழத்து  ரத்தினம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்'[1960] திரைப் படத்துக்காகப் பாடல் ஒன்று புனைந்தார். ஆனால் அப்பாடல் எடுபடவில்லை!
                     இளவாலை விஜேந்திரனைப் போலவே முகபாவமும் தோற்றமும் கொண்ட மறறொரு புகழ்பெற்ற ஈழத்துக்  கவிஞர் 2011 இல் அட்டகாசமான வில்லனாக  'ஆடுகளம்' மூலம் அறிமுகமாகி தேசிய  விருதும் வென்றார். அவர்தான் கவிஞர் வ.ச.ஐ.ஜெயபாலன். 1944 இல் யாழ்ப்பாணம் உடுவிலில் பிறந்த அவர்  நோர்வே யில் சிலகாலம் புலம்பெயர்ந்து வதிந்து தற்போது தமிழக்கத்தில் வாசஞ் செய்கிறார். மெட்றாஸ், வேலூர் மாவடடம், பாண்டி நாடு, ஜில்லா, வனயுத்தம், நான் சிகப்பு மனிதன், இன்று நேற்று நாளை, பேய்கள் ஜாக்கிரதை, அரண்மனை-2,   49-O, Touring Talkies என அவர் நடித்த படங்களின் பட்டியல் நீள்கிறது.
 
ஜெயபாலனை 'ஆடுகளம்' வெற்றிமாறனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பாலு மகேந்திரா.   
      
      தமிழ்த் திரைப் படங்களின் தரத்தை உயர்த்தியவர்; உலக அரங்கில் பேசப்பட்ட படங்களை எடுத்தவர் பாலு மகேந்த்ரா. ஆயினும் தமிழ்த் திரையுலா ஒன்றும் அவரைச் செங் கம்பளம் விரித்து வரவேற்று விடவில்லை. விழுந்து எழும்பி, முட்டி மோதித்தான் தனக்குரிய இடத்தை அவரால் எய்த முடிந்தது. 60 களில்  'தேனருவி' என்ற இலக்கிய சஞ்சிகையை வெளியிட்டவர்-இலங்கை வானொலியில் நாடக நடிகராக திகழ்ந்தவர் -இலங்கை நில அளவைத் திணைக்களத்தில் படவரைஞராக நிரந்தர உத்தியோகத்தில் இருந்தவர் - எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு 60 களின் இறுதியில் புனே திரைப்படக் கல்லூரியில் போய்ச் சேர்ந்துவிட்டார். அதற்கான அசாத்தியத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அவருக்கிருந்தது.
 
                    ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் அமிர்தகழி எனும் அழகிய சிற்றுரில் 1939 மே 20 இல் பிறந்தவரான பாலு மகேந்திராவிக்கு முதலில் அடைக்கலம் அளித்தது மலையாளத்து திரையுலகம்தான். மட்டக்களப்பாரும் மலையாளத்தாரும் பல  விதங்களில் ஒரேமாதிரி. இரு சமூகங்களுக்குமிடையில் பல ஒற்றுமைக்கு கூறுகளைக் காணலாம். அதனால் தானோ என்னவோ பாலு மகேந்த்திராவும் மலையாளக் கரையோரம் ஒதுங்கினார்.
                                                          தேசிய விருது வென்ற 'செம்மீன்' [1965] இயக்குனர் ராமு கரியத்தின் 'மாயா'[1972], 'நெல்லு'[1974] படங்களில் படப்பிடிப்பாளராக[Cinematographer ]  பணியாற்றி கேரள அரச விருதை வென்றார். லக்ஷ்மியின் நடிப்பில் பேசப்பட்ட'சட்டைக்காரி'யையும்[1974] அவர்தான் சட்டகத்துள் அடக்கியவர். ஆயினும் கன்னடத்தில் அவர் முதன்முதல் இயக்கிய 'கோகிலா'[1977] தான் அவரை அகில இந்திய அளவில் அறிய வைத்தது.
Image result for images of director v.c.gukanathan                         தமிழைப்  பொறுத்தமட்டில் 1978 க்குப் பிறகுதான் அவருக்கு கதவு திறந்தது.       மகேந்திரனின்'முள்ளும் மலரும்'[1978] வழி சமைக்க, 'அழியாத கோலங்கள்[1979]  இயக்குனராக அங்கீகாரம் அளிக்க  'மூன்றாம் பிறை,[1982], வீடு'[1988], சந்தியா ராகம்'[1989], 'வண்ண விண்ணப் பூக்கள்'  [1991], ஒளங்கள்'[1982-மலையாளம்], சத்மா'[1983-மூன்றாம் பிறையின் ஹிந்தி வடிவம்]                               என 'தலைமுறைகள்'[1913] வரை  விருதுகள் பெற்ற அவரது படைப்புகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு சென்றன . படப்பிடிப்பாளராக 20 படங்களும் கதை - வசனம்- நெறியாள்கை-தயாரிப்பு என 20 படங்களும் இரண்டு ஹிந்திப் படங்களும் என 42 படங்களை [1972-2013] 42 ஆண்டுகளில் அறுவடை செய்தவர் அந்த நிறைவுடன் 2014 பெப்ருவரி 13 இல் அடக்கமாகிவிட்டார்.
 
Related image                   புங்குடு தீவைச் சேர்ந்த ஓருவர் திரையுலகில் கதைவசன கர்த்தாவாகவும் பின்னர் நெறியாளராகவும் பிரபலமானார். அவர்தான் வி.சி.குகநாதன். 1951 இல்  பிறந்த அவர் தமது 17 ஆவது வயதில் வசனகர்த்தாவாக எம்ஜியாரின் ஆசியுடன்  'புதிய பூமி''[1968]யில் கால் பதித்தார். . 'கனிமுத்துப் பாப்பா'[1972 ] அவர் வாழ்க்கைத் துணையான நடிகை ஜெயாவை அறிமுகப் படுத்தியது. 'சுடரும் சூறாவளியும்'[1971],'ராஜபார்ட் ரங்கதுரை'[1972], 'பெத்த மனம் பித்து'[1973] -என்பன கதை  வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் அவருக்குப் பெருமை சேர்த்த சித்திரங்கள். 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் 51 படங்களைத் தயாரித்து அதில் 49 படங்களை இயக்கி முடித்தது பெரும் சாதனையே.  அவர் எழுத்து இயக்கத்தில் உருவான .'தனிக்காட்டு ராஜா'[1982], வும் 'முரட்டுக் காளை'[1992] யும் அவர் புகழைப் பறைசாற்றுவன.  புங்குடு தீவைச் சேர்ந்த ஓருவர் திரையுலகில் கதைவசன கர்த்தாவாகவும் பின்னர் நெறியாளராகவும் பிரபலமானார். அவர்தான் வி.சி.குகநாதன். 1951 இல்  பிறந்த அவர் தமது 17 ஆவது வயதில் வசனகர்த்தாவாக எம்ஜியாரின் ஆசியுடன்  'புதிய பூமி''[1968]யில் கால் பதித்தார். . 'கனிமுத்துப் பாப்பா'[1972 ] அவர் வாழ்க்கைத் துணையான நடிகை ஜெயாவை அறிமுகப் படுத்தியது. 'சுடரும் சூறாவளியும்'[1971],'ராஜபார்ட் ரங்கதுரை'[1972], 'பெத்த மனம் பித்து'[1973] -என்பன கதை  வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் அவருக்குப் பெருமை சேர்த்த சித்திரங்கள். 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் 51 படங்களைத் தயாரித்து அதில் 49 படங்களை இயக்கி முடித்தது பெரும் சாதனையே.  அவர் எழுத்து இயக்கத்தில் உருவான . 'தனிக்காட்டு ராஜா'[1982], வும் 'முரட்டுக் காளை'[1992] யும் அவர் புகழைப் பறைசாற்றுவன. 
 
1978 இல் கொழும்பில் இருந்து வடக்கே பறந்த 'எயார் லங்கா' விமானத்தில் பயணித்து பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' இல் இடம்  பிடித்ததால் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து இன்றுவரை  சிம்மாசனமிட்டு அவர்களின்'அரசி'யாக அமர்ந்திருப்பவர் எம்.ஆர்.ராதிகா. நடிகவேள் எம்.ஆர்.ராதா-கீதா இணைவில் தமிழ்  -சிங்கள உறவுப் பாலம் அமைக்க  31.08.1962 இல் ஸ்ரீலங்காவில் பிறந்த ராதிகா 16 வயதினிலே நடிக்க ஆரம்பித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனத் தொட்டு  விட்ட சிகரங்களை பட்டியலிட்டால் 200 ஐ எட்டிவிடும்.
                     திரைப்படத் தயாரிப்பாளராக 'மீண்டும் ஒரு காதல் கதை'[1985] இல் தொடங்கிப் பத்துக்குப் பத்து பார்த்தாயிற்று. சின்னத்திரையில் 'ராடான்' சாம்ராஜ்யம்1999 க்குப்பின்  படைத்த தொடர்கள்'சித்தி',அண்ணாமலை', செல்வி', 'அரசி', செல்லமே', 'வாணி-ராணி', 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா'தாமரை' என 'மெகா' வாகத் தொடரும்.  'நல்லவனுக்கு நல்லவன்'[1984], 'மீண்டும் ஒரு காதல் கதை'[1985], 'தர்ம தேவதை'[1986], 'பூந்தோடடக் காவல்காரன்',[1988], 'நினைவுச் சின்னம்'[1989], 'கேளடி கண்மணி'[1990], 'கிழக்குச் சீமையிலே'[1993], 'பசும்பொன்'[1995], 'ராணி மகாராணி'[[1995], தங்க மகன்'[2015] -இவை அவரது களைப்பு பயணத்தில் சில நினைவுத் தடங்கள்..
Image result for images of actress niroshaImage result for images of actress niroshaராதிகாவின் தங்கைநிரோஷா. 23.01.1971இல் பிறந்தவர். அக்காவின் அடிச் சுவட்டில் அவரும் மணிரத்தினத்தின்'அக்னி நட்ஷத்திரம்'[1988] மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில்'செந்தூரப் பூவே' யில் ஜோடி சேர்ந்த நடிகர் ராம்கியை பின்னர் கணவனாக வரித்துக் கொண்டார். கமலுடன் நடித்த 'சூர சம்ஹாரம்' வெளியானதும்  அதே ஆண்டில் தான். ராதிகாவின் சின்னத்திரை நாடகங்கள் 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா'வும் ' தாமரை'யும் பின்னாட்களில்   அவரது இருப்பைத் தக்க வைத்தன.  ஆயினும் அக்கா ராதிகாவுடன் அவர் சேர்ந்து சின்னத் திரையிலோ வெள்ளித் திரையிலோ நடித்ததாகத் தெரியவில்லை!
Image result for images of actress sujatha70-80 களில் பிரபல நடிகை சுஜாதா. அவரது தாயகம் இலங்கையல்ல. மலையாளத்து தாய் தந்தையருக்கு மகளாகப் பிறந்த அவரது இளமைப்  பருவம்  இலங்கையில். காலியில் சிங்களப் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்றார். தனது 13 ஆவது வயதில்  1965 இல்  மலையாளப் படத்தில் தலைகாட்டினார்.1974 இல் பாலச்சந்தரின்'அவள் ஒரு தொடர் கதை' யுடன்  அவர் தமிழ்த் திரையைத் தரிசித்தார். தமிழ், மலையாளம் ஹிந்தி உட்பட 5 மொழிகளில் 300 படங்கள் மட்டில் நடித்திட்டார். அதில் பாதிக்கு மேல் தமிழ்.
Image result for images of actress sujathaதீபம்[1977],அந்தமான் காதலி[1978] உட்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜியிடனும், மற்றும் முத்துராமன்,ஜெய்சங்கர், சிவகுமார், ரஜனி[இறைவன் கொடுத்த வரம்-1978], கமல்[06 படங்கள்] என முன்னணிக் கதாநாயகர்களுடனும் இணை  சேர்ந்து நடித்தவர் ஒரு 10 ஆண்டுகளின் பின்னர் கமல், ரஜனியுட்பட பிரபு, கார்த்திக், அர்ஜுன், அஜித் என அடுத்த தலைமுறை நாயகர்களுக்கு அன்னையாக மாறிக் குணசித்திரத்தை வெளிப்படுத்தினார். அவள் ஒரு தொடர்கதை[1974], மயங்குகிறாள் ஒரு மாது[1975], அன்னக்கிளி[1976], அவர்கள்[1977], நூல்வேலி[1979],துணைவி1981],  விதி1984], கொடி பறக்குது1989], உழைப்பாளி1993]என்பன அவரை அடையாள படுத்தும் ஒருசில தமிழ்த் திரைப்படங்கள் .'வரலாறு’[2006] அவரது திரையுலக வரலாற்றின் கடைசி அத்தியாயம். 10.12.1952 இல் பிறந்த அவர் தனது 58 ஆவது வயதில் 06.04.2011 இல் விடைபெற்றார்.
 

http://maraimuthalvan.blogspot

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.