Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி

Featured Replies

வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி

 

வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் சில இணைந்து உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகள் இணைந்தே இவ்வாறாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் இந்த பொது சின்னத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

http://www.samakalam.com

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலக்கட்டத்தில் தமிழரின் ஒற்றுமையை சீரழிக்கும் இதுபோன்ற  கைங்கரியங்களில் ஈடுபடுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும். உள்நாட்டு வெளிநாட்டு தீய சக்திகளிடம் சோரம்போன தமிழ் அரசியல் தலைமைகள் தமிழினத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு அவசியமான கொள்கைப்பற்று தூரநோக்கு எதுவுமின்றி தான்தோன்றித்தனமாக சுயநலப்போக்குடன் செயல்படுவதை தமிழனம் இனங்கண்டு இதுபோன்ற அரசியல் கட்சிகளையும் திரு பரமானந்தசங்கரி, டாக்டர் அசுரானந்தா, கருநாய் புரளிதரன் உட்பட இது போன்ற தலைமைகளையும் புறந்தள்ளுதல் இன்றைய காலக்கட்டத்தில்  தவிர்க்கமுடியாத தார்மீக கடமையாகும். இல்லாவிடில் தமிழரின் வாக்குப்பலம் சிதறிக்கப்படுவது மட்டுமின்றி சர்வதேச நாடுகள் தமிழரிடம் எதிர்பார்க்கும் இனரீதியான அரசியல் தலைமைத்துவம் செயலிழக்கும் அபாயமும் இங்குள்ளது. எனவே அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலில் உதயசூரியனை ஒரு அஸ்த்தமனசூரியனாக மாற்றவேண்டியது அனைத்து தமிழ் மக்களதும் வரலாற்றுக்கடமை. இதற்கு முற்றிலும் மாறாக முஸ்லிம் மக்களின் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பெரிய  பொதுஅணியாக ஒன்றுதிரண்டு  தேர்தலில் போட்டியிட தயாராகிவருவதை தமிழ் அரசியல்வாதிகள் வெறும் விளையாட்டாக எண்ணக்கூடாது. தமிழ்மக்களின் இருப்பையும் வாக்குப்பலத்தையும் அவர்களின் ஒற்றுமையையும் தக்கவைக்கவும் மேம்படுத்தவும் தேவையான  அரசியல் வியூகங்களை அமைத்து செயல்படுவதை விடுத்து சுயலாபத்தையும் அதிகாரமோகத்தையும் நாடி எமது அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தமிழினத்துரோகிகளாக மாறிவிடாமல்  நல்வழியில் பயணிக்கவேண்டும்.

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்

உதயசூரியன் சின்னத்தில் புதியஅரசியல் அணி- ஆனந்தசங்கரி இணக்கம்: புதிய அணி உருவாகுமா?

 

uthayasooriyan.jpg
முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து புதிய அரசியல் அணியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெறுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்க கூட்டணியி;ன் தலைவர் விஆனந்தசங்கரி இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணியுடன் இணையவுள்ள ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒவ்வொருஉறுப்பினர்கள் வீதம் ஏழுபேர் கொண்ட உயர் மட்டக்குழுவை அமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியை செயற்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரியின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. ஆனாலும் வடக்குகிழக்கு இணைந்த அரசியல் தீர்வுக்கும் தமிழ்த்தேசியம் என்ற அடிப்படையும் மாற்றமடையாமல் கூட்டணியை கொண்டு நடத்துவதற்கான விருப்பத்தை ஆனந்தசங்கரி வெளிப்படுத்தி உள்ளார் என்றும் ஜி.ரி.என்னிற்கு கிடைத்த தகவல் கூறுகிறது.

தமிழ் மக்கள் பேரவையில் உள்ள முக்கியபிரமுகர் ஆனந்தசங்கரியை சந்தித்து பேசியதாகவும் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரும் ஆன்நதசங்கரியுடன் பேசினார் என்றும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. இந்தவிடங்கள் தொடர்பாகமேலும் பேச்சுநடத்தவேண்டும் என்றும் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம்,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடனும் பேச்சுநடத்தவேண்டியதேவையிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

புதியஅரசியல் அணி உருவாக்கத்துக்கான சந்திப்புக்களில்கொழும்பில் உள்ள மூத்தஊடகவியலாளர் ஒருவர் கலந்துகொண்டார் எனவும் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்தகதையாக தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான புதியஒப்பந்தம் அமைந்துவிடக் கூடாதுஎன கூறப்பட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

http://globaltamilnews.net/archives/49184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.