Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரி அதிகரிப்பினால் சொகுசு கார்களின் விலைகள் சடுதியாக உயர்வு

Featured Replies

வரி அதிகரிப்பினால் சொகுசு கார்களின் விலைகள் சடுதியாக உயர்வு

p11-1aee92608118dd6476d63a17dc2bb0a960fb1d87.jpg

 

மறைமுக தாக்கமே அதிகமென சந்தேகம்

(எம்.சி.நஜி­முதீன்)

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் சமர்ப்­பிக்­கப்­பட்ட வரவு செலவு திட்­டத்தின் பிர­காரம் இறக்­கு­மதி செய்­யப்­படும் சொகுசு வாக­னங்­களின் விலை­களில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

இதன் பிர­காரம் Toyota Aqua வின் இறக்­கு­மதி வரி­யா­னது 2994750 ரூபா­வி­லி­ருந்து 3726750 ரூபா­வாக 732000 ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளது. அதே­வேளை Toyota Axio (HYBRID) காருக்கு இது வரை விதிக்­கப்­பட்டு வந்த 2995950 இறக்­கு­மதி வரி­யா­னது 3726750 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்டு 730800 ரூபா உயர்­வ­டைந்­துள்­ள­துடன் Toyota Premio வின் இறக்­க­மதி வரி 118600 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

 அதே போன்று Toyota Allion இன் இறக்­கு­மதி வரியும் 168750 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வரவு செலவு திட்­டத்தில் அதி சொகுசு வாக­னங்­க­ளுக்­கான அதி­க­ரித்த வரி­வி­திப்பு கார­ண­மாக Toyota Prado, Land Cruiser என்­ப­வற்றின் விலை­களில் கணி­ச­மான மாற்றம் ஏற்­பட்­டுள்­ள­தாக வாகன இறக்­கு­ம­தி­யா­ளர்கள் சங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இதன் பிர­காரம் Toyota Prado petrol வாக­னத்­திற்கு இது வரை விதிக்­கப்­பட்ட 16166750 இறக்­கு­மதி வரி­யா­னது 21521750வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் Toyota Prado Diesel வாக­னத்தின் இறக்­கு­மதி வரியும் 5120000 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்டு 24751750 ரூபா­வாக பதிவு செய்­யப்­பட்­டுள்ள அதே வேளை Toyota Land Cruiser இன் இறக்கு மதி வரி 22970000 ரூபாவால் கனி­ச­மான அளவில் அதி­க­ரிக்­கப்­பட்டு புதிய இறக்­கு­மதி வரி­யாக 50601750 நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை CHR Petrol வாக­னத்தில் இறக்­கு­மதி வரி 2286550ரூாவால் குறை­வ­டைந்­துள்ள அதே வேளை CHR HYBRID இன் இறக்­கு­ம­தி­வரி 804000 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை 990cc இயந்­திர வலு கொண்ட Toyota vitz இன் இறக்­கு­மதி வரி 1111680 ரூபாவால் குறை­வ­டைந்­துள்­ள­தோடு1290cc இயந்­திர வலு­கொண்ட Toyota vitz வரி­யா­னது 283450 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் passo காரின் வரி 1077650 ரூபாவால் குறை­வ­டைந்­துள்­ளது.

எனினும் இவ்­வரி மாற்­றத்­தினால் Toyota Hiace வேன் வகை­களின் வரியில் எவ்­வித மாற்­றமும் ஏற்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும் Honda Vezel ,Honda Grace, Honda Fit என்­ப­வற்றின் புதிய இறக்­கு­மதி வரி­யாக 3726750 ரூபாவும் Honda Insight 1300cc இயந்­திர வலுக்­கொண்ட காரின் இன் புதிய இறக்­கு­மதி வரி­யா­னது 2601750 ஆகவும் Honda Insight 1490cc இயந்­திர வலுக்­கொண்ட காரின் இன் புதிய இறக்­க­ம­தி­வரி 3726750 ரூபா­வா­கவும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் Nissan CLLIPER இன் புதிய இறக்­கு­மதி வரி­யா­னது 1156750 ரூபா­வா­கவும் Nissan NV200 2784250 ரூபா­வா­கவும் Nissan CARAVAN 4501750 ரூபா­வா­கவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Suzuki Vagan R, Suzuki Hustler,Suzuk spacia என்பவற்றின் புதிய இறக்குமதி வரி 814250 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் Suzuki Alto,Suzuki Every என்பவற்றின் புதிய இறக்குமதி வரியாக 1156750 ரூபாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.