Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய யாப்­புக்கு என்ன தடைகள்?

Featured Replies

புதிய யாப்­புக்கு என்ன தடைகள்?

222-d8ab9e854d6cbdcfab2a814c1a2ecd0a907079bd.jpg

 

புதிய யாப்­புக்­கான முன்­மொ­ழி­வு­களில் காணும் தவ­றான அபிப்­பி­ரா­யங்­களைப் போக்க சர்­வ­கட்சி மாநாடு உள்­ளிட்ட மூன்று படி­மு­றை­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கிறார். இவற்­றுக்கு கால­வ­ரை­யறை எதுவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இவற்றால் தீர்வு கிடைக்­குமா? இவற்­றாலும் தீர்வு அமை­யா­விட்டால் என்ன செய்­வது? இருக்கும் பிரச்­சி­னையை மேலும் தூண்­டி­வி­டுமா? விரைவில் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நிக­ழ­வி­ருப்­ப­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சூழலில் புதிய யாப்பு விவ­கா­ரமும் நாடெங்கும் முழங்கும். இதில் அமையும் பெறு­பே­றுகள் அரசின் இருப்பை நாடி பிடித்துப் பார்க்க அர­சுக்கு உதவும். இந்தத் தேர்­தலின் முடிவால் ஆட்சி மாறா­விட்­டாலும் தொடர்ந்து வரும் காலங்­க­ளுக்குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் எனவே தான் அரசு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. முன்­மொ­ழிவு மட்­டும்தான் இறுதி வடி­வ­மல்ல எனக் கூறி­விட்டு சர்­வ­கட்சி மாநாடு பற்­றியும் மூன்று படி முறை­களைப் பற்­றியும் குறிப்­பி­டு­கி­றது. ஒவ்­வொரு முறையும் இவ்­வா­றுதான் கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன.

வித்­தி­யாசம் இல்லை. ஆட்­சியைப் பொறுப்­பேற்­றி­ருந்த சமயம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு சம்­ப­வத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார். அதா­வது ஆபி­ரகாம் லிங்கன் கறுப்­பர்­க­ளுக்கு சுதந்­திரம் வழங்­கி­ய­போது நிகழ்ந்­தது இது. தமக்குச் சுதந்­திரம் கிடைப்­பதைக் கறுப்­பர்கள் சிலர் விரும்­ப­வில்­லையாம். வெள்­ளைக்­காரர் நமக்கு சுதந்­திரம் வழங்­கு­வதா? இதில் சூழ்ச்சி இருக்­கலாம். எனவே நமக்கு விடு­தலை தேவை­யில்லை. நாம் இப்­ப­டியே அடி­மை­யாக இருந்து கொள்­கிறோம். இந்த வாழ்வே எமக்குப் பழ­கி­விட்­டது. சுதந்­திரம் வேண்டாம் என்­றார்­களாம். எனினும் மனு நீதிப்­படி ஆபி­ரகாம் லிங்கன் அடி­மை­க­ளுக்கு விடு­தலை வழங்­கினார்.

தென்­னா­பி­ரிக்­காவில் நெல்சன் மண்­டேலா பல்­லாண்டு காலம் சிறை வாசம் அனு­ப­வித்து விட்டு பின்னர் ஆட்சி பீட­மே­றி­யதும் அது­வரை ஆட்சி செய்த ஆங்­கி­லே­யரைப் பழி­வாங்­காது தனது கறுப்பு இனத்­தி­ன­ரோடு சேர்த்தே அர­ச­மைத்தார். இந்­திய முஸ்­லிம்கள் பிரி­வினை கோரி­ய­போது பலாத்­கா­ர­மாக இணைத்து வைத்­தி­ருக்க மகாத்மா காந்தி விரும்­ப­வில்லை. அதற்கு சம்­ம­தித்­தது மட்­டு­மின்றி திறைச்­சே­ரி­யி­லி­ருந்து பங்கு வழங்கக் கூறினார். இத்­த­கைய மனு நீதிக்­கு­ரிய நியா­யா­திக்­கத்­தி­னா­லன்றி, ஒரு­போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்க்­கவே முடி­யாது.

சிறு­பான்­மை­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­ய­தா­லேயே இவர் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார். ஐ.நா. வின் மனித உரிமை ஆணைக்­கு­ழு­விடம் இதையும் ஏற்றுக் கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் ஏற்றுக் கொண்ட பின் அர­சியல் சூழல் சரி­யில்லை என்றோ அரசின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­க­ிவிடும் என்றோ கூற முடி­யுமா? ஆனால் உண்மை நிலை­வ­ரமும் அதுதான்.

பெரும்­பான்மைச் சமூ­கத்­தி­ட­மி­ருந்து அதிக வாக்­கு­களை மஹிந்த ராஜபக் ஷ பெற்­றி­ருப்­பதும் போர்க் குற்றம் விசா­ரிக்­கப்­ப­டு­மாயின் அவ­ரது கை ஓங்­கி­விடும் என்­ப­தும் இவற்றால் அவர் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுக்கு முட்­டுக்­கட்­டை­யாக நிற்­பதும் இன்­றைய அர­சுக்கு இவ்­வி­ட­யத்தில் பாரிய சவால்­க­ளா­கவே இருக்­கின்­றன.

எனவே எதிர்ப்பு இன்றி ஏக­மாக எல்­லோரும் இணைந்தே யாப்பு இயற்­றப்­பட வேண்டும் என இல­வம்­காத்த கிளியைப் போல அரசு காத்­துக்­கொண்­டி­ருக்க வேண்­டி­ய­துதான். ஏனெனில் இவர்கள் தூங்­க­வில்லை. தூங்­கு­வதைப் போல் பாசாங்கு செய்­கி­றார்கள். முன்பு இவர்­களும் கூட இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களில் பங்கு பற்­றி­யி­ருக்­கி­றார்கள். இப்­போது எதிர்ப்­பதன் நோக்கம் இதன் மூலம் பெரும்­பான்மைச் சமூ­கத்தை உசுப்­பி­விட்டு ஆட்சி அதி­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்­கே­யாகும். அரசு இந்த எதிர்ப்­புக்கு அச்­சப்­பட்டால் தீர்வு சாத்­தி­ய­மல்ல.

2015 ஆம் ஆண்டு ஐ.நா. வின் மனித உரி­மைகள் பேரவை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­மா­னத்தைக் கொண்டு வந்­தி­ருந்­தது. அதற்­க­மைய இலங்கை இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போது 47 நாடுகள் ஆத­ர­வ­ளித்­தன. அதன் பிறகு இரு­முறை தவ­ணை­களும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. எனவே பொறுப்புக் கூறலைத் தவிர்த்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவைப் போல் தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னாவால் செய்ய முடி­யாது.

எனினும் ஐ.நா. வால் இலங்கை மீது சுமத்­தப்­பட்­டி­ருப்­பது போர்க் குற்­ற­மாகும். இது இரா­ணு­வத்­துடன் சம்­பந்­தப்­பட்­டது. அரசின் இருப்­புக்கு இரா­ணுவம் அடிப்­படை என்­பதால் அதை தாஜா செய்யும் நிலை தவிர்க்க முடி­யா­த­தா­கி­றது. நாட்­டுக்­காகத் தியாகம் செய்யும் இரா­ணு­வத்தை வெளி­நாட்­டிலோ உள்­நாட்­டிலோ விசா­ரிக்­கவும் விட­மாட்டேன். தண்­டிக்­கவும் விட­மாட்டேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­வ­தி­லி­ருந்து இது தெரி­ய­வில்­லையா? காணா­மற்­போனோர் விவ­காரம், தமிழ் கைதிகள் விடயம், காணி மீட்பு யாவும் இதன் பின்­ன­ணிக்கு உட்­பட்­ட­வை­யே­யாகும்.

இந்த உள்­நாட்டு யதார்த்­தத்தை ஐ.நா.வும் உணர்ந்­தி­ருப்­பதால் தான் இரு தவ­ணைகள் கொடுத்­தி­ருக்­கி­றது. எனினும் இதே நிலைப்­பாட்­டையே தொடர்ந்தும் சாட்­டாகக் கூறிக்­கொண்டு போர்க் குற்­றத்­தி­லி­ருந்தும் பொறுப்புக் கூற­லி­லி­ருந்தும் இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்தும் விலக முடி­யுமா?

சிறு­பான்­மை­க­ளுக்கும் சார்­பான புதிய யாப்பு 75 வீத பெரும்­பான்மைச் சமூ­கத்தைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வே­று­வது எப்­படி? 75 வீத­மாக பெரும்­பான்மைச் சமூகம் இருக்­கையில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டு­வது சாத்­தி­யமா? சர்வ கட்சிக் கூட்­டப்­பட்­டாலும் முடி­யாது. ஏனெனில் பெரும்­பான்மைச் சமூகக் கட்­சி­களே அதிகம். புத்­தி­ஜீ­வி­களைக் கூட்­டி­னாலும் பய­னில்லை. ஏனெனில் புத்­தி­ஜீ­வி­களே அதிகம். இவற்றால் வியாக்­கி­யா­னங்கள் தான் மிகைக்­குமே தவிர ஏக நிலைப்­பாட்­டுக்கு வரு­வது மேலும் சிக்­க­லா­கி­விடும்.

ஏனெனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்­பிடும் சர்வ கட்சி மாநாட்­டிலும் மூன்று படி­மு­றை­க­ளிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு உட்­பட்­ட­வர்­களும் கலந்து கொள்­ளலாம். நிச்­சயம் அவர்கள் குழப்­பி­ய­டித்து குழம்­பிய குட்­டையில் மீன் பிடிக்க இட­முண்டு. நிக்­கா­யாக்­க­ளுக்கு முற்­றிலும் கட்­டுப்­பட்டு அவர்­களைத் திருப்தி செய்­து­விட்டு மற்ற மதங்­க­ளையும் அவர்­க­ளோடு இணைத்து வைத்துப் பேசு­வதும் பாத­க­மான விளை­வையே ஏற்­ப­டுத்தும். காரணம் அதற்கே சார்பு இதற்கே சார்பு எனும் இழு­பறி நிலை உரு­வா­கி­விடும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்­த­துபோல் ஆகி­வி­டவும் கூடாது.

சந்­தி­ரி­காவின் ஆட்சிக் காலத்தில் ஜீ.எல். பீரிஸும், நீலன் திருச்­செல்­வமும் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் எனும் திட்­டத்தை வகுத்­தி­ருந்­தார்கள். அதற்­கான அறிக்­கையை ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்­றத்தில் வைத்து எரித்­தது. அதில் வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட வேண்டும் என்றும் காணப்­பட்­டது. அப்­படி நிகழ்­வ­தாயின் முஸ்லிம் அலகு வேண்டும் எனும் அஷ்­ரப்பின் கோரிக்­கையும் ஏற்­கப்­பட்­டி­ருந்­தது. அன்று அது சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கு­மானால் இலங்கை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு அப்­போதே கிடைத்­தி­ருக்கும். தற்­போது அதற்­கான சூழல் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவே சந்­தி­ரிகா குறிப்­பி­டு­கிறார்.

புதிய யாப்பு வேண்டும் என்­பதே நாட்டின் அதி­க­மா­னோரின் கோரிக்­கை­யாகும். எனவே அதைக் குழப்ப சிலர் கூச்சல் இடு­வதைக் கணக்­கெ­டுக்க வேண்­டி­ய­தில்லை. இத்­த­கைய யாப்பை இயற்ற நான் முயன்­ற­போதும் முடி­யாது போய்­விட்­டது. புதிய யாப்பு மூலம் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்­பது மக்­க­ளா­ணை­யாகும். இதற்­கான முனைப்பு எனது ஆட்சி காலத்­தி­லி­ருந்தே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இத­னா­லேயே எனது உயி­ரையும் பறிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தற்­போது புது யாப்­புக்­கான சூழல் நில­வு­கி­றது. எமது வாக்­கு­று­தி­க­ளுக்கே மக்­க­ளாணை கிடைத்­தி­ருக்­கி­றது. சிலர் இதைக் குழப்ப பல்­வேறு சதி­களைச் செய்­வ­தோடு மோச­மான கருத்­துக்­க­ளையும் பரப்­பு­கின்­றனர். இவற்றை நாம் கவ­னிக்­க­வேண்­டி­ய­தில்லை. சிலரே எதிர்ப்­பதால் நிரா­க­ரித்­து­விட்டு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­யாக வேண்டும் என்றார்.

புலி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்த முன்னாள் தள­பதி தற்­போ­தைய அமைச்சர் சரத்­பொன்­சேகா இது பற்றி குறிப்­பி­டு­கையில்;

இலங்­கையில் பெரும்­பான்­மை­யினர் சிங்­க­ள­வரே எனினும் ஓர் இனம் மற்ற இனத்தை அடி­மைப்­ப­டுத்­தாது சகல இனங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட வேண்டும். யுத்­தத்­துக்குப் பின் அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும். அவர்­க­ளது நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். தற்­போது அதற்­கான பொறுப்பு எம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது புதிய யாப்­புக்­காக இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் நாம் ஒன்­றி­ணைய வேண்டும். அர­சியல் இலாபம் தேட இது தருணம் அல்ல. நாட்டு நலனை மறந்து சிலர் செய­லாற்­று­கின்­றனர் என்றார்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை வேண்டாம் என்­ப­தற்கே மக்­க­ளாணை கிடைத்­தி­ருந்­தது. ஒரு சாரார் தற்­போது வேண்டாம் என்று கூறு­கையில்; மறு­சாரார் வேண்டும் என்றே கூறு­கி­றார்கள். எனினும் வேண்டும் என்­பது மக்­க­ளா­ணைக்கு முர­ணான நிலைப்­பா­டாகும். இவை அவ­ர­வரின் சுய விருப்­பு­க­ளுக்­கேற்ற கருத்­துக்­கு­ரிய விட­ய­மல்ல. எப்­ப­டியும் மறு­மு­றையும் இதற்­கெனத் தேர்தல் நிக­ழவே கூடாது. அதற்கு இப்­போதே பாரா­ளு­மன்றம் நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பொறுப்­பேற்கும் வகையில் அடித்­தளம் இடப்­பட்டு வர வேண்டும். அரசின் அரை ஆயுள் கழிந்­து­விட்­டது. மறு ­அரை ஆயுள் கழி­யும்­வரை கவ­ன­மின்றி இருந்தால் அதி­காரச் சிக்கல் தலை­தூக்­கி­விடும். இதனால் நிறை­வேற்­றின சில அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­பதால் ஜனா­தி­ப­தியின் அதி­கார வலிமை குறைந்­தி­ருக்­கி­றது. இரு பெருங்­கட்­சி­களும் அதி­காரப் பங்­கீடு செய்து கொண்­டி­ருப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது. ஒன்­றுக்கு ஒன்று கட்­டுப்­பட்­டி­ருப்­பதால் இரண்டும் சுயா­தீ­னத்தை இழந்­தி­ருக்­கின்­றன. அதுவும் இரண்டும் இரு கட்­சி­களின் தலை­மை­களைக் கொண்­டி­ருப்­பதும் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் வலி­மையை மேலும் குறைத்­து­விட்­டது.

18 ஆம் ஷரத்தின் அசுர வலி­மையை வைத்துக் கொண்டே அதனால் விளைந்த அனைத்­தையும் எதிர்­கொண்டு மாற்­றி­ய­மைத்­தி­ருக்­க­வேண்டும். பதவிக் காலம் முடி­வ­தற்குள் முழு­தாக நிறை­வேற்­றி­யி­ருக்க வேண்டும். 19 ஆம் ஷரத்து மூலம் அதன் வலுவைக் குறைத்­த­தா­லேயே உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் ஏற்­றுக்­கொண்ட பொறுப்­பு­களை முழு­மை­யாக நிறை­வேற்ற முடி­யாமல் அரசு பின்­ன­டைவை சந்­திக்­கி­றது. அதற்­கான காரணம் என்ன?

நிறை­வேற்­றின முழு அதி­கா­ரமும் ஜனா­தி­ப­தி­யிடம் இருந்­தி­ருக்க வேண்டும் அல்­லது பாரா­ளு­மன்­றத்­திடம் இருக்க வேண்டும். அப்­போ­துதான் உள்­நாட்டுப் பிரச்­சி­னை­க­ளையும் சர்­வ­தேச பிரச்­சி­னை­க­ளையும் ஒரே நிலைப்­பாட்­டோடு எதிர்­கொண்டு முழு­மை­யாக நிறை­வேற்றும் வலிமை வாய்த்­தி­ருக்கும்.

எனக்குப் புரிந்த வரையில் தற்­போ­துள்ள அர­சியல் நிலைப்­பாட்­டின்­படி முழு­மை­யான அதி­கா­ர­முள்ள நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யி­னா­லன்றி வலிமை குறைந்த ஜனா­தி­ப­தி­யா­கவோ, பாரா­ளு­மன்­றத்­தாலோ, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பாலோ, சர்­வ­கட்­சி­க­ளாலோ, சர்­வ­ம­த­பேச்­சுக்­க­ளாலோ உத்­தேச புதிய யாப்பை இயற்­று­வதும் அமுல்­ப­டுத்­து­வதும் சாத்­தி­ய­மாகப் போவ­தில்லை.

வலிமை குறைந்த நிறை­வேற்று ஜனா­தி­பதி முயன்றால் பாரா­ளு­மன்றம் அதை முடக்­கலாம். காரணம் அதில் 75 வீதம் சிங்­கள மக்கள் இருப்­ப­தே­யாகும். பாரா­ளு­மன்­றத்­திடம் நிறை­வேற்று அதி­காரம் இருப்­பினும் 75 வீதம் சிங்­கள மக்­களே இருப்­பதால் அங்கும் முடக்­கப்­படும் நிலையே காணப்­ப­டு­கி­றது. மக்கள் அபிப்­பி­ராய வாக்­கெ­டுப்­பாலும் முடி­யாது. காரணம் 75 வீத­முள்ள சிங்­கள மக்­களே வாக்­க­ளிப்­பார்கள். பாரா­ளு­மன்றப் பெரும்­பான்மை இல்­லா­தி­ருந்­ததால் சந்­தி­ரிகா பண்­டாரநாயக்க ஜனா­தி­ப­தி­யாக இருக்­கையில் அவ­ரிடம் 18 ஆம் ஷரத்தின் அசுர வலிமை இருக்­க­வில்லை. ரணில் பிர­த­ம­ராக இருந்து கொண்டு முரண்­பாட்டைக் காட்­டினார். தன்­னிடம் நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­தி­ருந்தும் புலி­களின் சம அதி­கா­ரத்தை ஏற்­றுக்­கொண்டு ஒஸ்­லோவில் உடன்­ப­டிக்கை செய்தார். இது இரு பெருங்­கட்­சி­க­ளி­னதும் அதி­காரப் போட்­டி­யாகும். ஆக ஜே.ஆர். நிறை­வேற்று அதி­கா­ரத்­தோடு (5/6) ஆறில் ஐந்­தாகப் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மையை வைத்­தி­ருந்­தாரே அதுவும் பாரா­ளு­மன்றப் பெரும்­பான்மை போதி­ய­ளவு இல்­லா­தி­ருந்­த­போதும் 18 ஆம் ஷரத்து மூலம் மஹிந்த ராஜபக் ஷ அசுர வலி­மையை நிறை­வேற்று அதி­கா­ரத்தில் பெற்­றி­ருந்­தாரே அது­வுமே தடை­யின்றி எந்த யாப்­பையும் இயற்றி நிறை­வேற்றி அமுல்­ப­டுத்தும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்.

தொகுதி வாரித்­தேர்­த­லிலும் பாரா­ளு­மன்ற வாக்­கெ­டுப்­பிலும் கூடிய வாக்­கு­களே ஜன­நா­யகம் என ஆங்­கி­லே­யரின் சேர். ஐவர் ஜெனிங்ஸ் எழு­திய வெஸ்ட்­மி­னிஸ்டர் முறை குறிப்­பி­டு­கி­றது. எனினும் மனித உரிமை விட­யத்தில் இந்த அணுகு முறையை அது ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனால் தான் சோல்­பரி யாப்பில் சிறு­பான்மைக் காப்­பீ­டாக 29 ஆம் ஷரத்தை அவர்கள் வகுத்­தி­ருந்­தார்கள். அதன்­படி மனு­நீதி அனு­ம­திக்கும் ஒரு விட­யத்தை வாக்­கெ­டுப்­புக்கு விட­மு­டி­யாது. அத­னால் தான் நீதித்­து­றைக்கு தனி­யான அதி­காரக் கட்­ட­மைப்­பையும் அவர்கள் வழங்­கி­யி­ருந்­தார்கள்.

ஒரு விட­யத்தில் 51 மடை­யர்­களும், 49 புத்­தி­சா­லி­களும் வாக்­க­ளித்தால் இரண்டு வாக்­கு­களால் மடை­யர்­களே வென்று விடு­வார்கள் என பெர்­னாட்ஷா வெஸ்ட் மினிஸ்டர் முறை­யையே கேலி செய்­கிறார் என்றால் 75 வீத சிங்­கள மக்­க­ளிடம் சிறு­பான்­மை­களின் தலை­வி­தியை வழங்­கு­வது நரி­யிடம் கோழிக்­கு­டலைக் கொடுக்கும் செயல் அல்­லவா.

மஹிந்த ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் அதிக வாக்­கு­களைப் பெற்­றவர். மைத்­தி­ரி­பால சிறிசேன சிறு­பான்­மை­களின் வாக்­கு­க­ளா­லேயே சிறிய வித்­தி­யா­சத்தில் வென்­றவர். அதி­கூடிய பாரா­ளு­மன்ற ஆச­னங்கள் மஹிந்த ராஜபக் ஷ குழு­வுக்கு இருந்தும், குறைந்த ஆச­னங்­களைக் கொண்ட சம்­பந்தனுக்கு எதி

ர்க் கட்­சித்­த­லைமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்

னும் கார­ணங்கள் அர­சி­யலை மட்­டு­மல்ல. உத்­தேச புதிய யாப்பை இயற்றி நிறை­வேற்றி அமுல்­ப­டுத்­து­வ­திலும் கூட பாரிய தாக்­கத்தைச் செலுத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

முன்பு ஜோன் கொத்­த­லா­வல ஆட்­சியை இழந்­ததும் இங்­கி­லாந்­துக்குச் சென்று விட்டார். அதுபோல் டபிள்யூ. தஹ­நா­யக்­கவும் ஆட்­சியை இழந்து தனது ஊரான காலிக்குச் சென்­று­விட்டார். விஜே­துங்க நேர்­மை­யாகத் தேர்தல் நடத்தி கட்சி தோற்­றதும் ஒதுங்கிக் கொண்டார். ஸ்ரீமாவோ வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்டு ஒதுக்­கப்­பட்­ட­போதும் வருந்­த­வில்லை. டட்லி சேனநா­யக்­க­வுக்கு கணக்­கில்லை. ஆட்சியில் இருப்பதும் ஒன்று தான். இல்லாதிருப்பதும் ஒன்றுதான். இல்லா விட்டால் ஆட்சியை ஜோன் கொத்தலா­­வலையிடம் கையளிப்பாரா? ஜே.ஆர். ஒதுங்கிய பிறகு அரசியலில் தலையிடவே இல்லை. சந்திரிகாவின் உதவி மூலம் ஆட்சியைப் பெற்ற மஹிந்த ராஜபக் ஷ என்ன செய்தார்? சந்திரிகாவை ஒதுக்கியபோதும் சந்திரிகா வருந்தவில்லை. மஹிந்த ராஜபக் ஷ மட்டும் விதிவிலக்காக அரசின் அத்தனை நட வடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். 

காரணம் அதிஉச்ச நிலையிலிருந்த இவர் திடீரென சரிந்து விழுந்ததேயாகும். உடனிருந்தவர்களே எதிர்ப்பக்கம் சேர்ந்து இறுதி நேரத்தில் காலைவாரி விட்டதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவி ல்லை.

தனக்கு முன் பணிந்து நின்றவர்கள் தனக்கு முன்னாலேயே நிமிர்ந்து நிற்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. பிரதமர் பதவி கேட்டும் கிடை க்கவில்லை. எதிர்க்கட்சித் தலைமையும் கிடைக் கவில்லை. கட்சியின் தலைமையையும் இழந்தார். 

மைத்திரி அரசு வலிமை பெற்று விடுமானால் போர்க்குற்றச்சாட்டில் தன்னைச் சிக்கவைக்கும் ஆபத்து உண்டு. எனவே அரசாங்கத்தை பலவீனப் படுத்துவதன் மூலம் ஐ.நா.வில் ஒரு நிலைப்பாட் டுக்கு வர முடியாத சூழலை உருவாக்கலாம் என நினைக்கிறார். மைத்திரி – ரணில் கூட்டைத் தகர்ப்பதும் அவரது நோக்கமாக இருக்கலாம். மைத்திரி அரசு ஐ.நா. வின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்க முன் வந்ததும் கூட மஹிந்த ராஜபக் ஷவுக்கு கடும் ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கலாம். இந் நிலையில்தான் திடீரென நிகாயாக்கள் தூண்டி விடப்பட்டிருக்கிறார்கள். அவர்களையும் சமாளிக் கவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று படிமுறைகளை அமுல் படுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

ஏ.ஜே.எம். நிழாம்

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.