Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன நெருக்கடி இராணுவத் தீர்வை நோக்கி நகர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்

Featured Replies

இன நெருக்கடி இராணுவத் தீர்வை நோக்கி நகர்வதாக வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார் விஜேதாச ராஜபக்‌ஷ -மக்களை இன ரீதியாக பிரிக்கும் கைங்கரியத்தை தொடர வேண்டாமென வேண்டுகோள்

பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நடைமுறையே சபையில் தொடர்வதாகவும் இனப் பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டிய ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான விஜேதாச ராஜபக்ஷ, இனியாவது இனப் பிரச்சினை குறித்து நிலைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளவென அனைத்து சமூக பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட விசேட தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் யோசனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் அனுதாபப் பிரேரணையில் பேசும்போதே விஜேதாச ராஜபக்‌ஷ எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், முன்னாள் எம்.பி. யான ரவிராஜ் இருவரினது கொலைகளுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். எனது சகபாடிகள். ரவிராஜைப் பற்றிப் பேசும்போது இனப் பிரச்சினையை பற்றித்தான் பேசுகிறோம்.

இந்தப் பிரச்சினை இராணுவத் தரப்பிற்கும் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான பேச்சுகள் செயலற்றுப் போகும் போது அதன் விளைவாகவே பயங்கரவாத அமைப்புகள் உருவாகின்றன. நாம் முதலில் இந்த இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்காக யதார்த்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் நிலவுகிறது.

பல காலமாக ஆக்கபூர்வமான செயன்முறைகள் நடைபெறவில்லை. ஒருவருக்கொருவர் தூற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கபூர்வமான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இதெல்லாம் வந்திருக்காது.

இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இந்தப் பிரச்சினையை தீர்க்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அதன் ஒரு பலனாகத்தான் சர்வகட்சி மாநாடு உருவானது. இப்போதும் ஒரு சர்வகட்சி மாநாடு உள்ளது. இதற்கு நாம் எந்த ஆக்கபூர்வமான யோசனைகளையும் தீர்வுத் திட்டங்களையும் சமர்ப்பித்ததாக தெரியவில்லை.

இந்த விவகாரத்தை முற்று முழுதாக புலிகளிடம் விட்டு விட்டால் இராணுவத் தீர்வே கட்டாயமாகிவிடும். இப்போதும் இராணுவத் தீர்வை நோக்கிய ஒரு நகர்வு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, இனிமேலும் ஆக்கபூர்வமான சமரச நடவடிக்கைள் முன்னெடுக்கப்படாமல் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருந்தால் விளைவுகளும் அதற்கேற்றவாறே அமையும்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்னென்ன ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களை தெரிவு செய்த மக்களிடம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். அவர்களை தெரிவு செய்த மக்கள் இந்த நான்கு சுவருக்குள் கூட்டமைப்பினர் ஏதாவது நல்லதொரு முடிவை கொண்டுவரப்படும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டு விட்டால் இவ்வாறு அனுதாபப் பிரேரணையொன்றில் பேசிவிட்டு அதைப் பற்றி அப்படியே மறந்து விடுகிறோம். எவராக இருந்தாலும் பரவாயில்லை. சிங்களவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி இந்த சபையின் உறுப்பினர்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனப் பிரச்சினையத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. அவர்கள் இச்சபையில் தங்களது சொந்தக் கருத்துகளை முன்வைக்கவில்லை. இச் சபையின் உறுப்பினர்களின் கொலைகள் தொடர்வதை நிறுத்த நடவடிக்கை எடுப்போமானால் அதுவே ரவிராஜுக்கு செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலியாக இருக்கும்.

இனப் பிரச்சினையால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் எத்தனை பேர் தனது தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், உறவினர்களை இழந்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர வேண்டும். ரவிராஜின் கொலையைப் பற்றிப் பேசும்போது இலங்கையொரு பல்லின நாடு என்பதை மறந்துவிட வேண்டாம். இந்த நாடு ஒரு அழகிய மலர்ச் செண்டு போன்றது. அதை நாம் ஒன்றாக பாதுகாக்க வேண்டும்.

இந்தச் சபையில் கடந்த காலங்களாகவே ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது யதார்த்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அரச படையினர் மீது குறை கூறுவதிலும் புலிகள் மீது குற்றஞ் சாட்டுவதிலும் எதுவும் பலன் கிடைத்துள்ளதா? யாரும் பயனடைந்துள்ளனரா? நடந்து முடிந்ததை பற்றி மறப்போம். அவற்றை படிப்பினையாகக் கொண்டு இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

1950 களில் தமிழ் உறுப்பினர்களே சிங்கள உறுப்பினர்களை விட பாராளுமன்றத்தில் அதிகம் பேசியிருக்கின்றனர். அன்று ஒரு உறுப்பினர் பேசும் போது முழுநாட்டையும் பற்றி பேசுவார். ஆனால், இன்று சபை உரைகள் தரம் தாழ்ந்து விட்டன. ஒவ்வொரு உறுப்பினரும் தத்தமது பிரதேசங்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர். இந்த நிலைமை அகல வேண்டும். உறுப்பினர் ஒருவர் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தைப் பற்றி மட்டுமே பேச வேண்டுமென்ற கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

ரவிராஜ் இந்த நாட்டுக்கு எந்த அழிவையம் ஏற்படுத்தவில்லை. கொலை செய்யவும் இல்லை. அவர் எப்போதும் நாட்டு மக்கள் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். ரவிராஜ் கொலை செய்யப்படுமளவுக்கு எந்த குற்றங்களும் செய்திருக்கவில்லை. எனினும் அவர் வஞ்சகமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

1983 இற்கு முன்னர் தமிழ் வர்த்தகர்கள் மிகவும் வளம் பெற்றிருந்தனர். தமிழ், சிங்கள மக்களிடம் அந்நியோன்யமான உறவுகள் நிலவின. அந்த நிலைமை இன்றில்லை.

மீண்டும் அவ்வாறானதொரு சுமுகமான சூழ்நிலை உருவாக வேண்டும். இந்த சபையை தனது வாதத் திறமையை காட்டுவதற்கான இடமாக உறுப்பினர்கள் கருதலாம். ஆனால், இதில் எவருக்கும் எந்த பலனுமில்லை. இனியாவது இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க முதற்கட்ட நடவடிக்கையாக அனைத்து சமூகங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். இதை எனது சொந்த யோசனையாக முன்வைக்கிறேன்.

இன்று இனப் பிரச்சினை இராணுவ தீர்வு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சுமுகமான உறவுகள் முரண்பாடுகளாக மாறி வருகின்றன. இனங்களுக்கிடையேயான சுமுகமான வாழ்க்கை என்பது வெறும் கனவாக சென்று கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதில் சாபம் தான் அதிகரிக்கும். இனியாவது இதை நிறுத்துவோம். எனவே, இனப் பிரச்சினை குறித்து ஆலோசனைகளை பெற சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுடன் கூடிய தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். இதை ஒரு முதற்படியாக கொள்வோம். இந்த சபை தான் நாட்டில் உயரிய பீடமாக உள்ளது.

இந்த சபை நினைத்தால் கொண்டு வர முடியாத மாற்றங்கள் எதுவுமில்லை. இந்த உயரிய சபையிலிருந்து ஏதாவது சாதகமான முடிவு வருமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஓர் இனத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு செல்வதில் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. சபை உறுப்பினர்கள் உதாரண புருஷர்களாக செயற்பட்டு காட்ட வேண்டும்.

மக்கள் ஒன்றுபடுவதற்கு முன்னர் இந்த சபையில் நாம் ஒற்றுமையாக செயற்பட்டு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். நாம் இந்தச் சபையில் மக்களை ஒன்றுபட செய்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. மக்களை இன ரீதியாக வேறு பிரிப்பதற்கே செயற்பட்டுள்ளோம். இந்த நிலைமை மாற வேண்டும். இனியாவது ரவிராஜ் போன்ற தேசவாத தலைவர்களின் கொலைகள் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.