Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

இந்தியாவுடனான தொடரில் மெதிவ்ஸ், அசேல மற்றும் குசல் இலங்கை அணியில்

SL-press-confrence-696x464.jpg
 

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான போட்டித் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் மீண்டும் களமிறங்கவுள்ளதாக இலங்கை ஒரு நாள் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டித் தொடர் குறித்து ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு இன்று (31) இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

இதில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது பாகிஸ்தானில் பெற்ற அனுபவம் குறித்து உபுல் தரங்க இவ்வாறு தெரிவித்தார்.

”பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் எதிர்பார்த்தது போன்று எம்மால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதிலும் இத்தொடர் முழுவதும் துடுப்பாட்ட வீரர்கள் உரிய முறையில் ஒத்துழைப்பினை வழங்குவதற்கு தவறிவிட்டனர்.

உண்மையில் எமது பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என்பன சிறப்பாக இருந்தன. ஆனாலும் ஒரு சில பிடியெடுப்புகளை நாங்கள் தவறிவிட்டாலும், இத்தொடர் முழுவதும் சக வீரர்களினால் கிடைத்த பங்களிப்பினை பாராட்ட வேண்டும். எனினும் துடுப்பாட்ட வரிசை சிறப்பாக விளையாடாமையால் நாம் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்ததுடன், எமது திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் முடியாது போனது. நாம் அதிகமாக ஆலோசனைகள் செய்தோம். என்ன செய்ய வேண்டும் என்று மதிப்பீடுகளை செய்தோம். ஆனால் ஆடுகளத்தில் அதனை செயற்படுத்த நாம் தவறிவிட்டோம்.

பாகிஸ்தான் மிகவும் சவால் மிக்க அணியாகும். சம்பியன்ஸ் கிண்ணத்தை வெற்றி கொண்ட பிறகு பாகிஸ்தான் அணி மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் அவ்வணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒரு நாள் தொடர் முழுவதும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுப்பதில் எமது துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறியிருந்தனர். இதனால் ஒரு நாள் தொடரை இழக்க நேரிட்டது” என்றார்.

 

 

அத்துடன், இவ்வருடத்தில் நடைபெற்ற அனைத்து ஒரு நாள் தொடர்களிலும் துடுப்பாட்டத்தில் நாம் மிகவும் பின்னடைவை சந்தித்தோம். ஆனாலும் இவையனைத்தையும் நல்லதொரு அனுபவமாக எடுத்துக்கொண்டு அடுத்து ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அங்குள்ள அனைத்து மைதானங்களும் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருப்பதனால் தற்பொழுது முதல் இந்திய அணியை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது தொடர்பில் நாம் திட்டங்களை வகுத்து வருகின்றோம் என்றும் தரங்க அங்கு குறிப்பிட்டார்.

அணி வீரர்களின் பொறுப்பு குறித்து விளக்கிய அவர், இனிவரும் காலங்களிலும், வீரர்கள் தாம் விளையாடுகின்ற அணி எது? எந்த இடத்தில் விளையாடுகின்றீர்கள் என்பதை நன்கு புரிந்துகொண்டு, உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மைதானத்துக்குள் சென்று நிறைவேற்றினால் தொடர் தோல்விகளை குறைத்துக்கொள்ளலாம். எமது வீரர்கள் இனிமேல் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு அணியின் வெற்றிக்காக சிறப்பாக விளையாடுவார்கள் என நம்புவதாகவும் பெரேரா தெரிவித்தார்.  

இந்நிலையில், இலங்கை அணியின் முக்கிய தூண்களாகக் கருதப்படும் அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரோ ஆகியோர் குறித்து அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் அணிக்கு பெரிதும் பங்காற்றிய குசல் மற்றும் அசேல ஆகியோர் உபாதை காரணமாக நீண்ட காலமாக அணியில் இணைய முடியாமல் இருந்தமை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

எனினும் இவர்களின் நிலைமையில் தற்பொழுது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் குறித்த மூவரும் அணியில் இணைய வேண்டும் என்பது பலரதும் விருப்பாக உள்ளது.  

இது குறித்து கருத்து தெரிவித்த தரங்க, ”மூவரும் தற்போது பூரண குணமடைந்துள்ள போதும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவார்களா என்பது தொடர்பில் உறுதியாக எதனையும் கூற முடியாது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் நிச்சயம் அவர்கள் விளையாடுவார்கள்” என உறுதியாகத் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டித் தொடரின்போது அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் துரதிஷ்டவசமாக உபாதைக்குள்ளாகியிருந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்தும் அவர்கள் விலகியிருந்தனர்.  

அதேபோல கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது குசல் ஜனித் பெரேரா உபாதைக்குள்ளாகியிருந்தார். இதனால் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில் அவரால் விளையாட முடியாது போனது.

இந்நிலையில், மெதிவ்ஸ், குசல் ஜனித் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் எதிர்வரும் சில தினங்களில் உடற் தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற குறித்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால், பாகிஸ்தானுடனான T-20 தொடருக்காக நியமிக்கப்பட்ட திஸர பெரேரா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் பணிப்பாளர் அஷ்லி டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

http://www.thepapare.com

  • Replies 64
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

crrrr-696x464.jpg
 

இலங்கை கிரிக்கெட் அணி, எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. 37 நாட்களைக் கொண்ட இந்த சுற்றுத் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.

இதனடிப்படையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட பெயர்ப் பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

இப்பெயர்ப் பட்டியல் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் மணிக்கட்டு உபாதைக்குள்ளாகியிருந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான முரளி விஜய் மீண்டும் இந்திய டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

முன்னதாக இந்திய அணி தமது சொந்த மண்ணில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் முரளி விஜய் காயத்திற்கு உள்ளாகியிருந்தார். இதனால் அவர் அத்தொடரில் ஒரு போட்டியில் பங்கேற்கவில்லை. அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரினை அடுத்து, சிகிச்சைகளுக்காக இங்கிலாந்து பயணமாகிய விஜய், கடந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரிலும் விளையாடவில்லை.

இதேவேளை, காலியில் நடைபெற்ற இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக விலகிய லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக விளையாடியிருந்த மற்றுமொரு தமிழக வீரரான அபினவ் முகுந்த்துக்கும் இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும், இந்திய அணியின் துடுப்பாட்ட தூண்களாக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே மற்றும் ஷிகர் தவான் ஆகிய வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பை வழங்க அந்நாட்டு தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

இதேவேளை, இலங்கை அணிக்கெதிராக பங்கேற்கவுள்ள இந்திய அணியில் அனுபவமிக்க பந்து வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மீண்டும் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இறுதியாக விளையாடியிருந்த குறித்த இரு வீரர்களும், அதன்பிறகு நடைபெற்ற இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஷ்வின், ஐசிசியின் தரவரிசையில் முதல் இடம், T-20 போட்டிகளில் சிறப்பான ஆட்டம் என முழுமையாக சிறந்த நிலையில் இருந்தார். இந்த நிலையில் அணியின் தலைவராக கோஹ்லி பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதுடன், அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த அஷ்வின் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இலங்கை தொடருக்கு முன் யோ-யோ பரிசோதனைக்கு முகங்கொடுத்த அஷ்வின், அதில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்திய அணியில் அஷ்வின் இடம்பெறுவது போலவே நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்டு வந்த ரவிந்திர ஜடேஜாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். அண்மையில் நிறைவுக்கு வந்த ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் 200 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, வீரர்கள் மற்றும் வீரர் உதவிப் பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதியை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை அணியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியின்போது போட்டித் தடைக்குள்ளாகயிருந்த ஜடேஜாவுக்குப் பதிலாக அப்போட்டியில் களமிறங்கிய அக்ஷார் பட்டேலுக்கும், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாமில் வாய்ப்பு வழங்கப்படவில்லை

 

 

அத்தோடு, இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற ஹர்திக் பாண்டியாவும் இந்திய டெஸ்ட் குழாமில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்டிலே இவர் அறிமுகம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாண்டியா இக்குழாமிலுள்ள இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், மொஹமட் சமி மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோருடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சு துறைக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி தலைமை தாங்குகின்றார். முன்னதாக இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக கோஹ்லி விளையாட மாட்டார் எனவும், அவருக்கு ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால், எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு ஆயத்தமாகும் நோக்கில் இலங்கை அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லிக்கு வாய்ப்பளிக்க இந்திய தெரிவுக்குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்திய அணியில் தொடர்ச்சியாக கோஹ்லி விளையாடி வருவது தொடர்பில் இன்று மும்பையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவுக்குழுவின் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கருத்து வெளியிடுகையில், ”கோஹ்லிக்கு ஓய்வு வழங்குவதற்கு இது சரியான தருணமல்ல. அவர் இந்திய அணிக்காக முக்கிய இன்னிங்ஸ்களில் பிரகாசிக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனாலும் ஏனைய வீரர்களைப் போல சுழற்சி முறையில் அவருக்கும் ஓய்வினை அளிப்பதற்கு நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.

குறிப்பாக இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரிலிருந்து அவர் இடைவிடாது விளையாடி வருகின்றார். எனவே, நிச்சயம் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அவருக்கு ஓய்வளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 2ஆவது டெஸ்ட் போட்டி 24ஆம் திகதி நாக்பூரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதி டெஸ்ட் போட்டி டிசம்பர் 24ஆம் திகதி டெல்லியில் நடைபெறவுள்ளது.

 

 

இந்நிலையில், இலங்கை அணிக்கும், இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்குமிடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டிக்கான குழாமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அனுபவமிக்க சகலதுறை ஆட்டக்காரரான நாமன் ஓஜா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இக்குழாமில் தற்போது நடைபெற்று வருகின்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்திய சன்ஜு சம்சன், ஜலாஜ் சக்சேனா மற்றும் 20 வயதான வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு நாள் பயிற்சிப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் குழாம்

விராத் கோஹ்லி (அணித் தலைவர்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, ஷிகர் தவான், அஜிங்கியா ரஹானே (உப தலைவர்), ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, வித்திமன் சஹா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, குல்தீப் யாதவ்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

RC-7-696x460.jpg
 

இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் 15 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (5) வெளியிட்டுள்ளது.

இத்தொடருக்கான இலங்கை அணியில் வலது கை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கு எதிராக அண்மையில் திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்திய தசுன் சானக்க ஆகியோர் மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கியிருந்த கெளஷால் சில்வா, குசல் மெண்டிஸ் மற்றும் நுவன் பிரதீப் ஆகியோர்  இந்திய அணிக்கு எதிரான இத்தொடரில் உள்ளடக்கப்படவில்லை.  

இலங்கை அணியானது இறுதியாக தினேஷ் சந்திமால் தலைமையில் பாகிஸ்தான் அணியை அவர்களது இரண்டாம் தாயகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதற் தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் 2-0 என வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய நிலையில் காயமுற்றிருந்த அசேல குணரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் தற்போது பூரண உடற்குதியைப் பெற்றிருக்கின்ற போதிலும், டெஸ்ட் போட்டிகளில் போதிய பயிற்சிகளை அண்மைய நாட்களில் பெறாத காரணத்தினால் அவர்களுக்கு இக்குழாமில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடாது போயிருந்த இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் தனது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டிருப்பதால் இந்தியாவுக்கான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கையின் மத்தியவரிசையை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு தற்போது கெளஷால் சில்வா அணியில் நீக்கப்பட்டிருப்பதால் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சதீர சமரவிக்ரம செயற்படுவார் என நம்பப்படுகிறது.

 

 

இலங்கை அணியானது இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக முதல் டெஸ்ட் போட்டி நடைபெற ஏற்படாகியிருக்கும கொல்கத்தாவில் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் விளையாடவுள்ளது. இதனையடுத்து இரண்டாம், மூன்றாம் டெஸ்ட் போட்டிகளுக்காக இலங்கை நக்பூர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுக்கு பயணிக்கவுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் உலகின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமான கொல்கத்தாவிலேயே 1996 ஆம் ஆண்டு உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் குழாமில் உள்ளடக்கப்பட்டும் அத்தொடருக்கான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெறாத மத்திய வரிசை வீரரான ரோஷென் சில்வா மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தத்தமது இடங்களில் நீடிக்கின்றனர்.

இத்தொடருக்கான இலங்கை அணி நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணிக்கின்றது.

இலங்கை டெஸ்ட் குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, தனஞ்சய டி சில்வா, அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் திக்வெல்ல, லஹிரு திரிமான்ன, ரோஷென் சில்வா, தசுன் சானக்க, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லக்‌ஷான் சந்தகன், சுரங்க லக்மால், லஹிரு கமகே, விஷ்வ பெர்னாந்து

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

குசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு மஹல ஜயவர்தன எதிர்ப்பு

Kusal-mendis.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு, முன்னாள் அணியின் தலைவர் மஹல ஜயவர்தன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தில் குசால் மெண்டிஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. குசால் மெண்டிஸை, தெரிவுக்குழுவினர் அணியிலிருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குசால் மெண்டிஸ் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாவிட்டாலும் இந்தியாவிற்கு  அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டுமென  மஹல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு விடயங்களை கற்றுக்கொள்வதற்காகவேனும் குசால் மெண்டிஸ் அணயில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/48517

  • தொடங்கியவர்

கொல்கத்தா வந்து சேர்ந்தது இலங்கை கிரிக்கெட் அணி

 

 
09CHPMUDINESHCHANDIMAL

கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து சக அணி வீரருடன் வெளியேறும் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால்.   -  படம்: பிடிஐ

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 6 வார கால சுற்றுப்பயணமாக நேற்று கொல்கத்தா வந்து சேர்ந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் வரும் 16-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கொல்கத்தா வந்து சேர்ந்துள்ள இலங்கை அணியினர் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அந்த அணி 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வாரியத்தலைவர் அணியுடனான இந்த ஆட்டம் 11-ம் தேதி நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/article20008720.ece

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹா, அஸ்வின், ஜடேஜா, ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி கொல்கத்தாவிலுள்ள ஈடன்கார்டன் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/26890

  • தொடங்கியவர்

பயிற்சி ஆட்டம்: இலங்கை முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவிப்பு

 

இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்துள்ளது.

 
 
பயிற்சி ஆட்டம்: இலங்கை முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவிப்பு
 
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி  கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இலங்கை அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட தீர்மானித்தது.
 
இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான அந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் யுனிவர்சிட்டி கேம்பஸில் உள்ள மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய பிரசிடென்ட் லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  சமரவிக்ரமா 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கருணாரத்னே 50 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு  ஹர்ட் மூலம் வெளியேறினார்.
 
அடுத்து வந்த திரிமன்னே 17 ரன்னில் ஆட்டம் இழந்தாலும்,  மேத்யூஸ் 54 ரன்னும், டிக்வெல்லா அவுட்டாகாமல் 73 ரன்களும் எடுத்தனர். பெரேரா 44 பந்தில் 48 ரன்களும், சில்வா 36 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் நாளில் 88 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/11202222/1128248/Warm-up-match-srilanka-batsmen-shine-411-for-6.vpf

  • தொடங்கியவர்

அஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க திட்டம் தயார்: மனம் திறக்கிறார் இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே

 

 
12CHPMUKARUNARATNE

பயிற்சி ஆட்டத்தில் பந்தை நேர்த்தியாக விரட்டும் இலங்கை அணியின் தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே.   -  படம்: பிடிஐ

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜாவை சமாளிக்க சிறப்பாக தயாராகி உள்ளதாக இலங்கை அணியின் இடது கை தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 0-3 என சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் ஆனது. இந்தத் தொடரில் இலங்கை தொடக்க வீரரான திமுத் கருணாரத்னே 285 ரன்கள் சேர்த்தார். அதிலும் 2-வது டெஸ்ட்டில் அவர், 141 ரன்கள் விளாசிய போதிலும் அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாக அமைந்தது. 29 வயதான கருணாரத்னே இந்தத் தொடரில் அஸ்வின் பந்தில் இரு முறையும், ஜடேஜா பந்தில் ஒரு முறையும் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இலங்கை வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர். திமுத் கருணாரத்னே அரை சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்துக்கு பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் விக்கெட் வேட்டையாட காத்திருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் அடிப்படையை ஒட்டியவாறே பந்து வீசுவார்கள். நாம் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வேறு ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள். அப்படி களத்தின் நிலைமையை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும்.

இதுதான் எனது ஆட்டத்தின் திட்டம். தளர்வான பந்துகளுக்காக காத்திருப்பேன், அவை கிடைக்கும் பட்சத்தில் சரியாக பயன்படுத்திக் கொள்வேன். இந்த திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் கிரீஸில் இருந்து வெளியே வந்து விளையாடி பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது குறித்து சிந்திப்பேன். இந்தியாவுக்கு எதிராக கொழும்பு டெஸ்ட்டில் அடித்த சதம் (141 ரன்கள்) தான் பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக செயல்படுவதற்கான தன்னம்பிக்கையை கொடுத்தது.

கொழும்பு டெஸ்ட்டில் 2-வது இன்னிங்ஸில் ரன்கள் சேர்ப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அந்த ஆடுகளத்தில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த அஸ்வினுக்கு எதிராக ரன்களை எடுத்து உறுதியாக செயல்பட்டேன். அந்த ஆட்டத்தில் முதல் 5 ஓவர்களில் பெரிய அளவிலான ஷாட்களை மேற்கொள்ளக்கூடாது என நினைத்து செயல்பட்டேன். ஆனால் அது எளிதானது இல்லை என்பதை உணர்ந்தேன்.

ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொண்ட பிறகே இந்திய அணி பீல்டிங் வியூகத்தை மாற்றியது. இதுதான் எனது பாணி, என்னுடைய வசதிக்கு தகுந்தபடி விளையாட வேண்டும், வேறு எதையும் செய்யக்கூடாது. நீண்ட நேரம் பேட் செய்வதற்கு இதுதான் முக்கியம். மேலும் இதுவே எனது திட்டம். தூசிகள் நிறைந்த ஆடுகளத்தில் நாங்கள் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளோம். சுழற்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள சிறந்த முறையில் தயாராகி உள்ளோம்.

இவ்வாறு திமுத் கருணா ரத்னே கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article20304043.ece

  • தொடங்கியவர்

ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணியினர்

 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்டிற்கான ஈடன் கார்டன் மைதானத்தை இலங்கை அணி பார்வையிட்டுள்ளது.

 
 
ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணியினர்
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற வியாழக்கிழமை (நவம்பர் 16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்கான ஏற்கனவே இந்தியா வந்துள்ள இலங்கை அணி போர்டு பிரசிடென்ட் லெவன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டம் நேற்றுமுன்தினமும், நேற்றும் நடைபெற்றது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

அதன்பின் இலங்கை அணி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை வந்தடைந்தது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல், தலைமை பயிற்சியாளர் நிக் போதாஸ், பேட்டிங் பயிற்சியாளர் திலன் சமரவீரா, பந்து வீச்சு ஆலோசகர் ருமேஷ் ரத்னயாகே, அணி மானேஜர் அசாங்க குருசிங்கா ஆகியோர் ஈடன் கார்டன் ஆடுகளத்தை பார்வையிட்டனர்.

ஆடுகளத்தின் ஒருபகுதியை உன்னிப்பாக கவனித்த இந்த குழு, ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் நீண்ட நேரம் வார்த்தைகளை பரிமாற்றிக் கொண்டனர்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/13202121/1128628/India-vs-Sri-Lanka-Tourists-Inspect-Pitch-On-Rest.vpf

  • தொடங்கியவர்
மத்தியூஸ் பந்துவீச வாய்ப்பில்லை
 

image_ff71fc0113.jpg

 

இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மத்தியூஸ் இடம்பெற்றுள்ளது இலங்கையணிக்கு ஊக்கத்தையளிக்கிறது.

 

எவ்வாறெனினும் கெண்டைக்கால் பின் தசை காயமொன்று காரணமாக பாகிஸ்தானுக்கெதிரான தொடர் முழுவதையும் தவறவிட்டிருந்த அஞலோ மத்தியூஸ், இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் பதினொருவர் அணிக்கெதிரான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில், இலங்கை 14 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்த நிலையில், அஞ்சலோ மத்தியூஸ் ஐந்து ஓவர்கள் வீசியிருந்தார்.

இந்நிலையில், அணியில், முன்னாள் அணித்தலைவரான அஞ்சலோ மத்தியூஸின் வகிபாகம் தொடர்பாக, இலங்கையணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்கவிடம் வினவப்பட்டபோது, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசமாட்டார் எனவும் துடுப்பாட்ட வீரரொருவராகவே இருப்பார் எனக் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட காலத்துக்கு, டெஸ்ட் போட்டியொன்றில் பந்துவீசாமை காரணமாக, இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசுவார் என தான் நினைக்கவில்லையென்று கூறிய ருமேஷ் ரத்நாயக்க, மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பந்துவீச்சாளரொருவராகவே தாங்கள் அஞ்சலோ மத்தியூஸை பெரும்பாலும் கருத்திற் கொள்வதாகவும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மாத்திரம் அஞ்சலோ மத்தியூஸை பந்துவீச வைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அஞ்சலோ மத்தியூஸின் பணிச்சுமையை கண்காணித்து வரும் இலங்கையணி முகாமைத்துவம், கடந்த 12 மாதங்களில் பல காயங்களுக்குள்ளான அஞ்சலோ மத்தியூஸை பந்துவீச வைக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு ஜுலை தொடக்கம் செப்டெம்பர் வரை இலங்கையில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சில ஓவர்களை அஞ்சலோ மத்தியூஸ் வீசியிருந்தபோதும் டெஸ்ட் தொடரில் பந்துவீசியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அஞ்சலோ மத்தியூஸ் பந்துவீசாத நிலையில், சகலதுறை வீரர் இடத்துக்காக தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக, றொஷேன் சில்வா கருத்திற் கொள்ளப்படுவர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மத்தியூஸ்-பந்துவீச-வாய்ப்பில்லை/44-207095

  • தொடங்கியவர்

இப்போதை விட நான் எதிர்த்து ஆடிய இந்திய அணியின் பேட்டிங் வலுவானது: முத்தையா முரளிதரன் கருத்து

 
murali

முத்தையா முரளிதரன்.   -  கோப்புப் படம். | வி.கணேசன்

வியாழனன்று கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்வதற்கான வாய்ப்பு இலங்கை அணிக்கு மிகமிகக் குறைவு என்று ஸ்பின் லெஜண்ட் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் இணையதளம் ஒன்றில் முரளிதரன் கூறியதாவது:

இந்தியாவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெல்வதற்கான எங்களது வாய்ப்பு மிகக் குறைவு. இந்தியாவில் அனைத்து அணிகளுமே திணறியுள்ளன.

கடந்த 13 ஆண்டுகளில் 2 அணிகள் மட்டுமே இந்தியாவில் தொடரை வென்றுள்ளன. இந்திய அணி தற்போது நம்பர் 1 அணியாக தரவரிசயில் உள்ளது.

இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பரவாயில்லை, ஆனால் குறைந்த ஓவர் போட்டிகளில் கடுமையாகத் திணறி வருகிறோம். இது கடினமான தொடர் எங்கள் வீரர்களின் திறமைக்கு கடும் சவால் காத்திருக்கிறது

நான் இந்தியாவுக்கு எதிராக ஆடிய போது இந்திய அணியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்கள் ஆடினார்கள். இப்போதை விட அப்போது இந்திய அணி பேட்டிங் வலுவாக இருந்தது. சேவாக், கம்பீர், சச்சின், திராவிட், கங்குலி, லஷ்மண், தோனி ஒன்றிலிருந்து 7 வரை நல்ல பேட்டிங் வரிசை. இதில் பலர் அனைத்து கால சிறந்த வீரர்கள் இதனால் கஷ்டப்பட்டோம்.

உள்நாட்டில் நாங்களுமே வலுவான அணிதான், இந்திய அணி வலுவான அணியாக இருந்த போதிலும் 22 ஆண்டுகளாக இலங்கையில் தொடரை வெல்ல முடியவில்லை. இந்திய அணிக்கு ஆட்டத்தை கடினமாக்கிய தருணங்களின் மகிழ்ச்சியான நினைவுகள் எங்களிடத்தில் இன்னமும் உள்ளன. சில தொடர்களில் அனைத்துப் போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளன. 1997-ல் 2 டெஸ்ட்களை இலங்கையிலும் 3 டெஸ்ட் போட்டிகளை இந்தியாவிலும் ஆடினோம், அனைத்துமே டிரா ஆனது. இரு அணிகளிலுமே தரமான பேட்ஸ்மென்கள் இருந்தனர்.

இவ்வாறு கூறினார் முத்தையா முரளிதரன்.

http://tamil.thehindu.com/sports/article20445193.ece

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

SLvIND 1st test Preview 2017
 

அண்மைய நாட்களில் அதிகமான தோல்விகளையே பார்த்து பழக்கப்பட்டிருக்கும்  இலங்கை கிரிக்கெட் அணி அதிலிருந்து மீள்வதற்காக கடும் சிரத்தைகளை எடுத்து வருகின்றது. இப்படியான தருணத்தில் மூன்றுவகைப் போட்டிகளிலும் இப்போதைய நாட்களில் மலைக்க வைக்கும்படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னராக மாறியிருக்கும் இந்தியாவுடன் நடைபெறவுள்ள தொடர் இந்து சமுத்திரத்தின் முத்திற்கு இந்த வருடத்தில் கொடுக்கப்பட்ட மிகப் பெரும் சவால் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இச் சவாலினை எதிர்கொள்வதற்காக தமது அயல் தேசத்துக்கு பயணமாகியிருக்கும் இலங்கை அணி முதற்கட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை (16) ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுடன் மோதுகின்றது.

இதுவரையில் இந்திய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் வெற்றியினையும் இலங்கை பதிவு செய்திருக்காதமையினால் வரலாற்றினை மாற்றும் வாய்ப்பு பாகிஸ்தானுடனான அண்மைய டெஸ்ட் தொடரினை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை இளம் வீரகளுக்கு மீண்டும் கிட்டியிருக்கின்றது.

எனவே, நடைபெறப்போகும் அயல் தேசங்களுக்கிடையிலான இந்த டெஸ்ட் தொடர் பற்றிய ஒரு முன்னோட்டத்தினை நாம் பார்ப்போம்.

வரலாறு

1982ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட இலங்கை அணிக்கு தமது முதல் டெஸ்ட் வெற்றியினைப் பெறுவதற்கு மூன்று வருடங்கள் தேவைப்பட்டிருந்தது. இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த வெற்றி இந்திய அணிக்கெதிராகவே 1985ஆம் ஆண்டில் பெறப்பட்டது.   

அப்போட்டியோடு சேர்த்து இன்றுவரை இரண்டு அணிகளும் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் 19 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதோடு, இலங்கை அணி 7 போட்டிகளைக் கைப்பற்றியிருக்கின்றது. 19 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

தொடர் நடைபெறப் போகும் இந்தியாவில் இரண்டு அணிகளுக்குமிடையே 17 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதோடு 7 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவோடு சேர்த்து அவுஸ்திரேலியாவிலும் டெஸ்ட் வெற்றியொன்றினை இதுவரையில் சுவீகரிக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது வடுக்களுக்கு மருந்து தேடும் இலங்கை அணி

2017 ஆம் ஆண்டு நிறைவை எட்டியிருக்கின்ற தற்போதையதருணத்தில் இந்த வருடத்தில் கடந்து சென்ற நாட்களை புரட்டிப் பார்க்கும் போது அவை இலங்கை கிரிக்கெட் அணிக்கு கறுப்பு பக்கங்களாகவே அமைவதை காண முடியும்.

ஜனவரியில் தென்னாபிரிக்காவினால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வைட் வொஷ் செய்யப்பட்டிருந்த இலங்கை, மார்ச் மாதம் வரலாற்றில் முதற்தடவையாக பங்களாதேஷ் மூலம் டெஸ்ட் போட்டியொன்றில்  வீழ்த்தப்பட்டிருந்தது. அதனை அடுத்து ஜிம்பாப்வே உடனான டெஸ்ட் தொடரில் நல்ல முடிவினைக் காட்டியிருந்தாலும் ஒகஸ்ட் மாதம் மீண்டும் சொந்த மண்ணில் வைத்து இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வரலாற்றில் முதற்தடவையாக 3-0 என வைட்வொஷ் செய்யப்பட இலங்கை அணி ஒருநாள் தொடர், T-20 தொடர் ஆகியவற்றினையும் (9-0 என) முழுமையாகப் பறிகொடுத்ததால் தொடர்ந்து பலவிதமான அழுத்தங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.  

இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி எதிர்பாராத முறையில் வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கை அணியே தற்போது இந்தியாவை டெஸ்ட் தொடரில் எதிர்கொள்ளப் போகின்றது. எனவே சொந்த மண்ணில் தாம் பெற்ற தோல்விகளுக்காக அயல் நாட்டு வீரர்களுக்கு இலங்கை அணியினர் பதிலடி தருவர்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் உச்சத்தில் காணப்படும் இந்தியா

2015ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இன்று வரை தாம் பங்குபற்றிய எட்டு டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்றிருக்கும் இந்தியா, அணித்தலைவர் விராத் கோலியின் தலைமையின் கீழ் தற்போது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நாடாக மாறியுள்ளது.

சரியான திட்டமிடல், போட்டிகளை உத்தித் தன்மையுடன் கையாளும் விதம், சீரான அணிக்கட்டமைப்பு, தேசிய அணிக்காக உள்ளூர் போட்டிகளில் (ராஞ்சி கிண்ணம் போன்றவற்றில்) வீரர்கள் தயார்படுத்தப்படும் விதம் என்பவையே இந்திய அணியின் இன்றைய அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணங்களாக அமைகின்றன.

இதனால், எந்த அணியாக இருப்பினும் தற்போது அவர்கள் இலகுவாக வீழ்த்திவிடுகின்றனர்.  இதனால் அண்மைய நாட்களில் கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அளவுக்கு மாறியிருந்த இலங்கையுடன் அவர்கள் விளையாடியிருந்த டெஸ்ட் தொடர் முழுக்க இந்திய அணிக்கு சார்பாகவே (இலங்கை சவால் எதனையும் தராத காரணத்தினால்) அமைந்திருந்தது.

இன்னும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது என்பது சவாலின் உச்ச கட்டம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, தமது துணைக்கண்ட நாடான இலங்கைக்கு இந்தியா எந்தக் கணத்திலும் நெருக்கடி தரும் ஒரு அணியாகவே இந்த டெஸ்ட் தொடரில் அமையும்.

முன்னாள் அணித் தலைவரோடு மீண்டும் இலங்கை அணி

இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணிகளில் ஒன்று வீரர்களின் தொடர் உபாதையாகும். இலங்கை அணிக்காக விளையாடும் வீரர் ஒருவர் அவரது உச்ச நிலையில் இருக்கின்ற போது துரதிஷ்டவசமாக உபாதைக்கு உள்ளாகிவிடுகின்றார். இதில் முன்னாள் அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோர் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

இவ்வீரர்கள் அனைவரும் தற்போது போதிய உடற்தகுதியினைப் பெற்றிருக்கின்ற போதிலும் போட்டி அனுபவங்களை கருத்திற் கொண்டு மெதிவ்சுக்கு மாத்திரமே அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.  2016ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதத்தில் இருந்து இன்று வரை 37 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பினை மெதிவ்ஸ் இழந்திருக்கின்றார். இதில் ஆறு டெஸ்ட் போட்டிகள் அடங்குகின்றன. மெதிவ்ஸ் அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Angelo-Mathews-2-300x200.jpg அஞ்செலோ மெதிவ்ஸ்

அபாயம் கருதி சகலதுறை வீரரான மெதிவ்ஸ் இனி டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவதில்லை என ஒரு அறிவிக்கை தெரிவிப்பதால் அவரை முழு நேர துடுப்பாட்ட வீரராகவே இந்த டெஸ்ட் தொடரில் பார்க்க முடியும்.

தற்போதைய இலங்கை குழாத்தில் காணப்படும் வீரர்களில் இரண்டு பேர் மாத்திரமே இந்தியாவில் முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினைக் கொண்டுள்ளனர். அதிலொருவரான மெதிவ்ஸ், இந்தியாவுக்கு எதிராக இதுவரையில் 764 ஓட்டங்களை 2 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்கள் அடங்கலாக குவித்துள்ளார். எனவே அனுபவமிக்க மெதிவ்ஸ் நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்க முடியும்.

இளம் வீரர்களோடு நிரம்பியிருக்கும் எஞ்சிய இலங்கை குழாம்

ஏனைய இலங்கை வீரர்களில் ரங்கன ஹேரத்தை தவிர தற்போதைய குழாத்தில் காணப்படும் ஒருவரேனும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தினை பெறாத நிலையில் உள்ளனர். ஏனெனில் இறுதியாக 2009ஆம் ஆண்டிலேயே இலங்கை அணி டெஸ்ட் தொடரொன்றில் விளையாட இந்தியா பயணித்திருந்தது.

இருக்கும் வீரர்களில் இலங்கையின் துடுப்பாட்டத்தினை வலுப்படுத்த எதிர்பார்க்கப்படும் முக்கிய வீரர் திமுத் கருணாரத்ன ஆவார். ஒகஸ்ட் மாதத்தில் இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களை (285) குவித்த திமுத் கருணாரத்ன பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட்டிலும் அதிக ஓட்டங்கள் (306) குவித்தமைக்காக தொடர் நாயகன் விருதினையும் பெற்றிருந்தார்.

Dimuth-Karunaratne-300x200.jpg திமுத் கருணாரத்ன

ஆரம்பாக வீரராக வரும் திமுத் கருணாரத்னவோடு இம்முறை ஜோடியாக இளம் துடுப்பாட்ட நட்சத்திரம் சதீர சமரவிக்ரம வர எதிர்பார்க்க முடியும்.

பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்படாது போன காரணத்துக்காக இலங்கை அணியில் குசல் மெண்டிசுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இவரது இடத்தினை அணியில் நிரப்ப லஹிரு திரிமான்ன, அறிமுக வீரர் ரொஷேன் சில்வா அல்லது தனன்ஞய டி சில்வா ஆகியோரில் ஒருவர் அணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றனர். தனன்ஞய டி சில்வா மேற்கிந்திய தீவுகளின் A அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயற்பட்டமைக்காகவே இலங்கை அணியில் மீண்டும் அழைக்கப்பட்டிருக்கின்றார்.

Dinesh-Chandimal-1-300x200.jpg தினேஷ் சந்திமால்

இன்னும் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மோசமான பதிவினை அண்மையில் காட்டியிருந்த போதிலும் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் போராடிப் பெற்ற சதம் (155) இலங்கை அணியின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்திருந்தது. 40 ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினைக் கொண்டிருக்கும் சந்திமால் இலங்கை அணியின் மத்திய வரிசையை வலுப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டவர்.

நிரோஷன் திக்வெல்ல, பகுதி நேர துடுப்பாட்ட வீரரான தில்ருவான் பெரேரா ஆகியோர் பின்வரிசையில் இலங்கைக்கு பெறுமதி சேர்க்க கூடியவர்கள்.

Herath-1-300x200.jpg ரங்கன ஹேரத்

அடுத்து பந்து வீச்சினை நோக்குமிடத்து இலங்கையின் முதுகெலும்பாக ரங்கன ஹேரத்தை கூற முடியும். இந்தியாவுடனான இறுதி டெஸ்ட் தொடரில் ஹேரத் குறிப்பிடும் படியான ஆட்டத்தை காட்டாவிட்டாலும் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரில் மொத்தமாக 16 விக்கெட்டுக்களைச் சாய்த்து இலங்கையின் வெற்றிக்கு உதவியிருந்தார். ஹேரத் இந்த வருடத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை அனுபவம் குறைந்த வீரர்களான லஹிரு கமகே, தசுன் சானக்க மற்றும் விஷ்வ பெர்னாந்து ஆகியோருடன் சேர்ந்து சுரங்க லக்மால் முன்னெடுப்பார் என நம்பப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல (விக்கெட் காப்பாளர்) தசுன் சானக்க, தில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், சுரங்க லக்மால், லஹிரு கமகே  

டெஸ்ட் ஓட்ட இயந்திரத்தினை தம்மிடம் கொண்டிருக்கும் இந்தியா

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடவே வைத்திருக்கும் வீரர்களில் ஒருவரான செட்டெஸ்வர் புஜாரா அவ்வணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்க கூடிய ஒரு முக்கிய நபர். இலங்கை அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய இவர் அத்தொடரில் 4 இன்னிங்சுகளில் 309 ஓட்டங்களினை மொத்தமாக பெற்றிருந்தார்.

Pujara-300x200.jpg செட்டெஸ்வர் புஜாரா

இன்னும் 50  ஓட்டங்களுக்கு மேலான டெஸ்ட் சராசரியினையும் கொண்டிருக்கும் புஜாரா கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக செயற்படும் ஒருவராக உள்ளார். இவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் 19 போட்டிகளில் விளையாடி 1687 ஓட்டங்களினை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்றாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக வரும் புஜாராவை ஆரம்பத்திலேயே இலங்கை வீரர்கள் வீழ்த்தாது விடின் பின்னர் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும்.

Kohli-300x200.jpg விராத் கோலி

ஆரம்ப வீரர் சிக்கர் தவான், அஜங்கயா ரஹானே போன்ற வீரர்களோடு சேர்த்து அணித்தலைவர் விராத் கோலியும் இலங்கைக்கு நெருக்கடி தரக்கூடிய ஏனைய வீரர்களாக காணப்படுகின்றனர். இதில் கோலி எந்த தருணத்திலும் எதிரணியினை நிர்மூலம் செய்யக்கூடிய ஒரு அபாயகரமான துடுப்பாட்ட வீரர் ஆவார். இதுவரையில் இலங்கை அணிக்கெதிராக அவர் 394 ஓட்டங்களினை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழல் ஜாம்பவான்களினால் மேலும் வலுப்பெறும் அயல் தேசம்

இந்திய அணிக்கு அவர்களது மிகப்பெரும் பலம் எதிரணியை நிர்மூலமாக்கும் சுழல் பந்துவீச்சாகும். இதற்கு காரணமாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் அமைகின்றனர்.  

Jadeja-1-300x200.jpg ரவீந்திர ஜடேஜா

டெஸ்ட் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ள பந்து வீச்சாளர்களான இந்த இருவரும் இலங்கை அணியினை அண்மையில் நடைபெற்ற டெஸ்ட்  தொடரில் வீழ்த்த பெரும்பங்காற்றியிருந்தனர்.  அத்தொடரில் அஷ்வின் இலங்கையின் 17 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 13 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ashwin-1-300x200.jpg ரவிச்சந்திரன் அஷ்வின்

எனவே, நடைபெறவிருக்கும் தொடரில் இலங்கை வீரர்கள் இந்த இருவரையும் கவனமாகவே எதிர்கொள்ள வேண்டும். இன்னும் இந்த இரண்டு வீரர்களும் பகுதிநேர துடுப்பாட்ட வீரர்களாகவும் செயற்படக் கூடியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையினை மொஹமட் சமி, புவ்னேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் முன்னெடுக்க முடியும். இதில் மொஹமட் சமி இலங்கை அணிக்கெதிராக இறுதியாக நடந்த டெஸ்ட் தொடரில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்ததார்.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி

சிக்கர் தவான், முரலி விஜேய், செட்டெஸ்வர் புஜாரா, விராத் கோலி (அணித்தலைவர்), அஜின்கியா ரஹானே, ரித்திமன் சஹா(விக்கட் காப்பாளர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, புவ்னேஸ்வர் குமார், உமேஷ் யாதவ்  

இனி நாம் பலம்மிக்க இந்திய அணியினை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இலங்கை அணி வரலாற்றை மாற்றுமா? அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்குமா என்பதை பார்க்க மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் நிறைவடையும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இன்று இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட்: தொடர் மழையால் தாமதம்

 

 
16CHPMUPLAYINGARENA

மழை காரணமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் தார்ப்பாய் கொண்டு முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.   -  படம்: கே.ஆர்.தீபக்

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வெற்றி வேட்டையை தொடரும் முனைப்புடன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்கும் வேளையில், இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் கனவுடன் இலங்கை அணி உள்ளது.

இந்திய அணி கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதம் இலங்கையை 3 வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் அதன் சொந்த மண்ணிலேயே 9-0 என ஒயிட்வாஷ் செய்தது. எனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை 2-0 என முழுமையாக வீழ்த்தி ஆச்சர்யம் கொடுத்தது இலங்கை அணி. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த டெஸ்ட் தொடர் அடுத்து மேற்கொள்ளவுள்ள கடினமான தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு தயார் செய்துகொள்வதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் 2 மாத காலம் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜனவரி 5-ம் தேதி கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இருந்து தொடங்குகிறது. கடந்த ஜூலை-ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய அணி 13 ஒருநாள் போட்டி, 6 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளது.

எனினும் டெஸ்ட் போட்டிக்கு தகுந்தபடி இந்திய வீரர்கள் தங்களது ஆட்ட யுக்திகளை மாற்றிக் கொள்வதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் அணியில் உள்ள பெரும்பாலாளன வீரர்கள் தங்களது மாநிலம் சார்ந்த அணிகளுக்காக ரஞ்சி கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளனர்.

இலங்கை அணி இந்தியாவில் கடந்த 1982-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இந்த 35 வருடங்களில் அந்த அணி இந்திய மண்ணில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளபோதிலும் ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெற்றது கிடையாது. மேலும் தற்போதுள்ள தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி அனுபவம் இல்லாதது.

அணியில் உள்ள 15 வீரர்களில் ஏஞ்சலோ மேத்யூஸ், ரங்கனா ஹெராத் ஆகியோர் மட்டுமே இந்திய மண்ணில் இதற்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியில் இவர்கள் இருவரும் இடம் பிடித்திருந்தனர். எனினும் அந்தத் தொடரை இலங்கை 0-2 என இழந்திருந்தது.

ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தில் புற்கள் காணப்படுவதால் தொடக்க நாட்களில் வேகப் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இதனால் இந்திய அணி 3 வேகப் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோருடன் புவனேஷ்வர் குமார் இடம் பெறக்கூடும். அவர், இந்த மைதானத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.

கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்டில் விளையாடியிருந்த புவனேஷ்வர் குமார், கடந்த சில நாட்களாக வலைப் பயிற்சியில் தீவிரமாக செயல்பட்டார். ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பி உள்ளதால் அவருக்கு வழிவிட வேண்டிய கட்டாயத்தில் குல்தீப் யாதவ் உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் பல்லேகலேவில் நடைபெற்ற டெஸ்ட்டில் தடை காரணமாக ஜடேஜா விளையாடாததால் குல்தீப் யாதவ் களமிறக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழங்கை காயத்தில் இருந்து விடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் மீது எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பையில் அவர் 140 ரன்கள் விளாசியிருந்தார். ஆனால் அவருக்கு விளையாடும் லெவனில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் கடந்த சில நாட்களாக ஷிகர் தவணுடன், கே.எல்.ராகுல் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அதேவேளையில் முரளி விஜய், பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லை. இதனால் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவண், கே.எல்.ராகுல் கூட்டணியை பயன்படுத்தக்கூடும்.

மாரத்தான் இன்னிங்ஸை மேற்கொள்ளும் திறன் கொண்ட சேதேஷ்வர் புஜாரா மீண்டும் பேட்டிங்கில் அசத்த தயாராக உள்ளார். இலங்கை சுற்றுப்பயணத்தில் இரு சதங்கள் அடித்த அவர், கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 500 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியும் ரன் வேட்டையாட காத்திருக்கிறார்.

அவர், கடைசியாக காலே டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் விளையாடிய 2 டெஸ்ட்லும் அவர் அரை சதம் கூட தாண்டவில்லை. நடுகளத்தில் அஜிங்க்ய ரஹானே பலம் சேர்க்கக்கூடும். இலங்கை சுற்றுப்பயணத்தில் அவர், தலா ஒரு சதம், அரை சதம் அடித்திருந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால், அஸ்வினுக்கு பேட்டிங்கில் கூடுதல் பொறுப்பு இருக்கும். குறுகிய வடிவிலான தொடர்களில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அஸ்வின், டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மண்ணில் இலங்கை அணி முதன்முறையாக வெற்றியை பதிவு செய்வது அவ்வளவு எளிதான செயல் இல்லை என்றே கருதப்படுகிறது. இது நிகழ வேண்டுமானால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் அதிக நேரம் செலவிட்டு பயனுள்ள வகையில் ரன்களை சேர்க்க வேண்டும். தொடக்க வீரர்களான சதீரா சமரவிக்ரமா, திமுத் கருணாரத்னே ஆகியோரை அணி அதிகமாக நம்பி உள்ளது.

திமுத் கருணாரத்னே துபையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்டில் 196 ரன்கள் விளாசினார். இதனால் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சீனியர் வீரரான ஏஞ்சலோ மேத்யூஸை, இந்தத் தொடரில் முழுமையாக பேட்டிங்குக்கு மட்டும் பயன்டுத்த இலங்கை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. காயம் காரணமாக அவர், பாகிஸ்தான் தொடரில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

மேத்யூஸ் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட்டில் சதம் அடித்திருந்தார். இதனால் அவர், தற்போது ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். பந்து வீச்சில் 39 வயதான ரங்கனா ஹெராத்தை, அணி பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அவருக்கு உறுதுணையாக எந்த சுழற்பந்து வீச்சாளர் களமிறக்கப்படுவார் என்பது குழப்பமாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பல்லேகலே டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக சீனாமேன் சுழற்பந்து வீச்சாளரான லக்சன் சந்தகன் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். அதேவேளையில் சமீபகால போட்டிகளில் திலுருவன் பெரேராவும் சுழலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே கொல்கத்தாவில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் இந்திய அணியினர் காலை 9 மணிக்கு மேற்கொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை லேசான மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கு மழை இடையூறு இருக்கக்கூடும்.

 

இன்னும் 8 தேவை

அஸ்வின் இன்னும் 8 விக்கெட்களை வீழ்த்தினால் விரைவாக 300 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த சாதனை தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி வசம் உள்ளது. அவர் 56 டெஸ்ட்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அஸ்வின் இதுவரை 52 டெஸ்ட்டில் 292 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

புது முயற்சிகள்

ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வது தொடர்பாக இந்திய வீரர்களான அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவண், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சிகள் மேற்கொண்டனர். மேலும் ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ரஹானே ஆகியோர் சுழற்பந்து வீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை மேற்கொள்வதில் கவனம் செலுத்தி உள்ளனர். இதேபோல் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சை சமாளிக்க விராட் கோலி சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார். இதற்கென வடிவமைக்கப்பட்ட ஒரு புறம் சிவப்பாகவும் மறு புறம் மஞ்சளாகவும் உள்ள பந்துகளை வலைப் பயிற்சியின் போது வீசச் செய்து விராட் கோலி பேட்டிங் செய்துள்ளார்.

5 பேர் ஆய்வு

இலங்கை அணி தரப்பில் கேப்டன் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்சியாளர் நிக்போத்தாஸ், பேட்டிங் பயிற்சியாளர் திலன் சமரவீரா, பந்து வீச்சு ஆலோசகர் ருமேஸ் ரத்னாயகே, மேலாளர் அசங்கா குருசிங்கே ஆகியோர் ஈடன் கார்டன் மைதானத்தின் ஆடுகளத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆடுகள பராமரிப்பாளரிடம் இருந்து சில குறிப்புகளையும் பெற்றுள்ளனர்.

முதலிட வாய்ப்பு

ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை (896) விட ஜடேஜா 12 புள்ளிகள் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷாகிப் அல்ஹசனை (437 ) விட 8 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் 2-வது இடம் வகிக்கிறார். இலங்கை டெஸ்ட் தொடரில் ஜடேஜா, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்தும் பட்சத்தில் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கலாம்.

மழையால் தாமதம்

இன்னும் டாஸ் வீசப்படாத நிலையில் வியாழக்கிழமை காலை 9.30க்கு தொடங்கப்படவேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக தாமதமாகியுள்ளது.
 

 

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, லகிரு திரிமானே, திக்வெலா, திலுருவன் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லகிரு காமகே, தனஞ்ஜெயா டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், லக்சன் சந்தகன், விஷ்வா பெர்ணாண்டோ, தசன் ஷனகா, ரோஷன் சில்வா.

http://tamil.thehindu.com/sports/article20464574.ece

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இந்தியா பேட்டிங்! முதல் பந்திலேயே ராகுல் அவுட்

 
 

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்துள்ளது.

இந்தியா கிரிக்கெட்

 
 


இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று பெய்த கனமழையால், இன்று குறிப்பிட்ட நேரத்தில் போட்டி துவங்கவில்லை. மைதானத்தில் நீர் தேங்கி இருந்ததால், அதை உலரவைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணியளவில் மைதானத்தை ஆய்வுசெய்த நடுவர்கள், போட்டியைத் துவங்கலாம் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், ஆடுகளத்தின் ஈரத்தன்மையைக் கருத்தில்கொண்டு, முதலில் பந்து வீச்சைத் தேர்வுசெய்தார். இந்திய அணி பேட்டிங் செய்வது எனத் தீர்மானம் ஆனது.  இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் பந்திலேயே லோகேஷ் ராகுல் ஆட்டம் இழந்தார். இந்திய அணி தொடர்ந்து விளையாடிவருகிறது.

https://www.vikatan.com/news/sports/107980-india-vs-srilanka-srilanka-won-the-toss-and-opt-to-bowl.html

  • தொடங்கியவர்

மழையால் சேமிக்கப்பட்ட விக்கெட்டுகள்: முதல்நாளில் இந்தியா திணறல்

 

 
ind_vs_sl

 

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர் வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இருப்பினும் மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் முரளி விஜய் சேர்க்கப்படவில்லை. ராகுல், தவன் ஆகியோர் துவக்க வீரர்களாகக் களமிறங்கினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லக்மல் வீசிய அந்தப் பந்தில் இந்திய அணியின் துவக்க வீரர் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து 'கோல்டன் டக்' முறையில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவன் 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 11 பந்துகளை சந்தித்து டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இலங்கையின் ஆக்ரோஷப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி ஒருபுறம் தடுமாறிய போது மறுபுறம் மழை காரணமாக அவ்வப்போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய அணி மேலும் விக்கெட்டுகளை இழந்து தடுமாறாமல் தப்பியது.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. புஜாரா 8 ரன்கள் மற்றும் ரஹானே ரன் கணக்கை துவங்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.

இலங்கை தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் 6 ஓவர்களை வீசி ரன்களே வழங்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், அடுத்த 2 தினங்களுக்கு போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/16/kolkatta-test-lakmal-wreaks-havoc-on-rain-marred-day-india-struggles-at-173-2809123.html

  • தொடங்கியவர்

லக்மாலின் அபாரத்தினால் மழைநாள் டெஸ்ட்டில் இலங்கை சிறந்த துவக்கம்

Suranga-Lakmal
 

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையின் காரணமாக 11 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுள்ளது.  

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (16) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

 

கடுமையான மழை காரணமாக போட்டியின் நாணய சுழற்சி மதிய போசன இடைவேளையின் பின்னரே இடம்பெற்றிருந்தது. அதில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்திருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் பாகிஸ்தானுடன் இடம்பெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்த இலங்கை இதுவரையில் தமது அயல் நாட்டு மண்ணில் எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்பதால் அவ்வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடனான இந்தப் போட்டியினை எதிர்கொண்டிருந்தது.

பாகிஸ்தானுடனான இலங்கை டெஸ்ட் குழாத்தில் அடக்கப்பட்டிருந்த வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் கெளசால் சில்வா ஆகியோர் இந்திய அணிக்கெதிரான விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குசல் மெண்டிசின் மூன்றாம் இடத்தினை லஹிரு திரிமான்னவும், கெளசால் சில்வாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடத்தினை சதீர சமரவிக்ரமவும் அணியில் பிரதியீடு செய்கின்றனர்.

அதேபோன்று நீண்ட காலத்தின் பின்னர் சகலதுறை வீரரான தசுன் சானக்கவும் இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். முக்கியமாக, அனைவரும் எதிர்பார்த்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்சும் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் இலங்கை அணியில் அவர் இணைந்திருந்தார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, லஹிரு திரிமான்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால்(அணித்தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, தில்ருவான் பெரேரா, தசுன் சானக்க, லஹிரு கமகே, சுரங்க லக்மால், ரங்கன ஹேரத்  

இந்திய அணி  

சிக்கர் தவான், லோக்கேஷ் ராகுல், செட்டெஸ்வர் புஜாரா, விராத் கோலி(அணித் தலைவர்), அஜிங்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரித்திமன் சஹா, ரவீந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், மொஹமட் சமி, உமேஷ் யாதவ்

போட்டியின் முதல் பந்திலேயே சுரங்க லக்மால் லோக்கேஷ் ராகுலின் விக்கெட்டினை கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் ஓட்டமேதுமின்றி ராகுலின் துடுப்பாட்டம் முடிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்திலேயே விக்கெட்டினை பறிகொடுத்தமையினால் சற்று கவனமாகவே இந்திய அணியினர் தமது துடுப்பாட்டத்தினை முன்னெடுக்கத் தொடங்கினர். எனினும் மீண்டும் அபாரமாக செயற்பட்ட லக்மால் இந்திய அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சிக்கர் தவானை போல்ட் செய்தார். இறுதியாக நடைபெற்ற இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த சிக்கர் தவான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் வெறும் 8 ஓட்டங்களினையே பெற்றிருந்தார்.

தவானின் விக்கெட்டினை அடுத்து சிறிது நேரம் போட்டி போதிய வெளிச்சமின்மையினால் தடைப்பட்டிருந்தது. நிலைமை சீராக மீண்டும் தொடர்ந்த போட்டியில் இந்திய அணித்தலைவர் விராத் கோலியின் விக்கெட்டினை லக்மால் LBW முறையில் வீழ்த்தியிருந்தார்.

கோலி இந்த ஆட்டமிழப்புக்காக மூன்றாம் நடுவரின் உதவியினை நாடியிருந்த போதிலும் அது அவருக்கு கைகூடியிருக்கவில்லை. இந்திய அணியின் மூன்றாம் விக்கெட்டாக பறிபோன அணித்தலைவர் ஓட்டம் எதனையும் பெற்றிருக்கவில்லை

இதனையடுத்து மைதானத்தில் துடுப்பாடிக் கொண்டிருந்த செட்டெஸ்வர் புஜாரா போதிய வெளிச்சமின்மையினால் பந்தினை தன்னால் பார்க்க முடியாது உள்ளது என சைகை முறையில் நடுவரிடம் முறையிட மீண்டும் போட்டி வெளிச்சம் போதாமை கருதி நிறுத்தப்பட்டது.

தொடர்ந்தும் போட்டிளைய நடாத்துவதற்குரிய நிலைமை அமையாத காரணத்தினால் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் நாள் ஆட்ட நிறைவில் இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 17 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுள்ளது.

களத்தில் செட்டெஸ்வர் புஜாரா 8 ஓட்டங்களுடனும், அஜிங்கியா ரஹானே ஓட்டமேதும் பெறாமலும் நிற்கின்றனர்.

இன்றைய நாளில் ஆறு ஓவர்களை வீசிய சுரங்க லக்மால் அவற்றின் மூலம் எந்தவொரு ஓட்டத்தினையும் எதிரணிக்கு கொடுக்காமல் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) – 17/3 (11.5) செட்டெஸ்வர் புஜாரா 8(43)*, சுரங்க லக்மால் 0/3(6)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

6-6-0-3 என்பது தொடக்கம்தான், வேலை இன்னும் முடியவில்லை: இலங்கை பயிற்சியாளர்

 

கொல்கத்தா டெஸ்டில் லக்மல் 6-6-0-3 என்ற பந்து வீச்சு தொடக்கம்தான், இன்னும் பந்து வீச்சு வேலை முடிந்துவிடவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

6-6-0-3 என்பது தொடக்கம்தான், வேலை இன்னும் முடியவில்லை: இலங்கை பயிற்சியாளர்
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கிறது. மழைக்காரணமாக காலை 9.30 மணிக்குப் பதில் மதியம் 1.30 மணிக்குத்தான் ஆட்டம் தொடங்கியது. ஏற்கனவே, ஈடன் கார்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது. இன்று மேகமூட்டமாக இருந்ததாலும், வெளிச்சத்திற்கான லைட் ஆன் செய்தததாலும் ‘ரெட்பால்’ வேகப்பந்து வீச்சுக்கு அபாரமாக ஒத்துழைத்தது.

இதை பயன்படுத்தி இலங்கை தொடக்க வேகப்பந்து வீச்சாளர் லக்மல் அபாரமாக பந்து வீசினார். அவர் 6 ஓவர்கள் வீசி ஒரு ரன்கள் கூட விட்டுக் கொடுக்காமல் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோலி (0) சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்த பந்து வீச்சு தொடக்கம்தான், இன்னும் பந்து வீச்சு முடியவடையவில்லை என்று இலங்கை பயிற்சியாளர் ரத்நாயகே கூறியுள்ளார்.

201711162108034444_1_lakmal002-s._L_styvpf.jpg

இதுகுறித்து இலங்கை பயிற்சியாளர் ரத்நாயகே கூறுகையில் ‘‘இந்தியாவிற்கு வருமுன் நாங்கள் இழப்பதற்கு ஏதும் இல்லை. அதனால் எங்களது வீரர்கள் சவாலுக்கு தயாராகிவிட்டார்கள். லக்மல் பந்து வீச்சு நான் பார்த்த வகையில் மிகவும் சிறந்த ஸ்பெல். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாக இருக்கும். ஆனால், எங்களது வேலை முடிந்துவிடவில்லை. இது தொடக்கம்தான். 250 ரன்கள் அடிக்கலாம் என்று அவர்கள் நினைக்கலாம். நாங்கள் 200 ரன்கள் என்று சொல்கிறோம். இது அணியின் ஆட்டங்களை பொறுத்து மாறுபடலாம்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/16210751/1129277/Sri-Lanka-Coach-Says-Lakmal-Spell-the-Finest-In-a.vpf

  • தொடங்கியவர்

74/5 * (32.5 ov) 6.png&h=42&w=42

 

  • தொடங்கியவர்

ஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்

 

 
pujara

புஜாரா ஷாட் ஆடும் காட்சி.   -  படம். | ஏ.எப்.பி.

கொல்கத்தாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.

2-ம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, புஜாரா 47 ரன்களுடனும் சஹா 6 ரன்களுடனும் களதில் இருக்கின்றனர்.

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் 11 ஓவர்கள் வீசி 9 மெய்டன்களுடன் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்..

மொத்தம் 2 நாட்களில் 32.5 ஓவர்களே வீச முடிந்தது. மேகமூட்டமான வானிலையில் பிட்சில் கொஞ்சம் ஈரப்பதத்துடன் புற்களினாலும் பந்துகள் ஸ்விங் ஆனதோடு பவுன்ஸும் ஆனது, இந்திய வீரர்கள் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய ஒரு பிட்சில் ஆடிப் பழக்கமற்றவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

இத்தகையப் பிட்ச்களில் கே.எல்.ராகுலை விடவும் முரளி விஜய்தான் சிறந்த தெரிவாக இருக்க முடியும். அவருக்கு தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பது நன்றாகத் தெரியும் என்பதோடு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் நெருக்கமான பந்துகளைக் கூட ஆடாமல் விடக்கூடிய பொறுமையும், திறமையும் கொஞ்சம் கூடுதல்.

ஆனால் ராகுல் கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ஆடக் களமிறங்கும் போது முதல் பந்தே இத்தகைய ஒரு அபாரப் பந்தை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஆப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி சற்றே லேட்டாக அவுட் ஸ்விங் ஆகியது, இது ராகுலின் நிலையையே மாற்றியது. பந்தில் பவுன்சும் கூடுதலாக இருந்ததால் எட்ஜ் ஆகி டிக்வெலாவிடம் கேட்ச் ஆனது.

ஷிகர் தவண் தன்னிடம் இத்தகைய பிட்ச்களில் காட்ட வேண்டிய ஆக்ரோஷமான ஷாட்களுக்கான தயாரிப்புகள் இல்லாமல், லக்மல் வீசிய பந்தின் பிட்சுக்குச் செல்லாமல், காலை நகர்த்தாமல் ஆஃப் திசையில் ஷாட் ஆட நினைத்தார், மட்டையும் நேராக இறங்கவில்லை இதனால் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இது அவசரகோல ஷாட் என்றே கூற வேண்டும்.

விராட் கோலி 11 பந்துகளைச் சந்தித்தார் அவரது பொறுமையையும் உத்தியையும் சோதிக்கும் பந்துகளுக்குப் பிறகு ஒரு பந்தை லக்மல் உள்ளே கொண்டு வந்தார். இதை எதிர்பாராத கோலியின் கால்காப்பைப் பந்து தாக்க எல்.பி. முறையீட்டுக்கு நீஜல் லாங் அவுட் கொடுத்தார், கோலி ரிவியூ செய்தார், ஆனால் நடுவர் தீர்ப்பே வென்றது. கோலி ஒரு டக் அவுட் ஆனார்.

ரஹானே இன்று காலை 4 ரன்களில் வெளியேறினார். 21 பந்துகளைச் சந்தித்த அவர் சுரங்க லக்மலின் அருமையான லைன் மற்றும் லெந்த்தில் மட்டை, பந்துக்காக ஏங்கியது, இந்நிலையில் சற்றே தளர்வாக வீசிய ஷனகாவின் பந்தை அடிக்கலாம் என்று ரஹானே தவறாக முடிவெடுத்தார், தவறான பந்தை தேர்ந்தெடுத்தார், ஆடாமல் விட வேண்டிய ஆஃப் ஸ்டம்புக்கு மிக வெளியே சென்ற பந்தை கவர் டிரைவ் ஆட நினைத்து பிடிபட்டார். ஆடக்கூடாத ஷாட் என்பதை விட ஷனகாவின் 125கிமீ ஜெண்டில் மீடிய பேஸ் பந்தில் விக்கெட் கொடுத்தது ரஹானேயின் தன்னம்பிக்கையை நிச்சயம் காலி செய்திருக்கும்.

அஸ்வின் இறங்கி ஷனகாவின் புல்டாஸை கவர் திசையில் பவுண்டரி அடித்தார், ஆனால் அதன் பிறகு அவருக்கும் சிக்கல். காலையும் நகர்த்தவில்லை, ஷனகாவின் பந்தை இவரும் கருணரத்னேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆட்டம் சரியாக மதியம் 2.30 மணிக்கு மேலும் தொடர முடியாது என்று நிறுத்தப்பட்டது. புஜாரா மட்டுமே மிகச்சரியாக ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கு உள்ள தகுதி, திறமை, பொறுமை, உத்தி ஆகியவற்றைக் கடைபிடித்து கடினமான பிட்சில் ஆடினார். அவர் 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

இத்தகைய பிட்ச்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் போட்டு, அதில் சர்வதேச இந்திய வீரர்களை ஆட வைக்க வேண்டும் வருடம் 365 நாட்களில் 80% மட்டைப் பிட்ச்களில் உள்நாட்டில் ஆடிக்கொண்டிருந்தால் நிச்சயம் இத்தகைய சவால்கள் இந்திய அணி நம்பர் 1 அணியாக இருந்தாலும் சர்வதேச தரத்தில் பின்னடையவே செய்யும்.

http://tamil.thehindu.com/sports/article20521859.ece?homepage=true

  • தொடங்கியவர்

 

ஆறு ஓட்டமற்ற ஓவர்களுக்கு 3 இலக்குகளை வீழ்த்தி, கலக்கிய சுரங்க லக்மால்...

  • தொடங்கியவர்

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே! ஏன், எப்படி? #VikatanExclusive #INDvsSL

“யுவராஜ் ஏன் டீம்ல இல்லை?''

தேர்வுக் குழுத் தலைவர்: “2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தயாராகுற மாதிரி அணியைத் தேர்வுசெஞ்சிருக்கோம்."

 

“அணியில் மூத்த ஸ்பின்னர்கள் ஏன் இல்லை?"

பயிற்சியாளர்: “உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது."

“ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு ஏன் அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்?"

கேப்டன்: “உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது முக்கியம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான் அணியின் ட்ரம்ப் கார்டு."

இப்படி மூத்த வீரர்களைக் கழட்டிவிட்டது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது, மிடில் ஆர்டரில் அடிக்கடி பரிசோதனை செய்வது என, தேர்வுக்குழுத் தலைவரிலிருந்து கேப்டன் வரை `உலகக்கோப்பை... உலகக்கோப்பை...' என்று மனப்பாடம் செய்திருந்தவர்கள், அந்த உலகக்கோப்பைத் தொடர் எங்கு நடக்கப்போகிறது என்பதை மட்டும் மறந்துவிட்டனர்போலும். விளைவு, ‛நாம் சப்ப டீம்’ எனக் கருதிய  இலங்கையிடம் பேரடி வாங்கியிருக்கிறது இந்திய அணி.

#INDvsSL

மழையின் தொந்தரவைத் தாண்டி இந்தப் போட்டி தொடங்கியதே பெரிய விஷயம். மழை ஒருபுறம் வந்து போய்க்கொண்டிருக்க, நம் பேட்ஸ்மேன்கள் மழைக்கு சவால்விடத் தொடங்கிவிட்டனர். மழை முடிந்து களம் திரும்புவது, சிறிது நேரத்தில் அவுட்டாகி பெவிலியன்  திரும்புவது என இதுவே வாடிக்கையானது. முதல் பந்தியிலேயே ராகுல் அதைத் தொடங்கிவைக்க, தவான், கோலி, ரஹானே அவரைப் பின் தொடர்ந்தனர். இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்கள் என ஒருநாள் தொடரில் கொண்டாடப்பட்ட மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். கேப்டன் கோலியோ, ரன் கணக்கைத் தொடங்கவே இல்லை.

அணியை மீட்டெடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்ட புஜாரா மட்டும் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, அஸ்வினும் அவசரப்பட்டு மோசமான ஒரு ஷாட் அடித்து நடையைக்கட்டினார். 74 ரன், 5 விக்கெட்கள். அதில் புஜாரா அடித்தது மட்டும் 47 ரன். அவுட்டான 5 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து எடுத்த ரன் 16. ஸ்கோர் போர்டைப் பார்த்தவர்களுக்கு இந்தியாவின் சரிவைவிட, “என்னடா... இலங்கை இந்தப் போடுபோடுதா!" என்ற ஆச்சர்யம்தான். ``நம்ம பேட்டிங் மோசமா... இல்லை இலங்கை பௌலிங் சூப்பரா" எல்லா ரசிகர்களின் மனதிலும் இதே கேள்விதான். ஆனால், இதற்கான பதில் இரண்டுமே இல்லை. பிட்ச்... ஈடன் கார்டனின் பிட்ச்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிகளைப் பார்த்தால் ரணகளமாக இருக்கும். சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்களைக் களமிறக்குவார் கம்பீர். அதோடு நிற்குமா, ஷகிப் அல் ஹசன் என்கிற உலகத்தர ஆல்ரவுண்டர் ஒருவர் இருப்பார். போதாகுறைக்கு யூசுப் பதான் வேறு. ஒரு ஐ.பி.எல் போட்டியில் ஸ்பின்னர்கள் மட்டும் 18 ஓவர்கள் வீசிய நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு. அப்படிப்பட்ட பிட்ச் அது. ஸ்பின்னர்களின் சொர்க்கப் பூமியாக விளங்கியது ஈடன் கார்டன். பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக கங்குலி மாறிய பிறகு அது மாறிவிட்டது. அவர் செய்த மாற்றம், இந்திய அணியின் இந்தத் தடுமாற்றத்துக்கு வழிவகுத்துவிட்டது.

#INDvsSL

கிரிக்கெட், விளையாடும் 22 பேரால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடிய விளையாட்டு அல்ல. ஆடும் மைதானமும் வெற்றி-தோல்வியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு நாட்டு ஆடுகளமும் ஒவ்வொரு வகையிலானது. இங்கிலாந்து ஆடுகளங்கள் அதிகம் ஸ்விங் ஆகக்கூடியவை. இங்குதான் அடுத்த உலகக்கோப்பை நடக்கப்போகிறது. முதல் ஓவரிலிருந்து, பனியே இருந்தாலும் கடைசி ஓவர் வரை ஸ்விங் ஆகும் அந்த ஆடுகளங்களில்தான் கோப்பைக்காக இந்தியா போராட வேண்டும். ஆனால்....

எப்படியான மைதானங்களில் இந்தியா ஆடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு இந்த இலங்கைத் தொடர் வரை இந்தியாவில் ஆறு தொடர்கள் விளையாடியுள்ளது. மூன்று முறை மட்டுமே வெளிநாடுகளில் விளையாடியுள்ளது. அதில் ஒன்று சாம்பியன்ஸ் டிராஃபி. இன்னொன்று இலங்கைத் தொடர். ஆஸ்திரேலியா, இலங்கை பக்கம் போய் வெகுநாள்களாகிவிட்டது. இப்போதுதான் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்படவுள்ளோம். இந்தியாவிலேயே விளையாடுவது இருக்கட்டும், ஆடுகளங்களாவது வித்தியாசமானவையாக இருக்கின்றனவா, இல்லை.

இதுதான் உண்மையான பிரச்னை. வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் செல்லாததுகூட பிரச்னை அல்ல. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுவிட்டால், இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆடிவிடலாம் என்றில்லை. இங்கிலாந்து மைதானங்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியே ஆஷஸ் தொடரைப் பறிகொடுத்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. சிக்கல் நமது மைதானங்களின் தன்மையில்தான். புனே, கான்பூர், நாக்பூர் என இன்னும் அதே ஸ்பின்-ஃப்ரண்ட்லி பிட்ச்கள். அஸ்வினும் ஜடேஜாவும் மட்டும் பந்து வீசினாலே இந்தியா வெற்றி பெற்றுவிடலாம். போதாகுறைக்கு குல்தீப், சாஹல், அமித் மிஷ்ரா, ஜெயந்த் யாதவ், அக்சர் படேல்... டெஸ்ட் போட்டிகள் மூன்று நாளில் முடிவதும், விளையாடவரும் அணிகள் ஒயிட்வாஷ் ஆவதும் வாடிக்கையாகிவிட்டன.

தவான்

குல்தீப், சாஹல் இருவரும் ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் - ஜடேஜா இணையை ஓரங்கட்டிவிட்டனர். வந்த புதிதிலேயே ஜொலிக்கிறார்களே! ஆடுகளத்தின் உதவி இல்லாமலா இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சுத்தமும் சோபிக்காத அந்த இரு ஸ்பின்னர்களும், இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையைக்கிளப்புகின்றனரே! ஆடுகளங்கள் சுழலுக்கு உதவாமலா, இன்னும் எத்தனை நாள்கள்தான் இந்தியா இப்படியான ஆடுகளங்களில் விளையாடிக்கொண்டிருக்கப்போகிறது, எல்லாவற்றையும் உலகக்கோப்பை மனதில்கொண்டு செய்துகொண்டிருக்கும் அணி நிர்வாகம், அந்த ஆடுகளங்களின் தன்மையைப் பற்றி அறியத் தவறிவிட்டதா? 

இங்கிலாந்து ஆடுகளங்களைப்போல் இங்கு உள்ள ஆடுகளங்களில் சிலவற்றை மாற்றியமைக்கத் தோன்றவில்லையா, அணி வீரர்கள் மட்டும் தயாராக இருந்தால் போதுமா. அந்த உலகக்கோப்பையின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப்போவது ஒரே ஒரு ஸ்பின்னர். குறைந்தபட்சம் 30 ஓவர்களையாவது வேகப்பந்துவீச்சாளர்கள் வீசியாக வேண்டும். அவர்களை சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே ஆடவைத்துவிட்டு, அங்கு சோபிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்போகிறோமா. இத்தனை ஆண்டுகள் நிகழ்ந்தது என்னவோ அதுதான். ஆனால், எதையும் `ப்ரோ ஆக்ட்டிவா'கச் சிந்திக்கும் இந்தப் புதுக் கூட்டணியாவது இதைப் பற்றி யோசிக்க வேண்டாமா? 

கங்குலிகங்குலி யோசித்தார். சில மாதங்களுக்கு முன் ஈடன் ஆடுகளத்தை இங்கிலாந்து ஆடுகளம்போல் மாற்றினார்கள் க்யூரேட்டர்கள்.  சுழலுக்குச் சாதகமாக, சுத்தமாக பெளன்ஸ் ஆகாமலிருந்த ஈடன் பிட்சின் தரம் இப்போது நம் கண்முன் தெரிகிறது. சுரங்கா லக்மல் வீசிய முதல் ஓவர்... ஒரு சோற்றுப் பதம். மழையால் தடைப்பட்ட பிறகு ஆட்டம் தொடங்குகிறது. `ஈரப்பதம் அதிகமாக இருக்கும். பந்து எகிறாது'. இதுதான் அனைவரின் கணிப்பு. ராகுலும் இந்த நம்பிக்கையில்தான் களம்கண்டார். என்ன ஆச்சர்யம்... பந்து ராகுலின் இடுப்புக்கு மேலே எகிறியது. இலங்கைக்கு எதிராக தன் கடைசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்தவர் முதல் பந்திலேயே டக். அடுத்து வந்த புஜாரா, அந்த ஐந்து பந்துகளில் இரண்டு முறை தப்பிப்பிழைத்தார். ஒரு பால் இன் ஸ்விங் ஆகி ஸ்டம்பைப் பதம்பார்க்க வருகிறது. அடுத்த பால் அவுட் ஸ்விங் ஆகி பேட்டை உரசப் பார்க்கிறது. பௌலிங் செய்வது மெக்ராத்தோ என்றுகூடத் தோன்றியது. அதிலும், அந்தக் கடைசிப் பந்து... சான்ஸே இல்லை!

ஒருவகையில் இந்தத் தடுமாற்றம் இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று. இங்கிலாந்து ஆடுகளத்தில் விளையாட நம் அணி தயாரா என்று `Self evaluate' செய்துபார்க்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோற்றாலும், பௌலிங்கில் மிரட்டி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியை எதிர்நோக்குவது மட்டும் போதாது. ஏனெனில், இன்று அஸ்வினும் ஜடேஜாவும் விக்கெட் வீழ்த்துவது நமக்கு எந்த வகையிலும் உலகக்கோப்பையை வெல்ல உதவாது. கோப்பையை வெல்ல வேண்டுமானால், புவனேஷ்வர் குமாரும் ஷமியும் விக்கெட் வீழ்த்தத் தொடங்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்விங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் அதிகம் ஆட வேண்டும். 

 

புனே பிட்ச் பராமரிப்பாளர் இரண்டு பௌலருக்குச் சாதகமாக ஆடுகளத்தைத் தயார்செய்வதாகச் சொல்லி சஸ்பெண்ட் ஆனார். இரண்டு தனிப்பட்ட பௌலர்களுக்குச் சாதகமாக ஓர் ஆடுகளத்தை மாற்ற முடியுமெனில், நம் அணிக்காக, நம் உலகக்கோப்பைக் கனவுக்காக நாட்டிலிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளங்களில் நான்கு அல்லது ஐந்தையாவது மாற்றலாம்தானே!

https://www.vikatan.com/news/sports/108163-indian-teams-struggle-against-sri-lanka-is-good-for-a-reason.html

  • தொடங்கியவர்

மழை கைகொடுத்தபோதிலும் 172 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு மழை கைகொடுத்த போதிலும் இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது இந்திய அணி இன்றைய 3 ஆவது நாள் ஆட்டத்தின் போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

SRILANKA.jpg

மழை­யினால் இந்­திய அணி காப்­பாற்­றப்­ப­டு­கி­றது என்றே சொல்ல வேண்­டி­யுள்­ளது. காரணம் நேற்றும் போட்டி ஆரம்­ப­மாகி சிறிது நேரத்தில் 2 விக்­கெட்­டுக்­களை இழந்து இந்­திய அணி திணற மழை குறுக்­கிட்டு போட்­டியை நிறுத்­தி­விட்­டது.

முதல் நாளில் சுரங்க லக்மால் வேகத்தில் மிரட்­டி­ய­து­போல நேற்­றைய போட்­டியில் தசுன் சானக்க அசத்­தினார்.

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் கொல்­கத்­தாவில் நடை­பெற்று வரும் டெஸ்ட் போட்­டியின் நேற்­றைய 2ஆ-வது நாள் ஆட்­டத்தின் பெரும்­ப­கு­தியும் மழையால் தடை­ப்பட்­டது. 21 ஓவர்­களே வீசப்­பட்­டன.

நேற்­று­முன்­தினம் தொடங்­கிய இந்த போட்­டியில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்று களத்­த­டுப்பை தேர்வு செய்தார்.

மழைக்­கா­ர­ண­மாக மதியம் 1.30 மணிக்­குத்தான் ஆட்டம் தொடங்­கி­யது, இலங்கை வேகப்­பந்து வீச்­சாளர் லக்­மாலின் அபார பந்து வீச்சால் லோகேஷ் ராகுல் (0), தவான் (8), கோஹ்லி (0) ஆகி­யோரை வீழ்த்தி அசத்­தினார். 

இதனால் இந்­திய அணி 11.5 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 17 ஓட்­டங்­களை எடுத்­தி­ருக்­கும்­போது மீண்டும் மழை குறுக்­கிட்­டது. 

இதனால் முதல் நாள் ஆட்டம் அத்­துடன் முடித்­து­வைக்­கப்­பட்­டது, புஜாரா, ரஹானே களத்தில் இருந்­தனர். சுரங்க லக்மால் 6 ஓவர்­களில் ஓட்­ட­மேதும் விட்­டுக்­கொ­டுக்­காமல் 3 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்­டா­வது நாள் ஆட்டம் தொடங்­கி­யது. காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்­டிய போட்டி 15 நிமிடம் முன்­ன­தாக 9.15-க்கே தொடங்­கி­யது. நேற்றைய போட்­டியில் 98 ஓவர்கள் வீச முடிவு செய்­யப்­பட்­டது.

புஜாரா, ரஹானே ஆட்­டத்தை தொடர்ந்­தனர். ரஹானே 4 ஓட்­டங்கள் எடுத்த நிலையில் ஆட்­ட­மி­ழந்தார். அடுத்து வந்த அஷ்வின் 4 ஓட்­டங்­க­ளுடன் பெவி­லியன் திரும்­பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்­தாலும் மறு­மு­னையில் புஜாரா நம்­பிக்­கை­யுடன் விளை­யா­டினார்.

6ஆ-வது விக்­கெட்­டுக்கு புஜா­ரா­வுடன் சஹா ஜோடி சேர்ந்தார். இந்­தியா 32.5 ஓவர்­களில் 74 ஓட்­டங்கள் எடுத்­தி­ருக்­கும்­போது மழை குறுக்­கிட்­டது. இதனால் ஆட்டம் நிறுத்­தப்­பட்டு உணவு இடை­வேளை விடப்­பட்­டது. அதன்­பின்பும் மழை தொடர்ந்து பெய்­தது.

பின்னர் மழை விட்­டாலும் பவுண்­டரி லைன் அருகே ஈரப்­பதம் அதி­க­மாக இருந்­ததால் 2ஆ-வது நாள் ஆட்டம் அத்­துடன் முடித்துக் கொள்­ளப்­பட்­டது. 2ஆ-வது நாளில்­இந்­தியா 21 ஓவர்கள் மட்­டுமே விளை­யா­டி­யது. புஜாரா (47), சஹா (6) களத்தில் உள்­ளனர். 

லக்மால் 11 ஓவர்கள் வீசி 5 ஓட்­டங்கள்  விட்­டுக்­கொ­டுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 9 ஓவர்கள் ஓட்டமற்ற ஓவர்களாக வீசியுள்ளார். நேற்றைய இரண்டு விக்கெட்டுக்களையும் இலங்கையின் மற் றொரு வேகப்பந்து வீச்சாளரான தசுன் சானக்க வீழ்த்தினார்.

இந்நிலையில் 75 ஓட்டங்களுடன் இன்றைய 3 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மிகுதி 5 விக்கெட்டுகளையும் 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் இழந்து 172 ஓட்டங்களை பெறுவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக புஜாரா மாத்திரம் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/27193

  • தொடங்கியவர்

158/4 * (44.5 ov)

8.png&h=42&w=42

  • தொடங்கியவர்

மேத்யூஸ், திரிமானே அசத்தல் அரைசதம்... முன்னிலை பெறும் முனைப்பில் இலங்கை!

 

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான துவக்கம் கண்டுள்ளது. மூன்றாம் நாள்  ஆட்டநேரம் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன் சேர்த்துள்ளது.

aaaa_17554.jpg

 

Photo Credit: BCCI

 

 

மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்களுக்குச் சுருண்டது. அடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சமரவிக்ரமா, கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர். கருணரத்னே 8 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

அதன்பிறகு களம் இறங்கிய திரிமன்னே மற்றும் மேத்யூஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்கோர் 133 ரன்னாக உயர்ந்தபோது திரிமானே 51 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சிறிது நேரம் கழித்து மேத்யூஸும் 52 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்த விக்கெட்டையும் உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் சண்டிமால், திக்வெல்லா ஆகியோர் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். வெளிச்சம் குறைவாக இருந்ததால் ஆட்டம் 4.05 மணிக்கு முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. சண்டிமால் 13 ரன்களுடனும் திக்வெல்லா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தற்போது இந்திய அணியைவிட 7 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இன்னும் இரண்டு தினங்களே மிஞ்சி இருப்பதால் அனேகமாக இந்தப் போட்டி டிராவில் முடியவே வாய்ப்புள்ளது.

https://www.vikatan.com/news/sports/108228-india-vs-srilanka-test-cricket-lanka-at-1654.html

  • தொடங்கியவர்

ஹெராத் அசத்தல் அரைசதம்: கொல்கத்தா டெஸ்டில் இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை

 
 

கொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Bhuvi_13257.jpg

 

Photo Credit: BCCI

 


4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 4-ம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. டிவெல்லா 35 ரன்களுடனும், ஷனாகா ரன் எதுவும் எடுக்காமலும்,  கேப்டன் தினேஷ் சண்டிமால் 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி, 201 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்குச் சென்றது. இதையடுத்து கைகோர்த்த தில்ருவர் பெரேரா - ரங்கனா ஹெராத் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்தது. பெரேரா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி 250 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரங்கணா ஹெராத், அரைசதம் அடித்தார். அவர் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுரங்கா லக்மல் 16 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இன்னிங்ஸ் 294 ரன்களில் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட இலங்கை அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

https://www.vikatan.com/news/sports/108286-indvsl-sri-lanka-finish-their-first-innings-on-294-with-a-lead-of-122-runs.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.